Please Login to view full dashboard.

ஒடுக்கற்பிரிவு

Author : Admin

9  
Topic updated on 02/16/2019 07:30am
  • இரு தொகுதி நிறமூர்த்தங்களைக் கொண்ட கலம் இருமடியக் கலம் எனப்படும். அதில் ஒரு தொகுதியில் ஒன்று மறு தொகுதியில் இன்னொன்றிற்கு அமைப்பொத்தாகக் காணப்படும் அல்லது இக்கலத்தில் அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் காணப்படும்.
  • மனித இரு மடியக் கலத்தில் 23-சோடி அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் காணப்படுகின்றன.
  • அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் பின்வரும் இயல்புகளில் ஒத்திருக்கும்.
    1. ஒத்த நீளமுடையவை.
    2. மையப்பாத்துக்கள் ஒரே ஸ்தானத்தில் அமைந்திருக்கும்.
    3. காணப்படும் பரம்பரையலகுகளின் எண்ணிக்கையும் ஒழுங்கும் ஒத்தது.
    Eg : அனேகமான கலங்கள் (இரப்பைக் கலம், சிறுநீரகக் கலம்)
  • ஒரு தொகுதி நிறமூர்த்தத்தை மட்டும் கொண்ட கலம் ஒரு மடியக் கலம் எனப்படும். இதில் அமைப்பொத்த நிறமூர்த்தசோடிகள் காணப்படுவதில்லை.
    Eg : துணை விந்து குழியம் விந்தாகு கலம், விந்து (ஆணில்)
  • ஒடுக்கற்பிரிவு நிகழ்வில் அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடி சேர்வது நிகழ்வதால் இருமடிய கலங்களினால் நடைபெறும். ஒரு மடியக் கலத்தில் நிகழாது.
  • இழையுருப்பிரிவு இருமடியக் கலத்திலும், ஒரு மடியக் கலத்திலும் இடம்பெறும். காரணம் அதற்கு அமைப்பொத்த நிறமூர்த்தம் சோடி சேரத் தேவையில்லை.
  • ஒடுக்கற்பிரிவு தொடர்ச்சியான இரு பிரிவுகளைக் கொண்டது.
    1. ஒடுக்கற்பிரிவு I
    2. ஒடுக்கற்பிரிவு II
  • ஒடுக்கற்பிரிவு I இற்கு முன்பாக இடையவத்தை I உம் ஒடுக்கற்பிரிவு I ஐத் தொடர்ந்து குழியவுருப்பிரிவு I காணப்படும்.எனவே குழியவுருப்பிரிவு I இன் விளைவாக 2 மகட்கலங்கள் பெறப்படும். பின் இவ் ஒவ்வொரு கலமும் ஒடுக்கற்பிரிவு II இற்கு உள்ளாகும். ஒடுக்கற்பிரிவு II இற்கு முன்பாக இடையவத்தை II உம் ஒடுக்கற்பிரிவு I ஐ தொடர்ந்து குழியவுருப்பிரிவு II காணப்படும். எனவே ஒடுக்கற்பிரிவிற்கு உள்ளாகும் ஒரு கலத்திலிருந்து 4 மகட்கலங்கள் தோற்றுவிக்கப்படும்.
  • ஒடுக்கற்பிரிவு I இன் விளைவாக இருமடியம் ஒருமடியம் ஆக்கப்படும் அல்லது மடிய நிலை அரைவாசி ஆக்கப்படும் ஒடுக்கற்பிரிவு  II இழையுருப்பிரிவை ஒத்தது.
  • ஒடுக்கற்பிரிவு 8 அவத்தைகளைக் கொண்டது Youtube Video  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
இடையவத்தை I

இழையுருப்பிரிவின் இடையவத்தையை ஒத்தது. Image Tip1024px-meiosis_diagram

முன்னவத்தை I

(2 சோடி அமைப்பொத்த நிறமூர்த்தங்களை கொண்ட இருமடியக்கலம்)

  • நிறமூர்த்தங்கள் ஒடுக்கமடைந்து படிப்படியாகக் குறுகித் தடிப்படையும்.
  • நிறுமூர்த்தங்கள் குரோமற்றின் வலையிலிருந்து விடுபட்டு தனித்தனியாக மெல்லிய இழைகளாகக் காணப்படும்.
  • தொடர்ந்து அமைப்பொத்த நிறுமூர்த்தங்கள் சோடி சேரும். இச் செயன்முறை ஒன்றிஒடுங்கல் எனப்படும்.
  • சோடி சேர்ந்த அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் இருவலு உள்ள நிலைமை எனப்படும்.
  • சோடி சேர்ந்த அமைப்பொத்த நிறுமூர்த்தங்களுக்கிடையில் சாலக புரதமான Synaptonemal சிக்கல் உருவாகும்.
  • தொடர்ந்து ஒடுக்கமடைவதால் இருவலு நிலையில் உள்ள நிறமூர்த்தங்கள் நால்கூற்றுத் தொகுதியாக இரட்டிப்பு அடைந்த நிலைமை தென்படும்.
  • அமைப்பொத்த நிறுமூர்த்தத்தின் அரைநிறவுருக்கள் சில தானத்தில் தொடுகையுற்று இருக்கும். இத்தானம் கோப்பு எனப்படும்.
    கோப்பில் குறுக்குப் பரிமாற்றம் நிகழும்.
  • அமைப்பொத்த நிறமூர்த்தங்களின் அரைநிறவுருக்களுக்கிடையில் பிறப்புரிமைப் பதார்த்தம் பரிமாற்றப்படும் செயன்முறை குறுக்குப்பரிமாற்றம் எனப்படும். இதன் மூலம் நிறமூர்த்த அமைப்பு மாற்றப்படுகின்றது. பிறப்புரிமை மாறல் ஏற்படுகின்றது.
  • புன்மையத்திகள் உடுவுருவைத் தோற்றுவித்து எதிர் முனைகளை நோக்கி அசைவடையும். அவற்றுக்கிடையில் நுண்புன் குழாயால் ஆன கதிர்நார் உருவாக்கப்படும்.
  • கருவுறை அழிவடையும்.
  • புன்கரு மறையும்.
  • குறுக்குப்பரிமாற்றம் முடிவடைந்ததும் Synaptonemal சிக்கலுக்குரிய புரதம் உடையும். அதன் பின் கோப்பு மையப்பாத்து தானத்திலும் காணப்படும்.

அனுவவத்தை I

  • அமைப்பொத்த நிறமூர்த்த சோடிகள் கலத்தின் மத்திய கோட்டுத் தளத்தில் எழுந்தமானமாக அடுக்கப்படும்.
  • ஒரு மையப்பாத்தின் ஒரு புறம் மட்டும் கைனடோகோர் கதிர்நார் இணைந்திருக்கும். கதிர்நாருக்கு செங்குத்தாக அடுக்கப்படும்.
  • இவ் அவத்தையில் எழுந்தமானமாக அடுக்கப்படுவதால் மேன்முக அவத்தை I இல் அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் வேறாக்கப்படும். போது வெவ்வேறு நிறமூர்த்த சேர்மானங்கள் ஏற்படலாம். இது தன்வயத்தொகுப்பு எனப்படும். இதன் மூலமும் கலங்களில் பிறப்புரிமை மாறல் ஏற்படுகின்றது.
  • 2 சோடி அமைப்பொத்த நிறமூர்த்தங்களைக் கொண்ட ஒரு கலம் ஒடுக்கற்பிரிவில் தன்வயத்தொகுப்பின் மூலம் உருவாக்குகின்ற பிறப்புரிமை ரீதியில் வேறுபட்ட கலவகைகளின் எண்ணிக்கை 4 ஆகும். அதேபோல் 3 சோடி நிறமூர்த்தம் எனின் 8 ஆகும்.
    எனவே இவை கணிப்பதற்கான சமன்பாடு 2n
    n – அமைப்பொத்த சோடிகளின் எண்ணிக்கை.
  • எனவே மனிதலில் தன்வயத்தொகுப்பு மூலம் உருவாக்கப்படும் விந்து / சூல் வகைகளின எண்ணிக்கை 223

மேன்முக அவத்தை I

  • கதிர்நார்கள் Tribulin புரத உப அலகை இழந்து நீளத்தில் குறுகுவதால் கோப்புத் தானத்தில் உடைவு ஏற்பட்டு அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் வேறாக்கப்படுகின்றன.
  • தொடர்ந்து கதிர்நார் குறுகுவதால் இரட்டிப்பு அடைந்த நிலையில் நிறமூர்த்தங்கள் கலத்தின் எதிர் முனைவுகள் நோக்கி அசைக்கப்படும்.
  • இவ் அவத்தையினால் அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் வேறாக்கப்பட்டு கலத்தின் எதிர்முனைகளை நோக்கி அசைவதனால் மடிய நிலை அரைவாசி ஆக்கப்படுகின்றது அல்லது இருமடிய நிலை ஒருமடிய நிலையாக்கப்படுகின்றது.

ஈற்றவத்தை I

  • எதிர் முனைவுகளைச் சென்றடைந்த நிறமூர்த்தங்களைச் சூழ கருவுறை உருவாக்கப்படுகின்றது.
  • புன்கரு தோன்றுகின்றது.
  • கதிர்நார் மறைவடைகின்றது.
  • இரு ஒருமடியமான பிறப்புரிமை ரீதியில் வேறுபட்ட இரு கருக்கள் உருவாகின்றது.

குழியவுருப் பிரிவு I

  • பிளவுசால் வழி குழியவுரு ஒடுக்கம் ஏற்பட்டு இரு மகட் கலங்கள் உருவாக்கப்படும்.
  • இவ்விரு மகட்கலங்களும் ஒருமடியமானவை. பிறப்புரிமை ரீதியில் வேறுபட்டவை.
  • உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கலமும் இடையவத்தை II இற்கு உட்பட்டு தொடர்ந்து ஒடுக்கற்பிரிவு II இற்கு உட்படும்.

 

இடையவத்தை II
  • G1,G2 அவத்தைகள் காணப்படும்.
  • S அவத்தை காணப்படுவதில்லை. எனவே DNA இரட்டிப்பு, நிறமூர்த்த இரட்டிப்பு நிகழ்வதில்லை.
  • புன்மையத்தி இரட்டிப்பு அடையும்.

முன்னவத்தை II

  • கருவுறை அழிவடையும்.
  • புன்கரு மறையும்.
  • புன்மையத்திகள் உடுவுருவைத் தோற்றுவித்து எதிர்முனைவுகள் நோக்கி அசையும். அவற்றுக்கிடையில் நுண்புன்குழாயாலான கதிர்நார்கள் தோற்றுவிக்கப்படும்.

அனுவவத்தை II

  • மையப்பாத்தில் இணைந்த நிலையில் காணப்படும்.
  • இரு அரைநிறவுக்களைக் கொண்ட இரட்டிப்படைந்த நிலையில் உள்ள நிறமூர்த்தங்கள் கலத்தின் மத்திய கோட்டுத் தளத்தில் அடுக்கப்படும்.
  • மையப்பாத்தின் இரு புறமும் கைனடோகோர் புரததத்துடன் கதிர்நார்கள் இணையும்.

மேன்முக அவத்தை II

  • கதிர்நார்கள் நீளத்தில் குறுகுவதால் மையப்பாத்தில் பிளவு ஏற்பட்டு அரை நிறவுருக்கள் வேறாக்கப்படும்.
  • வேறாக்கப்பட்ட அரை நிறவுருக்கள் நிறமூர்த்தம் எனப்படும்.
  • தொடர்ந்து கதிர்நார் குறுகுவதால் நிறமூர்த்தங்கள் கலத்தின் எதிர் முனைகளுக்கு அசைக்கப்படும்.

ஈற்றவத்தை II

  • முனைவில் உள்ள நிறமூர்த்தங்களைச் சூழ கருவுறை உருவாக்கப்படும்.
  • புன்கரு உருவாகும்.
  • ஒவ்வொரு கலத்திலும் இரு மகட்கருக்கள் உருவாக்கப்படும்.

குழியவுருப்பிரிவு II

  • கலப்புன்னங்கங்கள், குழியவுரு சமனாகப் பங்கிடப்படும்.
  • பிளவு சால் வழி குழியவுரு ஒடுக்கம் ஏற்பட்டு ஒவ்வொரு கலத்திலிருந்தும் இரு கலங்கள் தோற்றுவிக்கப்படும்.
  • எனவே, இரு கலங்களிலிருந்து 4 கலங்கள் உருவாக்கப்படும். இவை நான்கு கலங்களும் ஒருமடியக் கலமாகும். பிறப்புரிமை ரீதியில் வேறுபட்டவை.
  • விலங்குக்கலங்களில் இக்கலங்கள் புணரிக் கலங்களாகும். (விந்து, சூல் தாவரங்களில் ஒருமடியமான கலங்கள் இலிங்க வித்திகளாகும்.)
  • மனிதனில் ஆண்களில் முதல் விந்துக்குழியத்திலும் பெண்களில் முதல் முட்டைக்குழியத்திலும் ஒடுக்கற்பிரிவு நிகழ்கின்றது.

 

ஒடுக்கற்பிரிவின் முக்கியத்துவங்கள்
  1. இலிங்கமுறை இனப்பெருக்கத்தில் ஒரு இனத்தின் நிறமூர்த்த எண்ணிக்கையை மாறாது பேணுகின்றது. இனத்தின் தொடர்ச்சியைப் பேணுகின்றது.
  2. ஒடுக்கற்பிரிவில் நிகழும் குறுக்குப்பரிமாற்றம், தன்வயத்தொகுப்பு நிகழ்வுகள் மூலம் பிறப்புரிமை வேறுபாடு / பிறப்புரிமை மாறல் / பிறப்புரிமைப் பல்வகைமை ஏற்படுத்தப்பட்டு கூர்ப்பிற்கு வழிவகுகின்றது.

இழையுருப்பிரிவு, ஒடுக்கற்பிரிவு என்பவற்றிற்கிடையிலான வேறுபாடுகள்

இழையுருப்பிரிவு ஒடுக்கற்பிரிவு
ஒருமடிய இருமடியக் கலங்களில் நிகழும் இருமடியக் கலங்களில் மட்டும் நிகழும்
பிறப்புரிமை உறுதிப்பாடு பேணப்படும் பிறப்புரிமை மாறல் ஏற்படுத்தப்படும்
அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடி சேர்வதில்லை அல்லது ஒன்றில் ஒடுங்கல் நிகழாது அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடிசேரும் அல்லது ஒன்றி ஒடுங்கலுக்கு உள்ளாகும்
கோப்பு குறுக்குப்பரிமாற்றம் நிகழ்வதில்லை கோப்பு குறுக்குப்பரிமாற்றம் நிகழும்
ஒரு தாய்க் கலத்திலிருந்து 2 மகட்கருக்கள் உருவாக்கப்படும் ஒரு தாய்க் கலத்திலிருந்து 4 மகட்கருக்கள் உருவாகும்
தாய்க் கலத்திற்கும் மகட் கலத்திற்கும் நிறமூர்த்த எண்ணிக்கை மாறாது தாய்க் கலத்திற்கும் மகட்கலத்திற்கும் இடையில் நிறமூர்த்த எண்ணிக்கை அரைவாசி ஆகும்
தனிப்பிரிவைக் கொண்டது இரண்டு பிரிவைக் கொண்டது
ஒப்பீட்டளவில் குறுகிய நேரத்திற்குரியது நீண்ட நேரத்திற்குரியது
RATE CONTENT 2, 1
QBANK (9 QUESTIONS)

ஒடுக்கற்பிரிவு பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

Review Topic
QID: 3353
Hide Comments(0)

Leave a Reply

ஒடுக்கற்பிரிவு பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Review Topic
QID: 3374
Hide Comments(0)

Leave a Reply

ஒடுக்கற் பிரிவின் போது குறுக்குப் பரிமாற்றம் நடைபெறுவது

Review Topic
QID: 3567
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன ஒடுக்கற்பிரிவுச் செயன்முறையின் போது இடம்பெறும் சில நிலைகளாகும்.

A –  நான்கு மகட்கலங்கள் உருவாதல்
B– அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் வேறாதல்
C – பரம்பரைப் பதார்த்தங்கள் பரிமாற்றம்
D – நிறமூர்த்தங்கள் இரட்டித்தல்
E – குழியவுரு பிரிதல்
F – அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடியாதல் , ஒடுக்கற்பிரிவின் நிலைகளுள் சரியான ஒழுங்கில் அமைந் திருப்பது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3627
Hide Comments(2)
Rislan Mohommed
Rislan Mohommed
Correct
Fasla
Fasla
DFCBEA

Leave a Reply

ஒடுக்கற்பிரிவு பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

Review Topic
QID: 3353

ஒடுக்கற்பிரிவு பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Review Topic
QID: 3374

ஒடுக்கற் பிரிவின் போது குறுக்குப் பரிமாற்றம் நடைபெறுவது

Review Topic
QID: 3567

பின்வருவன ஒடுக்கற்பிரிவுச் செயன்முறையின் போது இடம்பெறும் சில நிலைகளாகும்.

A –  நான்கு மகட்கலங்கள் உருவாதல்
B– அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் வேறாதல்
C – பரம்பரைப் பதார்த்தங்கள் பரிமாற்றம்
D – நிறமூர்த்தங்கள் இரட்டித்தல்
E – குழியவுரு பிரிதல்
F – அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடியாதல் , ஒடுக்கற்பிரிவின் நிலைகளுள் சரியான ஒழுங்கில் அமைந் திருப்பது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3627
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank