Please Login to view full dashboard.

மொத்தச் செலவு

Author : Admin

1  
Topic updated on 02/15/2019 09:34am

பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தியின் போது உற்பத்திப் பெறுமதிக்கு சமனான வருமானமொன்று உருவாகும் அதேவேளை அவ்வருமானம் மறுபக்கத்தில் பொருட்கள் சேவைகளுக்கான கேள்வி என்ற வகையில் செலவிடப்படும்.

மொத்தச் செலவின் மாறிகள்

  • தனியார் நுகர்வுச் செலவு
  • அரச நுகர்வுச் செலவு
  • முதலீட்டுச் செலவு
  • தேறிய ஏற்றுமதி
தனியார் நுகர்வுச் செலவு

தனியார் நுகர்வுச் செலவு செலவிடத்தக்க வருமானத்தின் மீது தங்கியிருக்கிறது.

தனியார் நுகர்வுச் செலவில் பின்வருவன உள்ளடங்கியிருக்கும்:

  • நீண்ட காலப் பாவனையுடைய நுகர்வுப் பண்டங்களின் கொள்வனவு
  • நீண்ட காலமல்லாத பாவனையுடைய நுகர்வுப் பண்டங்களின் கொள்வனவு
  • சேவைக் கொள்வனவு

தனியார் நுகர்வுச் செலவைத் தீர்மானிக்கும் காரணிகள்:

  • செலவிடத்தக்க வருமானம்
  • வீட்டுத்துறையிடமுள்ள சொத்துக்கள்
  • வரி அறவிடல்
  • வீட்டுத்துறையிடமிருந்து பெறப்படுகின்ற கடன்
முதலீட்டுச் செலவு
  • மூலதனப் பொருட்களை கொள்வனவு செய்வதற்குச் செய்யப்படும் செலவு.
  • உதாரணம்:
    • இயந்திரம்
    • பொறிகள்
    • வீடு

முதலீட்டுச் செலவைத் தீர்மானிக்கும் காரணிகள்:

  • புதிய முதலீடுகளினால் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களுக்கான கேள்வி
  • வட்டி விகிதம் – வர்த்தக வரிகள் என்பவற்றில் ஏற்படும் மாற்றங்கள்
  • வர்த்தக எதிர்பார்க்கைகள்
அரசாங்க செலவு
  • அரசினால் நிறைவேற்றப்படுகின்ற பொருளாதார நடவடிக்கைகளுக்காக தனியார்துறையிடம் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகச் செய்யப்படும் செலவுகள்.
  • உதாரணம்:
    • பொதுப் பண்டங்களை வழங்குதல்.
    • சமூக நலப் பண்டங்களை வழங்குதல்.
    • அரச பாதுகாப்பு
    • அரசின் நிர்வாகச் செலவுகள்
தேறிய ஏற்றுமதி
  • ஏற்றுமதி வருமானத்துக்கும் இறக்குமதி செலவுக்குமான வேறுபாடு தேறிய ஏற்றுமதியாகும்.
  • அது நேரான அல்லது மறைப் பெறுமதியைக் கொண்டிருக்கலாம்.
அரச நுகர்வு

அரச நுகர்வினைத் தீர்மானிக்கும் காரணிகள்:

  • பொதுப் பண்டங்களின் நுகர்வின் அளவு
  • சமூக நலப் பண்டங்களுக்காகச் செய்யப்படும் அளவு
  • பொது நிர்வாகத்துக்காகச் செய்யப்படும் அளவு
RATE CONTENT 0, 0
QBANK (1 QUESTIONS)

பொருளாதாரமொன்றினது பணவீக்கத்தில் தாக்கம் செலுத்தக் கூடிய நிரம்பல்பக்க காரணியாக எதனைக் கொள்வீர்?

Review Topic
QID: 29976
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதாரமொன்றினது பணவீக்கத்தில் தாக்கம் செலுத்தக் கூடிய நிரம்பல்பக்க காரணியாக எதனைக் கொள்வீர்?

Review Topic
QID: 29976
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank