யாதேனும் ஒரு சமூகத்தில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கை, விருப்பு,நட்புறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றை அறிந்து கொண்டு முன்னெடுக்கப்படும் ஓர் ஆட்சியே நல்லாட்சி எனப்படும்.
மேலும் ஆளப்படுவோர் குறித்த ஆள்வோரின் தொடர்ச்சியான பொறுப்பு என்றும் தமது உறவுகளை ஒரு ஒழுக்க நெறிசார் முறையில் அமைத்துக் கொள்வதையும் ஆளப்படுவோரின் மிக சிறந்த நலன் கருதி தீர்மானங்கள்மேற்கொள்வதையும் நடைமுறைப்படுத்துவதையும் உறுதி செய்தல் நல்லாட்சி எனப்படும்.
1980தசாப்த காலப்பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் எழுந்த ஒன்றே நல்லாட்சி எனும் எண்ணக்கருவாகும்.
நல்லாட்சி பற்றி அறிஞர்களினதும் நிறுவனங்களினதும் கருத்துக்கள்:
மைக்கல் கொப்பேஜ்: நல்லாட்சியானது ஆட்சி ஸ்திரத்தன்மை, குறைவான வன்முறைகள்,ஊழலின்மை, பொறுப்புடைய அரசாங்கம், குறித்த நேரத்தில் தீர்மானம் எடுத்தல் என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
Vivek chopra :நல்லாட்சி என்பது தெளிவான திட்டமிட்ட வகையில் சமூகத்தின் அடிப்படை குறிக்கோளை அடையாளப்படுத்தல் மற்றும் அதனை பின்தொடர்வதைக் குறிக்கின்றது.
உலக வங்கி: நல்லாட்சிக்கு அரசியல் நம்பகத்தன்மை, சங்கமாக கூடுவதற்கான உரிமை, பங்கேற்றல் மற்றும் பணியகத்தின் பொறுப்புடைமை, உறுதியான நிருவாக முறைமை,அரசாங்கத்திற்கும் சிவில் சமூக நிறுவனத்திற்குமிடையிலான ஒத்துழைப்பு போன்றன அத்தியாவசியமானது.
பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனம்:நல்லாட்சி மூலம் சட்டத்தின் ஆட்சியின் பிரகாரம் ஊழல்கள் மீதான துஷ்பிரயோகங்களை தவிர்த்து சிவில் பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளுக்கான உத்தரவாதத்தினை வழங்குகின்ற ஒன்றாக அமைந்திருக்க வேண்டும்.
ஒக்ஸ்பேர்ட்: அரசாட்சி என்பது ஆட்சி நடத்தை, அதன் தொழிற்பாடு, அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் தன்மை மற்றும் கொள்கை உருவாக்கம் என்பவற்றுடன் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைமுறைப்படுத்தலே நல்லாட்சி.
நல்லாட்சி பற்றிய எண்ணக்கருவை முன்வைப்பதில் ஈடுபட்ட நிறுவனங்கள்:
உலக வங்கி
ஆசிய அபிவிருத்தி வங்கி
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல்
நல்லாட்சியின் பண்புகள்:
பங்குபற்றுதல்
சட்டவாட்சியும் நீதித்துறை சுதந்திரமும்
பொறுப்புக் கூறும் தன்மை
திறந்த தன்மை
பொது உடன்பாடு ஒன்றினை ஏற்படுத்தல்
சமத்துவம் மற்றும் உள்வாங்கப்பட்டிருத்தல்
துலங்கு தன்மை அல்லது பதிலிறுத்தல்
செயற்திறன் மற்றும் விளைதிறன்
நல்லாட்சியில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் :
சமூக நடவடிக்கையில் மக்களின் பங்குபற்றல்
நிலையான அபிவிருத்தி
சமூகச் செல்வம் நியாயமான முறையில் சகலருக்கும் பங்கீடு செய்யப்படுதல்
சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தல்
வறுமை ஒழிப்பு
இலஞ்சம்,ஊழல் ஒழித்தல்
வலுவூட்டல்
பலவீனமான குழுக்களைப் பாதுகாத்தல்
பல்லின ஏற்புடைமை
சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்களைப் பாதுகாத்தல்
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்