எல்லையற்ற விருப்பங்களுடன் ஒப்பிடும்போது அவற்றை பூர்த்தி செய்வதற்கு தேவையான, சமூகத்திடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களின் கிடைப்பனவு போதியதாக இல்லாது இருத்தல் அருமை எனப்படும்.
உலகிலுள்ள எல்லாச் சமூகங்களாலும் (எல்லா நாடுகளாலும்) எதிர்கொள்ளப்படும் பொதுவான பிரச்சனையாக அருமை காணப்படுகின்றது.
அருமை எனும் பிரச்சனை தோற்றம் பெறக் காரணங்கள்
முழு அருமை – சார்பு அருமை
முழு அருமை
மனிதனது தேவைகள் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான சமூகத்திடம் உள்ள வளங்களின் கிடைப்பனவு முற்றிலும் போதாதிருப்பின் அதனை முழு அருமை என்பர்.
உ – ம் : பெற்றோலிய வளம் போன்ற மீள் உருவாக்க முடியாத இயற்கை வளங்கள்.
சார்பு அருமை
மனிதனது தேவைகள், விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான சமூகத்திடம் உள்ள வளங்களின் கிடைப்பனவு ஒப்பீட்டில் போதாதிருப்பின் அதுச் சார்பு அருமை எனப்படும்.
உ – ம் : மனிதனால் உருவாக்கப்படும் மூலதன வளம்.
மாற்றுபயோகம்
வரையறுத்துத் தரப்பட்டுள்ள வளங்கள் வேறுபட்டதான தேவைகள் விருப்பங்களை நிறைவு செய்யப்பயன்படக் கூடியதாயுள்ள சிறப்பியல்பு மாற்றுபயோகம் எனப்படும்.
உ – ம் :
கிராமத்திலுள்ள ஒரு ஏக்கர் காணியில் விவசாயம் செய்யலாம் அல்லது விலங்கு வளர்ப்பு பண்ணை ஒன்றை உருவாக்கலாம்.
தெரிவு
வரையறுத்துத் தரப்பட்ட வளங்கள் அருமையுடன் மாற்றுப் பயன்பாட்டையும் கொண்டுள்ளதால் அவற்றைப் பல்வேறுபட்ட நோக்கங்களுக்கிடையே பகிர்வு செய்ய முற்படும் போது தோன்றுவதே தெரிவுப் பிரச்சனையாகும்.
தெரிவின் போதே அமயச் செலவு எனும் எண்ணக்கரு முக்கியம் பெறுகின்றது.
தெரிவுப் பிரச்சனை தோன்றக் காரணம்
அருமை – தெரிவு தொடர்பு
விருப்பங்கள் போல வளங்களும் எல்லை அற்றதாக இருப்பின் தெரிவு தோன்றி இருக்காது. ஆனால் மாற்றுப் பயனுடைய வளம் அருமையாக அமைவதால் அதனை வேறுபட்ட நோக்கங்களுக்கு பயன்படுத்த முற்படும் போது எதனை, எந்தளவில், எவ்வாறு, யாருக்காக உற்பத்தி செய்தல் எனும் தெரிவுப் பிரச்சனைகள் தோன்றம் பெறுகின்றன.
அதனாலேயே அருமை தெரிவை உருவாக்குகின்றது என்பர்.
வளங்கள் வரையறையற்றதாகவோ அல்லது ஒரு பயன்பாட்டை மட்டும் கொண்டதாகவோ இருப்பின் தெரிவு எனும் பிரச்சினை தோற்றம் பெறாது.
அமயச் செலவு / சந்தர்ப்பச் செலவு
அருமையான வளங்கள் மாற்றுப் பயன்பாட்டைக் கொண்டிருப்பதால் தெரிவினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மாற்றுப் பயன்பாட்டின் போது, அதிசிறந்த ஒரு தெரிவின் பொருட்டு இழக்கப்படும் அடுத்த சிறந்த மாற்றுப்பயன்பாட்டுத் தெரிவின் மெய்ரீதியான அளவு அல்லது பெறுமதியே சந்தர்ப்பச் செலவு ஆகும்.
உ – ம் :
உயர்தரத்தில் அதிசிறந்த பெறுபேறு பெற்ற மாணவன் பல்கலைக்கழக தெரிவை மேற்கொள்வதால் இழக்கப்படும் வேலைவாய்ப்பும் வருமான மட்ட அளவும்.
ஒரு பண்ட உற்பத்தியை அதிகரிக்க முற்படும் போது அதிகரிக்கப்பட்ட உற்பத்தி அலகுகளும் இழக்கப்பட்ட உற்பத்தி அலகுகளும் நேர்க்கணிய அலகுகள் என்பதால் அமையச் செலவு நேர்க்கணியமானது என்பர்.
அமயச் செலவு தோன்றக் காரணிகள்