Please Login to view full dashboard.

வளங்கள்

Author : Admin

22  
Topic updated on 02/15/2019 10:08am

உற்பத்தி வளங்கள் /வளங்கள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

உற்பத்திக்கு பயன்படும் உள்ளீடுகள் அனைத்தும் உற்பத்தி வளங்கள் ஆகும்.

பொருளியலில் இவை இரு வகைப்படும்.

  • பொருளாதார வளம்
  •  பொருளாதாரம் அல்லா வளம்

பொருளாதார வளம்

வரையறுக்கப்பட்டதும், அருமைத் தன்மையுடையதுமான வளங்கள், பொருளாதார வளங்கள் ஆகும்.

இவை அருமைத் தன்மையுடைய வளங்களாக இருப்பதனால் இவற்றினை பயன்படுத்தும்போது அமையச் செலவு ஏற்படும்.

(உ – ம்) : நிலம், உழைப்பு, மூலதனம், முயற்சி

இதன் பண்புகள்

  •  வரையறுக்கப்பட்ட அருமைத் தன்மையுடையவை.
  •  மாற்றுப்பயன்பாடு உடையவை.
  • அமையச் செலவுடையவை.

பொருளாதாரம் அல்லா வளம்

இயற்கையிடம் இருந்து பெறப்படுகின்ற எல்லையற்ற நிரம்பலை கொண்ட வளங்கள் ஆகும்.

இவை அருமைத் தன்மை அற்றவையாக இருப்பதனால் அமையச் செலவு இவற்றினை பயன்படுத்தும் போது ஏற்படுவது இல்லை.

(உ – ம்) :  சூரிய ஒளி, காற்று

இதன் பண்புகள்

  •  வரையறையற்றவை அருமைத்தன்மையற்றவை.
  •  மாற்றுப்பயன்பாடு அற்றவை.
  •  அமையச்செலவு அற்றவை.

மீள உருவாக்கக்கூடிய வளம் 

பயன்படுத்தும்போது இழக்கப்படாததும், குறைந்து விடாததும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதுமானதும், இயற்கையினால் வழங்கப்படும் வளங்களும் இவை ஆகும்.

(உ – ம்) : காட்டுவளம், மீன்வளம், சூரிய ஒளி

மீள உருவாக்க முடியாத வளம்

பயன்பாட்டின் போது இழக்கப்படுகின்றதும், குறைவடைகின்றதும், மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாதவாறும், இயற்கையினால் வழங்கப்பட்ட வளங்கள் இவை ஆகும்.

(உ – ம்) : பெற்றோலிய வளம், நிலக்கரி.

பொருளாதார வளங்களும் அவற்றின் பண்புகளும் அவற்றுக்கான உதாரணங்களும்

நிலம் –

  • இயற்கையின் வளம்.
  • அசையும் தன்மை மட்டுப்படுத்தப்பட்டது.
  • நிரம்பல் நெகிழ்வற்றது.
  • வினைதிறனை உயர்த்தலாம்.
  •  நிலத்துக்கான காரணிக்கொடுப்பனவு (விலை) வாடகையாகும்.
    (உ – ம்) : காற்று, சூரிய ஒளி

உழைப்பு –

  • உயிருள்ள உற்பத்திக் காரணியாகும்.
  • அசையும் தன்மையுடையது.
  • ஓரினத் தன்மையற்றது.
  •  கல்வி, பயிற்சி, அனுபவம் போன்றவற்றில் உழைப்பின் விளைதிறனை உயர்த்தலாம்.
  •  உழைப்பை உடமையாளரிடம் இருந்து பிரிக்க முடியாது.
  • உழைப்புக்கான காரணிக்கொடுப்பனவு சம்பளம் / கூலி ஆகும்.
    (உ – ம்) : ஒரு மணிநேர சட்ட ஆலோசனை, முகாமையாளர் சேவை.

மூலதனம் (முதல்) –

  • மனிதனால் உருவாக்கப்பட்ட வளம்.
  •  விளைதிறன் பெருக்கமுடையது. (உற்பத்தியை பெருக்கவல்லது)
  •  தேய்வடையக்கூடிய சாதனம்.
  •  உற்பத்தியில் மீண்டும் பயன்படுவது.
  •  மூலதனத்துக்கான காரணிக் கொடுப்பனவு வட்டி ஆகும்.
    (உ – ம்) : கட்டிடம், பொறித் தொகுதிகள், உபகரணம்.

மூலதனத்தின் வகைகள்

  •  நிலையான மூலதனம்
  •  சுழலும் மூலதனம்
  •  பொருளாதார பொதுப்பணி மூலதனம்
  •  சமூக பொதுப்பணி மூலதனம்
  •  மனித மூலதனம்
  •  இயற்கை மூலதனம்
  •  சமூக மூலதனம்

நிலையான மூலதனம்

ஒரு வருட காலத்திற்கு மேற்பட்ட நீண்டகால பயன்பாட்டினை உடையதும், உற்பத்தியில் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடியதும் பயன்பாட்டின் போது பெறுமானத்தேய்வு அடையக்கூடியதுமான மூலதனப் பொருட்கள் நிலையான மூலதனம் ஆகும்.

(உ – ம்) : காணிக்கட்டடம், இயந்திரம்

சுழலும் மூலதனம்

ஒரு வருட காலத்திற்கு குறைந்த குறுங்கால பயன்பாடு உடையதும் உற்பத்தியில் ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக் கூடியதும் பெறுமானத் தேய்வுக்கு உட்படாததுமான மூலதனப் பொருட்களே இவை ஆகும்.

அதாவது உற்பத்தி நிறுவனம் ஒன்றில் காணப்படும் குறுங்காலத்தில் மாற்றமடையும் சொத்துக்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மூலதனம் ஆகும்.

இதுவே தொழிற்படு மூலதனம் என அழைக்கப்படுகிறது.

(உ – ம்) :

  •  மூலப் பொருள் இருப்புக்கள்
  •  அரைகுறை முடிவுப்பொருள் இருப்புக்கள்
  • முடிவுப்பொருள் இருப்புக்கள்

பொருளாதாரப் பொதுப்பணி மூலதனம்

நாடொன்றின் பொருட்கள் சேவைகளில் உற்பத்திக்கு அவசியமான அடிப்படை வசதிகளான பொருளாதார வன்கட்டுமானங்களையும், பொருளாதார மென்கட்டுமானங்களையும் உருவாக்குவதில் ஈடுபடுத்தியுள்ள மூலதனம் பொருளாதார பொதுப்பணி மூலதனம் ஆகும்.

(உ – ம்) :

  1. துறைமுகம், விமானத்தளம் (பொருளாதார வன்கட்டுமானம்)
  2. தொழில்நுட்ப நிறுவனம் (பொருளாதார மென்கட்டுமானம்)

சமூக பொதுப்பணி மூலதனம்

சமூக நலன்களையும், சமூக நீதிகளையும் பேணுவதற்கு அவசியமான அடிப்படை வசதிகளான சமூக வன்கட்டுமானங்களையும், சமூக மென்கட்டுமானங்களையும் உருவாக்குவதில் ஈடுபடுத்தியுள்ள மூலதனம் ஆகும்.

(உ – ம்) :

  1. பாடசாலை, மருத்துவமனை (சமூக வன்கட்டுமானம்)
  2. காவல் நிலையம், நீதிமன்றம் (சமூக மென்கட்டுமானம்)

இயற்கை மூலதனம்

இயற்கை வளங்களை பொருட்கள், சேவைகளினது உற்பத்தியில் தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவாறு மூலதனச் சொத்துக்களாக மாற்றி அமைக்கின்ற போது இயற்கை மூலதனம் எனப்படும்.

(உ – ம்) : வயல் நிலம், தேயிலைத் தோட்டம்.

சமூக மூலதனம்

சமூகத்தின் நன்மை கருதி மக்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்படும் பரஸ்பர ஒத்துழைப்பு குழுக்கள் / அமைப்புக்கள் இது ஆகும்.

மனித மூலதனம்

நாடொன்றின் தொழிற்படைக்கு கல்வி, பயிற்சி, அனுபவம், சுகாதாரம் வழங்கிவரும் போது அத் தொழிற்படைக்கு ஏற்படுகின்ற சமூக ஆளுமை விருத்தி, தனிப்பட்ட அறிவு, திறன் என்பவையே மனித மூலதனம் ஆகும்.

  •  மனித மூலதனம் தொட்டுணர முடியாது, உளரீதியானது  ஆனால் மூலதனம் நிலையானது, தொட்டுணரக் கூடியது.
  • மனித மூலதனம் உழைப்பு, மூலதனம் என்பவற்றின் பண்புகளை கொண்டிருக்கும்.
  • மனித மூலதனம் விருத்தியடையும், மூலதனம் பெறுமானத்தேய்வடையும்.
  •  மனித மூலதன முதலீடானது தனிப்பட்ட நபரின் திறனுடன் இணைக்கப்பட்டது.

முயற்சி –

தொழிற்பாடுகள்

  • கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளல். (எதனை, எந்தளவில், எவ்வாறு, யாருக்காக உற்பத்தி செய்தல்)
  • உற்பத்தி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல்/ செயற்படுத்தல்.
  •  புத்துருவாக்கம் செய்து, இடர்களை தாங்கல்.
  •  இதற்கு வெகுமதியாக இலாபம் வழங்கப்படும்.

பண்புகள்

  •  மனித வளமாக இருத்தல்.
  • தலைமைத்துவம், தன்னம்பிக்கை காணப்படல்.
  •  தூரநோக்கு இருத்தல்.
  •  பயிற்சி வழங்கும் ஆற்றலிருத்தல்.
  • (உ – ம்) : ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
RATE CONTENT 0, 0
QBANK (22 QUESTIONS)

பின்வருவனவற்றுள் எதனை பொருளியலில் முதலீடாக கருத முடியாது?

Review Topic
QID: 27377
Hide Comments(0)

Leave a Reply

நிலம் என்ற உற்பத்திக் காரணியாக பின்வரும் பொருள்களில் எதை வகைப்படுத்த முடியும்?

Review Topic
QID: 27382
Hide Comments(0)

Leave a Reply

முயற்சியாண்மையின் தனித்துவமான தொழிற்பாட்டை இனங்காண்க.

Review Topic
QID: 27391
Hide Comments(0)

Leave a Reply

மனித முதல், பின்வரும் முறைகளில் எதனால் ஆக்கப்படுகின்றது?

Review Topic
QID: 27392
Hide Comments(0)

Leave a Reply

அருமைத் தன்மையுள்ள வளம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 27414
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் உற்பத்திக் காரணியொன்று என்ற ரீதியில் மூலதனம் என்பதற்கான உதாரணமாக அமையாதது எது?

Review Topic
QID: 27448
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் இயற்கை வளத்திற்கு ஓர் உதாரணமாக அமைவது எது?

Review Topic
QID: 27462
Hide Comments(0)

Leave a Reply

‘மனித மூலதனம்” என்பதனால் குறிப்பிடப்படுவது,

Review Topic
QID: 27510
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது ஓர் உற்பத்திக் காரணி அல்லாதது?

Review Topic
QID: 27513
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எதனை பொருளியலில் முதலீடாக கருத முடியாது?

Review Topic
QID: 27377

நிலம் என்ற உற்பத்திக் காரணியாக பின்வரும் பொருள்களில் எதை வகைப்படுத்த முடியும்?

Review Topic
QID: 27382

முயற்சியாண்மையின் தனித்துவமான தொழிற்பாட்டை இனங்காண்க.

Review Topic
QID: 27391

மனித முதல், பின்வரும் முறைகளில் எதனால் ஆக்கப்படுகின்றது?

Review Topic
QID: 27392

அருமைத் தன்மையுள்ள வளம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 27414

பின்வருவனவற்றில் உற்பத்திக் காரணியொன்று என்ற ரீதியில் மூலதனம் என்பதற்கான உதாரணமாக அமையாதது எது?

Review Topic
QID: 27448

பின்வருவனவற்றில் இயற்கை வளத்திற்கு ஓர் உதாரணமாக அமைவது எது?

Review Topic
QID: 27462

‘மனித மூலதனம்” என்பதனால் குறிப்பிடப்படுவது,

Review Topic
QID: 27510

பின்வருவனவற்றுள் எது ஓர் உற்பத்திக் காரணி அல்லாதது?

Review Topic
QID: 27513
Comments Hide Comments(1)
Mohamed Ahsan
Mohamed Ahsan commented at 17:48 pm on 25/11/2019
Answer மற்றும் Preferred Response காட்டுதில்லை ஏன்?
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank