Please Login to view full dashboard.

இழையம் – விலங்கு

Author : Admin

52  
Topic updated on 02/14/2019 04:03am

விலங்கு இழையம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

விலங்குகளின் உடலில் காணப்படும் இழையங்கள் 4 வகைப்படும்.
1. மேலணி இழையம்
2. தொடுப்பிழையம்
3. தசையிழையம்
4. நரம்பிழையம்

மேலணி இழையம்
  • உடலின் உள்ளான, வெளியான மேற்பரப்புக்களை மூடிக் காணப்படும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • அடித்தள மென்சவ்வின் மீது கலங்கள் அடுக்கப்பட்டது.
  • கலங்கள் மிக நெருக்கமாக ஒழுங்குபடுத்தப்பட்டது.
  • கலத்திடை தாயம் ஒடுக்கப்பட்டது.
  • குருதிக்கலன்கள் ஊடுருவமாட்டாது.
  • நார்கள் இல்லை.
  • நரம்பு முடிவிடங்கள் காணப்படும்.
  • அகத்தோற்படை / இடைத்தோற்படை / புறத்தோற்படை உற்பத்திக்குரியது.
  • அடித்தளமென்சவ்வு கொலாஜின் நார்களால் ஆனது.
  • கலங்கள் ஒரு கலப்படையாக ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பின் எளிய மேலணி கலங்கள், பலபடைகளில் ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பின் படைகொண்ட மேலணி எனப்படும்.

எளியமேலணி
 எளிய செதில் மேலணி  ‘ 

  • கலங்கள் தட்டையானவை.
  • அடித்தள மென்சவ்வின் மீது ஒருபடையாகக் கலங்கள் காணப்படும்.
  • கலத்தின் மத்தியில் தட்டையான கரு காணப்படும்.
  • கலவிளிம்பு மடிப்படைந்து காணப்படும்.
  • அமைவிடம் :
  1.  சுவாசப்பை சிற்றறைச் சுவர்
  2. குருதிக்கலன்
  3. நிணநீர்க்கலன் அகவணி
  4. சிறுநீரகத்தியின் போமனின் உறைச்சுவர்
  5. சுற்றுவிரி மென்சவ்வு
  6. இதயச் சுற்றுச் சவ்வு
  7. இதய அகச்சவ்வு

எளிய செவ்வகத்திண்ம மேலணி

  • கலங்கள் செவ்வகத்திண்ம வடிவானவை
  • கலத்தின் மத்தியில் கோளவடிவான கரு காணப்படும்
  • பல்கோண / அறுகோண வடிவான கலங்கள்.
  • சுரப்பிகள், கான்களில் காணப்படும்.
  • அமைவிடம் :
  1. உழிழ் நீர்சுரப்பியின் கான்
  2. வியர்வைச் சுரப்பியின் கான்
  3. சதையச்சுரப்பியின் கான்
  4. தைரொயிட் சுரப்பி
  5. சிறுநீரகத்தியின் அண்மையான, சேய்மையான மடிப்படைந்த சிறு குழாய்கள்
  • தொழில்
  1. சுரத்தல்
  2. அகத்துறிஞ்சல்
  3. கழிவகற்றல்

எளிய கம்பமேலணி

  • கலங்கள் கம்பவடிவானவை.
  • அடித்தள மென்சவ்வின் மீது நெருக்கமாக அடுக்கப்பட்டது.
  • கரு கலத்தின் அடிப்பகுதிக்கு அருகாக காணப்படும்.
  • அதிகளவில் குழியவுருவைக் கொண்டது.
  • சீதம் சுரக்கும் கெண்டிக்கலங்கள் பொதுவாக இக் கலங்களுக்கிடையில் காணப்படும்.
  • சில கம்ப மேலணிக் கலங்களின் சுயாதீன மேற்பரப்பு நுண்சடைமுளைகளைக் கொண்டது. இதனால் அகத் துறிஞ்சும் மேற்பரப்பு அதிகம்.
  • சிலவற்றின் மேற்பரப்பில் பிசிர்கள் உண்டு. இது பிசிர்கம்ப மேலணி எனப்படும்.
  • அமைவிடம்
  1. இரைப்பைமேலணி
  2. சிறுகுடல் மேலணி
  3. சுவாசச் சிறுகுழாய்
  4. சூலகக்கான்

போலிப்படைகொண்ட மேலணி

  • வெவ்வேறு  பருமனில் கம்பவடிவக் கலம் காணப்படும்.
  • எல்லா கலங்களும் அடித்தளமென்சவ்வின் மீது அமைந்தவை.
  • கலங்களின் கருக்கள் வெவ்வேறு மட்டத்தில் அமைந்தவை. எனவே, போலியான தோற்றம் காணப்படும்.
  • அமைவிடம்
  1. வாதனாளியின் அகவணி
  2. நாசிக்குழி மேலணி
  3. சிறுநீர்க்குழாய

படை கொண்ட மேலணி

  • பலபடையில் கலங்கள் ஒழுங்குபட்டவை
  • அடியில் உள்ள கலங்களின் படை அடித்தள மென்சவ்வின் மேலாகக் காணப்படும்.

படைகொண்ட செதின்மேலணி

இது 2 வகைப்படும்.

  • Keretin ஏற்பட்ட படைகொண்ட மேலணி :
  1. இறந்தகலம்
  2. உலர்வதில் இருந்து பாதுகாக்கும்
    உ – ம் : தோலின் மேற்பரப்பில் உள்ள மேலணி
  • Keretin ஏற்றமற்ற படைகொண்ட மேலணி :
    உ + ம் : வாய்க்குழி, நேர்குடல், தொண்டை, குதக்கால்வாய், களம், யோனிமடல், வியர்வைச்சுரப்பிக்கான், முலைச்சுரப்பிக்கான்.

 நிலைமாறுகின்ற மேலணி

  • கலங்கள் பலபடைகளில் ஒழுங்குபட்டது
  • பேரிவடிவானவை
  • இழுவைக்கு உட்படும்போது தட்டையாக தமது வடிவம் மாற்றும்
  • அமைவிடம்
  1. சிறுநீர்ப்பை
  2. சிறுநீர்க் குழாய்
  3. சிறுநீரக இடுப்பு

 

தொடுப்பிழையம்
  • உடலில் அதிகளவில் காணப்படும் இழையமாகும்.
  • இடைத் தோற்படை எனும் முளைய உற்பத்திக்குரியது.
  • தாயம், கலங்கள், நார்கள் என்பவற்றைக் கொண்டது.
  • தாயத்தில் கலங்கள் ஐதாகக் காணப்படும்.
  • கலங்கள் தாயத்தையும், நாரையும் சுரக்கும்.
  • தாயத்தை ஊடுருவி குருதிக்கலன் காணப்படும்.
  • தொடுப்பழையத்தின் தொழில்கள்
  1. பாதுகாப்பை வழங்கல்.
  2. கட்டமைப்பு ஆதாரம் அளித்தல்.
  3. கொண்டு செல்லல்.
  4. காவலியாக செயற்படும்.
  5. அங்கங்களை இணைத்தல்.

தொடுப்பிழைய வகைகள்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • தொடுப்பிழையம் இரு வகைப்படும்
  1. உண்மை தொடுப்பிழையம் இரு வகைப்படும்.
    தளர்வான தொடுப்பிழையம்,அடர்தொடுப்பிழையம்.
  2. விசேட தொடுப்பிழையம் மூன்று வகைப்படும்.
    கசியிழையம் ,என்பு, குருதி

தளர்வான தொடுப்பிழையம்

  • சிற்றிடைவிழையமே வகைமாதிரி தளர்தொடுப்பிழையமாகும்.
  • தாயம் குறைதிண்ம நிலைக்குரியது.
  • ஒளிபுகவிடும் தன்மை கொண்டது.
  • கிளைக்கோபுரதம், Hyaluronic acid என்பவற்றால் தாயம் ஆக்கப்பட்டது.
  • தாயத்தில் பலவகையான கலங்களும், நார்களும் காணப்படும்.

கலங்கள்,

  1. நார் அரும்பற்கலம் – நட்சத்திரவடிவானது, நாரையும் தாயத்தையும் சுரக்கும்.
  2. அடிநாட்டக்கலம் – நீள் கோளவடிவானது,எப்பாரின்,ஹிஸ்டமின்,செரடோனினைச் சுரக்கும்
  3. பெருந்தின் கலம் – ஒழுங்கற்ற வடிவம் கொண்டது, தின்குழியச் செயலில் ஈடுபட்டு                                                                    பாதுகாப்பில் உதவும்.
  4. கொழுப்புக்கலம் – இது கோளவடிவானது. கொழுப்பை சேமிக்கும்.
  5. முதலுருக்கலம் -பிறபொருளெதிரியைச் சுரக்கும்.
  6. நிறப்பொருள் கலம் – நிறத்தை வழங்கும்.
  7. வியத்தமடையாத இடைக்கலவிழையம் – ஏனைய கலங்களாக வியத்தமடையும்.
  • தாயத்தில் இரண்டு வகையான நார்கள் உண்டு.
  1. வெண்நார் – Collagen புரதத்தால் ஆனது. கிளையற்றது. கற்றையாகக் காணப்படும். மீள் சக்தி தன்மையற்றது.
  2. மஞ்சள்நார் – Elastin புரதத்தால் ஆனது கிளை கொண்டது. தனித்தனியாக காணப்படும். மீள்சக்தி தன்மை கொண்டது.

அமைவிடம் :

  1. தோலின் கீழ்
  2. சுற்றுவிரி
  3. தசைகளுக்கு இடையில்
  4. நடுமடிப்பு
  5. குருதிக்கலன் இடையில்
  6. நரம்புகளைச் சூழ
  7. சுரப்பிகான்களைச் சூழ

அடர்தொடுப்பிழையம்

  • தாயத்தின் அடிப்படை பதார்த்தம் குறைவானது.
  • இது மூன்று வகைப்படும்.
  1. நார்தொடுப்பிழையம்
  2. மீள்சக்தி தொடுப்பிழையம்
  3. கொழுப்பிழையம்

நார்த்தொடுப்பிழையம்

  • Collagen நார் சமாந்தரமாகக் காணப்படும்.
  • நெருக்கமாக கொலாஜின் நார் காணப்படும்.
  • இது இருவகைப்படும்.
  1. ஒழுங்கான அடர்தொடுப்பிழையம்.
  • Collagen நார் சமாந்தரமாகக் காணப்படும்.
  • அமைவிடம் – என்புகளை இணைக்கும் இணையம்.
    தசைகளை என்புடன் இணைக்கும் சிரைகள்
  1. ஒழுங்கற்ற அடர்தொடுப்பிழையம்
  • Collagen நார் வெவ்வேறு முறையில் ஒழுங்குபட்டது.
  • அமைவிடம் – சிறுநீரக உறை
    அதிரினல் சுரப்பி உறை
    தசை, நரம்பு, என்பு சுற்றி காணப்படும்.

மீள்சக்தி தொடுப்பிழையம்

  • Elastin நாரைக் கொண்டது.
  • அமைவிடம் – இணையம்
    மூச்சுக் குழல்வாய்மூடி
    வாதனாளி
    நாடிகளின் நடுக்கவசம்
    சிற்றறையைச் சூழ

கொழுப்பிழையம்

  • அதிக எண்ணிக்கை கொழுப்புக்கலம் கொண்டது.
  • திரிபடைந்த சிற்றிடைவிழையம்.
    அமைவிடம் : தோலின் கீழாக, சிறுநீரகங்களை சூழ்ந்து, தசைநார் இடையில்

விசேட தொடுப்பிழையம்

  • இவற்றில் விசேட தொழில்களை செய்வதற்கென தனித்துவமான கலங்கள், தாயம் காணப்படும்.
  • தாயம் திண்மமாக / திரவமாக காணப்படும்.
  • இவை 3 வகைப்படும். அவையாவன
    1. கசியிழையம்
    2. என்பு
    3. குருதி

கசியிழையம்

  • தாயம், கலங்கள், நார் என்பவற்றைக் கொண்டது.
  • தாயம் கொந்தரின் பதார்த்தத்தால் ஆனது.
  • திண்ம நிலையில் தாயம் காணப்படும்.
  • தாயத்தினுள் குருதிக்கலன் ஊடுருவாது.
  • தாயம் பதார்த்தங்களை ஊடுபுகவிடும் தன்மை அற்றது.
  • தாயத்தில் கலங்கள் ஒழுங்கின்றி பரவிக் காணப்படும்.
  • கலங்கள் கலனிடைக்குழியினுள் காணப்படும்.
  • கலனிடைக்குழியில் 1/2/4/8 என்ற என்ற எண்ணிக்கையில் கலங்கள் காணப்படும்.
  • கலங்களில் முதலுரு நீட்டம் இல்லை.
  • கசியிழையத்தைச் சூழ கசியிழையச் சுற்றி காணப் படும்.
  • கசியிழைய சுற்றியில் கசியிழைய அரும்பர், நார், கலம், தாயம், நரம்பு, குருதிக்கலன் காணப்படும்.
  • மூன்று வகையான கசியிழையம் காணப்படும்.
    1. பளிங்குரு கசியிழையம்
    2. வெண்நார் கசியிழையம்
    3. மஞ்சள்நார் கசியிழையம்
  • அமைவிடம் :

பளிங்குரு கசியிழையம்

குரல்வளை, வாதனாளி, பழுவிக்குரிய கசியிழையம், நீண்ட என்பின் முனைப்பகுதி.

வெண்நார்கசியிழையம்

முள்ளந்தண்டென்பிடை வட்டத்தட்டு, பூப்பென்பொட்டு.

மஞ்சள்நார் கசியிழையம்

புறச்செவிச்சோணை, குரல்வளைமூடி, மூக்குநுனி, ஊத்தேக்கியாவின் கால்வாய்.

என்பு

  • தாயம், நார், கலங்கள் ஆகியவற்றைக் கொண்டது.
  • தாயம் திண்மநிலை காணப்படும்.
  • தாயம் கல்சியம் பொஸ்பேற்றை பிரதான அசேதனக் கூறாகக் கொண்டது.
  • சேதனக் கூறாக Collagen நார், Glyco புரதம் உண்டு.
  • என்பின் தாயம் வன்மையானது.
  • இது பதார்த்தங்களை ஊடுபுகவிடும் தன்மையற்றது.
  • என்பின் தாயத்தினுள் குருதிக்கலன் ஊடுருவிக் காணப்படும்.
  • தாயத்தில் கலங்கள் ஒருசீராக ஆவேசின் மென்தட்டில் காணப்படும்.
  • கலங்கள் கலனிடைக் குழிகளில் அமைந்துள்ளன.
  • ஒரு கலனிடைக்குழியில் ஒரு என்புக் கலம் மட்டும் காணப்படும்.
  • கலங்களில் முதலுரு நீட்டம் உண்டு.
  • என்புக்கலம் 3 வகைப்படும்.
    1. என்பரும்பற்கலம்
    இளம் என்புக்கலம், என்பை உருவாக்கும் கலம், தாயத்தையும், நாரையும் சுரக்கும்.
    2. என்புக் குழியம்
    முதிர்ந்த என்புக்கலம், தாயத்தைப் பேணும், என்புக் குழியமாக என்பு அரும்பற்கலம் மாறும்.
    3. என்புடைக்கும் கலம்
    என்பை அழிக்கவும், மாற்றியமைக்கவும் உதவும்.
  • என்பிழையம் பிரதானமாக 2 வகைப்படும்
    அடர் என்பு
    கடற்பஞ்சு என்பு
  • அவயவ என்புகள் பெரும்பாலும் அடர் என்பால் ஆனது.
  • அச்சுவன்கூடு பெரும்பாலும் கடற்பஞ்சு என்பால் ஆனது.
  • நீண்ட என்புகளின் உடற்பகுதி அடர்என்பால் ஆனது.
  • முனைப்பகுதி கடற்பஞ்சென்பால் ஆனது.
  • என்பைச் சூழ என்புச் சுற்றி காணப்படும்.
  • இரு என்புகள் சந்திக்கும் என்பின் முனைப்பகுதி கசியிழையத்தால் ஆனது.
  • என்பின் குறுக்குவெட்டு முகத்தோற்றத்தில் பல ஆவேசின் தொகுதி காணலாம்.
  • ஆவேசின் தொகுதியில் மத்தியில் ஆவேசின் கால்வாய் காணப்படும்.
  • அக்கால்வாயில் நாடி, நாளம், நிணநீர்க்கான், நரம்பு உண்டு.
  • ஆவேசின் மென்தட்டில் கலனிடைக்குழியில் அமைந்ததாக என்புக் குழியம் காணப்படும்.
  • இரு அடுத்துள்ள ஆவேசின் தொகுதிகளிலுள்ள ஆவேசின் கால்வாய் வோக்மனின் கால்வாய் எனப்படும்.
  • என்பின் மத்திய பகுதியில் குழி காணப்படும். இது என்பு மச்சை எனப்படும்.
  • இதனுள் குருதிக்கலன் செறிந்து காணப்படும்.

குருதி  Please Login to view the Question

  • குருதி ஒரு தொடுப்பிழையம்
  • கலங்கள், நார்கள், தாயம் என்பவற்றை உடையது
  • ஏனைய தொடுப்பிழையங்களில் இருந்து சில அம்சங்களில் வேறுபடும்.
  1. கலவுடல்கள் தாயத்தை சுரப்பதில்லை
  2. சாதாரண நிலையில் நார்கள் காணப்படுவதில்லை
  3. இதன் தாயம் திரவநிலையிலேயே காணப்படும்
  • சாதாரண வளர்ந்த மனிதனின் உடலில் 5 – 6 l வரை குருதி உண்டு.
  • குருதியின் கூறுகளை 2 வகையாக பிரிக்கலாம்.
  1. குருதி முதலுரு
  2. குருதிக் கலங்கள்

குருதி முதலுரு

  • குருதியின் கனவளவின்படி 55% குருதி முதலுருவாகும்.
  • குருதி முதலுருவின் அமைப்பில் 90 – 92% வரை நீராகும்.
  • குருதி முதலுருவில் கரைந்த நிலையில் கருதி முதலுருப் புரதம், அகத்துறிஞ்சப்பட்ட உணவுகள், அனுசேப கழிவு, Hormone, அசேதன அயன்கள், வாயுக்கள் என்பவற்றை குறிப்பிடலாம்.
  • குருதிமுதலுருவில் Na+, K+, Ca2+, HCO3- ,Cl- அசேதன அயன்கள் உள்ளன.
  • அவை குருதிக்கு கரைய அழுத்தத்தை ஏற்படுத்துவதிலும், குருதியின் PH ஐ சீர்ப்படுத்தவும் உதவும்.

குருதிக் கலங்கள்

  • குருதியின் கனவளவின் படி 45% கலங்கள் ஆகும்.
  • செவ்வென்பு மச்சையில் உருவாக்கப்படும்.
  • குருதிக் கல வகைகள்
  1. செங்குருதி சிறுதுணிக்கை
  2. வெண்குருதி சிறுதுணிக்கை
  3. குருதிச் சிறுதட்டு

செங்குருதி சிறுதுணிக்கை

  • செவ்வென்பு மச்சையில் உருவாக்கப்படும்.
  • ஏறத்தாழ 7μm விட்டம் உடையது.
  • இருபக்கமும் உட்குழிவான வட்டத்தட்டு வடிவானது.
  • மென்சவ்வு வளையும் தன்மை உடையது.
  • முதிர்ந்த நிலையில் கரு அற்றது.
  • கலப்புன்னங்கம் இதில் காணப்படுவதில்லை.
  •  ஈமோகுளோபின் நிறப்பொருள் காணப்படும்.
  • வாழ்க்கைக் காலம் ஏறத்தாழ 120 நாட்கள்.
  • வயதான RBC ஈரலிலும், மண்ணீரலிலும் அழிக்கப்படும்.
  • செங்குழியங்களின் எண்ணிக்கை ஆரோக்கியமான வளர்ந்த மனிதனில் 4.5 × 106mm3 – 5.0 ×106mm3 ஆகும்.
  • குருதியில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கலவகை இதுவாகும்.
  • ஒரு Haemoglobin மூலக்கூறு 4 ஒட்சிசனை தன்னோடு காவும்.
  • செங்குழியத்தின் உற்பத்திக்கு Vitamin B12, Folic acid,இரும்பு என்பன அவசியம்
  • சுவாச வாயுக்களான O2,CO2 என்பவற்றை காவுவதில் ஈடுபடும்.
  • சுவாச வாயுக்களை கொண்டு செல்ல கொண்டுள்ள இசைவாக்கம்,
  1. கரு இல்லாதிருத்தல்
  2. இரட்டை குழி காரணமாக அதிக மேற்பரப்பு கிடைத்தல்.
  3. Haemoglobin ஐ கொண்டிருத்தல்.
  • Erythropoitin Hormone தூண்டலால் செங்குழிய உற்பத்தி அதிகரிக்கும்.

வெண்குருதி சிறுதுணிக்கை

cdr503952-750

  • இவை நிறப்பொருள் அற்ற கலங்கள்.
  • ஏறத்தாழ 8 – 15 μm விட்டமுடையவை.
  • கோளவடிவானது.
  • கரு கொண்டது.
  • செங்குருதிக் கலன்களைவிட பருமனில் பெரியவை.
  • குறைந்தளவு எண்ணிக்கையில் காணப்படும்.
  • இவற்றுள் சில சிறுமணி கொண்ட வெண்குழியம் எனவும், சிறுமணியற்ற வெண்குழியம் எனவும் இரு வகைப் படும்.

சிறுமணியுருவான வெண்குழியம்

  1. நடுநிலை நாடி
  2. இயோசின் நாடி
  3. மூலநாடி

சிறுமணியுரு அற்ற வெண்குழியம்

  1. ஒற்றைக்குழியம்
  2. நிணநீர்க் குழியம்

நடுநிலைநாடி

  • வெண்குழியங்களில் அதிக சதவீதம் காணப்படும் (40 – 75%)
  • பலசோணை கொண்ட கரு காணப்படும்.
  • குழியவுரு சிறுமணி கொண்டது.
  • செவ்வென்பு மச்சையில் உருவாக்கப்படும்.
  • தின்குழியச் செயற்பாட்டைக் காட்டி இறந்த கலங்களை விழுங்கி அழிக்கும்.
  • தனித்திறனற்ற நோயெதிர்ப்பு தன்மைக்கு காரணம்
  • நடுநிலைநாடி குருதி மயிர்க்குழாய் ஊடாக வெளியேறும்.

இயோசின் நாடி

  • 2 சோணை கொண்ட கரு காணப்படும்.
  • வெண்குழியங்களில் 1 – 6 % வரை காணப்படும்.
  • உடலில் ஒவ்வாமை தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு வழங்கும்.
  • அந்நிய பதார்த்தம் நச்சு நீக்கும்.
  • செவ்வென்பு மச்சை உருவாகும்.

மூலநாடி

  • வெண்குழியம் மிகக் குறைந்த சதவீதம் காணப்படும். ஏறத்தாழ 0.5%
  • கரு சோணை கொண்டது.
  • குருதி உறைதல் பதார்த்தமான எப்பாரினை சுரக்கும்.
  • அழற்சிதரு எதிர் செயற்பாடுகளை ஏற்படுத்தும் Histamine ஐ சுரக்கும்.

சிறுமணியுரு அற்றவை

ஒற்றைக் குழியம்

  • வெண்குழியங்களில் 2 – 10% வரை காணப்படும்.
  • கலங்கள் பெரியவை.
  • கரு சிறுநீரக வடிவமானது.
  • குழியவுரு சிறுமணியற்றது. தெளிவானது.
  • செவ்வென்பு மச்சையிலும் / மண்ணீரலிலும் உற்பத்தியாகும்.
  • தின்குழியச் செயற்பாட்டால் Bacterie ஐ விழுங்கி அழிக்கின்றன. இதனால் தனித்திறன் அற்ற நிர்ப்பீடனம் வழங்கும்.
  • ஒற்றைக் குழியம் உடலின் வெவ்வேறு அங்கங்களில் பரவிக் காணப்படும். Kupper கலங்களால் ஈரலிலும், பெருந்தின் குழியமாக நுரையீரல் சிற்றறைகள், என்புடைக்கும் கலமாக என்பிலும் காணப்படும்.

நிணநீர்க் குழியம்

  • வெண்குழியங்களில் 20 – 50% வரை காணப்படும்.
  • வட்டவடிவமான பெரிய கரு உண்டு.
  • குழியவுரு சிறுமணி அற்றது.
  • செவ்வென்பு மச்சை, மண்ணீரல், நிணநீர் இழையங்களில் உற்பத்தியாகும்.
  • பிறபொருள் எதிரிகளைச் சுரப்பதன் மூலம் தனித்திறன் உடைய நிர்ப்பீடனம் விருத்தியடைய காரணமாகும்.

குருதிச் சிறுதட்டு

  • ஒழுங்கற்ற வடிவம் உடையது. மிகச்சிறியது.
  • கரு அற்றது.
  • 1 mm3 குருதியில் ஏறத்தாழ 250 – 350 × 103 காணப்படும்.
  • வாழ்க்கைக்காலம் 8 – 11 நாட்கள்
  • செவ்வென்பு மச்சையில் உருவாகும்.
  • மண்ணீரலில் அழிக்கப்படும்.
  • குருதிச் சிறுதட்டு உருவானது சிறுநீரகங்களால் உருவாக்கப்படும். Thrombopoietin எனும் பதார்த்தத்தால் தூண்டப்படும்.
  • காயத்தில் குருதியை உறையச் செய்தல். இதன்மூலம் உடற் பாய்பொருள் வெளியேறுவது தடுக்கப்படும்.

 

தசையிழையம்
  • தசை இழையம் தசைக்கலங்களால் ஆக்கப்பட்டது.
  • இது இடைத்தோற்படை உற்பத்திக்குரியது.
  • தசையின் கட்டமைப்பிற்குரிய அடிப்படை அலகு தசை நார்
  • தசையின் தொழிற்பாட்டிற்குரிய அடிப்படை அலகு தசைப்பாத்து
  • தசைகலம் பின்வரும் சிறப்பியல்பைக் கொண்டது.
    1. இழுபடும் இயல்பு
    2. மீள்தகவு இயல்பு
    3. அருட்டப்படும் இயல்பு
    4. சுருங்கும் இயல்பு
  • தசையிழையம் பிரதானமாக 3 வகைப்படும்.
    1. வன்கூட்டுத்தசை
    2. மழமழப்பானதசை
    3. இதயத்தசை

வன்கூட்டுத் தசை  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • உடலில் மிக அதிகளவில் காணப்படும் தசை வன்கூட்டுத் தசையாகும்.
  • இது என்புடன் சிரை மூலம் இணைந்து காணப்படும்.
  • இத்தசை வரியமைப்புடையது. எனவே, வரித்தசை எனப்படும்.
  • வன்கூட்டுத்தசையைச் சூழ மேற்தசையம் எனும் தொடுப்பிழைய உறை காணப்படும்.
  • வன்கூட்டுத் தசையில் பல தசைக்கற்றைகள் உண்டு.
  • இத்தசைக் கற்றைகளுக்கிடையில் சுற்றுத் தசையம் என்னும் தொடுப்பிழைய உறை உண்டு.
  • ஒவ்வொரு தசைக்கற்றையின் உள்ளும் பலதசைநார் உண்டு.
  • தசைநார்களுக்கிடையில் அகத்தசையம் என்னும் தொடுப்பிழைய உறை உண்டு.
  • இவை நீண்ட உருளை வடிவமான கிளைக்காத கலங்கள்.
  • இது வரியமைப்புடையது.
  • கலங்கள் தசைக்கல மென்சவ்வு உண்டு.
  • கலத்தினுள் தசைமுதலுரு காணப்படும்.
  • கலத்தின் சுற்றுப்புறமாக அநேக கருக்கள் காணப்படும்.
  • ஒன்றுக்கொன்று சமாந்தரமாக தசைநார்கள் காணப்படும்.
  • தசைநாரில் பலகருக்கள் காணப்படும்.
  • தசைநார் பொதுமைக்குழிய கலம் எனப்படும். காரணம் ஒரு கலத்தில் பல கருக்கள் காணப்படும்.
  • தசைநாரில் பொதுவான கலப்புன்னங்கம் காணப்படும்.
    உ – ம் : இழைமணி, ER, கொல்கி உபகரணம், Lysosome,Ribosome
  • நன்கு விருத்தியடைந்த தசைமுதலுருச் சிறுவலை என்னும் அழுத்தமான அகமுதலுருச் சிறுவலை காணப்படும்.
  • அதிக எண்ணிக்கையில் இழைமணி காணப்படும்.
  • வன்கூட்டுத் தசையில் சுற்றயல் நரம்புகளால் நரம்பு விநியோகிக்கப்படும்.
  • நரம்பு கணத்தாக்கத்தினால் தூண்டப்படும் சுருங்கக் கூடியது. எனவே, நரம்பு பிறப்பிற்குரியது.
  • வலிமையாக சுருங்கக் கூடியது.
  • இச்சை வழி இயங்கும் தசை.
  • சந்தம் பொருந்திய சுருக்கம் இல்லை.
  • இலகுவில் களைப்படையும்.
  • தசைப்புன்னாரில் அநேக தசைப்பாத்துக்கள் அடுக்கப்பட்டது.
  • தசைப்புன்னாரில் 2 வகையான இழைகள் உண்டு.
    1. தடித்த இழை – Myosin
    2. மெல்லிய இழை – Actin
  • தடித்த இழைகள் Myosin புரதத்தால் ஆனது எனவே, Myosin இழைகள் எனப்படும்.
  • மெல்லிய இழைகள் Actin புரதத்தால் ஆனது Actin இழைகள் எனப்படும்.
  • இரு அடுத்துள்ள 2 கோடுகளுக்கு இடைப்பட்ட பகுதி தசைப்பாத்தாகும்.
  • தடித்த இழைகள் ஒன்றுடனொன்று ஒழுங்குபடுத்தப்படும் A பட்டி பெறப்படும்.
  • இது இருளான வலயம்.
  • மெல்லிய இழைகளுக்கு இடைப்பட்ட பகுதி H வலயம்
  • இவ்வலயத்தில் இழைகள் ஒன்றையொன்று மேவாது தடித்த இழை மட்டும் காணப்படும்.
  • தடித்த இழைகளுக்கு இடைப்பட்ட பகுதி I பட்டியாகும். இது ஒளிவலயம் ஆகும்.
  • இவ்வலயத்தில் மெல்லிய இழைமட்டும் காணப்படும்.
  • A பட்டியின் மத்திய பகுதி M கோடு.
  • I பட்டியின் மத்தியபகுதி Z கோடு.
  • Z கோட்டில் மெல்லிய இழைகள் இணைந்தும் காணப்படும்.
  • M கோட்டில் தடித்த இழை இணைந்தும் காணப்படும்.
  • தசைச்சுருக்கத்தில் தடித்த இழைகள், மெல்லிய இழைகள் குறுகாது.
  • அவ்விரு இழைகளும் ஒன்றையொன்று மேவி அசையும்.
  • H வலயம், I பட்டி குறுகும். A பட்டி மாறாது.

மழமழப்பான தசை  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • மழமழப்பான தசை கதிர்வடிவானது.
  • கலத்தின் நடுவில் தனிக்கரு காணப்படும்.
  • தசைக்கல மென்சவ்வு உண்டு.
  • தசைமுதலுரு குறைந்த அளவில் காணப்படும்.
  • குழியவுருவில் கலப்புன்னங்கள் காணப்படும்.
    உ – ம் : இழைமணி, ER, கொல்கி உபகரணம், Ribosome,Lysosome.
  • தசைப்பாத்து அற்றவை
  • வரித்தோற்றம் இல்லை.
  • Actin,Myosin இழைகள் தசைமுதலுருவில் எழுமாறாக பரவிக் காணப்படும்.
  • இழைமணிகள் குறைந்த எண்ணிக்கையில் காணப்படும்.
  • கலங்கள் அடுக்குகளாக காணப்படும்.
  • தசை முதலுருச் சிறுவலை குறைவாக காணப்படும்.
  • இச்சையின்றி தொழிற்படும்.
  • தன்னாட்சி நரம்புத் தொகுதியால் நரம்பு விநியோகிக் கப்படும்.
  • நரம்பு கணத்தால் தொழிற்பட தூண்டப்படும். எனவே நரம்பு பிறப்புக்குரியது.
  • ஆறுதலாக களைப்படையும்.
  • காணப்படும் இடம் :
  1. உணவுக் கால்வாயின் சுவர்
  2. கருப்பை சுவர் தசை
  3. கதிராளி
  4. பிசிர்த்தசை
  5. நாடிகளின் சுவர்
  6. மயிர் நிறுத்தும் தசை
  7. சிறுநீர்ப்பை

இதயத் தசை  Please Login to view the QuestionPlease Login to view the Question

  • இதயத்தசை முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் இதயச்சுவரில் காணப்படும்.
  • கலங்கள் உருளைவடிவானவை.
  • நீண்டவை கிளைத்தவை
  • கரு, தசைமுதலுரு, தசைக்கலமென்சவ்வு உண்டு.
  • கலத்தின் மத்தியில் தனிக்கரு உண்டு.
  • குழியவுருவில் பொதுவான கலப்புன்னங்கம் உண்டு.
    உ – ம் : இழைமணி, ER, கொல்கி உபகரணம், Ribosome
  • இது அடுத்துள்ள தசைக்கலங்களுக்கு இடையில் இடை புகுந்த வட்டத்தட்டு காணப்படும்.
  • இத்தட்டு ஒருகலத்திலிருந்து அடுத்த கலத்திற்கு கணத்தாக்கம் கடத்த உதவும்.
  • தசைப்பாத்து காணப்படும்.
  • தன்னாட்சி நரம்புத்தொகுதியால் கட்டுப்படுத்தப்படும்.
  • தசைப்பிறப்புக்குரியது.
  • இதயச் தசைகள் சுருக்கம் அடைவதற்கான தூண்டல் இதயத் தசையால் பிறப்பிக்கப்படும்.
  • இதயத்தசை களைப்படையாது.
  • இச்சையின்றி செயற்படும்.
  • சந்தமான முறையில் வலிமையான சுருக்கம் காட்டும்.
  • தசைமுதலுருவில் அதிக எண்ணிக்கையில் இழைமணிகள் காணப்படும்.

 

நரம்பு இழையம்
  • இது புறத்தோற்படை உற்பத்திக்குரியது.
  • நரம்பிழையத்தின் கட்டமைப்பிற்குரிய அடிப்படை அலகு நரம்புக்கலம்.
  • தொழிற்பாட்டிற்குரிய அடிப்படை அலகு தெறிவில் ஆகும்.
  • நரம்பிழையம் இருவகையான கலங்களால் ஆக்கப் பட்டது.
    1. நரம்புக் கலம்
    2. நரம்புப் பசைக்கலம்
  • நரம்புக்கலம் பிரிவடையும் தன்மை அற்றவை.
  • நரம்புப் பசையிழைய கலம் அதிக எண்ணிக்கையில் காணப்படும்.
  • அருட்டப்பட முடியாதவை.
  • பிரிவடையக் கூடியவை.
  • நரம்பு பசைக்கலங்கள் நரம்பு கலத்திற்கு ஆதாரம் அளிக்கின்றவை.
  • நரம்பு பசைக் கலங்களாவன,
    சுவானின் கலம்
    Oligodentro cytes
    Asto cytes
  • நரம்புப் பசைக்கலங்களினால் நரம்புக் கலங்களின் வெளிக்காவு நரம்பு முளைகளில் மயலின் கவசம் அமைக்கப்படும்.
  • நரம்புப் பசையிழைய கலங்களால் பின்வரும் தொழில் மேற்கொள்ளப்படும்.
    1. நரம்புக் கலங்களில் இருந்து கழிவகற்றல், நிர்ப்பீடன தொழிலில் ஈடுபடும்.
    2. நரம்பு கலங்களுக்கு போசணையளித்தல்.
  • நரம்புக் கலம் உறுத்துணர்ச்சி உடையவை. கணத்தாக்கம் கடத்தும் திறன் உடையவை.
  • நரம்புக்கலம் 3 பகுதிகளைக் கொண்டது.
    1. கலவுடல்
    2. உட்காவு நரம்புமுளை
    3. வெளிக்காவு நரம்பு முளை
  • கலவுடல் கரு, சிறுமணியுருவான குழியவுருவைக் கொண்டது.
  • நட்சத்திரவடிவானது.
  • கருவில் தெளிவான புன்கரு காணப்படும்.
  • கலவுடலின் குழியவுருவில் இழைமணி, Ribosome. நிசிலின் சிறுமணி என்பவை காணப்படும்.
  • புன்மையத்தி காணப்படாது.
  • Ribosome அழுத்தமற்ற அகமுதலுருச் சிறுவலையின் கூட்டம் Nissl’s சிறுமணி எனப்படும்.
  • கலவுடலில் இருந்து குறுகிய, கிளைத்த உட்காவு நரம்பு முளை எழும்.
  • உட்காவு நரம்புமுறையில் சுவானின் கலம் காணப்படாது.
  • உட்காவு நரம்புமுளை பொதுவாக சிறியவை.
  • நன்கு கிளைத்தவை.
  • கலவுடலை நோக்கி கணத்தாக்கம் செலுத்தும்.
  • கலவுடலில் இருந்து அச்சிழைமேடு எனும் கட்டமைப்பு எழும்.
  • இது நீண்ட, வெளிக்காவு நரம்புமுளையாக எழும்.
  • இது கடவுடலில் இருந்து வெளிநோக்கி கணத்தாக்கம் கடத்தும்
  • வெளிக்காவு நரம்பு முளைகளைச் சூழ சுவானின் கலம் காணப்படும்.
  • இக்கலங்ளின் கலமென்சவ்வால் மயலின்கவசம் அமைக்கப்படும்.
  • மயலின் கவசம் Na+, K+ பாய்ச்சலைத் தடுத்து காவலியாக தொழிற்படும்.
  • சுவானின் கலங்களுக்கு இடையில் இரண்வியரின் கணு காணப்படும்.
  • இங்கு மயிலின்கவசம் காணப்படாது.
  • வெளிக்காவு நரம்புமுளையின் நுனிப்பகுதி கிளைத்துக் காணப்படும்.
  • கிளைகளின் நுனியில் நரம்பிணைப்பு குமிழ்கள் காணப்படும்.
  • அவற்றுள் Acetyl cholin போன்ற நரம்பு கடத்தி பதார்த்தம் காணப்படும்.
  • சுற்றுவிருட்சம் காணப்படும் சிறுகிளையில் அநேக நரம்பிணைப்பு குமிழ் காணப்படும்.
  • நரம்புக் கலம் வடிவத்தின் அடிப்படையில் 3 வகைப் படும்.
    1. பல்முனை நரம்புக் கலம்
    2. இருமுனைவு நரம்புக் கலம்
    3. போலியான ஒருமுனைவு நரம்புக் கலம்

 

RATE CONTENT 3, 1
QBANK (52 QUESTIONS)

பின்வரும் ஓமோன்களில் எது மனிதனின் குருதி அமுக்கத்தைச் சீராக்குவதுடன சம்பந்தபட்டிருப்பதில்லை?

Review Topic
QID: 3249
Hide Comments(0)

Leave a Reply

வன்கூட்டுத் தசை நார்,

Review Topic
QID: 3270
Hide Comments(0)

Leave a Reply

மனிதர்களிலே படைகொண்ட மேலணி எதிலே காணப்படுவதில்லை?

Review Topic
QID: 3271
Hide Comments(0)

Leave a Reply

வன்கூட்டுத் தசை நார்

Review Topic
QID: 3314
Hide Comments(0)

Leave a Reply

மாணவன் ஒருவன் ஒளி நுணுக்குக்காட்டியினூடாக ஒரு விலங்கிழையத்தைப் பரிசோதிக்கும் போது அதன் கலங்கள் ஒரு அடித்தள மென்சவ்வில் இருப்பதை அவதானித்தான். இவ்விழையத்தில் பெரும்பாலும் இருக்கக்கூடியது பின்வரு வனவற்றுள் எது?

Review Topic
QID: 3351
Hide Comments(0)

Leave a Reply

இதயத் தசை நார், மழமழப்பான தசை நார் ஆகிய இரண் டையும் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 3352
Hide Comments(0)

Leave a Reply

ஒரு வன்கூட்டுத் தசை நார் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?

Review Topic
QID: 3365
Hide Comments(0)

Leave a Reply

மனிதனில் தனிச் செதிண்மேலணிகள் இருப்பது

Review Topic
QID: 3373
Hide Comments(0)

Leave a Reply

 

மனிதனில் தனிச் செதிண்மேலணி காணப்படுவது?

 

 

 

 

Review Topic
QID: 3418
Hide Comments(0)

Leave a Reply

மனித இதயச் தசை நார்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானது / சரியானவை எது / எவை?

Review Topic
QID: 3514
Hide Comments(0)

Leave a Reply

மனித வன்கூட்டுத் தசை நார்கள் தொடர்பாகச் சரியான கூற்று / கூற்றுகள் பின்வருவனவற்றில் எது / எவை?

Review Topic
QID: 3531
Hide Comments(0)

Leave a Reply

மனித மழமழப்பான தசைநார்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3542
Hide Comments(0)

Leave a Reply

மனிதனில் எளிய செதின்மேலணிக் கலங்கள் இருப்பது

Review Topic
QID: 3548
Hide Comments(0)

Leave a Reply

இதயத் தசைநார், மழமழப்பான தசைநார் ஆகிய இரண்டும்

Review Topic
QID: 3550
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் தொடுப்பிழையங்களின் தொழில் அல்லாதது எது?

Review Topic
QID: 3557
Hide Comments(0)

Leave a Reply

மனித வன்கூட்டுத்தசை நார்கள் தொடர்பான சரியான கூற்றைத் தெரிந்தெடுக்க?

Review Topic
QID: 3558
Hide Comments(0)

Leave a Reply

மழமழப்பான தசைகள்

Review Topic
QID: 3589
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் அங்கமொன்றின் குறுக்கு வெட்டு முகத்தை நுணுக்குக் காட்டியினூடாக பரிசலீத்தலின் போது பிசிர்க் கலங்கள் , கெண்டிக்கலங்கள், ஒன்று அல்லது இரண்டு கலங்களைக் கொண்ட கலனிடைக்குழிகள் அவதானிக்கப்பட்டன. இவ்வங்கம்

Review Topic
QID: 3626
Hide Comments(0)

Leave a Reply

என்பு, கசியிழையம் ஆகிய இரண்டுடனும் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 3634
Hide Comments(0)

Leave a Reply

மழமழப்பான தசை நார்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3639
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் மழமழப்பான தசைகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 3657
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் ஓமோன்களில் எது மனிதனின் குருதி அமுக்கத்தைச் சீராக்குவதுடன சம்பந்தபட்டிருப்பதில்லை?

Review Topic
QID: 3249

வன்கூட்டுத் தசை நார்,

Review Topic
QID: 3270

மனிதர்களிலே படைகொண்ட மேலணி எதிலே காணப்படுவதில்லை?

Review Topic
QID: 3271

வன்கூட்டுத் தசை நார்

Review Topic
QID: 3314

மாணவன் ஒருவன் ஒளி நுணுக்குக்காட்டியினூடாக ஒரு விலங்கிழையத்தைப் பரிசோதிக்கும் போது அதன் கலங்கள் ஒரு அடித்தள மென்சவ்வில் இருப்பதை அவதானித்தான். இவ்விழையத்தில் பெரும்பாலும் இருக்கக்கூடியது பின்வரு வனவற்றுள் எது?

Review Topic
QID: 3351

இதயத் தசை நார், மழமழப்பான தசை நார் ஆகிய இரண் டையும் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 3352

ஒரு வன்கூட்டுத் தசை நார் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?

Review Topic
QID: 3365

மனிதனில் தனிச் செதிண்மேலணிகள் இருப்பது

Review Topic
QID: 3373

 

மனிதனில் தனிச் செதிண்மேலணி காணப்படுவது?

 

 

 

 

Review Topic
QID: 3418

மனித இதயச் தசை நார்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானது / சரியானவை எது / எவை?

Review Topic
QID: 3514

மனித வன்கூட்டுத் தசை நார்கள் தொடர்பாகச் சரியான கூற்று / கூற்றுகள் பின்வருவனவற்றில் எது / எவை?

Review Topic
QID: 3531

மனித மழமழப்பான தசைநார்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3542

மனிதனில் எளிய செதின்மேலணிக் கலங்கள் இருப்பது

Review Topic
QID: 3548

இதயத் தசைநார், மழமழப்பான தசைநார் ஆகிய இரண்டும்

Review Topic
QID: 3550

பின்வருவனவற்றுள் தொடுப்பிழையங்களின் தொழில் அல்லாதது எது?

Review Topic
QID: 3557

மனித வன்கூட்டுத்தசை நார்கள் தொடர்பான சரியான கூற்றைத் தெரிந்தெடுக்க?

Review Topic
QID: 3558

மழமழப்பான தசைகள்

Review Topic
QID: 3589

மனிதனின் அங்கமொன்றின் குறுக்கு வெட்டு முகத்தை நுணுக்குக் காட்டியினூடாக பரிசலீத்தலின் போது பிசிர்க் கலங்கள் , கெண்டிக்கலங்கள், ஒன்று அல்லது இரண்டு கலங்களைக் கொண்ட கலனிடைக்குழிகள் அவதானிக்கப்பட்டன. இவ்வங்கம்

Review Topic
QID: 3626

என்பு, கசியிழையம் ஆகிய இரண்டுடனும் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 3634

மழமழப்பான தசை நார்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3639

மனிதனின் மழமழப்பான தசைகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 3657
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank