பொருளாதாரத்தை ஒரு தொகுதியாக ஆய்வு செய்யாது பொருளாதாரமொன்றின் தனி அலகொன்றை / தனிக் கூறு ஒன்றை நுணுக்கமாக ஆய்வு செய்தல் ஆகும்.
ஒரு நாட்டிலுள்ள நிறுவனத்துறை, வீட்டுத்துறையை தனித் தனியே ஆய்வு செய்தல் ஆகும்.
(உ – ம்) : நுகர்வோரின் கேள்விக்கோடு
கந்தன் வைத்திருக்கும் பணத்தின் அளவு.
பேரினப் பொருளியல்
ஒரு நாடு முழுவதுமான தேசிய பொருளாதாரத்தை ஒரு தொகுதியாக கருதி ஆய்வு செய்து மேற்கொள்ளப்படும் மொத்த ரீதியான ஆய்வு ஆகும்.
(உ – ம்) தலா வருமானம்
மொத்த தேசிய உற்பத்தி
நேர்க்கூற்றுக்கள் (நேர்ப் பொருளியல்)
உண்மையான உலகில் அது என்ன மாதிரி இருக்கின்றது, இருந்தது, இருக்கும் என யதார்த்தமான முறையில் விளக்குதல் ஆகும்.
பல்வேறு பொருளியல் விதிகளினூடாக நேர்ப்பொருளியல் கூற்றுக்கள் விளக்கப்படுகின்றன.
இவை புறவயமானவை.
(உ – ம்): விலை கூடினால் கேள்வித் தொகை குறையும்.
கடன் மீதான சராசரி வட்டி வீதம் 8.6% ஆக உள்ளது.
நியமக்ககூற்றுக்கள் / நெறியுரைக்கூற்றுக்கள்/ நியமப் பொருளியல்
சமூகத்தில்/ மெய்யுலகில் யாது நிகழ வேண்டும்? அது எப்படி இருக்க வேண்டும் எனும் நியமங்கள் அடிப்படையில் அகவயத் தன்மை வாய்ந்ததாக மேற்கொள்ளப்படும் ஆய்வு தொடர்பான கூற்றுக்கள் ஆகும்.
பல்வேறு பொருளாதார நோக்கங்கள், பொருளாதார கொள்கைகள் அடிப்படையில் விளக்கப்படுபவை ஆகும்.
பொருளாதார உறுதி, நிறைதொழில்மட்டம், நிலைபேண்தகு அபிவிருத்தி தொடர்பான நியமங்கள் பற்றிய ஆய்வுகள் ஆகும்.
(உ – ம்): சமமற்ற வருமானப் பங்கீடு நியாயமற்றதொன்றாகும்.
வீட்டுத்துறையினரும் நிறுவனத்துறையினரும் தனித் தனியே மேற்கொள்ளும் தீர்மானங்கள் பற்றி ஆய்வு செய்யும் பொருளியல் ஆய்வுப் பிரிவானது
Review Topicவீட்டுத்துறையினரும் நிறுவனத்துறையினரும் தனித் தனியே மேற்கொள்ளும் தீர்மானங்கள் பற்றி ஆய்வு செய்யும் பொருளியல் ஆய்வுப் பிரிவானது
Review Topic