Please Login to view full dashboard.

சட்டம்

Author : Admin

28  
Topic updated on 02/15/2019 07:30am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

ஒழுங்கமைந்த மனித சமூகத்தில் மனிதனின் பொது வாழ்வினை கட்டுப்படுத்தி சமூக இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக ஆணையதிகாரத்தைப் பயன்படுத்தி அரசினால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகளே சட்டமாகும்.

சட்டம் பற்றிய அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:

  • அரிஸ்ரோட்டில்: சமூக நலனுக்கு இடைஞ்சலான தனிப்பட்டவர்களின் விருப்பங்கள் அல்லது செயற்பாடுகள் மீது விதிக்கப்படும் ஒரு தடையே சட்டமாகும்.
  • ஸஸ்மன்ட்: நீதி நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு அரச அதிகாரத்துடன் நிறைவேற்றப்பட்டதும் நிறைவேற்றப்படுவதற்குமான கோட்பாடுகளின் தொகுதியே சட்டமாகும்.
  • தொமஸ்ஹொப்ஸ் : கீழ்ப்படிந்தாக வேண்டும் என்பதற்கான காரணக்கூறுடைய விதத்தில் ஒருவர் இடும் உத்தரவு தான் சட்டமாகும்.
  • ஹொல்ன்ட் : இறைமை அதிகாரம் கொண்ட அரசியல் நிறுவனத்தினால் மனிதனின் புற நடத்தையைக் கட்டுப்படுத்த செயற்படுத்தப்படும் விதிகளின் தொகுதி சட்டம் எனப்படும்.
  • ஒஸ்டின்: இறைமையின் கட்டளையே சட்டமாகும்.
  • கிறீன்: அரசாங்கத்தின் உரிமையையும் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் முறையே சட்டம் ஆகும்.
  • வில்சன்: வழக்கங்கள், வழக்காறுகள் ஆகிய ஒழுங்குபடுத்தும் விதிகள் அரசாங்கத்தின் சக்தியோடு இணைந்தால் அதுவே சட்டம் ஆகும்.
  • ஜோன்எர்ஸ்கின் : தன்னுடைய மக்களைக் கீழ்படிந்து நடக்கும்படி செய்ய ஓர் அரசன் பிறப்பிக்கும் வாழ்க்கைப் பொதுவிதி அடங்கிய ஆணை சட்டமாகும்.
  • வூட்றோ வில்சன்: சட்டம் என்பது அரசின் அதிகாரத்தையும் வலிமையையும் பக்கபலமாகக் கொண்டு ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தெளிவான விதிமுறைகளாகும்.

சட்டத்தின் பண்புகள்

  • இறைமை அதிகாரத்தின் அடிப்படையில் அரசினால் பிறப்பிக்கப்படுவதாகக் காணப்படுதல்.
  • மனிதரின் சமூக இருப்பின் வெளிவாரியான செயற்பாடுகளை மட்டும் கட்டுபடுத்துவதோடு தொடர்புபடுதல்.
  • சமூகப் பொது நன்மையை மட்டும் இலக்காகக் கொண்டிருத்தல்.
  • சட்டத்தை மீறினால் தண்டனைக்குட்பட வேண்டி இருத்தல்.
  • மாற்றமுறும் சமூக நிலைகளுக்கேற்ப காலத்திற்கு காலம் மாற்றமடைதல்.
  • சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருத்தல்.
  • தனிப்பட்டவர்களின் தேவைகளுக்காக விரும்பியவாறு மாற்றியமைக்க முடியாதிருத்தல்.
  • சட்டம் தெளிவாகவும் குழப்பமின்றியும் இருத்தல் வேண்டும்.
  • சட்டம் சமூகத்திலிருந்து தோற்றம் பெறுகின்றது.
  • சமயத்துடனும் ஒழுக்கத்துடனும் தொடர்பைக் கொண்டிருக்கின்றது.

சட்டத்தின் மூலாதாரங்கள்

  • சட்டமன்றம்
  • நீதிமன்றத் தீர்ப்புகள்
  • வழக்காறுகள்
  • சட்டவல்லுனர்களின் கருத்துகள்
  • மதம்
  • நியாய அல்லது சமநீதி

சட்டத்தின் வகைகள்

  • தேசிய சட்டம்
    • பொதுச்சட்டம்
      • அரசியல் யாப்புச் சட்டம்
      • குற்றவியல் சட்டம்
      • நிர்வாக சட்டம்
    • குடியியல் சட்டம் (தனியார் சட்டம்)
  • சர்வதேச சட்டம்

சட்டம் என்பது இறையின் ஆணையாகும். அவற்றிற்கு அடிபணியாவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும். அவ்வாறு தண்டிக்கப்படுவதற்குப் பயந்தே சட்டத்திற்கு அடிபணிகின்றனர்.

இதனை தவிர மனிதர் சட்டத்திற்கு அடிபணிவதற்கான ஒழுக்கவியல் மற்றும் சமூகவியல் காரணிகள்:

  • சட்டம் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தல்.
  • சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக விழுமியங்களைச் சட்டம் வெளிப்படுத்துகிறது.
  • சமூகத்தில் நிகழும் மோதல்களைத் தீர்மானிப்பதில் சட்டம் உதவுதல்.
  • சமூக மற்றும் தனி நோக்கங்களை நிறைவு செய்வதில் சட்டம் உதவுதல்.

சட்டத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடையிலான வேறுபாடுகள்:

  • சட்டமானது மனிதனது வெளிநடவடிக்கைகளை மட்டுமே கட்டுப்படுத்துகின்றது. ஆனால் ஒழுக்கம் அவனது மனசாட்சியையே கட்டுப்படுத்துகின்றது.
  • சட்டம் மனித வாழ்வின் ஒரு பகுதியையே கவனித்துக்கொள்கிறது. ஆனால் ஒழுக்கம் முழு மனித வாழ்வையும் கவனித்துக் கொள்கின்றது.
  • சட்டத்தை மீறுவோர் தண்டனைக்குள்ளாவர். ஆனால் ஒழுக்கத்தை மீறுவோர் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவர்.
  • சட்டம் தெளிவாகவும் விரிவாகவும் வரையறுக்கப்பட்டு காணப்படும். ஆனால் ஒழுக்கம் அவ்வாறானதல்ல.
  • ஒழுக்கம் விரும்பாதவற்றையும் சட்டம் விரும்பி ஏற்கலாம்.

சட்டத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிய அறிஞர்களின் கூற்றுகள்:

  • அரிஸ்டோட்டில் : ஒழுக்கத்தை மதிக்காது சட்டத்தை கொண்டு நல்ல அரசை உருவாக்க இயலாது.
  • ஹென்றி மெயின் : மனிதனின் ஒழுக்க ரீதியான எண்ணங்கள் அரச சட்டங்களுக்கு அடிப்படையாக அமைகின்றன.
  • ஜெலிநெத் : மனிதனின் சமூக இருப்போடு தொடர்பான ஒழுக்கங்களும் சித்தாந்தங்களும் அரச சட்டங்களின் மூலமாக அமைகின்றன.
சட்டத்தின் வகைகள்

தேசிய சட்டம் :

  • ஒரு நாடு அதன் இறைமை அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் பிரயோகிக்கக் கூடிய வகையில் பிறப்பிக்கும் சட்டங்களாகும்.

குடியியல் சட்டம் (தனியார் சட்டம்) :

  • தனிப்பட்டவர்களுக்கிடையிலான பிணக்குகளை ஒழுங்குபடுத்துகின்ற சட்டம்.

பொதுச்சட்டம் :

  • அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம்.

அரசியல் யாப்புச் சட்டம் :

  • அரசொன்றின் அரசாங்கத்தின் அமைப்பு, அதிகாரம், தொழிற்பாடு ஆகியவற்றையும் அதன் எல்லைக்குட்பட்ட மக்களது உரிமைகள், கடமைகள் என்பவற்றையும் மக்களுக்கும்,அரசுக்கும் இடையிலான தொடர்பையும் பற்றித் தெளிவாகக் கூறுவதே அரசியல் யாப்புச் சட்டம் எனப்படும்.

குற்றவியல் சட்டம்:

  • நபரொருவர் அல்லது குழு ஒன்றினால் சமூகத்திற்கு எதிராக விளைவிக்கும் குற்றம் தொடர்பான சட்டம் குற்றவியல் சட்டம் எனப்படும்.
  • உதாரணம் :
    • கொலை
    • கொள்ளை
    • கற்பழிப்பு
    • காயம் விளைவித்தல்
    • தாக்குதல்

நிர்வாகச் சட்டம்:

  • நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகார சபைகள் என்பவற்றின் அமைப்பு, தத்துவங்கள், பொறுப்புகள், மற்றும் கடமைகள் பற்றி எடுத்து கூறும் சட்டமே நிர்வாகச் சட்டம் எனப்படும்.

சர்வதேச சட்டம் :

  • நாடுகளுக்கிடையில் உறவுகள் மற்றும் அதனை சார்ந்த நடத்தை முறைகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் சர்வதேச சட்டம் எனப்படும்.
RATE CONTENT 0, 0
QBANK (28 QUESTIONS)

சட்டத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தை தெரிவு செய்க.
A – சகல சட்டங்களும் ஒழுக்கவியல் தத்துவத்தின் அடிப்படையில் ஒழுங்கமைந்துள்ளன.
B – சட்டம் எதனைச் செய்ய வேண்டும் எதனைச் செய்யக்கூடாது என்று சுட்டிக் காட்டுகிறது.
C – சட்டம் மனிதரின் சமூக நடத்தையைக் கட்டுப்படுத்துகிறது.
D – தண்டனை மற்றும் சமூகக் கண்டனம் ஆகியவற்றின் மீதான அச்சத்தினால் மனிதர் சட்டத்துக்கு அடி பணிகின்றனர்.

Review Topic
QID: 19233
Hide Comments(0)

Leave a Reply

சட்டத்துக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சட்டம் மனிதரின் இருப்பையும் நடத்தையையும் கட்டுப்படுத்தும் விதிகளின் தொகுதியை வெளிப்படுத்துகின்றது.
B – சட்டம் மனிதரின் வெளிவாரியான செயற்பாடுகள் உள்வாரியான சிந்தனைகள் ஆகிய இரண்டையும் ஒழுங்குபடுத்துகிறது.
C – சட்டம் அரசின் பலவந்த அதிகாரத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
D – சட்டமும் ஒழுக்கமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையனவாகும்.

Review Topic
QID: 19276
Hide Comments(0)

Leave a Reply

மனிதர் சட்டத்துக்கு ஏன் அடிபணிகின்றனர்? சரியான விடையைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19286
Hide Comments(0)

Leave a Reply

சட்டம் என்பது
A – இறைமை அதிகாரத்தின் அடிப்படையில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்படுகிறது.
B – மனிதரின் வெளிவாரியான நடத்தைகளைக் கட்டுப்படுத்துகின்றது.
C – பொலிஸ் மற்றும் சிவில் சேவையினூடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது
D – அதனை மீறுவோரைத் தண்டிக்கிறது.

Review Topic
QID: 19298
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – சட்டம் சமூக ஒத்திசைவையும் ஒழுங்கையும் உத்தரவாதப்படுத்துகிறது.

கூற்று II –  தண்டனை மற்றும் சமூக இழுக்கு என்பவற்றுக்குள்ள அச்சத்தின்
காரணமாக மக்கள் சட்டத்துக்கு அடி பணிகின்றனர்.

Review Topic
QID: 19311
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – ஒரு சமூகத்தில் சட்டம் நிலவுகிறது என்பதன் பொருள் அச்சமூகம் சட்டத்தால் ஆளப்படுகிறது என்பதாகும்.

கூற்று II – அவ்வாறான சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி நிலவுவதோடு சட்டத்தின் முன்னால் சமத்துவமும் சட்டத்தின் சமமான பாதுகாப்பும் சகலருக்கும் சமமான முறையில் உறுதிப்படுத்தப்படும்.

Review Topic
QID: 19315
Hide Comments(0)

Leave a Reply

சட்டம் என்பது
A – கட்டளை மற்றும் உத்தரவுகளின் உருவங்களில் வெளியிடப்படும் அரசின் விருப்பாகும்.
B – இறைமை அதிகாரத்தின் அடிப்படையில அரசினால் பிறப்பிக்கப்படுகிறது.
C – ஒழுக்கக் கொள்கைகளுடன் ஒத்திசைவானதாக இருக்க வேண்டும்.
D – சட்டங்களை மீறுவோரைத் தண்டிக்கும் அதிகாரத்துடன் நீதிமன்றுகளினூடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Review Topic
QID: 19322
Hide Comments(0)

Leave a Reply

சட்டத்தின் இயல்பு பற்றிய மாக்சீயக் கருத்தை வெளிப்படுத்தும் கூற்றினை அடையாளப்படுத்துக.

Review Topic
QID: 19328
Hide Comments(0)

Leave a Reply

சட்டத்தின் இயல்பு பற்றிய சமூகவியல் கருத்தினைப் பிரதிபலிக்கும் கூற்றினை அடையாளப்படுத்துக.

Review Topic
QID: 19329
Hide Comments(0)

Leave a Reply

சட்டம் என்பது
A – கட்டளையிடுதல், தடைசெய்தல், உரித்துகள் என்பன தொடர்பான விதிகளின் தொகுதியாகும்.
B – அரசாங்கத்தினால் ஆக்கப்பட்டு சமூகம்பூராகவும் பிரயோகிக்கப்படுகிறது.
C – அரசின் விருப்பினை வெளிப்படுத்தும் கருவி எனக் கருதப்படுகிறது.
D – பொலிசாரினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தினால் மக்களின் அடிபணிதலுக்குட்படுகிறது.
E – கட்டாயமானதாக இருப்பதோடு சட்டத்துக்குக் கீழ்படிதலைத் தெரிவுக்குரியதாக்குவதற்குப் பிரஜைகளுக்கு உரிமை வழங்கப்படுவதில்லை.

Review Topic
QID: 19340
Hide Comments(0)

Leave a Reply

மக்கள் சட்டத்துக்கு அடிபணியக் காரணம்:
A – அது சட்டமுறையானதாக இருப்பதனாலாகும்.
B – அடிபணியாமையால் ஏற்படும் விளைவுகளை ஏற்க விரும்பாமையினாலாகும்.
C – ஒரு சிறந்த சமூகத்தின் இருப்புக்கு சட்டம் அவசியமாகிறது என்ற நம்பிக்கையினாலாகும்.
D – சட்டம் சகலருக்கும் சமமானது என்ற பொது ஒப்புதலினாலாகும்.
E – பதவியிலுள்ள அரசாங்கத்தை ஆதரிப்பதற்குள்ள விருப்பினாலாகும்.

Review Topic
QID: 19343
Hide Comments(0)

Leave a Reply

சட்டம் என்பது:- பிழையான கூற்று

Review Topic
QID: 19351

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank