எல்லையற்ற மனித விருப்பங்களை நிறைவு செய்வதற்காக, வரையறுக்கப்பட்டுள்ள மாற்றுப் பயனுடைய அருமையான வளங்களை பல்வேறுபட்ட நோக்கங்களுக்கிடையே பகிர்வு செய்ய முற்படும் போது தோன்றும் தெரிவுப் பிரச்சனைகளே அடிப்படைப் பொருளாதாரப்பி ரச்சனைகளாகும்.
இவை சகல நாடுகளுக்கும் பொதுவானவை ஆகும்.
எல்லையற்ற மனித விருப்பங்களை நிறைவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட மாற்றுப் பயனுடைய அருமையான வளங்களை எந்த உற்பத்தியில், எந்தளவில் ஒதுக்குவது என்பதே இப் பிரச்சனையாகும்.
எதனை எந்தளவில் உற்பத்தி செய்தல் எனும் பிரச்சனை தோன்றக் காரணங்களாவன:
வேறுபட்ட காரணிச் சேர்க்கை அளவுக்கேற்ப ஊழியச் செறிவான தொழில்நுட்பம், மூலதன செறிவான தொழில்நுட்பம் என மாற்று முறையிலான தொழில்நுட்ப முறைகள் காணப்படும் போது உற்பத்திக்காக எத்தொழில்நுட்ப முறையை தெரிவது எனும் பிரச்சனையே இதுவாகும்.
எவ்வாறு உற்பத்தி செய்தல் எனும் பிரச்சனை தோன்றக் காரணங்கள்:
நாடொன்றினது அருமையான மொத்த தேசிய உற்பத்தியை / மொத்த வெளியீட்டை சாதன உடமையாளரான வீட்டுத்துறையிடையே பங்கிடுவது தொடர்பான தெரிவுப் பிரச்சனை இதுவாகும்.
யாருக்காக உற்பத்தி செய்தல் எனும் பிரச்சனை தோன்றக் காரணங்கள்:
அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சனைகள் சகல நாடுகளுக்கும் பொதுவானவை ஆயினும், அப்பிரச்சனைகளுக்கான தீர்வுப்பொறிமுறைகள் ஒவ்வொரு சமூகத்திலும் வேறுபடுகின்றன.
உ – ம்
வேறுபட்ட பொருளாதார அமைப்பு | அடிப்படைப் பிரச்சனைக்கான தீர்வுகள் |
---|---|
கட்டில்லாச் சந்தைப் பொருளாதாரம் | விலைப்பொறிமுறை |
கட்டளைப் பொருளாதாரம் | மத்திய திட்டமிடல் பொறி முறையில் அரச அதிகாரிகள் |
கலப்புப் பொருளாதாரம் | பகுதியளவில் விலைப் பொறிமுறை பகுதியளவில் மத்திய திட்டமிடல் பொறிமுறையில் அரச அதிகாரிகளும் |
குலமரபுப் பொருளாதாரம் | மரபுகள், விழுமியங்கள், வழக்காறுகள் கலாச்சாரங்க |
சாதனங்கள் தனியார் உடைமையாக அமைய இலாப ஊக்குவிப்பில் விலை முறையின் மூலம் பொருட்சந்தையில் தீர்மானிக்கப்படும் பொருட்களின் சார்பு விலையின் அடிப்படையில் தீர்வு இடம்பெறும்.
எந்தப் பண்டங்களின் உற்பத்தியால் உச்ச இலாபத்தை உழைக்க முடியும் என்பதை விலையில் சமிக்ஞை மூலம் அறிந்து அவ் உற்பத்திகளில் உற்பத்தியாளர் வள ஒதுக்கீட்டை மேற்கொள்வர்.
அதேவேளை இலாபம் தராத பண்டங்கள் உருவாக்கப்படுவது இல்லை.
சாதனங்கள் அரசுடைமையாக அமைய சமூக நலன் ஊக்குவிப்பில் மத்திய திட்டமிடல் குழுவின் கட்டளைகள் மூலம் அரச அதிகாரிகளால் உற்பத்திப் பிரிவுகளுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டு அதற்கேற்ப பண்ட உற்பத்திகளில் வள ஒதுக்கீடுகள் இடம்பெறும்.
இங்கு பண்டங்களின் விலைகள் திட்டமிடல் அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டு நிரம்பல் செய்யப்பட, அவற்றுக்கு நுகர்வோர் கேள்வியை ஏற்படுத்துவர்.
சாதனங்கள் பகுதியளவில் தனியார் உடைமையாகவும் பகுதியளவில் அரசுடைமையாகவும் காணப்பட தனியார் உடைமைப் பகுதியில் இலாப ஊக்குவிப்பில் பொருட் சந்தையில் பொருளின் விலை அடிப்படையில் இலாபம் கூடிய உற்பத்திகளிலும்
அரச உடைமைப் பகுதியில் சமூக நலன் ஊக்குவிப்பு அடிப்படையில் மத்திய திட்டமிடல் குழுவின் கட்டளைகள் மூலம் அரச அதிகாரிகளால் அரசின் உற்பத்திப் பிரிவுகளுக்கு வழங்கப்படும் அறிவித்தல்கள் மூலமும் வள ஒதுக்கீடுகள் இடம்பெறும்.
மரபு ரீதியான பொருளாதாரங்களில் சாதனங்கள் பொது வளங்களாக அமைய எதனை எந்தளவில் உற்பத்தி செய்தல் என்பது மரபுகள், வழக்காறுகள், விழுமியங்கள், கலாசாரங்களால் தீர்மானிக்கப்படுகின்றது.
சாதனங்கள் தனியார் உடைமையாக அமைய இலாப ஊக்குவிப்பில் காரணிச் சந்தையில் தீர்மானிக்கப்படும் காரணி விலைகளின் அடிப்படையில் தீர்வு இடம்பெறும்.
நிலவும் தொழில்நுட்பம், காரணிகளின் விலைகள் அடிப்படையில் ஒப்பீட்டில் காரணி விலை குறைந்ததும், பொருளாதார ரீதியில் மிகவும் வினைத்திறன் உயர்ந்ததும், குறைந்த உற்பத்தி செலவுடையதுமான உற்பத்தித் தொழில்நுட்ப தெரிவு இடம்பெறும்.
சாதனங்கள் பொதுவுடைமையாக அமைய சமூக நலன் ஊக்குவிப்பு அடிப்படையில் மத்திய திட்டமிடல் குழுவின் கட்டளை மூலம் அதிகாரிகளால் தொழில்நுட்ப தெரிவுகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் உற்பத்திப் பிரிவுகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் தொழில்நுட்ப முறைகள் தெரியப்படும்.
இதன்போது மாற்றுத் தொழில்நுட்ப முறைகள் குறித்தும், வளங்களின் கிடைப்பனவுகள் தொடர்பாகவும் அரச அதிகாரிகள் அறிவித்திருப்பர்.
சாதனங்கள் பகுதியளவில் தனியார் உடைமையாகவும், பகுதியளவில் அரச உடைமையாகவும் அமைய, தனியார் உடைமைப் பகுதியில் இலாப ஊக்குவிப்பில் காரணிச் சந்தையில் காரணி விலையின் அடிப்படையிலும், அரச உடைமைப் பகுதியில் சமூக நலன் ஊக்குவிப்பு அடிப்படையில் மத்திய திட்டமிடல் குழுவின் கட்டளைகள் மூலம் அரச அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் மூலமும் தொழில்நுட்ப முறைகள் தெரிவு செய்யப்படும்.
சாதனங்கள் பொதுவளங்களாக அமைய எவ்வாறு உற்பத்தி செய்தல் என்பது மரபுகள், வழற்காறுகள்,விழுமியங்கள், கலாசாரங்களால் தீர்மானிக்கப்படும்.
சந்தைப் பொருளாதாரத்தில் சாதனங்கள் தனியார் உடை மையாக அமைய இலாபம் ஊக்குவிப்பில் தனிநபரது வருமானப் பங்கீட்டின் அடிப்படையில் உற்பத்திப் பங்கீடு இடம்பெறும்.
வருமான பங்கீடானது காரணிச் சந்தையில் நிலவும் காரணிகளின் விலைகள் பரிமாற்றப்படும் காரணிகளின் அளவுகளால் தீர்மானிக்கப்படும்.
அதன் போது உயர்ந்த வருமானப் பங்கீட்டை பெறுவோர் கூடிய உற்பத்திப் பங்கீட்டையும் பெறுவர். குறைந்த வருமானம் பெறுபவர் குறைந்த பங்கீட்டையும் பெறுவர்.
கட்டளைப் பொருளாதாரத்தில் சாதனங்கள் பொதுவுடை மையாக அமைய சமூக நலன் ஊக்குவிப்பில் காரணி வருமானங்கள் மத்திய திட்டமிடல் குழுவினால் தீர்மானிக்கப்படுகின்றது.
இங்கு சகலருக்கும் பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்யக் கூடியவாறு காரணி விலையான கூலி மட்டத்தையும் பொருட்கள் சேவைகளின் விலைகளையும் திட்டமிடல் அதிகாரிகள் நிர்ணயிப்பர். இதனூடாக உற்பத்திப் பங்கீடு இடம்பெறும்.
தனியார் உடைமைப் பகுதியில் இலாப ஊக்குவிப்பாக அமைய காரணிச் சந்தையில் நிலவும் காரணிவிலைகள் பரிமாற்றப்படும் காரணிகளின் அளவுகளால் நிர்ணயிக்கப்படும் தனி நபர்களின் வருமானப் பங்கீட்டுக்கு ஏற்ப உற்பத்திகள் பகிரப்பட,
அரச உடைமைப் பகுதியில் சமூக நலன் நோக்கில் மத்திய திட்டமிடல் குழுவின் கட்டளைக்கேற்ப பொதுப் பண்டங்கள், அரை பொதுப் பொருள், மேன்மைப் பண்ட உற்பத்திகள் இடம்பெற அவை சகலருக்கும் பொதுவாக வழங்கல் செய்யப்படும்.
சாதனங்கள் பொது வளங்களாக அமைய யாருக்காக உற்பத்தி செய்தல் என்பது மரபுகள், வழக்காறுகள், விழுமியங்கள் கலாசாரங்களால் தீர்மானிக்கப்படும்.
பொருட்கள் சேவைகள் உற்பத்தியில் எல்லா சமூகங்களும் தெரிவுப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றன என ஏன் நாம் கூறுகிறோம்?
Review Topicஇலவசமாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய கீழ்வரும் பொருட்கள் சேவைகளில் அமையச் செலவைக் கொண்டுள்ளவை யாவை?
Review Topicசமூகத்தின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினையான யாருக்காக உற்பத்தி செய்யப்படுகிறது என்பதனால் கருதப்படுவது யாது?
Review Topic‘எதனை ‘உற்பத்திசெய்தல்” மற்றும் ‘யாருக்காக உற்பத்தி செய்தல்” ஆகிய அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகள் அடிப்படையில் ஒன்றிலொன்று தங்கியுள்ளன. ஏனெனில்,
Review Topicபொருட்கள் சேவைகள் உற்பத்தியில் எல்லா சமூகங்களும் தெரிவுப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றன என ஏன் நாம் கூறுகிறோம்?
Review Topicஇலவசமாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய கீழ்வரும் பொருட்கள் சேவைகளில் அமையச் செலவைக் கொண்டுள்ளவை யாவை?
Review Topicசமூகத்தின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினையான யாருக்காக உற்பத்தி செய்யப்படுகிறது என்பதனால் கருதப்படுவது யாது?
Review Topic‘எதனை ‘உற்பத்திசெய்தல்” மற்றும் ‘யாருக்காக உற்பத்தி செய்தல்” ஆகிய அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகள் அடிப்படையில் ஒன்றிலொன்று தங்கியுள்ளன. ஏனெனில்,
Review Topic