மாறிகளுக்கிடையிலான தொடர்பு
உலகில் மாற்றமடையும் எந்தவொரு நிகழ்வும் மாறியாகும்.
1. சாரா மாறி – ஏதாவது ஒரு மாறியில் மாற்றத்ததை ஏற்படுத்த காரணமாக இருக்கும் மாறி ஆகும்.
EX – நெல்லின் விலை நுகர்வோர் வருமானம்
2. சார்ந்த மாறி – சாரா மாறியில் ஏற்படும் மாற்றம் காரணமாக மாற்றத்துக்குட்படும் ஏனைய மாறிகள் ஆகும்.
EX – நெல்லின் உற்பத்தி
மாறிகளுக் கிடையிலான நேர்க்கணிய தொடர்பு
சாரா மாறியும் சார்ந்த மாறியும் ஒன்றுக்கொன்று ஒரே திசையில் பயணித்தல் ஆகும்.
EX – பண்ட விலைக்கும் நிரம்பல்தொகைக்குமான தொடர்பு
மாறிகளுக் கிடையிலான எதிர்க்கணிய தொடர்பு
சாரா மாறியும் சார்ந்த மாறியும் ஒன்றுக்கொன்று எதிர்த் திசையில் பயணித்தல் ஆகும்.
EX – பண்ட விலைக்கும் கேள்வித் தொகைக்குமான தொடர்பு
சரிவு OR சாய்வு
சாரா மாறி மாற்றத்துக்கும் சார்ந்த மாறி மாற்றத்துக்கும் இடையிலான விகிதம் ஆகும்.
சரிவு = சார்ந்த மாறி மாற்றம் / சாரா மாறி மாற்றம்