Please Login to view full dashboard.

இருசொற் பெயரீடு

Author : Admin

11  
Topic updated on 02/14/2019 10:29am

இருசொற் பெயரீடு Please Login to view the Question
Carolus Linnaeus (1753 A.D) இரு சொற் பெயரீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இருசொற்பெயரீடு என்பது… Image Tip Please Login to view the Question
ஒவ்வொரு இனமும் அதற்குரிய தனி உயிரிகளும் முதலில் சாதிப்பெயரையும் அதனுடன் தொடர்ந்து வருகின்ற இனத்துக்குரிய வேறுபடுத்தியையும் கொண்ட இலத்தினுக்குரிய இரு சொற்களைக் கொண்ட சர்வதேச முறை பெயரீட்டு முறையாகும்.

இருசொற் பெயரீட்டின் அவசியம்  Please Login to view the Question

  • பொது பெயர்கள் நாட்டிற்கு நாடு வேறுபடும்.
  • ஒரு இனம் பல்வேறு பெயர்களாலும் பல இனம் ஒரு பெயராலும் அடையாளங் காணப்படல்
  • அங்கிகளை இனங்காண்பதில் உள்ள சிக்கலை தவிர்ப்பதற்குள்ள தேவை
  • புதிதாக இனங்காணப்படும் அங்கிகளை ஏனையோர் எளிதாக அடையாளப்படுத்த உதவும்.

இருசொற் பெயரீட்டு விதிகள்  Image Tip  Image Tip

  • விஞ்ஞான பெயர்கள் கட்டாயமாக ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்படுதல்/ அச்சிடப்படுதல் வேண்டும்.
  • சாதிப்பெயரின் முதலெழுத்து CAPITAL ஆகவும் ஏனைய யாவும் (இனத்துக்குரிய வேறுபடுத்தி பெயரின் முதலெழுத்து உட்பட) simple ஆகவும் அமைந்திருத்தல் வேண்டும்.
  • பெயர்கள் எழுதப்படின் அடிக்கோடிடல் வேண்டும்.
  • பெயர்கள் அச்சிடப்படின் Italics இல் அச்சிடப்பட வேண்டும்.
  • இரு வேறு இன அங்கிகளுக்கு ஒரே பெயர் அமையலாகாது
  • இவை கட்டாயமாக எழுத்து பிழையின்றி எழுதப்பட வேண்டும் அத்துடன் சரியாக உச்சரிக்கப்படல் வேண்டும்.
  • விஞ்ஞானக் கருமங்களில் குறிப்பிட்ட பெயரை இட்ட விஞ்ஞானியின் பெயரின் முதல் எழுத்தோ, சுருக்கமோ, முழுச்சொல்லோ பெயரின் கடைசியில் முதல் எழுத்து பெரிய எழுத்தால் குறிக்கப்படும். இது இலத்தின் மொழியாக்கம், சாய்வாக எழுதப்படுவதும் இல்லை.
  • Cocos nucifera.L. (L-Linnaeus)

முச்சொற் பெயரீடு Image Tip

ஒவ்வொரு உப இனமும் அதற்குரிய உயிரிகளும் முதலில் சாதிப்பெயரையும் அதனைத் தொடரும் இனத்துக்குரிய வேறுபடுத்தி பெயரையும் அதனை தொடரும் உப இனத்துக்குரிய வேறுபடுத்தியையும் கொண்ட மூன்று சொற்களினால் பெயரிடப்படும் சர்வதேச பெயரீட்டு முறை முச்சொற் பெயரீடு எனப்படும்.

  • நவீன மனிதன் Homo sapiens sapiens  
  • நியண்டதால் மனிதன Homo sapiens neanderthalensis

பாகுபாட்டிற்குரிய ஆட்சிநிரை மட்டங்கள்  Image Tip  Image Tip Image Tip  Image Tip

முதன்முதலாக Carolus Linnaeus இனால் உருவாக்கப்பட்டதாகும். இதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பாகுபாட்டு மட்டங்கள் TAXON என அழைக்கப்படும்.

பேரிராச்சியம் Domain
இராச்சியம் Kingdom
கணம் Phylum
வகுப்பு Class
வருணம் Order
குடும்பம் Family
சாதி Genus
இனம் Species

இவை மேலும் உப (SUB) உயர் (SUPER) என பிரிக்கப்பட முடியும்.

உயிரினவியல் பாகுபாட்டிற்குரிய மிகச்சிறிய அலகாகவும் அடிப்படை அலகாகவும் இயற்கைக்குரிய அலகாகவும் அமையும் பாகுபாட்டு மட்டம் இனம் ஆகும்.

இனம் தவிர்ந்த ஏனைய பாகுபாட்டு மட்டங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவையாகும். எனவே இவை அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப நெகிழ்வடையலாம்.

உயிரினப் பாகுபாட்டிற்குரிய மட்டங்களில் கீழிருந்து மேல்நோக்கிச் செல்லுகையில் உயிரின வகைகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. இத்துடன் தற்சிறப்பு குறைவடைகின்றது.

உயிரினப் பாகுபாட்டிற்குரிய மட்டங்களில் மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லுகையில் உயிரின வகைகளின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. இத்துடன் தற்சிறப்பம்சங்கள் அதிகரிக்கின்றன.

RATE CONTENT 4.5, 2
QBANK (11 QUESTIONS)
Question: of 9

தாவரவியல் படிக்கின்ற ஒரு மாணவன் தாவர இனம் ஒன்றைக் குறிப்பிடும் பொழுது சாதிப் பெயரையும் இனப்பெயரையும் இரு வெவ்வேறு சொற்களாக எழுதவேண்டும். பின்வருவனவற்றில் எது இக்கூற்றை விளக்குவதாக அமைகின்றது?

Review Topic
QID: 2861
Hide Comments(0)

Leave a Reply

தாவரவியல் படிக்கின்ற ஒரு மாணவன் தாவர இனம் ஒன்றைக் குறிப்பிடும் பொழுது சாதிப் பெயரையும் இனப்பெயரையும் இரு வெவ்வேறு சொற்களாக எழுதவேண்டும். பின்வருவனவற்றில் எது இக்கூற்றை விளக்குவதாக அமைகின்றது?

Review Topic
QID: 2861

கீழ்க்காண்பவற்றில் எது மனிதனைக் குறிக்கும் விஞ்ஞான ரீதியான பெயரை எழுதும் சரியான முறையாகும்?

Review Topic
QID: 2886

குறிப்பிடப்பட்ட இனத்தின் விஞ்ஞானப் பெயரைச் சரியான முறையில் கீழ் காண்பவற்றில் எது குறிக்கின்றது?

Review Topic
QID: 2968

கீழ்க்காணும் பாகுபாட்டுக் கூட்டங்களில் அதிக ஒற்றுமை காண்பிக்கும் பிராணிகளை உள்ளடக்கும் கூட்டம் எது?

Review Topic
QID: 2971

பாகுபாடு ரீதியிலான தரப்படுத்தலின் சரியான இறங்கு தொடரியைக் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3095

விலங்குகளின் பாகுபாடு எப்போதும்?

Review Topic
QID: 3119

பாகுபாட்டில் இயற்கையான அலகு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3169

இரு சொற் பெயரீட்டுக்கேற்ப மனிதனின் விஞ்ஞான ரீதியிலான பெயரைச் சரியாகப் பிரதிநித்துவப்படுத்துவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3188

மிக அதிக எண்ணிக்கையான பொதுச் சிறப்பியல்புகளைக் கொண்ட தக்சோன் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3214
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank