பணக்கேள்வி
நாடொன்றில் உள்ள பொதுமக்கள் 100% திரவத்தன்மை வாய்ந்த பணத்தை தம் கைவசம் வைத்திருப்பதற்கான ஆர்வம்.
இது 3 வகைப்படும்
1. புழக்க நோக்க கேள்வி
2. பாதுகாப்பு நோக்க கேள்வி
3. ஊக நோக்க கேள்வி
புழக்க நோக்க கேள்வி
மக்கள் தமது நாளாந்த வாழ்கைக்கு அவசியமான பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்யும் நோக்குடன் வைத்திருக்க விரும்புகின்ற பணத்தின் அளவு ஆகும்.
அதாவது வருமானம் மேற்கொள்ளப்படும் காலப்பகுதிக்கும் செலவுகள் மேற்கொள்ளப்படும் காலப்பகுதிக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள மக்கள் வைத்திருக்க விரும்புகின்ற பணத்தின் அளவு ஆகும்.
இது வருமானத்தின் தொழிற்பாடாகும். நேரான தொடர்பு உண்டு.
இதனை தீர்மானிக்கும் காரணிகளாவன
வருமானம்
வருமானம் பெறும் கால இடைவெளி
பொதுவிலைமட்டம்
வட்டிவீதம்
நிதி முறைமையின் புதுமைகள் (கடனட்டை)
பாதுகாப்பு நோக்க கேள்வி
எதிர்பாராமல் ஏற்படுகின்ற செலவுகளை மேற்கொள்ள மக்கள் வைத்திருக்க விரும்புகின்ற பணத்தின் அளவு.
இது வருமானத்தின் தொழிற்பாடாகும். நேரான தொடர்பு உண்டு.
இதனை தீர்மானிக்கும் காரணிகளாவன
வருமானம்
வருமானம் பெறும் கால இடைவெளி
பொதுவிலைமட்டம்.
வட்டிவீதம்
நிதி முறைமையின் புதுமைகள் (கடனட்டை)
அபாயத்தின் தன்மை
கடன் பெறும் வசதி
திரவச்சொத்து
ஊக நோக்க கேள்வி
நிதிச்சொத்துக்களில் முதலீடு செய்து வட்டி வருமானம் உழைக்கும் நோக்குடன் மக்கள் வைத்திருக்க விரும்புகின்ற பணத்தின் அளவு.
இதனை தீர்மானிக்கும் காரணிகளாவன
• வட்டிவீதம் எதிரான தொடர்பு உண்டு.
• பங்குகள் பிணையங்களின் விலைகள். நேரான தொடர்பு உண்டு.
திரவப்பொறிநிலை – பொருளாதாரமொன்றில் மிகக்குறைந்தளவான வட்டிவீதம் நிலவுகின்ற போது பணத்தின் ஊக நோக்க கேள்வியானது முடிவிலியாக காணப்படும் என்பதாகும்.
வீட்டுத் துறையினரும் வர்த்தகத் துறையினரும் எழுப்பும் பணத்தின் மீதான கேள்வியானது
Review Topicகெயின்ஸியக் கோட்பாட்டின்படி பின்வருவனவற்றில் எச்சந்தர்ப்பத்தில் பணத்திற்கான கேள்வியில் ஒரு அதிகரிப்பு ஏற்படும்?
Review Topicவீட்டுத் துறையினரும் வர்த்தகத் துறையினரும் எழுப்பும் பணத்தின் மீதான கேள்வியானது
Review Topicகெயின்ஸியக் கோட்பாட்டின்படி பின்வருவனவற்றில் எச்சந்தர்ப்பத்தில் பணத்திற்கான கேள்வியில் ஒரு அதிகரிப்பு ஏற்படும்?
Review Topic