Please Login to view full dashboard.

உழைப்பு தவிர்ந்த ஏனைய காரணி வருமானங்கள்

Author : Admin

0  
Topic updated on 02/15/2019 07:35am
  • நிலம் என்ற காரணியின் விலையாகிய வாடகை அக்காரணிக்கான கேள்வி மற்றும் நிரம்பலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
  • காரணி விலை மற்றும் சந்தையில் பரிமாற்றப்படும் காரணிகளின் அளவின் அடிப்படையில் காரணி வருமானங்கள் தீர்மானிக்கப்படும்.
  • மாற்றல் வருமானம் மற்றும் சிக்கன வாடகை ஆகிய இரு வகைகளையும் காரணி வருமானங்கள் கொண்டிருக்கும்.
  • ஏதாவதொரு உற்பத்திக்காரணியைத் தற்போது காணப்படுகின்ற பாவனையில் தக்கவைத்துக் கொள்வதற்காக எதிர்பார்க்கப்படும் ஆகக்குறைந்த வருமானமே மாற்றல் வருமானமாகும்.
  • மாற்றல் வருமானத்துக்கு மேலாகக் கிடைப்பது சிக்கன வாடகை.
  • காரணி நிரம்பல் பூரண நெகிழ்வுடையதாகும் போது முழுக் காரணி வருமான மும்மாற்றல் வருமானமாகும்.
  • காரணி நிரம்பல் பூரண நெகிழ்வற்றதாகும் போது சிக்கன வாடகையாகும்.
  • காரணி நிரம்பல் ஒருமை நெகிழ்ச்சியாகும் போது மாற்றல் வருமானமும் சிக்கன வாடகையும் சமமாகும்.
  • மாற்றல் வருமானம் மற்றும் சிக்கன வாடகை கீழ்த் தரப்படும் வகையில் வரிப்படங்கள் மூலம் காட்டப்படலாம்.

screenshot-25

  • மெய்யான சந்தையில் வட்டி விகிதக் கட்டமைப்பொன்று காணப்படும்.
  • இலங்கையில் வட்டி விகிதக் கட்டமைப்பு கீழ்த் தரப்படும் வட்டி விகிதங்களைக் கொண்டது.
    • மத்திய வங்கி விகிதம்
    • மீள் கொள்வனவு விகிதம்
    • வைப்புக்களுக்கான வட்டிவிகிதம்
    • கடன்களுக்கான வட்டிவிகிதம்
  • சாதாரண இலாபத்துக்கு மேலாக முயற்சியாண்மை ஈட்டிக் கொள்கின்ற வருமானம் பொருளியல் இலாபமாகும்.
  • மொத்த வருமானத்திலிருந்து நேர்ச் செலவுகளையும் நேரில் செலவுகளையும் கழித்து பொருளியல் இலாபத்தைக் கணிக்கலாம்.
  • கணக்கீட்டு இலாபத்துக்கும் பொருளியல் இலாபத்துக்குமிடையே வேறுபாடு காணப்படுகிறது.
  • மொத்தக் கேள்வி மற்றும் மொத்த நிரம்பலில் எவ்வித மாற்றமும் ஏற்படாத நிலையான பொருளாதாரத்தில் பொருளியல் இலாபம் பூச்சியமாகும்.
  • மொத்தக் கேள்வியும் நிரம்பலும் மாற்றமடைகின்ற, மாற்றமடையும் பொருளாதாரத்தில் பொருளியல் இலாபம் காணப்படும்.
  • மாற்றமடையும் பொருளாதாரத்தில் பொருளியல் இலாபத்தை நியாயப்படுத்த முடிவது கீழ்த்தரப்படும் காரணங்களின் அடிப்படையிலாகும்.
    • நிச்சயமற்ற சூழலினுள் உற்பத்தித் தீர்மானங்களை எடுக்கும்போது ஆபத்துக்களை எதிர்நோக்கல்.
    • நிச்சயமற்ற சூழலினுள் புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்தல்.
    • தனியுரிமை அல்லது நிறைவில் போட்டி நிலைமைகள் காணப்படுதல்.
  • மூலதனத்தின் உழைப்பு வட்டி வீதம்.
  • வீட்டுத்துறை, நிறுவனத்துறை மற்றும் அரசாங்கம் நுகர்வுக்கும் முதலீட்டுக்குமான நிதித்தேவைக்கு கடனுக்கான கேள்வியை ஏற்படுத்துகின்றன.

screenshot-26

  • கடனுக்காக காணப்படும் கேள்வி மற்றும் நிரம்பலின் அடிப்படையில் வட்டி வீதம் தீர்மானிக்கப்படும்.
  • பெயரளவு வட்டி வீதத்திலிருந்து வீக்க வீதத்தைக் கழித்து உண்மையான வட்டிவீதத்தைப் பெறலாம்.
  • உண்மையான வட்டி வீதம் நேரான அல்லது மறையான பெறுமதியைப் பெறலாம்.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank