நாணயகொள்கையை நடைமுறைப்படுத்தல்
பணநிரம்பல் வட்டிவீதம் கடன்களின் அளவு என்பவற்றை நெறிப்படுத்துவதன் மூலம் பேரின பொருளாதார குறிக்கோள்களை அடைதல் ஆகும்.
இது அரசின் சார்பில் மத்திய வங்கியால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நடைமுறைப்படுத்தப்படும் வழிமுறைகள்:
தொகைக்கடன் கட்டுப்பாடு
நாட்டின் அனைத்து வகையான கடன்களையும் மாற்றியமைக்கக் கூடிய ஒரு கடன் கட்டுப்பாட்டு முறையே இது ஆகும்.
இதற்காக மத்திய வங்கி கையாளும் கருவிகள்:
1. கொள்கை வட்டி வீதம்
2. நியதி ஒதுக்கு வீதம்
3. திறந்த சந்தை நடவடிக்கை
கொள்கை வட்டி வீதம்
நாட்டின் நாணயகொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் மத்திய வங்கி வணிக வங்கிகளுடன் மேற்கொள்கின்ற கொடுக்கல் வாங்கல்களின் போது கையாளும் வட்டி வீதம் ஆகும்.
கொள்கை வட்டி வீதத்திற்கும் பொதுமக்களுமிடையே நேரடி தொடர்பில்லை; ஆனால் கொள்கை வட்டி வீதத்தில் ஏற்படும் மாற்றம் கடன்களுக்கான வட்டிவீதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதால் அது மொத்த கேள்வியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இது 3 வகைப்படும்.
வங்கி வீதம்
வணிக வங்கிகள் மத்திய வங்கியிடம் பெறுகின்ற கடன்களுக்காக மத்திய வங்கியால் அறவிடப்படும் வட்டி வீதம் ஆகும்.
இதனை மாற்றுவதன் மூலம் நாட்டின் பணநிரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
மீள் கொள்வனவு வீதம்
இணங்கப்பட்ட திகதியில் இணங்கப்பட்ட பெறுமதிக்கு மீள கொள்வனவு செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடன் மத்திய வங்கியானது வணிக வங்கிகளுக்கு அரச பிணையங்களை விற்பனை செய்து கடன்களை கொள்வனவு செய்யும் வீதம் ஆகும்.
அழைப்புக்கடன் சந்தையில் வட்டி வீத செல்வழி தீர்மானிக்கப்படும் போது அதன் கீழ் எல்லை வீதமாக மீள்கொள்வனவு வீதம் தீர்மானிக்கப்படும்.
பணச்சந்தையில் திரவ மிகை உள்ள போது அதனை ஈர்க்கும் நோக்கில் மத்திய வங்கி நாளாந்தம் மீள்கொள்வனவு ஏலங்களை நடாத்தும்.
மீள் விற்பனை வீதம்
இணங்கப்பட்ட திகதியில் இணங்கப்பட்ட பெறுமதிக்கு மீள விற்பனை செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடன் மத்திய வங்கியானது வணிக வங்கிகளிடமிருந்து அரச பிணையங்களை கொள்வனவு செய்து கடன்களை விற்பனை செய்யும் வீதம் ஆகும்.
அழைப்புக்கடன் சந்தையில் வட்டி வீத செல்வழி தீர்மானிக்கப்படும் போது அதன் மேல் எல்லை வீதமாக மீள்கொள்வனவு வீதம் தீர்மானிக்கப்படும்.
பணச்சந்தையில் திரவ பற்றாக்குறை உள்ள போது அதனை ஈடுசெய்யும் நோக்கில் மத்திய வங்கி நாளாந்தம் மீள் விற்பனை ஏலங்களை நடாத்தும்.
நியதி ஒதுக்கு வீதம்
வணிக வங்கிகள் தம்மிடம் வருகின்ற வைப்புக்களில் ஒதுக்காக பேணி வைத்திருக்க வேண்டிய அளவு ஆகும்.
இதனை மாற்றுவதன் மூலம் நாட்டின் பணநிரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
திறந்த சந்தை நடவடிக்கை
திறந்த சந்தையில் மத்திய வங்கியானது அரச பிணையங்களை கொள்வனவு, விற்பனை செய்தலாகும்.
அளவுக்கடன் கட்டுப்பாடு
தெரிவு செய்த துறைகளுக்கான ஒரு கடன் கட்டுப்பாட்டு முறையே இது ஆகும்.
கையாளும் கருவிகள்:
பணவீக்க இடைவெளி- பணச்சுருக்க இடைவெளி
நாடொன்றில் நிறைதொழில்மட்டம் நிலவும்போது தோன்றும் மொத்த நிரம்பலுக்கு தேவையான அளவை விட அப்பொருளாதாரம் கூடுதலாக செலவிடும் போது மொத்த கேள்வி மட்டம் பெருகுவதால் தோன்றுவதே பணவீக்க இடைவெளி ஆகும்.
இதன் போது மெய்யான GDP அதிகரிக்காத நிலையில் கேள்வி மட்டம் கூடுவதால் கேள்வி தூண்டல் பணவீக்கம் ஏற்படும்.
மாறாக நாடொன்றில் நிறைதொழில்மட்டம் நிலவும் போது தோன்றும் மொத்த நிரம்பலுக்கு தேவையான அளவை விட அப்பொருளாதாரம் குறைவாக செலவிடும் போது மொத்த கேள்வி மட்டம் குறைவதால் தோன்றுவதே பணச்சுருக்க இடைவெளி ஆகும்.
இதன் போது திட்டமிடாத கையிருப்புக்கள் தோன்றுவதால் மெய்யான GDP குறைய வேலையின்மை ஏற்படும்.
பணக்கூலிகளில் ஓர் உயர்ச்சி காணப்படுகின்ற போதும் மெய்கூலிகள் எச்சூழ்நிலையில் வீழ்ச்சியடைதல் கூடும்?
Review Topicவட்டி வீதங்கள் எச்சந்தர்ப்பத்தில் நாணயக் கொள்கையின் பயனுறுதிமிக்க ஒரு கருவியாக அமையும்?
Review Topicபின்வரும் கூற்றுகளுள் எது நாணயக் கொள்கையினை சரியாக வரைவிலக்கணப்படுத்துகிறது?
Review Topicபொருளாதாரமானது நிறைதொழில் மட்டத்தில் உள்ளதாகக் கருதுக. கொள்கை வகுப்பாளர்கள் விலை மட்டத்தை உறுதியாகப் பேண விரும்பும் அதேவேளை முதலீட்டைப் பெருமளவு ஊக்குவிக்க விரும்புகின்றனர். இக்குறிக்கோளை அடைவதற்கு இறைக்கொள்கை மற்றும் பணக்கொள்கை என்பவற்றின் பின்வரும் சேர்க்கைகளில் மிகவும் பொருத்தமானது எது?
Review Topicபொருளாதாரமொன்றில் வட்டி வீதத்தைக் குறைப்பதன் மூலம் அடைய எதிர்பார்க்கப்படும் பேரினப் பொருளியல் இலக்குகளில் ஒன்று,
Review Topicவிரிவாக்கப் பணக் கொள்கை மற்றும் விரிவாக்க இறைக் கொள்கைகளுக்கு உதாரணமாக அமைவது,
Review Topicபணக்கூலிகளில் ஓர் உயர்ச்சி காணப்படுகின்ற போதும் மெய்கூலிகள் எச்சூழ்நிலையில் வீழ்ச்சியடைதல் கூடும்?

Review Topic