Please Login to view full dashboard.

உணவும் நுண்ணங்கிகளும்

Author : Admin

20  
Topic updated on 02/14/2019 05:30am

உணவில் காணப்படும் நுண்ணங்கிகளால் எழக்கூடிய பிரச்சினைகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நுண்ணங்கிகளால் உணவு நஞ்சாக்கம் அடைதல்.

  • உணவில் காணப்படும் சில நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டினால் பழுதடைந்த உணவுகளில் அங்கு வளரும் சில நுண்ணங்கிகளால் சுரக்கப்பட்ட Toxinகள் காணப்படுகின்றன. உணவு வழியாக இவ் Toxinகள் உள்ளெடுக்கப்படும் போது, அவை நஞ்சாதலுக்கான நோய்க் குறிகளை ஏற்படுத்துகின்றன.
    உ – ம் : Clostridium botulinum, Staphylococcus aureus

உணவுத் தொற்றுகை ஏற்படல்

  • நோயாக்கிகளான சில நுண்ணங்கிகள் உணவு வழியாக மனித உடலினுள் சென்று மனித உடலில் பெருக்கமடைந்து, அவற்றினால் உருவாக்கப்படும் Toxin களால் நோய்கள் ஏற்படல் உணவுத்தொற்றுகை எனப்படும்.

நுண்ணங்கிகளினால் உணவு பழுதடைதல்

  • உணவில் இயற்கையாகவே காணப்படுகின்ற நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டினால் உணவின் இரசாயனக் கூற்றமைப்புகளும், பௌதிகத் தன்மைகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு மனித நுகர்விற்கு தகுதியற்றதாக மாற்றப்படுதல்.

உணவு பழுதடைதலின் போது, ஏற்படக் கூடிய இரசாயன மாற்றங்கள் Please Login to view the Question

  • உணவிலுள்ள புரதக்கூறுகள் புரதப்பகுப்பிற்கு உள்ளாகி அமினோ அமிலங்களாகவும், அமீன்களாகவும்,NH3, H2S ஆகவும் மாற்றப்படுகின்றன. இது அழுகுதல் எனப்படும்.
  • உணவிலுள்ள காபோவைதரேற்றுகள் சக்கரைட் பகுப்பிற்கு உள்ளாகி அமிலங்களாகவும், Alcoholகளாகவும் மாற்றப்படுகின்றன.
    இது நொதித்தல் எனப்படும்.
  • உணவிலுள்ள கொழுப்புகள் இலிப்போ பகுப்பிற்கு உள்ளாகி கொழுப்பமிலங்களாகவும், கிளிசரோல் ஆகவும் மாற்றப்படுகின்றன.
    இது பாண்டலேற்றப்படுதல் எனப்படும்.

உணவு பழுதடைதலின் போது, ஏற்படும் பௌதிக மாற்றங்கள்

  1. உணவு மென்மையாதல்
  2. உணவில் நிறம் ஏற்படல்
  3. பாகு அல்லது பிசின் போன்ற தோற்றம் ஏற்படல்
  4. உணவில் விரும்பத்தகாத மணங்கள் தோன்றுதல்
  5. Ropiness  ஏற்படல்
  6. உணவில் நச்சுக்கள் தேக்கமடைதல்

உணவு பழுதடைதலைப் பாதிக்கும் அகக் காரணிகள்

  1. உணவின் ஈர உள்ளடக்கம்
  2. உணவின் pH
  3. உணவிலுள்ள போசணைப் பொருட்களின் உள்ளடக்கம்
  4. உணவின் உயிரியல் கட்டமைப்பு

உணவு பழுதடைதலைப் பாதிக்கும் புறக் காரணிகள்

  1. உணவு வைத்திருக்கப்படும் சூழல் வெப்பநிலை
  2. சூழலின் சாரீரப்பதன்
  3. சூழலிலுள்ள வளியில் காணப்படும் O2, CO2 என்பவற்றின் அளவுகள்

உணவு பழுதடையாது பாதுகாப்பதில் உள்ள தத்துவங்கள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நுண்ணங்கிகள் உணவை வந்தடைதலைத் தடுத்தல்.
  • உணவிலுள்ள நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டைத் தடுத்தல்.
  • உணவில் காணப்படும் நுண்ணங்கிகளை அழிவடையச் செய்தல்.

உணவு பாதுகாப்பு முறைகளும், உதாரணங்களும்  Please Login to view the QuestionPlease Login to view the Question

  1. உலர்த்துதல் – மீன், இறைச்சி, தானியங்கள், பால்மா
  2. உப்பிடுதல் – மீன், இறைச்சி
  3. உப்பிட்டு உலர்த்துதல் – மீன், இறைச்சி
  4. வெல்லம் சேர்த்தல் – கட்டிப்பால், பழப்பாகு
  5. தகரத்தில் அடைத்தல் – மீன், இறைச்சி, பழங்கள்
  6. பாச்சராக்கம் செய்தல் – பால்
  7. புகையூட்டல் முறை – மீன், இறைச்சி
  8. அழுகலற்ற பொதியாக்கம் செய்தல் – உலர் உணவுவகைகள், குளிர்பானங்கள்.
  9. இரசாயனப் பதார்த்தங்கள் சேர்த்தல் – பாற்கட்டி, ஊறுகாய் வகைகளில் Sorbic acid களை சேர்த்தல், தானிய உணவுகளில் சோடியம் புறோப்பியோனேற் சேர்த்தல்.
  10. தாழ் வெப்பநிலை நற்காப்பு செய்தல் – மீன், இறைச்சி, பழங்கள், பால்
  11. கதிர் வீச்சு முறை – பழங்கள், தானியங்கள்.
RATE CONTENT 0, 0
QBANK (20 QUESTIONS)

கருவாடு தயாரித்தல் உள்ளடக்குவது

(A)  அழுகலற்ற தன்மை (asepsis)
(B)   நீரகற்றல்
(C)   உயர் வெப்பநிலையின் உபயோகம்
(D)   உப்பிடுதல்

Review Topic
QID: 10129
Hide Comments(0)

Leave a Reply

நுண்ணங்கிகளால் உணவு பழுதடைதல் தொடர்பாக  பின்வருவனவற்றுள் எது சரியானது?

Review Topic
QID: 10133
Hide Comments(0)

Leave a Reply

உணவு  பாதுகாப்பு  முறைகளுள் நுண்ணுயிர்  பெருக்கத்தடை (micro bio static) நிலையை ஏற்படுத்தாதது
பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10146

All  five  answers  are  correct.

Hide Comments(0)

Leave a Reply

பால்மா உற்பத்தியில் பின்வரும் உணவு பேணல் முறைகளில் எது / எவை பயன்படுத்தப்படுகின்றன.

(A) கதிர்ப்பு (கதிர்வீசல்)
(B) மென்சவ்வு வடிகட்டல்
(C) நீரகற்றல்
(D) அழுகலற்ற தன்மை (Asepsis)
(E) வெல்லம் சேர்க்கப்படல்

Review Topic
QID: 11005
Hide Comments(0)

Leave a Reply

உட்செலுத்தப்பட்ட உணவில் உள்ள நுண்ணங்கிகளின் வளர்ச்சியும் செயற்பாடும் காரணமாக உணவுத் தொற்றல்களுடன் தொடர்புடைய பற்றீரியா/ பற்றீரியாக்கள் பின்வருவனவற்றுள் எது / எவை?

(A) Salmonella typhi
(B) Shigella
(C) Staphylococcus aureus
(D) Vibrio cholera
(E) Clostridium botulinum

Review Topic
QID: 11007
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் நுண்ணங்கிகளில் எது உணவு நஞ்சாதல் மூலம் சுகவீனத்தை உண்டாக்கின்றது?

 

Review Topic
QID: 11009
Hide Comments(0)

Leave a Reply

உயிருள்ள நுண்ணங்கிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட உணவைக் கொடுக்கக்கூடிய உணவு நற்காப்பு முறை
பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10448
Hide Comments(0)

Leave a Reply

உயிருள்ள மதுவங்கள் இருப்பதை நுணுக்குக்காட்டியினூடாகப் பொதுவாக எடுத்துக் காட்டுவதற்குப்
பயன்படுத்தப்படுவது பின்வரும் மாதிரிகளுள் எது?

Review Topic
QID: 10496
Hide Comments(0)

Leave a Reply

கருவாடு தயாரித்தல் உள்ளடக்குவது

(A)  அழுகலற்ற தன்மை (asepsis)
(B)   நீரகற்றல்
(C)   உயர் வெப்பநிலையின் உபயோகம்
(D)   உப்பிடுதல்

Review Topic
QID: 10129

நுண்ணங்கிகளால் உணவு பழுதடைதல் தொடர்பாக  பின்வருவனவற்றுள் எது சரியானது?

Review Topic
QID: 10133

உணவு  பாதுகாப்பு  முறைகளுள் நுண்ணுயிர்  பெருக்கத்தடை (micro bio static) நிலையை ஏற்படுத்தாதது
பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10146

All  five  answers  are  correct.

பால்மா உற்பத்தியில் பின்வரும் உணவு பேணல் முறைகளில் எது / எவை பயன்படுத்தப்படுகின்றன.

(A) கதிர்ப்பு (கதிர்வீசல்)
(B) மென்சவ்வு வடிகட்டல்
(C) நீரகற்றல்
(D) அழுகலற்ற தன்மை (Asepsis)
(E) வெல்லம் சேர்க்கப்படல்

Review Topic
QID: 11005

உட்செலுத்தப்பட்ட உணவில் உள்ள நுண்ணங்கிகளின் வளர்ச்சியும் செயற்பாடும் காரணமாக உணவுத் தொற்றல்களுடன் தொடர்புடைய பற்றீரியா/ பற்றீரியாக்கள் பின்வருவனவற்றுள் எது / எவை?

(A) Salmonella typhi
(B) Shigella
(C) Staphylococcus aureus
(D) Vibrio cholera
(E) Clostridium botulinum

Review Topic
QID: 11007

பின்வரும் நுண்ணங்கிகளில் எது உணவு நஞ்சாதல் மூலம் சுகவீனத்தை உண்டாக்கின்றது?

 

Review Topic
QID: 11009

உயிருள்ள நுண்ணங்கிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட உணவைக் கொடுக்கக்கூடிய உணவு நற்காப்பு முறை
பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10448

உயிருள்ள மதுவங்கள் இருப்பதை நுணுக்குக்காட்டியினூடாகப் பொதுவாக எடுத்துக் காட்டுவதற்குப்
பயன்படுத்தப்படுவது பின்வரும் மாதிரிகளுள் எது?

Review Topic
QID: 10496
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank