உற்பத்திக்கு பயன்படும் உள்ளீடுகள் அனைத்தும் உற்பத்தி வளங்கள் ஆகும்.
பொருளியலில் இவை இரு வகைப்படும்.
பொருளாதார வளம்
வரையறுக்கப்பட்டதும், அருமைத் தன்மையுடையதுமான வளங்கள், பொருளாதார வளங்கள் ஆகும்.
இவை அருமைத் தன்மையுடைய வளங்களாக இருப்பதனால் இவற்றினை பயன்படுத்தும்போது அமையச் செலவு ஏற்படும்.
(உ – ம்) : நிலம், உழைப்பு, மூலதனம், முயற்சி
இதன் பண்புகள்
பொருளாதாரம் அல்லா வளம்
இயற்கையிடம் இருந்து பெறப்படுகின்ற எல்லையற்ற நிரம்பலை கொண்ட வளங்கள் ஆகும்.
இவை அருமைத் தன்மை அற்றவையாக இருப்பதனால் அமையச் செலவு இவற்றினை பயன்படுத்தும் போது ஏற்படுவது இல்லை.
(உ – ம்) : சூரிய ஒளி, காற்று
இதன் பண்புகள்
மீள உருவாக்கக்கூடிய வளம்
பயன்படுத்தும்போது இழக்கப்படாததும், குறைந்து விடாததும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதுமானதும், இயற்கையினால் வழங்கப்படும் வளங்களும் இவை ஆகும்.
(உ – ம்) : காட்டுவளம், மீன்வளம், சூரிய ஒளி
மீள உருவாக்க முடியாத வளம்
பயன்பாட்டின் போது இழக்கப்படுகின்றதும், குறைவடைகின்றதும், மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாதவாறும், இயற்கையினால் வழங்கப்பட்ட வளங்கள் இவை ஆகும்.
(உ – ம்) : பெற்றோலிய வளம், நிலக்கரி.
பொருளாதார வளங்களும் அவற்றின் பண்புகளும் அவற்றுக்கான உதாரணங்களும்
நிலம் –
உழைப்பு –
மூலதனம் (முதல்) –
மூலதனத்தின் வகைகள்
நிலையான மூலதனம்
ஒரு வருட காலத்திற்கு மேற்பட்ட நீண்டகால பயன்பாட்டினை உடையதும், உற்பத்தியில் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடியதும் பயன்பாட்டின் போது பெறுமானத்தேய்வு அடையக்கூடியதுமான மூலதனப் பொருட்கள் நிலையான மூலதனம் ஆகும்.
(உ – ம்) : காணிக்கட்டடம், இயந்திரம்
சுழலும் மூலதனம்
ஒரு வருட காலத்திற்கு குறைந்த குறுங்கால பயன்பாடு உடையதும் உற்பத்தியில் ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக் கூடியதும் பெறுமானத் தேய்வுக்கு உட்படாததுமான மூலதனப் பொருட்களே இவை ஆகும்.
அதாவது உற்பத்தி நிறுவனம் ஒன்றில் காணப்படும் குறுங்காலத்தில் மாற்றமடையும் சொத்துக்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மூலதனம் ஆகும்.
இதுவே தொழிற்படு மூலதனம் என அழைக்கப்படுகிறது.
(உ – ம்) :
பொருளாதாரப் பொதுப்பணி மூலதனம்
நாடொன்றின் பொருட்கள் சேவைகளில் உற்பத்திக்கு அவசியமான அடிப்படை வசதிகளான பொருளாதார வன்கட்டுமானங்களையும், பொருளாதார மென்கட்டுமானங்களையும் உருவாக்குவதில் ஈடுபடுத்தியுள்ள மூலதனம் பொருளாதார பொதுப்பணி மூலதனம் ஆகும்.
(உ – ம்) :
சமூக பொதுப்பணி மூலதனம்
சமூக நலன்களையும், சமூக நீதிகளையும் பேணுவதற்கு அவசியமான அடிப்படை வசதிகளான சமூக வன்கட்டுமானங்களையும், சமூக மென்கட்டுமானங்களையும் உருவாக்குவதில் ஈடுபடுத்தியுள்ள மூலதனம் ஆகும்.
(உ – ம்) :
இயற்கை மூலதனம்
இயற்கை வளங்களை பொருட்கள், சேவைகளினது உற்பத்தியில் தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவாறு மூலதனச் சொத்துக்களாக மாற்றி அமைக்கின்ற போது இயற்கை மூலதனம் எனப்படும்.
(உ – ம்) : வயல் நிலம், தேயிலைத் தோட்டம்.
சமூக மூலதனம்
சமூகத்தின் நன்மை கருதி மக்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்படும் பரஸ்பர ஒத்துழைப்பு குழுக்கள் / அமைப்புக்கள் இது ஆகும்.
மனித மூலதனம்
நாடொன்றின் தொழிற்படைக்கு கல்வி, பயிற்சி, அனுபவம், சுகாதாரம் வழங்கிவரும் போது அத் தொழிற்படைக்கு ஏற்படுகின்ற சமூக ஆளுமை விருத்தி, தனிப்பட்ட அறிவு, திறன் என்பவையே மனித மூலதனம் ஆகும்.
முயற்சி –
தொழிற்பாடுகள்
பண்புகள்
நிலம் என்ற உற்பத்திக் காரணியாக பின்வரும் பொருள்களில் எதை வகைப்படுத்த முடியும்?
Review Topicபின்வருவனவற்றில் உற்பத்திக் காரணியொன்று என்ற ரீதியில் மூலதனம் என்பதற்கான உதாரணமாக அமையாதது எது?
Review Topicநிலம் என்ற உற்பத்திக் காரணியாக பின்வரும் பொருள்களில் எதை வகைப்படுத்த முடியும்?
Review Topicபின்வருவனவற்றில் உற்பத்திக் காரணியொன்று என்ற ரீதியில் மூலதனம் என்பதற்கான உதாரணமாக அமையாதது எது?
Review Topic
Answer மற்றும் Preferred Response காட்டுதில்லை ஏன்?