Please Login to view full dashboard.

விலங்குகளின் அசைவு

Author : Admin

4  
Topic updated on 02/14/2019 11:42am
  • விலங்குகளில் அசைவு 3 மட்டங்களில் நடைபெறுகின்றது.
    • கலமட்டம்
    • அங்கமட்டம்
    • அங்கிமட்டம்

இடப்பெயர்ச்சி

  • அங்கியொன்று முழுவதுமாக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்தை நோக்கி அசைதல் இடப்பெயர்ச்சி எனலாம்.
  • அங்கிகளில் நடைபெறும் இடப்பெயர்ச்சி பின்வரும் நோக்கங்களுக்காக இடம்பெறும்.
    • இரை தேடுதல்.
    • இரைகௌவிகளிடமிருந்து தப்பிச் செல்லல்.
    • பரவுதல்.
    • புதிய,பொருத்தமான வாழிடங்களை தேடுதல்.
    • தனியன்கள் இனப்பெருக்கத்தின் பொருட்டு சேர்ந்து கொள்வதற்காக.

இடப்பெயர்ச்சி அசைவு வகைகள்

  • போலிப்பாத அசைவு
  • சவுக்குமுளை மூலமான அசைவு
  • பிசிர்கள் மூலமான அசைவு
  • தசைகள் மூலமான அசைவு
போலிப்பாத அசைவு
  • அமீபா, WBC போன்ற அமீபாபோலிக் கலங்கள் தமது வடிவத்தை மாற்றி அமைக்கக் கூடியவை.
  • இப்பண்பு அவை அசைவதற்கான அடிப்படையாக அமைகின்றன.
  • கலம் அசையும் போது உட்புற திரவமயமான அகக்குழியவுரு உள்நோக்கி நகர வெளிப்புறமான புறக்கலவுரு விறைப்பான பகுதி போலிப்பாதமாக வெளி எறியப்படும்.
சவுக்குமுளை மூலமான அசைவு
  • சவுக்குமுளையும் சவுக்குமுளை போன்ற விந்துக்களது வால் போன்ற கட்டமைப்புக்களும் சவுக்கின் வழியே முன்னோக்கி நகரத்தக்க அலைவுகளை அடியிலிருந்து நுனி நோக்கி செலுத்துவதன் மூலம் அங்கி எதிர்த்திசையில் இடம்பெயரும்.
பிசிர் மூலமான அசைவு
  • Paramecium இல் ஒவ்வொரு பிசிரும் கலத்திலிருந்து நேராக நீட்டப்பட்டுள்ளது.
  • 180° கோணவில்லுருவான பாதையினூடாக இவை அலைவதன் மூலம் துடுப்பினால் வலிக்கப்படும் போது படகு முன்னோக்கி அசைவது போல அங்கி முன்னோக்கி அசையும்.
  • இவ் அசைவு முடிந்தவுடன் மீண்டும் அசைவை ஏற்படுத்தாதவாறு பிசிர் மீண்டும் பழைய நிலைக்கு எடுத்து வரப்படும்.
தசைகள் மூலமான அசைவு
  • தசையிழையம் சுருங்கித் தளரக்கூடிய தசைநார்களைக் கொண்ட தசைக்கலங்களால் ஆனது.
  • தசைகளுடன் சேர்ந்து வன்கூட்டுத் தொகுதியும் உடலைத் தாங்குவதிலும் அசைவதிலும் பயன்படும்.

தசையிழையம்

பிரதானமாக 3 வகையான தசையிழையங்களுண்டு.

  • வன்கூட்டுத்தசை
  • மழமழப்பான தசை
  • இதயத்தசை

தசையிழையத்தின் பண்புகள்

  • இழுபடும் இயல்பு – இழுபடக்கூடிய / சுருங்கக் கூடிய இயல்பு.
  • மீள்தகவு இயல்பு – சுருங்கிய /இழுவைக்குள்ளான பின்னர் அதன் ஆரம்ப நீளத்தை அடைந்து கொள்ளும் இயல்பு.
  • அருட்டப்படும் இயல்பு – தூண்டலின் பொருட்டான துலங்கலை வெளிப்படுத்துமியல்பு.
  • சுருங்குமியல்பு – குறுகும் இயல்பு.

வன்கூட்டுத் தசையின் கட்டமைப்பு இயல்பு

  • வன்கூட்டுத் தசை மனித உடலில் மிக அதிகளவில் காணப்படும் தசையாகும்.
  • இது என்புடன் சிறை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
  • வன்கூட்டுத் தசையை சூழ வெளிப்புறமாக மேல்தசையம் எனும் தொடுப்பிழைய உறை காணப்படும்.
  • வன்கூட்டுத் தசையினுள் பல தசைக்கற்றைகளை காணலாம்.
  • இத் தசை கற்றைகளைச் சூழ அவற்றுக்கிடையில் சுற்றுத்தசையம் எனும் தொடுப்பிழையம் காணப்படும்.
  • ஒரு தசைக்கற்றைக்குள் பல தசைநார்கள் /தசைக்கலங்கள் காணப்படும்.
  • தசைநார்களைச் சூழ அவற்றுக்கிடையில் அகத்தசையம் எனும் தொடுப்பிழையம் காணப்படும்.
  • வன்கூட்டுத் தசைநார் நீண்ட உருளை வடிவான கட்டமைப்பாகும்.
  • இது கிளையற்றது, ஒன்றுக்கொன்று சமாந்தரமாக இத்தசைக்கலங்கள் அமைந்துள்ளன.
  • ஒவ்வொரு தசைநாரும் பல கருக்களை கொண்டுள்ளது,அக்கருக்கள் மேற்பரப்பில் அமைந்துள்ளன.
  • தசைநார் வரி கொண்டது.
  • ஒரு தசைநார்/தசைக்கலம் சூழ தசைக்கல மென்சவ்வையும் உள்ளே கரு,குழியவுருவையும் கொண்டுள்ளது.
  • ஒரு கலத்தில் பல கருக்கள் காணப்படுவதால் தசைக்கலம் பொதுமைகுழியத்துக்குரியது.
  • தசைக்கலத்தில் பொதுவான விலங்கு கலப்புன்னங்கள் காணப்படும்.
    • உ – ம் :
      • கொல்கிச்சிக்கல்
      • Lysosome
      • நுண்ணுடல்
      • Ribosome
      • குழியவன்கூடு
      • ER
      • இழைமணி
      • தசைசிறுநார்கள்
  • தசைநாரில் அழுத்தமான ER , இழைமணிகள், தசைச் சிறுநார்கள் என்பன அதிகளவில் காணப்படும்.
  • தசைச்சிறுநார்கள் ஒவ்வொன்றும் சமாந்தரமாக காணப்படும்.
  • ஒரு தசைச்சிறுநாரில் பல தசைப்பாத்துக்கள் காணப்படும்.
  • தசைச்சிறுநார் 2 வகையான இழைகளைக் கொண்டுள்ளது:
    • தடித்த இழை/மயோசின் இழை
    • மெல்லிய இழை /அக்ரின் இழை
  • இவ்விழைகள் தசைச்சிறுநாரில் நீளப்போக்கில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
  • தடித்த இழை மயோசின் புரதத்தாலானது.
  • மெல்லிய இழை அக்ரின் புரதத்தாலானது.
  • இத்தசையிழைகளின் ஒழுங்கமைப்பு காரணமாக தசைச் சிறுநார்களில் பட்டிகை ஒழுங்கமைப்பு ஏற்படுத்தப்படுகின்றது.
  • தடித்த இழைகள் ஒன்றுடனொன்று ஒழுங்குபடுத்தப்பட்டு இருளான A  பட்டி பெறப்படும்.
  • தடித்த இழைகள் யாவும் தசைப்பாத்தின் மத்தியிலுள்ள ஒரு மென்சவ்வுடன் இணைந்துள்ளன.
  • இம்மென்சவ்வு /A பட்டியின் மத்தியப்பகுதி  M கோடு எனப்படும்.
  • இருள் குறைந்த வளையம்/ I பட்டியில் மெல்லிய இழைகள் மட்டும் காணப்படும்.
  • எனப்படும்இது இருள் குறைந்த வளையம் /ஒளி வளையம் .
  • மெல்லிய இழைகள் தசைப்பாத்தின் முனைகளிலுள்ள மென்சவ்வில் இணைந்துள்ளன.
  • இம்மென்சவ்வு/மெல்லிய இழையின் நடுப்பகுதி  Z கோடு எனப்படும்.
  • H வளையத்தில் இழைகள் ஒன்றையொன்று மேவாது.
  • இங்கு தடித்த இழை மட்டும் காணலாம்.
  • தசைச்சிறுநாரிடம் கட்டமைப்பு Z  கோட்டிலிருந்து Z கோடாக மீண்டும் மீண்டும் தொடர்வதாக அமையும்.
  • இரு Z கோட்டுக்கு இடைப்பட்ட பகுதி தசைப்பாத்து ஆகும்.
  • Z கோடு இருள்குறைந்த வளையம் /ஒளி வளையத்தின் மத்திய பகுதி ஆகும்.

slide_10

தசைச்சுருக்கப்  பொறிமுறை 

  • இப்பொறிமுறை வழுக்கல் இழை கொள்கை (The sliding filament theory) மூலம் விளக்கப்படுகிறது.
  • மயோசின் இழைகள், மயோசின் தலைகளைக் கொண்டுள்ளது.
  • அக்ரின் இழைகள் தொடர்புறும் தானங்கள் / இணையும் பகுதிகளைக் கொண்டுள்ளன.
  • தசைச்சுருக்கம் நடைபெறுவதற்கு ATP அவசியமானது.
  • மயோசின் தலைகள் விடுபட்டுக் கொள்ளவும் அடுத்து தொடர்புறும் தானத்தை நோக்கி நகரவும் ATP தேவைப்படும். ATP இல்லாத சந்தர்ப்பத்தில் மயொசின் இழை விடுபட மாட்டாது.
  • தசைச்சுருக்கப் பொறிமுறையின் 1 வது படியில்;
    • அக்ரின்  இழையிலிருந்து விடுவிக்கப்பட்ட தலையுடன் ATP இணையும்
    •  ATP நீர்ப்படைவதனால் மயோசின் தலை தயார் நிலைக்கு கொண்டுவரப்படும்.
    • Ca2+ அயனின் உதவியுடன் மயோசின் தலையானது அக்ரின் இழையின் தொடர்புறும் தானத்துடன் இணைந்து குறுக்குபாலம் தோற்றுவிக்கப்படும்.
    •  குறுக்குபாலங்கள் பிரயோகம் / உயிர்ப்பூட்டப்படும் போது உட்புறமான மத்தியை நோக்கி சாய்வாக அசைந்து ஒரு குறுகிய வலுவான அடிப்புக்குள்ளாகும். இது அக்ரின் இழையை வழுக்கச் செய்கின்றது.
    • அக்ரினும் மயோசினும் ஒன்றையொன்று மேவி வழக்குவதால் தசை சுருங்கும்.
  • அக்ரின் இழைகள் தசைப்பாத்தின் மத்தியை நோக்கி இழுக்கப்படும்.
  • இதனால் ஒரு தசைப்பாத்தின் Z கோடுகள் மத்தியை நோக்கி அசையும்.
  • தசை சுருங்கும் போது  A பட்டி / இருள் வலயம் அதே நீளத்துடன் காணப்படும்.
  • I பட்டி / இருள் குறைந்த வலயம், H வலயம் என்பன குறுகும்.
  • தடித்த இழை, மெல்லிய இழை என்பன அதே நீளத்தில் பேணப்படும்.

_53022d86_13d85ffda7d__8000_00001075

RATE CONTENT 0, 0
QBANK (4 QUESTIONS)

ஒரு தசை ஒரு எலும்பை அசைக்க இயங்குவதற்கு கீழ்க் காண்பனவற்றுள் எது மிகக் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது?

Review Topic
QID: 6537
Hide Comments(0)

Leave a Reply

வன்கூட்டுத் தசைநாரின் தசைப்பாத்து தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6738
Hide Comments(0)

Leave a Reply

மனித வன்கூட்டு தசைச் சுருக்கம் தொடர்பான கூற்றுகளுள் தவறானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6740
Hide Comments(0)

Leave a Reply

அங்கிகளின் அசைவு தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 6749

 

 

Hide Comments(0)

Leave a Reply

ஒரு தசை ஒரு எலும்பை அசைக்க இயங்குவதற்கு கீழ்க் காண்பனவற்றுள் எது மிகக் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது?

Review Topic
QID: 6537

வன்கூட்டுத் தசைநாரின் தசைப்பாத்து தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6738

மனித வன்கூட்டு தசைச் சுருக்கம் தொடர்பான கூற்றுகளுள் தவறானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6740

அங்கிகளின் அசைவு தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 6749

 

 

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank