உற்பத்திக் காரணிகளுக்குக் காணப்படும் கேள்வி நிரம்பல் என்பவற்றினால் காரணிகளின் விலை நிர்ணயமாகிறது.
உற்பத்திக்காரணி விலை மற்றும் காரணிச் சந்தையில் பரிமாற்றப்படும் காரணிகளின் தொகை என்பவற்றின் அடிப்படையில் காரணி வருமானங்கள் தீர்மானிக்கப்படும்.
இறுதிப் பொருட்கள் சேவைகளுக்குக் காணப்படும் கேள்வியின் அடிப்படையில் உற்பத்திக் காரணிகளுக்கான கேள்வி இருப்பதனால் உற்பத்திக் காரணிகளுக்குக் காணப்படும் கேள்வி வழிவந்த கேள்வியாகும்.
குறிப்பிட்ட ஒரு நேரத்தில் உற்பத்திச் செயற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மற்றும் உற்பத்திச் செயற்பாட்டில் ஈடுபடுத்த எதிர்பார்க்கின்ற இயற்கை வளங்கள் நிலத்தின் நிரம்பல்.
நிலத்தின் நிரம்பல் நெகிழ்வற்றது.
புதிய வளக் கண்டுபிடிப்பு, வளங்களின் அழிவு அல்லது தேய்வு காரணமாக நிலத்தின் நிரம்பல் மாற்றமடையும்.
தரப்பட்ட சந்தர்ப்பமொன்றில் பயன்வாய்ந்த பொருளாதார நடவடிக்கையொன்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மற்றும் பயன்படுத்த எதிர்பார்க்கின்ற உழைப்பு அலகுகளின் மொத்தம் உழைப்பின் நிரம்பலாகும்.
உழைப்பின் நிரம்பல் பின்வரும் இரண்டு காரணிகளால் தீர்மானிக்கப்படும்:
உழைப்பாளர் படை
உழைப்பாளன் ஒருவன் வேலை செய்கின்ற சராசரி காலம்
தரப்பட்ட சந்தர்ப்பமொன்றில் முதலீட்டுக்காக பயன்படுத்தப்படும் நிதிகளின் அளவு மூலதன நிரம்பலாகும்.
கீழ்த் தரப்படும் அம்சங்களின் அடிப்படையில் மூலதனத்தின் நிரம்பல் தீர்மானிக்கப்படும்.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்