உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாய நாடாகவும் ஜரோப்பாவில் மிக முக்கிய நாடாகவும் சுவிஸ் விளங்குகின்றது. சுவிஸானது ஏழரை மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட அரசியல் பொருளாதார சமுக ரீதியாக தன்னிறைவைப் பெற்று விளங்குகின்றது. 13 ஆம் நூற்றாண்டில் 3 மாவட்டங்கள் அல்லது காட்டு கோட்டங்கள் இணைந்து பின்னர் இது 13 கோட்டங்களாக விரிவடைந்துள்ளது.
இதன் பின்னர் 1796 ஆம் ஆண்டு சுவிஸை பிரான்ஸ் கைப்பற்றியது நீண்டகாலம் பிரான்சினுடைய ஆதிக்கத்திலிருந்து இந்த நாடு 1815 ஆம் ஆண்டு வியன்னா உடன்படிக்கை முலம் சுதந்திரம் அடைந்தது. இதன்பின்னர் வலிமையான நாட்டினை உருவாக்கும் பொருட்டு 1848 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு வரையப்பட்டது. எனினும் அது தளர்ச்சியான ஒரு யாப்பாக காணப்பட்டதனால் 1874 ஆம் ஆண்டு பெரும் பகுதி திருத்தி அமைக்கப்பட்டு இன்று வரை அவ் யாப்பே நடைமுறையில் உள்ளது.
◊ எழுதப்பட்ட நெகிழாத சமஸ்டி யாப்பு
உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்து மிகப் பழமையான எழுதப்பட்ட யாப்பாக இது காணப்படுகின்றது. இவ் அரசியல் யாப்பினை மாற்ற திருத்த வேண்டுமாயின் மத்திரயரசினது பெரும்பாண்மையும் கன்ரன்களின் பெரும்பாண்மையும் மக்களின் சம்மதத்தினையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்காவிற்கு அடுத்து பழமையான சமஸ்டியாகவும் இது காணப்பட்டது.
◊ நேரடி ஜனநாயக முறை
புராதன கிரேக்க நகர அரசுகளைத்தொடர்ந்து நேரடி ஜனநாயகத்தை சிறப்பாக செயற்படுத்தி வருகின்ற நாடாக சுவிஸ் காணப்பட்டது. இதன்படி குடியொப்பம், குடிமுனைப்பு, மீளழைத்தல், ஆரம்ப பேரவை ஆகிய நேரடி ஜனநாயக ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
◊ கூட்டு நிர்வாக குழு அரசாங்க முறை
உலகிலேயே எந்தவொரு நாட்டிலும் காணப்படாத தனித்துவமானது ஒரு அரசாங்கம் இங்கு நடைமுறையில் உள்ளது. சட்டத்துறையிலிருந்து தெரிவு செய்யப்படும் 7 உறுப்பினர்களைக் கொண்ட சமஸ்டி பேரவை நாட்டின் நிர்வாகத்துறையாக செயற்படுகின்றது.
◊ ஈரவை சட்டத்துறை
சுவிஸ் சட்டத்துறையான சமஸ்டி மன்றம் தேசிய அவை என்ற முதலாம் மன்றத்தையும் மாநிலங்கள் அவை என்ற இரண்டாம் மன்றத்தையும் கொண்டுள்ளது.
◊ இரண்டாம் மன்றத்தில் கன்ரன்களுக்கு சம பிரதிநிதித்துவம்
சுவிஸ் சட்டத்துறையின் இரண்டாம் மன்றமான மாநிலங்களவைக்கு சம பிரதிநித்துவம் கொடுக்கப்படுகின்றது. இங்கு 26 கன்ரன்களில் 20 முழுக்கன்ரன்களிலிருந்து 40 உறுப்பினர்களுக்கு ஆறரை கன்ரன்களிலிருந்து 06 உறுப்பினர்களும் அங்கத்துவம் பெறுகின்றனர்.
◊ பல கட்சி முறை
தீவிர ஜனநாயக கட்சி, சுவிஸ் மக்கள் கட்சி, கிறிஸ்தவ குடியரசுக்கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் சட்டசபையில் பிரதிநித்துவம் பெறுகின்றனர்.
மேலும் மாநிலங்கள் தமக்கென யாப்பினை கொண்டிருத்தல், மாநிலங்கள் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல், மாநிலங்கள் தமக்கென பாதுகாப்பு படையினை வைத்திருத்தல், மக்களின் அடிப்படை உரிமைகள் ஆகிய சிறப்பியல்புகளை சுவிஸ் அரசியலமைப்பு கொண்டுள்ளது.
சட்டத்துறை – கூட்டாட்சி மன்றம் / கூட்டாச்சி கழகம் / கூட்டாச்சி சட்டவாக்க கழகம் / பெடறல் அசெம்பறி.
சுவிஸ் சட்டத்துறையான கூட்டாச்சி மன்றம் (சமஷ்டி மன்றம்) பின்வரும் இரண்டு சபைகளைக் கொண்டிருக்கும்
1. தேசியவை (கீம்ச்சபை முதலாம் மன்றம்)
2. மாநிலங்களவை (மேற்சபை இரண்டாம் மன்றம்)
இங்கு தேசியங்கவை மக்களைப் பிரதிநித்துவப்பத்த மாநிலங்களை மாநிலங்கள் என அழைக்கப்படும். கன்ரன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
கூட்டாச்சி மன்றத்தின் முதலாம் மன்றமாகவும் கீழ்ச்சபையாகவும் இது காணப்படுகின்றது. இச் சபை 200 உறுப்பினர்களை கொண்டிருக்கும். இவர்கள் அனைவரும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் பட்டியல் முறை மூலம் மக்களால் நேரடியாக தெரிவுசெய்யப்படுவர். ஒவ்வொரு கன்ரன்களும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியாக கணிக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் 24 000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்.
தேசியவையின் பதவிக்காலம் 04 ஆண்டுகளாகும். இடைக்காலத்தில் கலைக்கப்படமாட்டாத நிரந்தரமான சபையாகும். இச்சபை ஒரு தலைவரையும் ஒரு உபதலைவரையும் கொண்டிருக்கும் இவர்கள் ஒவ்வொரு வருடமும் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். தேசிய அவை வருடத்தில் மார்ச், யூன், செப்ரெம்பர், டிசம்பர் என்று 4 தடைவைகள் கூடுகின்றன.
இராணுவ அதிகாரங்கள்
நாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துதல், போர் சமாதானம் செய்தல், இராணுவ தளபதியை நியமித்தல், படைகளைக் கட்டுப்படுத்துதல்.
அரசியல் யாப்பை திருத்தும் அதிகாரம்
சுவிஸ் அரசியல் அமைப்பை மாற்றுக்கின்றன திருத்துகின்ற பூரண அதிகாரம் சட்டத்துறைக்கு உண்டு. இதுதொடர்பான மசோதாவை சட்டமன்றத்தின் எந்த சபையின் ஆரம்பிக்கலாம். எனினும் யாப்பு திருத்த மசோதா மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டே இறுதி முடிவு சொய்யப்படும்.
நிர்வாகத்துறை
நிர்வாகத்துறை சமஸ்டி பேரவை / கூட்டாச்சிப் பேரவை / பெடரல் கவுன்சில்
சுவிஸ் அரசியலமைப்பில் உலகில் எந்த நாட்டிலும் காணப்பாடத அரசாங்க முறை நிலவுகின்றது. இங்கு நிர்வாகத்துறை கூட்டு நிர்வக குழு / சமஸ்டிப் பேரவை என அழைக்கப்படுகின்றது.
சமஸ்டிப் பேரவை 07 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகத் துறையாக விளங்குகின்றது. சமஸ்டிப் பேரவையின் உறுப்பினர் அனைவரும் சமஸ்டி இணைவுக் கூட்டம் ஒன்றில் வைத்து தேர்ந்து எடுக்கப்படுகின்றது. அரசியல் யாப்பின் 143 ஆவது உறுப்புரையின் படி 18 வயதை அடைந்த வாக்குரிமை பெற்ற எந்த சுவிஸ் பிரசையும் சமஸ்டி பேரவைக்கு தெரிவு செய்யப்படலாம் எனக் குறிப்பிடுகின்றது. எனினும் சட்டசபையிலிருந்தே சமஸ்டிப் பேரவை உறுப்பினர்கள் தேர்தெடுக்கபடுவது ஓர் மரபாக பின்பற்றப்படுகிறது.
மேலும் சமஸ்டி மன்றில் இருந்து சமஸ்டிப் பேரவையின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள். தமது சட்டத்துறை உறுப்பினர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்தல் வேண்டும் ஆனாலும் அவர்கள் சட்டசபையின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் உரையாற்றுவதற்கும் விவாதங்களில் பங்கு கொள்வதற்கு உரிமைகளை பெற்றிருப்பினும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை.
சுவிசில் உள்ள பிரதான நான்கு கட்சிகளும் சமஸ்டி மன்றில் பெற்றுள்ள ஆசனங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ற பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டள்ளது. அதன்படி
1. தீவிர ஜனநாயகக் கட்சி 02
2. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி 02
3. சுவிஸ் மக்கள் கட்சி 02
4. சமூக ஜனநாயகக் கட்சி 01 என்ற வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. சமஸ்டிப் பேரையின் உறுப்பினார் 4 பேர் ஜேர்மன் மொழி பேசுகின்றனர். கன்ரனை பிரதிநித்துவம் 2 பேர் பிரெஞ்சு மொழி பேசுகின்ற கன்ரனை பிரதிநித்துவம் ஒருவர் இத்தாலிமொழி பேசுகின்ற கன்ரனை பிரதிநித்துவப்பவராகவும் காணப்படுவர்.
சமஸ்டிப் பேரவையின் பதவிக்காலம் 04 ஆண்டுகளாகும். இடைக்காலத்தில் கலைக்கப்படாத நிரந்திராமான ஒரு சபையாகும். சமஸ்டி பேரவை ஒரு தலைவரையும் ஒரு உப தலைவரையும் கொண்டிருக்கும் இவர்கள் சமஸ்டி மன்றிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். ஒரு தலைவன் ஒரு வருடத்திற்கு என்றே தேர்தெடுக்கப்படுவார். ஒரு வருடம் தலைவராக இருப்பவர் அடுத்த வருடம் அப்பதவிக்கு தேர்தெடுக்கப்படக் கூடாது என அரசியல் யாப்பின் 143 (2) பிரிவு கூறுகின்றது.
சுவிஸ் சட்டமன்றமாக சமஸ்டி மன்றத்தின் 2ஆம் மன்றமாகவும் மேற்சபையாகவும் இது காணப்படுகின்றது. இச்சபை கன்ரன்கள் என அழைக்கப்படும். மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இங்கு சகல கன்ரன்களிற்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கப்படுகின்றது இதன் படி இந் நாட்டில் 26 கன்ரன்கள் காணப்படுகின்றர். இதில் 20 முழுக் கன்ரன்கள் எனவும் 6 அரைக்கன்ரன்கள் எனவும் அழைக்கப்படும்.
இங்கே 20 முழுக் கன்ரன்களில் இருந்து இருவர் வீதம் 40 பேரும் 6 அரைக் கன்ரன்களிலிருந்து ஒருவர் வீதம் 6 உறுப்பினர்களுமாக மொத்தம் 46 பேர் அங்கம் வகிக்கின்றனர். இவ் உறுப்பினர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என்பது பற்றி அரசியல் யாப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சில உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும் சில உறுப்பினர்கள் கன்ரன் சட்ட மன்ற உறுப்பினர்களாலும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
மாநிலங்களவையின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இடைக்காலத்தில் கலைக்கப்பமாட்டாது. நிரந்தமான ஒரு சபையாகும். மாநிலங்களவை ஒரு தலைவரையும் ஒரு உபதலைவரையும் கொண்டிருக்கும் இங்கு ஒரு தலைவரும் உபதலைவரும் ஒரு வருடத்திற்கு என தேர்ந்தெடுக்கப்படுவார்.
சமஸ்டி மன்றத்தின் அதிகாரங்கள்
சுவிஸ் அரசியலமைப்பு சட்டமன்றத்தின் இரு சபைகளை தேசிய அவைக்கும் மாநிலங்களவைக்கும் எந்த விதமான ஏற்றத் தாழ்வையும் காட்டவில்லை. இரண்டிற்கும் சம அளவான அதிகாங்களை கொடுக்கப்பட்டுள்ளது. சட்டவாக்கத்தில் இரண்டு சபைகளின் ஒத்திசைவும் அவசியமானது. இதன்படி இச் சமஸ்டி மன்றின் அதிகாரங்களாக பின்வரும் குறிப்பிடலாம்.
சட்டம் இயற்றும் அதிகாரம்
சட்டங்கள் அனைத்தும் சமஸ்டி மன்றத்தினாலே இயற்றப்படுகின்றது. சட்டம் இயற்றில் இரண்டும் சபைகளும் சம அளவான அதிகாரங்கள் வெளிநாடுகள் ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல். வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தல். அதிகாரங்களின் ஊதியங்களை நிர்ணயம் செய்தல்.
நிர்வாகத்துறை தொடர்பான அதிகாரங்கள்
நிர்வாகத்துறை மேற்பார்வை செய்தல், கூட்டாச்சி அரசியலமைப்பு மாநிலங்களின் அரசியலமைப்பு செம்மையாக நடைபெறுகின்றனவா என அவதானித்தல், அரச ஊழியர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல், கூட்டாச்சி காப்புறுதி திர்ப்பாயத்தின் உறுப்பினர்களை நியமித்தல், நிர்வாகம் சம்பந்தப்பட்ட தவறுகளை விசாரித்தல்.
நீதித்துறை தொடர்பான அதிகாரங்கள்
கூட்டாச்சி நிறுவனங்களிற்கிடையில் முரண்பாடுகளை தீர்த்தல். மாநிலங்களின் கூட்டாச்சி சட்டத்துறை நிர்வாகத்துறை எதிராக முன்வைக்க குற்றச்சாட்டுக்களை விசாரித்துக் கூட்டாச்சி நீதிமன்றத்தினாலும் படைச் சட்ட மன்றத்தினாலும் தண்டிக்கப்பட்டு தீர்ப்பு வழங்குதல். சமஸ்டி தீர்ப்பாயத்தின் நீதிபதிகளை நியமித்தல். இருப்பவர் அடுத்த வருடம் தெரிவு செய்யப்படுவர். அணிப் பேரவை தலைவர் அமெரிக்க ஜனாதிபதி போன்றோ பிரித்தானிய பிரதமர் போன்றோ அதிகாரம் பெற்றவர் அன்று ஏனையோருக்கு என்ன அதிகாரங்கள் அதே அதிகாரம் தலைவருக்கும் காணப்பட்டது.
சமஸ்டி பேரவையின் 07 உறுப்பினர்களுக்கு பின்வரும் 07 பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1. உள்நாடுஅரசு
2. உள்துறை
3. நிதியும் காலம் துறையும்
4. நிதியும் சுங்கவரியும்
5. இராணுவம்
6. பொதுப்பொருளாதாரம்
7. தபாலகம், தந்தி, ரயில் போக்குவரத்து
சமஸ்டிப் பேரவை வாரத்தில் 02 தடவைகள் கூட்டப்படும். சமஸ்டிப் பேரவையின் கூட்ட நடப்பெண் 04 ஆகும்.
சமஸ்டிப் பேரவையின் அதிகாரங்கள்
சட்டமுறை அதிகாரங்கள்
◊ சட்ட மசோதாக்களை தயாரித்தல் அவற்றின் நிறைவேற்றிக் கொள்ளல்.
◊ சட்ட மசோதாக்களை அச்சிடுதல்.
◊ யசோதா நிறைவேற்றப்படுதல் பின்னர் அதனை அமுலாக்கப்படுத்தல்.
◊ சமஸ்டி நிதி விடையங்களை நிறைவேற்றுதல்.
◊ வரவு செலவுத் திட்டங்களை தாயாரித்தல்.
◊ சமஸ்டி கணக்குகளைக் கொண்டு நடத்துதல்.
நிறைவேற்று அதிகாரங்கள்
◊ நாட்டின் சட்டத்தினையும் ஒழுங்கமைப்பையும் பேணுதல்.
◊ சமஸ்டி நிர்வாகத்துடன் தொடர்புகளை உயர் பதவிக்கான ஆட்சியை நியமித்தல்.
◊ ஆயுதம் தாங்கிய படைகளை ஒழுங்குபடுத்தல்.
◊ சிவில் வேலைகளுக்கு வழிகாட்டிகளை ஒத்துழைப்புகளை வழங்குதல்.
◊ சட்ட சபையில் எழுதப்படும் கேள்விக்கு பதில் அழித்தல்.
வெளிநாட்டு உறவுகளை கொண்டு நடத்தல்
◊ வெளிநாடுகளில் சுவிஸ்சை பிரதிநிதிப்படுத்தல்.
◊ வெளிநாடு ஒப்பத்தங்களில் கைசாத்திடுதல் வெளிநாட்டு ஒப்பத்தங்களை செல்லுபடியாகும் தம்மையே ஆமோதித்தல்களும் சமஸ்டிப் மன்றத்தில் சமர்பித்தல்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான தொடர்புகளை பேணுதல்
◊ மத்திய மாநிலத்துக்கும் பலமாக செயற்படுதல்.
◊ மாநில யாப்பை சட்டத்தின் மூலம் அதிகரித்தல்.
◊ இரண்டு மாநிலங்களை அல்லது பல மாநிலங்களை ஒரு மாநிலங்களை வெளிநாடு அரசாங்கத்துக்கும் இடையில் கைசாத்துயிடுதல் ஒப்பத்தங்களையும் எதிர்த்தல்.
◊ மாநில ஒப்பத்தங்களை சமஸ்டி சட்டத்துக்கு இசைவாக ஆக்குதல்.
◊ சமஸ்டிப் பேரவையின் விசேட பண்புகள்
◊ சமஸ்டிப் பேரவையானது பொதுவான பொறுப்பினை வகிக்கும் கூட்டு நிறைவேற்றுத் துறையாகும்.
◊ சமஸ்டிப் பேரவை ஜனாதிபதி மாதிரியிலான அரசாங்க முறையன்று
◊ சமஸ்டிப் பேரவை நிறையானதாகும்.
◊ சமஸ்டி பேரவை கட்சி சார் அடிப்படையின் அமைந்த நிறுவனமன்று
◊ மத்தியதனானது எளிமையான வாழ்க்கை ஒழுங்கு அவசியத்தை வலியுறுத்துகின்றது
◊ சமஸ்டி பேரவை சமஸ்டி மன்றோடு நெருங்கிய செயற்பாட்டினை மேற்கொள்ளுகின்றது.
சுவிஸ் ஒரு சமஸ்டி நாடக காணப்பட்டது நீதித்துறையானது பிரதான இடத்தை வகிக்கின்றது. இங்கு குற்ற சிவில் வழக்குகளின் மேலான நிதிமன்றமாக சமஸ்டி தீர்ப்பம் ( பெடரல் ரிபுயுல் ) காணப்பட்டது சமஸ்டி மன்றினால் தீர்பாயம் 60 நீதிபதிகள் கொண்டுள்ளது. இவர்கள் 30 பேர் நிரந்திர நிதிபிகளை ஏனைய 30 பேர் சுழற்சி நீதிபதிகளின் காணப்பட்டது. சமஸ்டி நிர்ப்பாயத்தின் நீதிபதி அனைவரும் சமஸ்டி மன்றினால் தெரிவு செய்யற்பட்டடுள்ளர். இவருடைய பதவிக்காலம் 06 ஆண்டுகளாகும்.
சமஸ்டி தீர்ப்பாய இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தொழிற்படல். மத்திக்கும் மாநிலத்திற்கும் அல்லது மாநிலங்கிடையில் எழும் வழக்குகளை விசாரித்தல், சிவில் குற்றவியல் வழக்குகளை விசாரித்து தீர்த்தல், மக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல். போன்ற நியாயாதிக்கத்தை கொண்டு உள்ளது.
◊ சுவிஸ்ஸில் பல கட்சிமுறை நடைமுறையில் உள்ளது.
◊ சுவிஸ் அரசாங்கம் கட்சி முறையை அடிப்படையாக கொண்டு அமையாததால் கட்சிக்கான முக்கியத்துவம் மிகக் குறைந்த அளவே காணப்படுகின்றது.
◊ சுவிஸ் அரசாங்க முறையில் ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற அமைப்பு முறையும் நிலவுவது இல்லை.
◊ சட்ட மன்றிலும் நிர்வாகத்துறையிலும், கட்சிகள் இணைந்தே செயற்படுகின்றது.
சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசாங்க முறையிலுள்ள சமஷ்டி மன்றமானது:
A – ஒத்த அதிகாரங்களையுடைய இரு மன்றுகளைக் கொண்டதாகும்.
B – இரு மன்றுகளும் ஒன்றாகக் கூடும்போது ஐக்கிய சமஷ்டி மன்றம் என்றம் என்றழைக்கப்படுகிறது.
C – சமஷ்டி அரசாங்க முறையிலுள்ள உயர் சட்டவாக்குனராகும்.
D – சமஷ்டிப் பேரவை, சான்சலர், சமஷ்டி நீதியரசர்கள் என்போரை நியமிக்கும் பொறுப்பை வகிக்கின்றது
E – கன்ரன்களினால் மறைமுகமாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டதாகும்.
சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசாங்க முறையிலுள்ள சமஷ்டி மன்றமானது:
A – ஒத்த அதிகாரங்களையுடைய இரு மன்றுகளைக் கொண்டதாகும்.
B – இரு மன்றுகளும் ஒன்றாகக் கூடும்போது ஐக்கிய சமஷ்டி மன்றம் என்றம் என்றழைக்கப்படுகிறது.
C – சமஷ்டி அரசாங்க முறையிலுள்ள உயர் சட்டவாக்குனராகும்.
D – சமஷ்டிப் பேரவை, சான்சலர், சமஷ்டி நீதியரசர்கள் என்போரை நியமிக்கும் பொறுப்பை வகிக்கின்றது
E – கன்ரன்களினால் மறைமுகமாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டதாகும்.