Please Login to view full dashboard.

ஆவியுயிர்ப்பு,கசிவு

Author : Admin

11  
Topic updated on 02/14/2019 08:45am

ஆவியுயிர்ப்பு
 தாவரங்களின் அங்குரப் பகுதிகளான இலைவாய் பட்டைவாய் புறத்தோலினூடாக நீரானது நீராவியாக இழக்கப் படும் செயன்முறை ஆவியுயிர்ப்பு எனப்படும்.
 எனவே ஆவியுயிர்ப்பு 3 பாதையினூடாக நிகழ்கின்றது.
01. இலைவாய் 02. புறத்தோல்03. பட்டைவாய்
 இலைவாய் ஆவியுயிர்ப்பு இலை மற்றும் பச்சை தண்டுகளிலுள்ள இலைவாயினூடாக நிகழ்கின்றது. 90% நீர் இம்முறை யால் இழக்கப்படுகிறது.
 புறத்தோல் ஆவியுயிர்ப்பு தண்டு இலையின் மேற்றோலுக்கு வெளிப்புறமாக காணப்படும். புறத்தோலினூடாக நிகழ் கின்றது. 10%நீர் இம்முறையால் இழக்கப்படும்.
 பட்டைவாய் ஆவியுயிர்ப்பு துணை வளர்ச்சி அடைந்த தண்டின் தக்கையில் காணப்படும் பட்டை வாயினூடாக நிகழும் மிகவும் குறைந்தளவு நீர் வெளியேறும்.

ஆவியுயிர்ப்பால் தாவரம் அடையும் நன்மை
01. ஆவியுயிர்ப்பினால் தாவரத்திற்கு குளிர்ச்சி ஏற்படுகிறது. தாவர உடலிலிருந்து நீர் (ஆவியாக) நீராவியாக மாறுவதற் கான வெப்பம் எடுக்கப்படுவதால் தாவரத்திற்கு குளிர்ச்சி ஏற்படுகிறது.
02. ஆவியுயிர்ப்பினால் ஆவியுயிர்ப்பு இழுவை பிரயோகிக்கப்பட்டு தாவரத்தினூடான நீரின் அசைவு ஏற்படுத்தப்படுகிறது. மண்ணீர் கரைசலிலிருந்து நீரின் அகத்துறிஞ்சல் பக்க கடத்தல் மேல்நோக்கிய கடத்தல் நிகழ்கிறது. சாற்றேற்றம்
03. வேரினால் நீர் அகத்துறிஞ்சப்படல்
04. அகத்துறிஞ்சப்பட்ட நீர் கனியுப்பை பரவலடைய செய்தல்.

.

ஆவியுயிர்ப்பை பாதிக்கும் காரணிகள் Please Login to view the Question
ஆவியுயிர்ப்பை பாதிக்கும் காரணிகள் பிரதானமாக 2 வகைப்படும்.
01. புறக்காரணிகள் 02. அகக் காரணிகள்

.

புறக்காரணிகள் சூழலுடன் தொடர்புபட்டவை. அவையாவன
01. சூழல் வெப்பநிலை
02. வளியின் ஈரப்பதன்
03. காற்று { காற்றின் வேகம்
04. ஒளிச்செறிவு
05. மண்ணிலிலுள்ள நீரின் அளவு
06.CO2 செறிவு

 

அகக் காரணிகள் தாவரத்துடன் தொடர்புபட்டவை. அவையாவன
01. இலைவாய்களின் எண்ணிக்கை பரம்பல்
02. இலையின் அகக்கட்டமைப்பு
03. தாவரத்திலுள்ள நீரினளவு
மிகையாக நீர் வெளியேற்றப்பட்டால் அதாவது வெப்பம் உயர்வாக உள்ள போது தாவரத்தில் வாடல் or இறப்பு ஏற்பட சந்தர்ப்பம் உண்டு.

புறக்காரணிகள்
01. சூழல் வெப்பநிலை
சூழல் வெப்பநிலை அதிகரிக்கப்படும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும். சூழல் வெப்பநிலை குறைவடையும் போது ஆவியுயிப்பு வீதம் குறைவடையும்.
சூழல் வெப்பநிலை அதிகரிக்கும் போது
i. இலையை அண்டிய பகுதிகளில் ஈரப்பதன் குறைகிறது. இதனால் நீரழுத்தம் இலையை விட குறைவடைவதால் நீர் அழுத்ததப்படித்திறனுக்கும் ஏற்ப நீர் வளிமண்டலத்தை அடையும்.
வெப்பநிலை அதிகம் எனின்
ii. நீர் நீராவியாகும் வீதம் அதிகரிக்கும் – ஃ ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கப்படும்.

.
02. வளிமண்டல ஈரப்பதன் வளிமண்டல ஈரப்பதன் ஆவியுயிர்ப்பு வளிமண்டல ஈரப்பதன் அதிகரிக்கப்படும் போது ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும். வளிமண்டல ஈரப்பதன் குறைவடையும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
ஈரப்பதன் அதிகரிக்கும் போது
இலைக்கும் இலையை அண்டிய வளிமண்டலத்துக்கும் இடையில் நீழுத்த படித்திறன் பேணப்படமாட்டாது. காரணம் அவ்வளியில் நீராவியினவாவு அதிகமாக காணப்படும். ஃ ஆவியுயிர்ப்பு வீதம் குறைவாக காணப்படும்.
ஈரப்பதன் குறைவடையும் போது இலையை அண்டிய பகுதிகளில் நீராவியின் அளவு குறைவடையும். நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப இலையிலிருந்து வளிமண்டலத்துக்கு நீர் ஆவியாக அசையும். ஃ ஆவியுயிர்ப்பு வீதம் அதிகமாக காணப்படும்.

.
03. காற்று காற்றின் வேகம் ஆவியுயிர்ப்பு
காற்றின் வேகம் அதிகரிக்கப்படும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கப்படும். காற்றின் வேகம் குறைவடையும் போது ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.
காற்றின் வேகம் அதிகரிக்கப்படும் போது இலையை அண்டிய பகுதிகளிலுள்ள நீராவி அதிகமாக அகற்றப்படுவதால் நீரினழுத்தம் குறைவடைந்து நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப நீர் இலையிலிருந்து ஆவியாகும் வீதம் அதிகரிக்கும். ஃ ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
காற்றின் வேகம் குறைவடையும் போது இலையை அண்டிய பகுதிகளிலுள்ள நீராவிகளை அகற்றும் வீதம் குறைவாக காணப்படுவதால் நீரழுத்தப் படித்திறன் பேணப்பட்டு ஆவியாகும் அளவு குறையும். ஃ ஆவியுயிர்ப்பு வீதம் குறை வடையும்.

.
04. ஒளிச் செறிவு
ஒளிச்செறிவு அதிகரிக்கும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும். ஒளிச்செறிவு குறைவடையும் போது ஆவியுயிர்ப்பு குறைவடையும்

 

.ஒளிச்செறிவு அதிகரிக்கப்படும் பொது இலைவாய்கள் திறக்கும் வீதம் அதிகரிப்பதால் ஆவியுயிர்ப்பு வீதம் அதி கரிக்கும்.
ஒளிச்செறிவு குறைவடையும் போது இலைவாய்கள் திறக்கும் வீதம் குறைவடைவதால் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.

.
05. மண்ணீரினளவு

.
மண்ணீரினளவு அதிகரிக்கப்படும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
மண்ணீரினளவு குறைவடையும் போது ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.
மண்ணீரினளவு அதிகரிக்கப்படும் போது தாவரம் அகத்துறிஞ்சல் நீரினளவு அதிகரிப்பதால் ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
மண்ணீரினளவு குறைவடையும் போது தாவரம் உள்ளெடுக்கும்.
நீரினளவு குறைவடைவதால் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.

.
06. CO2 செறிவு

.
CO2  செறிவு அதிகரித்தால் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.
CO2 செறிவு குறைவடைந்தால் ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
CO2  செறிவு அதிகரிக்கப்படும். போது இலைவாயினூடு உள்ளெடுக்கப்படும் CO2  இiளைவு. அதிகரிப்பதால் இலை யில் காபோனிக் அமிலத்திளைவு அதிகரிப்பதால் pர் குறையும். குறைந்த pH வெல்லக் கரைசலை மாப்பொருளாக மாற்றும். ஆகவே காவற்கலத்தின் கரையழுத்தம் குறைவடைவதால் நீரழுத்தம் அதிகரிக்கும். நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப காவற் கலத்திலிருந்து நீர் மேற்றோல் கலத்தை நோக்கி அசைவதால் காவற்கலத்தின் வீக்க அமுக்கம் குறை வடைந்து இலைவாய் மூடப்படும். இதனால் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.

.
CO2  செறிவு குறைவடையும் போது இலைவாயினூடு உள்ளெடுக்கப்படும்.
CO2  இனளவு குறைவடையும். அமிலத்தன்மை குறைவடையும். இதனால் அதிகரிக்கும்.

.அதிகரித்த pH மாப் பொருளை வெல்லக் கரைசலாக மாற்றும். ஃ அங்கு கரையழுத்தம் அதிகரித்த நீரழுத்தம் குறைவடைவதால் நீறழுத்த படித்திறனுக்கு ஏற்ப மேற்றோலிலிருந்து காவற்கலத்தை நோக்கி நீர் அசைய வீக்க அழுக்கம் அதிகரித்து இலைவாய் திறக்கும். இதனால் ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
அகக் காரணிகள் Please Login to view the Question

.
01. இலைவாய்களின் எண்ணிக்கை பரவல்
இலைகளில் இலைவாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும். எண்ணிக்கை குறைவடையும் போது ஆவியுயிர்ப்பு வீதம் குறையும்.
இலைவாய்கள் வளியுடன் நேரடித் தொடர்புடன் பரம்பியிருக்கும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும். வளியுடன் நேரடித் தொடர்பின்றி குழிகளில் இலைவாய்கள் அமைந்து நீராவி. தேக்கமடைவதால் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.
eg : அலரி – (குழிகளிலமைந்த இலைவாய்)
இருவித்திலை இலைகளில் மேற்புறத்தை விட கீழ்ப்புறமாக மேற்பரப்பில் இலைவாய்கள் அதிகம் காணப்படும். ஒருவித்திலை இலைகளில் இருபுறங்களிலும் சமமாக காணப்படும். ஆனால் விதிவிலக்காக மேற்புறத்தில் அதிகமான எண்ணிக்கையான இலைவாய்கள் காணப்படுகின்றன.

.
02. இலையின் அகக்கட்டமைப்பு
சில இலைகளில் காணப்படும் விசேட கட்டமைப்புகள் ஆவியுயிர்ப்பு வீதத்தை குறைக்கின்றன.
நுப: இலையில் மேற்றோலில் மயிர்கள் முட்கள் காணப்படல்.
ஊசி போன்ற இலைகள்
தடித்த புறத்தோல்

.
03. தாவரத்திலுள்ள நீரினளவு Please Login to view the Question
தாவரத்திலுள்ள நீரினளவு அதிகரிக்க ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கலாம்.

தாவரங்களில் ஆவியுயிர்ப்பை குறைப்பதற்காக காண்பிக்கும் கட்டமைப்பு சிறப்பம்சங்கள்….
01. குழிவுகளிலமைந்த இலைவாய்
02. தடித்த புறத்தோல்
03. பலபடையிலமைந்த மேற்றோல்
04. மேற்றோல் மயிர்கள் முட்கள் காணப்படும்
05. இலைப்பரப்பு குறைக்கப்பட்டு ஊசி போன்ற இலைகள் சிறிய இலைகள் காணப்படல்
06. இலைகள் உதிர்தல்
07. இலைகள் சுருளுதல்
08. இலைகள் சளியம் பால் கொண்டிருத்தல்

 

கசிவு

தாவரங்களின் இலைகளிலுள்ள நீர் செல்துளையினூடு நீரும் கனியுப்புகளும் திரவ நிலையில் வெளியேற்றப்படல் கசிவு எனப்படும்.
ஆவியுயிர்ப்பை குறைக்கும் நிபந்தனைகளான உயர் ஈரப்பதன் குறைந்த ஒளிச்செறிவு குறைந்த வெப்பநிலை நேரங்களில் கசிவு அதிகம் நிகழும்.
இது பொதுவாக புற்களிலும் பூண்டு தாவரங்களிலும் நிகழும்.
கசிவிற்கு பிரதான காரணம் வேரமுக்கம் ஆகும்.

ஆவியுயிர்ப்பு கசிவிற்கான வேறுபாடுகள்.

 ஆவியுயிர்ப்பு  கசிவு
நீர் நீராவியாக அகற்றப்படும்  நீர் திரவ நிலையில் அகற்றப்படும்
 நீர் மட்டும் அகற்றப்படும்  நீருடன் கரையங்களும் அகற்றும்
 பிரதானமாக இலைவாய் சிறிதளவு புறத்தோல் பட்டைவாய்  நீர் செல் துளையினூடாக
 நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப நிகழும்  வேரமுக்கம் பிரதான காரணம்
 பிரதானமாக பகலில் நிகழும்  இரவில் நிகழும்

ஆவியுயிர்ப்பு வீதத்தை அளவிடுதல் Please Login to view the Question

 

இலைவாயை அண்டியுள்ள குறித்த தூரத்துக்கான வளி நிலையான வளி / அசையாவளி எனப்படும். இவ்வளியில் நீரழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப நீராவி பரவல் ஓடுகள் காணப்படும்.

.
இப்பரவில் ஒடுகளினூடாக இந்நிலையான வளியில் பரவல் முறையில் நீர்த்துணிக்கைகள் அசையும்.
நிலையான வளியை அடுத்து அசையும் வளி காணப்படும். அதில் நீர்மூலக்கூறுகள் அசையும் காற்று மூலம் தொகையாக எடுத்துச் செல்லப்படும். எனவே திணிவுப் பாய்ச்சல் மூலம் அசையும்.
ஆவியுயிர்ப்பு வீதத்தை அளவிட உறிஞ்சன்மானி பயன்படும்.

எடுகோள்கள் :
1. ஆவியுயிர்ப்பு வீதம் நீர் அசையும் வீதத்திற்கு தேர் விகித சமன்.
2. ஆவியுயிர்ப்பால் மட்டும் நீரிழப்பு ஏற்படுகிறது.

செய்முறை :
1. செவ்வரத்தையின் நன்கு இலைகள் கொண்ட அங்குரப்பகுதி நீரினுள் வைத்து வெட்டப்படும்.
2. உறிஞ்சன்மானி முற்றாக நீரினால் நிரப்பப்படும்.
3. வெட்டப்பட்ட அங்குரப்பகுதி நீரினுள் வைத்து உறிஞசன்மானியுடன் பொருத்தப்படும்.
4. நீர்க்கசிவு வளிக்கசிவு ஏற்படும் இடங்களின் வஸின் பொருத்தப்படும்.
5. உறிஞ்சன் மானியுடன் மயிர்த்துளை குழாயினுள் வளிக்குமிழ் புகுத்தப்படும்.
6. இவ்வமைப்பு சூரிய ஒளியில் வைக்கப்படும்.

Record of practical Please Login to view the Question

]
குறித்த நேரத்தில் வளிக்குமிழ் அசைந்த தூரம் அளவிடப்படும்.

.
ஆவியுயிர்ப்பு வீதம் = வளிக்குமிழ் அசைந்த தூரம்/நேரம்

.
இவ்வுறிஞ்சல் மானியை பயன்படுத்தி சூழல் காரணிகள் ஆவியுயிர்ப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

RATE CONTENT 0, 0
QBANK (11 QUESTIONS)

பின்வரும் கூற்றுக்களில் எது ஆவியுயிர்ப்பை நன்கு விவரிக்கின்றது?

Review Topic
QID: 4749
Hide Comments(0)

Leave a Reply

ஒரு தாவரத்தின் ஆவியுயிர்ப்பு வீதத்தை மிகக் குறைவாகவே தாக்கக்கூடிய காரணி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5569
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களின் ஆவியுயிர்ப்பு வீதத்தில் சார் ஈரப்பதனின் தாக்கத்தைத் திறமையாக எடுத்துக்காட்டும் வரைபு எது? (x அச்சு = சார் ஈரப்பதன் : y அச்சு = ஆவியுயிர்ப்பு வீதம்)

Review Topic
QID: 5571
Hide Comments(0)

Leave a Reply

தாவர அங்குரங்களின் ஆவியுயிர்ப்பு வீதத்தை அளப்பதற்கான பரிசோதனைகள் அங்குரங்கள் நீருக்கடியில் வைத்து வெட்டப்படாவிட்டால் வெற்றியடையாமல் போகலாம். இதற்கான காரணம்?

Review Topic
QID: 5829
Hide Comments(0)

Leave a Reply

அசைவற்ற வளியில் ஆவியுயிர்ப்பு வீதத்தில் இலைவாய்த்துவாரப் பருமன் அதிகரிப்பதனால் ஏற்படும் தாக்கத்தை காண்பிக்கும் வரைபு எது? (X அச்சின் மீது இலைவாய் துவாரத்தின் பருமனும் Y அச்சின் மீது ஆவியுயிர்ப்பு வீதமும்)

Review Topic
QID: 4861
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நியம உறிஞ்சன்மானியை பாவனைக்கு ஒழுங்காக்கும் போது பின்வருவனவற்றில் எதைக் கையாளத் தேவையில்லை?

Review Topic
QID: 4739
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களில் எது ஆவியுயிர்ப்பை நன்கு விவரிக்கின்றது?

Review Topic
QID: 4749

ஒரு தாவரத்தின் ஆவியுயிர்ப்பு வீதத்தை மிகக் குறைவாகவே தாக்கக்கூடிய காரணி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5569

தாவரங்களின் ஆவியுயிர்ப்பு வீதத்தில் சார் ஈரப்பதனின் தாக்கத்தைத் திறமையாக எடுத்துக்காட்டும் வரைபு எது? (x அச்சு = சார் ஈரப்பதன் : y அச்சு = ஆவியுயிர்ப்பு வீதம்)

Review Topic
QID: 5571

தாவர அங்குரங்களின் ஆவியுயிர்ப்பு வீதத்தை அளப்பதற்கான பரிசோதனைகள் அங்குரங்கள் நீருக்கடியில் வைத்து வெட்டப்படாவிட்டால் வெற்றியடையாமல் போகலாம். இதற்கான காரணம்?

Review Topic
QID: 5829

அசைவற்ற வளியில் ஆவியுயிர்ப்பு வீதத்தில் இலைவாய்த்துவாரப் பருமன் அதிகரிப்பதனால் ஏற்படும் தாக்கத்தை காண்பிக்கும் வரைபு எது? (X அச்சின் மீது இலைவாய் துவாரத்தின் பருமனும் Y அச்சின் மீது ஆவியுயிர்ப்பு வீதமும்)

Review Topic
QID: 4861

ஒரு நியம உறிஞ்சன்மானியை பாவனைக்கு ஒழுங்காக்கும் போது பின்வருவனவற்றில் எதைக் கையாளத் தேவையில்லை?

Review Topic
QID: 4739
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank