Please Login to view full dashboard.

தேசியக் கணக்குகளின் அணுகுமுறைகள்

Author : Admin

7  
Topic updated on 02/15/2019 04:12am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பேரினப் பொருளாதாரச் செயற்பாட்டிற்குப் பங்களிக்கின்ற பிரதான செயற்பாட்டு அலகுகள் நான்கு உள்ளன:
    • வீட்டுத்துறை
    • நிறுவனத்துறை
    • அரச துறை
    • வெளிநாட்டுத்துறை
  • பொருளாதாரத் துறைகளிடையே நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல் பாய்ச்சல்கள் மூலம் பேரினப் பொருளாதாரம் செயற்படுகிறது.
  • பொருளாதாரத் துறைகளிடையேயான கொடுக்கல் வாங்கல் பாய்ச்சல்களை எளிய வரிப்படம் ஒன்றின் மூலம் முன்வைக்க முடியும்.
  • அவ்வரிப்படம் வருமானம் மற்றும் செலவு தொடர்பான வட்டப் பாய்ச்சல் என அழைக்கப்படும்.
  • வீட்டுத்துறை மற்றும் நிறுவனத்துறை மட்டும் செயற்படுகின்ற பொருளாதாரம் எளிய பொருளாதாரம் என அழைக்கப்படுகின்றது.
  • எளிய பொருளாதாரத்தில் சேமிப்பு வெளிப்பாய்ச்சலாகவும் முதலீடு உட்பாய்ச்சலாகவும் அமைந்துள்ளது.
  • சேமிப்பும் முதலீடும் சமமாகும் போது எளிய பொருளாதாரத்தில் மொத்த வருமானமும்
    மொத்தச் செலவும் சமனாகும்.
  • சேமிப்பும் முதலீடும் இல்லை என்ற எடுகோளின் கீழும் சேமிப்பும் முதலீடும் உண்டு என்ற எடுகோளின் கீழும் எளிய பொருளாதாரத்தின் செயற்பாடு வருமான மற்றும் செலவு வட்டப் பாய்ச்சல் மூலம் காட்ட முடியும்.
  • அரசாங்கத்தை உள்ளடக்கிய பொருளாதாரம் ஒன்றின் செயற்பாட்டை வருமான மற்றும் செலவு வட்டப்பாய்ச்சலின் மூலம் காட்ட முடியும்.
  • மூடப்பட்ட பொருளாதாரம் ஒன்றில் சேமிப்பும் வரியும் வெளிப்பாய்ச்சலாகும் முதலீடும் அரச நுகர்வும் உட்பாய்ச்சலாகும்.
  • சேமிப்பினதும் வரியினதும் கூட்டுத்தொகை முதலீடு அரச செலவு என்பவற்றின் கூட்டுத்தொகைக்கு சமமாகும் போது மூடப்பட்ட பொருளாதாரத்தில் Y= E.
  • பொருளாதார துறைகள் நான்கும் செயற்படுகின்ற திறந்த பொருளாதாரத்தின் செயற்பாட்டை வருமான மற்றும் செலவு வட்டப் பாய்ச்சல் ஊடாக பின்வருமாறு காட்ட முடியும்.
  • திறந்த பொருளாதாரம் ஒன்றின் மொத்த செயற்பாட்டையும் வருமான மற்றும் செலவு வட்டப் பாய்ச்சலூடாக பின்வருமாறு காட்டலாம்.

Screenshot (90)

  • திறந்த பொருளாதாரம் ஒன்றில் சேமிப்பு, வரி, இறக்குமதி என்பன வெளிப்பாய்ச்சல்களாகவும் முதலீடு, அரச நுகர்வு, ஏற்றுமதி என்பன உட்பாய்ச்சல்களாகவும் உள்ளன.
  • திறந்த பொருளாதாரம் ஒன்றில் சகல உட்பாய்ச்சல்களும் வெளிப்பாய்ச்சல்களும் சமனாகும் போது மொத்த வருமானமும் மொத்தச் செலவும் சமனாகும்.
  • உற்பத்திப் பாய்ச்சல் வருமானப் பாய்ச்சலுக்கும், வருமானப் பாய்ச்சல் செலவுப் பாய்ச்சலுக்கும்  சமமாகும் விதத்தை வருமான மற்றும் செலவு வட்டப் பாய்ச்சலின் மூலம் விளக்கமுடியும்.
  • உற்பத்தி, வருமான மற்றும் செலவுப் பாய்ச்சல்களின் பெறுமதிகளைக் கணிப்பீடு செய்வது தேசியக் கணக்கீடு ஆகும்.
  • தேசிய கணக்கீட்டின்போது தவிர்க்க வேண்டிய விடயங்களும் இருக்கின்றன.
  • பின்வரும் விடயங்களைத் தேசியக் கணக்கீட்டிலிருந்து தவிர்க்க வேண்டும்.
    • மாற்றல் கொடுப்பனவுகள்
    • கணக்கீட்டுக் காலத்துக்குட்படாத உற்பத்தி அல்லது செலவுகள்
    • நிதிச் சந்தைக் கொடுக்கல் வாங்கல்கள்
    • கிடைநிலைப் பண்டங்களின் பரிமாற்றம்
RATE CONTENT 0, 0
QBANK (7 QUESTIONS)

பின்வருவனவற்றுள் பொருளாதாரமொன்றின் வருமானச் சுற்றோட்ட வரைபடத்தில் அரசாங்கத்திடமிருந்து நேரடியாக இடம்பெறும் பாய்ச்சலாக அமைவது எது?

Review Topic
QID: 30861
Hide Comments(0)

Leave a Reply

வருமானச் சுற்றோட்ட மாதிரியில் காணப்படும் ‘மெய்’ப் பாய்ச்சல்களுள் ஒன்று,

Review Topic
QID: 30868
Hide Comments(0)

Leave a Reply

தேசிய வருமானக் கணக்கு என்பதன் பொருள் யாது?

Review Topic
QID: 30808
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் பொருளாதாரமொன்றின் வருமானச் சுற்றோட்ட வரைபடத்தில் அரசாங்கத்திடமிருந்து நேரடியாக இடம்பெறும் பாய்ச்சலாக அமைவது எது?

Review Topic
QID: 30861

வருமானச் சுற்றோட்ட மாதிரியில் காணப்படும் ‘மெய்’ப் பாய்ச்சல்களுள் ஒன்று,

Review Topic
QID: 30868

தேசிய வருமானக் கணக்கு என்பதன் பொருள் யாது?

Review Topic
QID: 30808
Comments Hide Comments(1)
paul Jesu
paul Jesu commented at 10:47 am on 07/05/2017
உங்களுக்கு ரொம்பவும் நன்றிகள் ... இந்த தகவல்கள் எனது பல்கலைக்கழக படிப்புகளுக்கு மிகவும் உதவுகின்றன..
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank