சட்டத்துறையான பாராளுமன்றத்தைக் கூட்டுதல், கலைத்தல், ஒத்திவைத்தல், மக்கள் பிரதிநிதிகள், சபைக்கான நியமன உறுப்பினர்களை நியமித்தல், செனற் சபையில் 15 உறுப்பினர்களை நியமித்தல், சட்டங்களுக்குச் சம்மதம் அளித்தல் பாராளுமன்றத்தில் சிம்மாசனப் பிரசங்கத்தை நிகழ்த்துதல், பாராளுமன்றத்தின் சடங்கு முறையான இருக்கைகளுக்கு தலைமை தாங்குதல்.
மக்கள் பிரதிநிதிகள் சபை அல்லது முதலாம் மன்றம் அல்லது கீழ் சபை
இது 101 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களில் 95 பேர் தேர்தல் தொகுதிகளிலிருந்து 5 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் பொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். 6 பேர் சிறுபான்மை இனங்களிலிருந்து பிரதமரின் சிபாரிசின் பெயரில் மகாதேசாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரிக்கப்பட்டது. அதில் 151 பேர் தேர்தல் தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். மிகுதி 6 பேர் சிறுபான்மை இனங்களில் இருந்து பிரதமரின் சிபாரிசின் பெயரில் மகாதேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இச் சபையின் பதவிக்காலம் பொதுத் தேர்தல் முடிந்ததன் பின்னர் நடைபெறும், முதலாவது கூட்டத்தின் திகதியிலிருந்து 5 வருடங்களாகும். எனினும் 5 வருடங்களுக்கு இடையிலும் மகாதேசாதிபதி பரதமரின் ஆலோசனையின் பெயரில் மக்கள் பிரதிநிதிகள் சபையைக் கலைக்கலாம்.
மக்கள் பிரதிநிதிகள் சபையின் முதலாவது கூட்டத் தொடரில் சபாநாயகர், உபசபாநாயகர், குழுக்களின் தலைவர்கள், குழுக்களின் உப தலைவர்கள் என்போர் தெரிவு செய்யப்பட்டார்கள். சபையின் கூட்டங்களுக்கும், குழுக்களின் கூட்டங்களுக்கும் அவை தொடர்பான ஒழுங்கு விதிகளுக்கும், சபாநாயகரும், குழுக்களின் தலைவர்களுமே பொறுப்பாக இருந்தார்கள்.
சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்
அரசியலமைப்பின் 29 வது பிரிவைப் பாதிக்காத எந்த சட்டங்களையும் பிறப்பித்து நிறைவேற்றுகின்ற அதிகாரம் இச் சபைக்கு உண்டு.
செனற் சபையால் நிராகரிக்கப்படுகின்ற சட்ட மூலங்களைக் கூடத் திரும்ப ஒரு தடவை நிறைவேற்றுவதன் மூலம் சட்டமாக்கிக் கொள்ளும் அதிகாரம் இதற்குண்டு.
நிர்வாகத்துறை தொடர்பான அதிகாரங்கள்
நிர்வாகத் துறைக்குப் பொறுப்பான மந்திரிசபை, மக்கள் பிரதிநிதிகள் சபைக்குக் கூட்டாகப் பொறுப்புடையது. மந்திரி சபை மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை இச் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் மந்திரி சபையை பதவியிலிருந்து நீக்கலாம்.
மந்திரி சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இச் சபையிலிருந்து நியமிக்கப்படுகின்றார்கள். மந்திரிமார்களை அவர்களது கருமம் தொடர்பாக கேள்வி கேட்கின்ற உரிமை இச் சபையின் உறுப்பினர்களுக்குண்டு.
நீதித்துறை தொடர்பான அதிகாரங்கள்
உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கும் தீர்மானம் இச் சபையிலும் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
நன்மைகள்
குறைபாடுகள்
செனற்சபை
இது மேல்சபை, 2ம் மன்றம் எனவும் அழைக்கப்பட்டது. இதன் அங்கத்தவர்கள் செனட்டர்கள் என அழைக்கப்பட்டனர். இது 30 அங்கத்தவர்களைக் கொண்டது. இதில் 15 பேர் பிரதிநிதிகள் சபை அங்கத்தவர்களினால் ஒற்றைமாற்று வாக்கு முறைப்படி தெரிவு செய்யப்படுவார்கள். மிகுதி 15 பேர் பொதுச் சேவை ஆற்றியவர்கள், வர்த்தகம், கைத்தொழில், வங்கியியல் என்பவற்றில் திறமை படைத்தவர்கள் என்பவர்களிடமிருந்து பிரதமரின் சிபாரிசின் பெயரில் மகாதேசாதிபதியினால் நியமிக்கப்பட்டார்கள்.
செனற்சபையை உருவாக்குவதற்கு சோல்பரி குழுவினர் கூறிய காரணங்கள்
சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்
மசோதாக்களை அறிமுகப்படுத்துகின்ற உரிமை செனற்சபைக்குண்டு. ஆனால் நிதி மசோதாக்களை இங்கு அறிமுகப்படுத்த முடியாது.
ஒரு மசோதாவை செனற் சபை நிராகரித்தாலும் அதனைத் திரும்ப ஒரு தடவை நிறைவேற்றுவதன் மூலம் சட்டமாக்கிக் கொள்ளும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகள் சபைக்குண்டு. இதை விட செனற் சபை நிதி மசோதாக்களை ஒரு மாதத்திற்கு மேலும் சாதாரண மசோதாக்களை ஒரு வருடத்திற்கு மேலும் தாமதப்படுத்தி வைத்திருக்க முடியாது.
நிர்வாகத்துறை தொடர்பான அதிகாரங்கள்
நிர்வாகத்துறைக்கு பொறுப்பான மந்திரி சபைக்கு ஆட்களைத் தெரிவு செய்யும் போது இரண்டிற்குக் குறையாத மந்திரிகள் இச் சபையிலிருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டும். அவர்களில் ஒருவர் நீதி மந்திரியாக இருத்தல் வேண்டும். உதவி மந்திரிகளுள்ளும் இரண்டிற்குக் குறையாதோர் இச் சபையிலிருந்து தெரிவு செய்யப்படல் வேண்டும்.
நீதித்துறை தொடர்பான அதிகாரங்கள்
மேல் நிலை நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கும் தீர்மானம் இச் சபையிலும் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
பிரதமரையும் மந்திரிமார்களையும் கொண்ட குழுவே மந்திரி சபை என அழைக்கப்படுகின்றது. பிரதமர் மந்திரி சபையின் தலைவராக விளங்குவார். பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்ற ஒருவரே பிரதமராக மகாதேசாதிபதியால் நியமிக்கப்படுவார். பின்னர் இப்பிரதமரது ஆலோசனையின் பேரில் ஏனைய மந்திரிமார்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு நியமிக்கப்படும் போது நிதி மந்திரி உட்பட இரண்டிற்குக் குறையாத மந்திரிமார்களும், உதவி மந்திரிமார்களும் செனற் சபையிலிருந்தே நியமிக்கப்படுதல் வேண்டும்.
மந்திரிமார்களை நியமித்தல், மாற்றுதல், நீக்குதல், மந்திரிமார்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்குதல், அமைச்சுக்களை மாற்றுதல், அமைச்சுக்கான திணைக்களங்களை ஒதுக்குதல், அமைச்சுக்கான திணைக்களங்களை மாற்றுதல், என்பவற்றில் பிரதமர் பூரண அதிகாரம் பெற்றவராக விளங்கினார்.
மந்திரி சபை கூட்டாக மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு பொறுப்புடையது. மந்திரி சபைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை மக்கள் பிரதிநிதிகள் சபை கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் மந்திரிசபையைப் பதவியிலிருந்து நீக்கலாம்.
நன்மைகள்
குறைபாடுகள்
அரச சேவை உத்தியோகத்தர்களது நியமனம், இடம் மாற்றம், பதவி நீக்கம், பதவியுயர்வு என்பவற்றிற்குப் பொறுப்பாக இவ் ஆணைக் குழு உருவாக்கப்பட்டது. இது மூன்று அங்கத்தவர்களைக் கொண்டது. இவ் அங்கத்தவர்கள் பிரதமரின் சிபாரிசின் பெயரில் மகாதேசாதிபதியால் நியமிக்கப்படுவார்கள். இவர்களில் ஒருவரை ஆணைக்குழுவின் தலைவராகவும் மகாதேசாதிபதி நியமிப்பார். இவ் அங்கத்தவர்களின் பதவிக்காலம் 5 வருடங்களாகும்.
அரச சேவை தொடர்பில் இன, மத, கட்சி, ரீதியான பாரபட்சங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதே இவ் ஆணைக்குழுவின் நோக்கமாகும். இந்த வகையில் சிறுபான்மையோரிற்கு ஒர் காப்பீடாகவும் இவ் ஆணைக்குழு கருதப்பட்டது.
கீழ் நிலை நீதிமன்ற நீதிபதிகள், நீதிச்சேவை உத்தியோகத்தர்கள் என்போரது நியமனம், இடம் மாற்றம், பதவி நீக்கம், பதவி உயர்வு மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பவற்றிற்கு பொறுப்பாக இவ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
இது பிரதம நீதியரசர் உட்பட 3 அங்கத்தவர்களை கொண்டது. இவ் அங்கத்தவர்கள் பிரதமரின் சிபாரிசின் பெயரில் மகாதேசாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். பிரதம நீதியரசர் இவ் ஆணைக்குழுவின் தலைவராக விளங்குவார். இதன் அங்கத்தவர்களின் பதவிக்காலம் 5 வருடங்களாகும்.
நீதிச் சேவை அலுவலர் தொடர்பில் இன, மத, கட்சி, ரீதியான பாரபட்சம் ஏற்படுவபனைத் தவிர்ப்பதே இவ் ஆணைக்குழுவின் நோக்காகும்.
இவ் ஆணைக்குழுவின் கடமைகளில் வெளியாள் தலையிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு யாராவது தலையிடின் 1000/- அபராதம் அல்லது ஒரு வருடச் சிறை அல்லது இரண்டும் வழங்கப்படலாம்.
இவ் ஆணைக்குழுவும் சிறுபான்மையோருக்குரிய ஒர் காப்பீடாகக் கருதப்பட்டது.
பின்வரும் ஏற்பாடுகள் அரசியல் திட்டத்தில் சிறுபான்மையினரின் நலன் பேணும் ஏற்பாடுகளாகக் கருதப்பட்டன.
i. அரசியல் அமைப்பின் 29 வது பிரிவு
ii. செனற் சபை
iii. நியமன உறுப்பினர்கள்
iv. பல அங்கத்தவர் தேர்தல் தொகுதி
v. கோமறைக் கழகம்
vi. அரசியல் அமைப்புத் திருத்துவதில் 2/3 பெரும்பான்மை
vii. பொதுச் சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு
i. அரசியல் அமைப்பின் 29 வது பிரிவு
இவ் ஏற்பாடு பிரதானமான ஏற்பாடாகக் கருதப்பட்ட போதும் நடைமுறையில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பானதாக இது அமையவில்லை. இவ் ஏற்பாடு நடைமுறையில் இருக்கத்தக்கதாகவே சிறுபான்மை இனத்திற்கு எதிரான பிரஜா உரிமைச் சட்டம் – 1948, பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் – 1949, தனிச் சிங்களச் சட்டம் – 1956, சிறிமா சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் – 1967 என்பன பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
ii. செனற் சபை
செனற் சபையின் 15 உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் சபையால் ஒற்றை மாற்றுவாக்கு முறைப்படி தெரிவு செய்யப்பட்டனர்.
மீதி 15 பேர் பிரதமரின் சிபார்சின் பேரில் மகாதேசாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.
அவரால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சிலர் கூட தாம் சார்ந்த இனத்திற்கு விசுவாசமாக இருப்பதற்குப் பதிலாக தம்மைத் தெரிவு செய்த பிரதமருக்கே விசுவாசமாக இருக்கத் தலைமைப்பட்டனர்.
சிறுபான்மையோருக்கு எதிரான பிரஜாவுரிமைச் சட்டம், தேர்தல் திருத்தச் சட்டம், தனிச் சிங்களச் சட்டம், சிறிமா சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் என்பன கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட போது செனற்சபையும் அதற்கான சம்மதத்தினை வழங்கியிருந்தது.
iii. நியமன உறுப்பினர்கள்
பொதுத் தேர்தலின் மூலம் போதிய பிரதிநிதித்துவத்தை பெறாத சிறுபான்மை இனங்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காக நியமன உறுப்பினர் பதவிகள் உருவாக்கப்பட்டன.இதன்படி 6 பேர் சிறுபான்மை இனங்களிலிருந்து பிரதமரின் சிபாரிசின் பெயரில் மகாதேசாதிபதியினால் நியமிக்கப்பட்டனர். இவ் நியமன உறுப்பினர் பதவிகள் சிறுபான்மை இனத்திற்கு பிரதிநிதித்துவத்தை வழங்குவதோடு பாதுகாப்பையும் வழங்குமெனச் சோல்பரி குழுவினர் கருதினர்.
ஆரம்பத்தில் இவ் நியமன உறுப்பினர்களுக்குச் சிறுபான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டாலும் பிற்காலத்தில் அரசியலமைப்பை மீறி பெரும்பான்மை இனத்தவரும் இதற்கு நியமிக்கப்பட்டனர்.
சிறுபான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டாலும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தம்மைத் தெரிவு செய்த பிரதமருக்கும், பிரதமர் சார்ந்த அரசியல் கட்சிக்கும் விசுவாசமாக இருக்கத் தலைமைப்பட்டார்களே
iv. பல அங்கத்தவர் தேர்தல் தொகுதி
பல்வேறு இனங்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களில் குறிப்பிட்டளவு செறிவாகவுள்ள இனங்கள் ஒவ்வொன்றும் தங்களுடைய பிரதிநிதிகளைத் தெரிவு தெரிவு செய்வதற்காக அப்பிரதேசங்கள் பல அங்கத்தவர் தொகுதிகளாக உருவாக்கப்பட்டன. இதன்படி கொழும்பு மத்தி 3 அங்கத்தவர் தொகுதியாகவும், மட்டக்களப்பு, மூதூர், அக்குறணை, பலாக்கொடை, பதுளை போன்ற தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாகவும் உருவாக்கப்பட்டன.
v. கோமறைக் கழகம் அல்லது பிரிவுக் கவுன்சில்
இலங்கை நீதிமன்றக்களில் இருந்து போதியளவு நீதி கிடைக்கவில்லையெனக் கருதுபவர்கள். பிரித்தானிய உயர் நீதிமன்றமான கோமறைக் கழகத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் திருப்தியான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கருதப்பட்டு கோமறைக் கழகத்திற்கு மேல் முறையீடு செய்யும் உரிமை அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருந்தது.
1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதும் அச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட அரசாங்க எழுதுவினைஞரான கோடீஸ்வரன் மூலமாக கோமறைக் கழகத்திற்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக கோமறைக் கழகம் கோடீஸ்வரனுக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கிய போதும் இலங்கைன அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
vi. அரசியல் அமைப்புத் திருத்துவதில் 2/3 பெரும்பான்மை
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சிறுபான்மையோர் காப்பீடுகள் நீக்கக்கூடாது என்பதற்காக அரசியலமைப்புத் திருத்துவதில் 2/3 பெரும்பான்மை என்பது ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு கிடைக்காது. ஆகையால் இது சிறுபான்மையினருக்குக் காப்பீடாக அமையும் என்று கருதப்பட்டது.
vii. பொதுச் சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு
பொதுச் சேவை, நீதிச்சேவை என்பவற்றில் சிறுபான்மையோருக்குப் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதனைப் பிரதானமாக கருத்தில் கொண்டே இவ் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டது. ஒப்பிட்டு ரீதியில் ஏனைய காப்பீடுகளை விட நடைமுறையில் இவை சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பானதாக அமைந்திருத்தன. ஆனால் 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் இவையும் சிறுபான்மையோருக்கு காப்பீடாக அமையவில்லை.
கூற்று I – சோல்பரி அரசியலமைப்பின் கீழ் மகா தேசாதிபதி பிரித்தானிய முடியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
கூற்று II – இலங்கைப் பிரதம மந்திரி பிரித்தானிய முடியின் வீரப்புடன் மகா தேசாதிபதியை நியமித்தார்.
Review Topic1948 சோல்பரி அரசியல் யாப்பு
A – இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்த்தை வழங்கியது.
B – பிரித்தானிய மகா இராணியாரை அரசின் தலைவராக ஆக்கியது.
C – மந்திரி சபை அரசாங்க முறைமையை அறிமுகஞ் செய்தது.
D – கம்யூனிச நாடுகளுடன் இலங்கை தொடர்பு கொள்வதைத் தடைசெய்தது.
சோல்பரி யாப்பில் இடம்பெற்ற சிறுபான்மையினருக்கான பாதுகாப்புகளாவன
A – 29 ஆம் சரத்து
B – ஒம்புட்சுமன்
C – செனற் சபை
D- பல அங்கத்தவர் தேர்தல் தொகுதிகள்
1948 சோல்பரி யாப்பு
A – முடியாட்சி முறையிலான அரசாங்கத்தைத் தாபித்தது.
B – இரு மன்ற சட்டத்துறையைத் தாபித்தது.
C – சட்டத்துறைக்குக் கீழ்ப்பட்ட ஒரு நாம நிருவாகியைத் தாபித்தது.
D – இறைமை அதிகாரமில்லாத ஒரு சட்டசபையைத் தாபித்தது.
சோல்பரி யாப்பின் கீழிருந்த மகாதேசாதிபதி
A – பிரித்தானிய மகாராணியால் நியமிக்கப்பட்டார்.
B – அரசின் தலைவராக இருந்தார்.
C – நிறைவேற்றுத் துறையின் தலைவராக இருந்தார்.
D – நிதி விடயங்களின் பிரதம கட்டுப்பாட்டாளராக இருந்தார்.
சோல்பரி யாப்பின் கீழிருந்த மந்திரிசபை
A – வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியில் வடிவமைக்கப்பட்டது
B – கீழ்ச்சபை உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்தது
C – கூட்டுப்பொறுப்புக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
D – அரசாங்கத்தின் உண்மையான நிர்வாகமாக இருந்தது.
கூற்று I – சோல்பரி யாப்பின் 29 ஆம் சரத்து சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இருந்தது.
கூற்று II – 29ஆம் சரத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மட்டுமன்றி தனிநபர் அடிப்படை உரிமைகளையும் பாதுகாத்தது.
Review Topic1948 யாப்பு சட்டத்துறைக்குப் பொருந்தும் சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.
A – இருமன்ற சட்டத்துறை
B – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தமை
C – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாகச் சில நியமன உறுப்பினர்களையும் கொண்டிருந்தமை
D – சட்டவாக்க அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை
E – சட்டவாக்கத்தில் உயர்தன்மை மிக்க அதிகாரம்
F – அரச அதிகாரத்தின் மீயுயர் கருவி
சோல்பரி அரசாங்க முறையின் முக்கிய பண்புகளாவன
A – பிரித்தானிய முடியின் தலைமையிலமைந்த அரசாங்கம்
B – பிரதமரையும் மந்திரி சபையையும் உண்மை நிர்வாகமாகக் கொண்ட பாராளுமன்ற அரசாங்க முறை
C – சட்டவாக்கத்தில் பூரண இறைமைமிக்க இருமன்றச் சட்டத்துறை
D – பிரித்தானியக் கோமறைக் கழகத்தினை உச்சமானதாகக் கொண்ட நீதித்துறை முறை
E – நீதித்துறை மற்றும் அரசாங்க சேவையின் சுதந்திரத்தைப் பாதுகாத்த இரு ஆணைக்குழுக்கள்
சோல்பரி அரசியலமைப்பின் கீழமைந்த மந்திரிசபை
A – கீழ்மன்றின் உறுப்பினர்களிலிருந்து மகா தேசாதிபதியினால் நியமிக்கப்பட்டது.
B – பிரதம மந்திரியினால் தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கையினரைக் கொண்டிருந்தது.
C – பாராளுமன்றுக்குக் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டியிருந்தது.
D – பிரித்தானியப் பாராளுமன்ற மரபுகளைப் பின்பற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது.
E – அரசாங்கத்தின் உண்மையான நிறைவேற்று அதிகாரத்தைப் பெற்றிருந்தது.
1948 அரசியல் யாப்புச் சீர்திருத்தம்
A – பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினுள் இலங்கைக்கு டொமீனியன் அந்தஸ்தினை வழங்கியது.
B – பிரித்தானிய முடியை இலங்கையின் அரச தலைவராக ஆக்கியது.
C – பிரித்தானிய முறையை ஒத்த பாராளுமன்ற அரசாங்க முறையைத் தாபித்தது.
D – வரையறுக்கப்பட்ட சட்டவாக்க அதிகாரத்துடன் கூடிய ஓர் இருமன்ற முறைமையை உருவாக்கியது.
E – இறுதி மேன்முறையீட்டு அதிகாரம் பெற்ற உயர் நீதிமன்றின் தலைமையின் கீழமைந்த ஒரு நீதிமன்றுகள் முறைமையைத் தாபித்தது.
1948 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் கீழமைந்த அரசாங்க முறையின் பிரதான பண்புகளாவன
A – உண்மை மற்றும் நாம நிர்வாகங்கள் என்ற இரட்டை நிர்வாகம்
B – மேல் மன்றினையும் கீழ் மன்றினையும் கொண்ட சட்டமன்றம்
C – இங்கிலாந்துக் கோமறைக்கழகத்துக்கு இறுதி மேன்முறையீட்டு அதிகாரம் வழங்கப்பட்ட நீதி மன்றங்கள் முறைமை
D – சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விசேட யாப்புக் காப்பீடுகள்
E – அரசியல் நிறைவேற்றுப்பகுதியினால் கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமற்ற நிர்வாக முறைமை
இலங்கைத் தேர்தல் தொகுதி முறை பற்றி சரியான கூற்றினை இனங்காண்க. சோல்பரி அரசியல் யாப்பின் கீழ்
Review Topic1948 அரசியல் யாப்பின்கீழ் உண்மை நிர்வாகமானது
A – மந்திரிசபை என்று அழைக்கப்பட்டது.
B – சட்ட மன்ற உறுப்பினர்களிலிருந்து நாம நிர்வாகியினால் நியமிக்கப்பட்டது.
C – பிரதமரினால் தலைமை தாங்கப்பட்டது.
D – சட்டமன்றுக்கு கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டியிருந்தது.
E – சட்டமன்றில் நிறைவேற்றப்படும் ஒரு குற்றப் பிரேரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படக் கூடியதாக இருந்தது.
1948 சோல்பரி அரசியலமைப்பின் பிரதான பண்புகளாவன:
A – மகா தேசாதிபதியையும் மந்திரி சபை அமைச்சர்களையும் கொண்ட நிறைவேற்று அரசாங்கமாக இருந்தமை
B – மகா தேசாதிபதியையும் செனெற் சபை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபை என்றழைக்கப்படும் இரு மன்றுகளையும் கொண்ட சட்டத்துறை
C – மகா தேசாதிபதி சட்டத்துறைக்குப் பொறுப்புக் கூறல்
D – பகிரங்க சேவையின் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்துவதற்கு ஒரு பகிரங்க சேவை ஆணைக்குழு இருந்தமை
E – உயர் நீதிமன்றின் தலைமையின் கீழிருந்த சுதந்திரமான நீதித்துறை
1948 சோல்பரி அரசியலமைப்பின் கீழிருந்த அரசியல் நிர்வாகம்:
A – மந்திரி சபை என்றழைக்கப்பட்டது.
B – மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களிலிருந்து மகாதேசாதிபதியால் நியமிக்கப்பட்டது.
C – பிரதமர் என்றழைக்கப்படும் ஓர் அமைச்சரினால் தலைமை தாங்கப்பட்டது.
D – பாராளுமன்றுக்குக் கூட்டாகப் பொறுப்புக்கூற வேண்டியிருந்தது.
E – ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் சட்டத் துறையால் நீக்கப்பட முடிந்தது.
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சோல்பரி யாப்பில் வழங்கப்பட்டிருந்த விசேட காப்பீடுகள் ஆவன:
A – அடிப்படை உரிமைகள் பற்றிய ஓர் அத்தியாயம்
B – யாப்பின் 29 (2) ஆம் உறுப்புரை
C – செனெற் மன்றம்
D – பல உறுப்பினர் தேர்தல் தொகுதிகளும் மகா தேசாதிபதியால் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களும்
E – சுதந்திரமான நீதித்துறையும் பகிரங்க சேவையும்
1948 சோல்பரி யாப்பு :
A – நிறைவேற்றுக் குழு முறையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க முறையை அகற்றி மந்திரி சபை முறையை அறிமுகம் செய்தது.
B – உள்ளக விவகாரங்களில் மட்டும் சுதந்திரத்தை வழங்கியதோடு முழுமையான டொமினியன் அந்தஸ்த்தினை வழங்கவில்லை.
C – பிரித்தானிய மகா இராணியை இலங்கை அரசின் தலைவராகத் தொடர்ந்தும் வைத்திருந்தது.
D – நீதியமைச்சர் செனெற் சபையிலிருந்து நியமிக்கப்பட வேண்டுமென விதித்தது.
E – நீதி விடயங்களில் பிரித்தானிய கோமறைக்கழகத்துக்கு மேன்முறையீடு செய்வதற்கு இலங்கையர்கள் பெற்றிருந்த உரிமையை இல்லாதொழித்தது.
1948 சோல்பரி யாப்பின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டத்துறை :
A – இருமன்ற முறையினதாகும்.
B – பாராளுமன்றின் இறைமை என்ற மூலக்கொள்கையின்படி அமையப்பெற்றிருந்தது.
C – 29(2) ஆம் சரத்துக்குட்பட்டு சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருந்தது.
D – தெரிவுசெய்யப்பட்டதும் நியமிக்கப்பட்டதுமான உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
E – “பாராளுமன்றம்” எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது
சோல்பரி முறையின் கீழ் பாராளுமன்றம்,
A – இரண்டு மன்றுகளையும் மகாதேசாதிபதியையும் கொண்டிருந்தது.
B – முற்பட்ட நீதிப்புனராய்வு அதிகாரங்களைப் பெற்றிருந்தது.
C – மகாதேசாதிபதியால் நியமனம் பெற்றது.
D – இறைமை அற்றிருந்தது.
சோல்பரி முறையின் கீழ் மகாதேசாதிபதி
A – பிரதமரால் நியமிக்கப்பட்டார்.
B – பிரதமரை நியமித்தார்.
C – மந்திரி சபைத் தீர்மானங்களை விமர்சனம் செய்யும் அதிகாரங்களைப் பெற்றிருந்தார்.
D – சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அதிகாரம் பெற்றிருந்தார்.
சோல்பரி யாப்பு,
A – நீதிப் புனராய்வு அதிகாரத்தை அறிமுகஞ் செய்தது.
B – நீதிச்சேவை ஆணைக்குழுவைத் தாபித்தது.
C – பகிரங்க சேவை ஆணைக்குழுவைத் தாபித்தது.
D – பகிரங்க சேவையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்கியது.