Please Login to view full dashboard.

நிறைபோட்டி நிறுவன குறுங்கால சமனிலை

Author : Admin

37  
Topic updated on 02/15/2019 09:04am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நிறைபோட்டிச் சந்தையில் பண்டத்தினது கேள்வி, நிரம்பல் அடிப்படையில் விலை தீர்மானிக்கப்படும்.

screenshot-27

  • இவ்வாறு தீர்மானிக்கப்படும் விலையானது ஒரு நிறுவனத்தால் மாற்ற முடியாததனால் நிறுவனமொன்றின் செயற்பாடு செயல் திறனற்றதாக அமையும்.
  • இதனால் நிறுவனமொன்றில் செயற்படும் உற்பத்தியாளர் ஒரு விலை ஏற்போன்.
  • தீர்மானிக்கப்பட்ட விலைக்கு இயலுமான அளவுத் தொகைகளை சந்தைக்கு நிரம்பல் செய்ய முடியும்.
  • அவ்விலைக்கு விரும்பிய அளவு கேள்வியினை ஏற்படுத்த முடியும்.
  • நிறைபோட்டி நிறுவனமொன்றின் கேள்விக்கோடு முடிவிலி நெகிழ்ச்சி.
  • அதனைப் பின்வருமாறு வரைபு ரீதியாக முன்வைக்கலாம்.

screenshot-30

  • குறுங்காலத்தில் உற்பத்தியைச் செயற்படுத்துவதானது நிறுவனத்தில் நிலவும் தொழிநுட்பமும் இயலளவும் மீது செயற்படும்.
  • அச் செயற்பாட்டின் அடிப்படையில் உற்பத்தியும் செலவும் தீர்மானிக்கப்படும்.
  • நிறுவனமொன்று குறுங்காலத்தில் உச்ச இலாபத்தை பெறுவதற்காக முக்கிய தீர்மானங்கள் இரண்டினை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
    அவை பின்வருமாறு:

    • வருமானம் செலவு அடிப்படையில் பொருளியல் இலாபத்தை உச்சப்படுத்தும் தீர்மானத்தை மேற்கொள்வார்.
    • எல்லை வருமானம், எல்லைச் செலவு அடிப்படையில் இலாபத்தை உச்சப்படுத்தும் உற்பத்தி மட்டத்தை தீர்மானித்தல்.

மொத்த வருமானம்

  • நிறுவனமொன்று தனது உற்பத்தியைச் சந்தையில் விநியோகித்துப் பெற்றுக்கொள்ளும் பணத்தின் அளவு மொத்த வருமானம்.
  • விநியோகிக்கப்படும் பொருட்களின் அளவு (Q) பொருளின் விலையால் (P) பெருக்குவதன் மூலம் மொத்த வருமானத்தை பெறமுடியும்.                                                              

Screenshot (107)

சராசரி வருமானம்

  • மொத்த வருமானத்தை பொருட் தொகையால் பிரிப்பதன் மூலம் சராசரி வருமானத்தை பெறமுடியும்.

Screenshot (106)

எல்லை வருமானம்

  • மேலதிகமாகப் பண்ட அலகொன்றை உற்பத்தி செய்வதால் பெறப்படும் மொத்த வருமானத்தில் ஏற்படும் மாற்றமே எல்லை வருமானம்.
  • எல்லை வருமானத்தைப் பெறுவதற்கு மொத்த வருமானத்தின் வேறுபாட்டைப் பண்டத்தொகையின் வேறுபாட்டால் பிரிக்க வேண்டும்.

Screenshot (108)

மொத்த வருமானம்- எல்லை வருமானம்- சராசரி வருமானம் தொடர்பு

  • நிறைபோட்டிச் சந்தையில் நிறுவனமொன்றின் தீர்மானிக்கப்பட்ட விலையானது காணப்படுவதால் பண்டத்தின் விலையும் சராசரி வருமானமும் எல்லை வருமானமும் சமப்படும்.
  • இதனால் P = AR = MR  என்ற கோட்பாடு நிறைவேற்றப்படும்.
  • இதனை பின்வரும் அட்டவணை, வரிபடத்தின் மூலம் காட்டலாம்:

Screenshot (109)

Screenshot (110)

பொருளியல்  இலாபம்

  • மொத்த வருமானத்திலிருந்து மொத்தச் செலவை நீக்குவதன் மூலம் பொருளியல்  இலாபம் கிடைக்கும்.

மொத்தச் செலவு, மொத்த வருமானம், பொருளியல் இலாபம் தொடர்பு

  • இதனை பின்வரும் அட்டவணை, வரிபடத்தின் மூலம் காட்டலாம்:

Screenshot (111)

Screenshot (112)

Screenshot (113)

  • உற்பத்தி அதிகரிப்பதுடன் வருமானம் அதிகரிப்பதால் வருமானக்கோடு மூலப்புள்ளியிலிருந்து ஆரம்பித்து மேல்நோக்கி செல்லும்.
  • உற்பத்தி அதிகரிப்பதுடன் செலவும் அதிகரிப்பதால் செலவுக்கோடு மேல்நோக்கி செல்கின்றது.
  • மொத்தச் செலவுக்கோடும் வருமானக்கோடும் சந்திக்கும் புள்ளியில் பொருளியல் இலாபம் பூச்சியம்.
  • வருமானக் கோட்டை விட மொத்தச் செலவுக்கோடு உயர்வாக இருக்கும்  போது பொருளாதார நட்டம் / பொருளியல் இலாபம் எதிர்க்கணியமாக இருக்கும்.
  • மொத்தச்செலவு கோட்டை விட வருமானக்கோடு உயர்வாக இருக்கும்  போது பொருளியல் இலாபம் உருவாகும்.
  • மொத்தச் செலவுக் கோட்டிற்கும் மொத்த வருமானக் கோட்டிற்குமிடையிலான இடைவெளி அதிகமாக உள்ள மத்திய புள்ளியில் பொருளியல் இலாபம் உயர்வாக இருக்கும்.

எல்லை செலவு (MC) எல்லை வருமானம் (MR) என்பவற்றினைப் பயன்படுத்தி இலாபம் உச்சப்படுத்தப்படுதலைக் காட்டல்

  • எல்லைச்செலவு எல்லை வருமானத்தை விடக் குறைதல் (MR > MC) என்பதன் கருத்து அவ்வலகை உற்பத்தி செய்வதால் பொருளியல் இலாபத்திற்கு ஒரு அதிகரிப்பு  ஏற்படல்.
  • எல்லை வருமானத்தை விட எல்லைச் செலவு உயர்வாக இருப்பின் அவ்வலகை உற்பத்தி செய்வதால் பொருளியல் நட்டமொன்று ஏற்படும்.
  • இந்நிலையில் உற்பத்திச் செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.
  • எல்லை வருமானம் எல்லைச் செலவுக்குச் சமப்படும் போது நிறுவனத்தின் இலாபம் உச்சமடையும்.
  • இத்தகைய சந்தர்ப்பத்தில் இலாபத்தில் மேலும் அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படாது.
  • எல்லை அணுகுமுறையின் கீழ் இலாபத்தை உச்சப்படுத்துவதற்கு உற்பத்தி மட்டம் MR = MC என்ற நிபந்தனையின் கீழ் செயற்படுகின்றது.
  • எல்லை அணுகுமுறையின் கீழ் இலாப உச்சப்படுத்தலை பின்வரும் அட்டவணையில் காட்டலாம்.

Screenshot (114)

அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் காரணிகளைப் பெறமுடியும்.

  • 8-9 வரையான உற்பத்தி வீச்சில் பொருளியல் இலாபம் இடம்பெறுதல்.
  • 9-10 வரையான உற்பத்தி வீச்சில் இலாபத்தை குறைக்க நிறுவனங்களுக்கு ஏற்படுதல்.
  • உற்பத்தி 9 வது அலகின்போது இலாபத்தில் உயர்வு / வீழ்ச்சி ஏற்படாதிருத்தல் இலாபத்தை உச்சப்படுத்தல் ஆகும்.

நிறைபோட்டி நிறுவனத்தில் இலாபத்தை உச்சப்படுத்தலை பின்வரும் வரைபு மூலம் காட்ட முடியும்.

Screenshot (115)

  • மேலுள்ள வரைபின் படி ,
    • உற்பத்தி அலகு 9 ஐ விட குறைந்த மட்டங்களில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இலாபத்தை உச்சப்படுத்த முடியும்.
    • 9 வது அலகில் பொருளியல் இலாபம் உச்ச நிலையடைதல்.
    • உற்பத்தி அலகு 9 ஐ விட உயர்வாக இருக்கும்போது பொருளியல் இலாபம் குறையும்.

நிறைபோட்டி நிறுவனத்தின் குறுங்கால நடத்தையில் செயற்படுவதற்குரிய மாற்று நிலைமைகள்

  • பொருளியல் இலாபத்தை உழைத்துக் கொண்டு உற்பத்தியில் ஈடுபடுதல்.
  • பொருளியல் இலாபம் பூச்சியமாகும் நிலையில் உற்பத்தியில் ஈடுபடுதல்.
  • நட்டத்தை அனுபவித்து உற்பத்தியிலீடுபடல்.

பொருளியல் இலாபத்தை உழைக்கும்போது நிறுவனம் பண்ட அலகொன்றை விநியோகிக்கும் விலை சராசரி செலவை விட (ATC/AC) உயர்வு.

Screenshot (116)

  • வரைபின்படி 9 ஆவது அலகில் இலாபம் உச்சப்படுத்தப்படுவதால் மொத்த பொருளியல் இலாபம் கோடிடப்பட்ட பகுதிக்கு சமப்படுகின்றது.
  • பொருளியல் இலாபம் பூச்சியமாகும் நிலையில் பண்டத்தின் விநியோகிக்கும் விலையானது பண்டத்தின் சராசரி செலவுக்கு சமப்படுகின்றது.

Screenshot (117)

  • இந்த நிலைமையின் கீழ் சராசரி செலவிற்கு சமனான வருமானம் பெறப்படுவதனால் தொழிலில் நிறுவனம் தங்கியிருக்கின்றது.
  • பண்டத்தை விநியோகிக்கும் விலை சராசரி செலவிலும் குறைவாக இருப்பது, நட்டமாக இருப்பினும் நிறுவனமொன்று குறுங்காலத்தில் உற்பத்தியில் ஈடுபடலாம்.
  • நிறுவனத்தை முழுமையாக மூடினால் ஏற்படும் நட்டமானது உற்பத்தியிலீடுபட்டு ஏற்படும் நட்டத்தை விட அதிகமாக இருந்தால், தொழிலில் நிறுவனம் நிலைத்திருக்கும்.

Screenshot (118)

  • குறுங்காலத்தில் நட்டத்தில் இயங்கும் நிறுவனத்தின் மொத்த நட்டத்தின் அளவை கோடிட்ட பகுதிகளின் ஊடாக காட்ட முடியும்.
  • நிறைபோட்டி அமைப்பானது உண்மையான சந்தை அமைப்பிலிருந்து விலகிச் செல்கின்றது.
  • குறுங்காலத்தில் உற்பத்தி நிறுவனமொன்றில் நிலையான செலவை தவிர்க்க முடியாதிருப்பதுடன் மாறும் செலவைத் தவிர்க்கலாம்.
  • நிறுவனத்தின் மொத்த வருமானமானது மொத்தச் செலவினத்தை ஈடுசெய்ய முடியாதிருப்பின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தும்.
  • விலையானது சராசரி மாறும் செலவை விடக் குறைவாக இருப்பின் உற்பத்தியில் ஈடுபடுவதானது நட்டத்தை உயர்த்தக் காரணமாகும்.
  • நிறுவனமானது உற்பத்தியிலீடுபடுவதா, மூடுவதா என்பது சராசரி மாறும் செலவின் நடத்தையில் தங்கியுள்ளதனை வரைபு மூலம் காட்டமுடியும்.

Screenshot (119)

 

RATE CONTENT 2, 1
QBANK (37 QUESTIONS)
Question: of 15

நிறைபோட்டி நிறுவனம் ஒன்று இலாபத்தை உச்சப்படுத்துவது,

Review Topic
QID: 28677
Hide Comments(0)

Leave a Reply

நிறைபோட்டி நிறுவனம் ஒன்று இலாபத்தை உச்சப்படுத்துவது,

Review Topic
QID: 28677

நிறைபோட்டி நிறுவனமொன்றின் எல்லை வருவாய் எப்பொழுதும் …………………………சமமானதாகவிருக்கும்

Review Topic
QID: 28683

பொருளியல் வாடகை என்பது

Review Topic
QID: 28684

போட்டித் தன்மை வாய்ந்த ஊழியச் சந்தையொன்றின் கேள்வி நிரம்பல் வளையிகளை இவ்வரைபடம் காட்டுகின்றது. சந்தை சமநிலையில் உள்ள போது பின்வருவனவற்றில் எப்பகுதிகள் பொருளியல் வாடகைகளையும் மாற்றல் வருவாய்களையும் அளவிடுகின்றன.

Review Topic
QID: 28692

நிறைபோட்டி நிறுவனமொன்று வாராந்தம் 200 முட்டைகளை உற்பத்தி செய்து முட்டையொன்றை ரூ. 25 இற்கு விற்கின்றது. இவ்வாராந்த 200 முட்டை வெளியீட்டின் செலவுகள் பின்வருமாறு :

மொத்த நிலையான செலவு = ரூ. 2000
மொத்த மாறும் செலவு = ரூ. 4000
எல்லைச் செலவு = ரூ. 25

குறுங்காலத்தில் நிறுவனம் தனது இலாபத்தை உச்சப்படுத்த அல்லது நட்டங்களை இழிவுபடுத்த யாது செய்யும்?

Review Topic
QID: 28704

குறுங்காலத்தில் சராசரி வருவாயானது சராசரிச் செலவை விடக் குறைவாக இருப்பினும் நிறுவனம் தொழிலில் நீடித்திருக்க வேண்டுமாயின் அதன் சராசரி வருமானம்

Review Topic
QID: 28709

நிறைபோட்டி நிறுவனமொன்று சமநிலையில் உள்ளபோது அதன் சராசரி வருவாய்

Review Topic
QID: 28728

நிறைபோட்டிக் கைத்தொழிலில் இயங்கும் நிறுவனமொன்றின் எல்லை வருவாய் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் சரியானது எது?

Review Topic
QID: 28735

நிறைபோட்டி நிறுவனமொன்று வாராந்தம் 200 அரிசிப் பொதிகளை உற்பத்தி செய்கிறது. இவை ஒவ்வொன்றும் ரூபா 250 விலைக்கு விற்கப்படுகின்றன. நிறுவனத்தின் செலவுகளை அட்டவணை காட்டுகிறது

குறுங்காலத்தில் இந்நிறுவனம் இலாபத்தை உச்சப்படுத்த அல்லது நட்டத்தை இழிவுபடுத்த யாது செய்ய வேண்டும்?

Review Topic
QID: 28749

நிறுவனமொன்றின் குறுங்கால நிரம்பல் வளையியாக அமைவது,

Review Topic
QID: 28755

நிறுவனமொன்றின் சமநிலை நிர்ணயத்தின்போது பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனையாவது,

Review Topic
QID: 28760

வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு செலவு மற்றும் கேள்வி வளையிகளை எதிர்நோக்கும் போட்டி உற்பத்தி நிறுவனமொன்று தனது வெளியீட்டை Qஇலிருந்து Q2ஆக அதிகரிக்குமாயின்,

Review Topic
QID: 28764

அதிதாழ்ந்த சராசரி மாறும் செலவுக்குக் கீழுள்ள விலை வீச்சுகளில் நிறைபோட்டி உற்பத்தி நிறுவனமொன்றின் நிரம்பல் வளையியானது.

Review Topic
QID: 28769

போட்டிச் சந்தையொன்றில் இயங்கும் நிறுவனமொன்று இலாபத்தை உச்சப்படுத்தும் வெளியீட்டு மட்டம் நிர்ணயிக்கப்படும் புள்ளியில்,

Review Topic
QID: 28770

நிறைபோட்டிக் கைத்தொழிலிலுள்ள ஒரு நிறுவனமானது குறுங்காலத்தில் பின்வரும் சூழ்நிலையினை எதிர்கொள்கின்றது.

நிகழ்கால வெளியீட்டு மட்டம் = 500 அலகுகள்
சந்தை விலை = அலகொன்றிற்கு ரூபா 6
மொத்தச் செலவு = ரூபா 5 000
மொத்த நிலையான செலவு = ரூபா 1 000
எல்லைச் செலவு = ரூபா 6

இலாபத்தை உச்சப்படுத்தும் நோக்கில் செயல்படும் இந்நிறுவனம்,

Review Topic
QID: 28781
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank