Please Login to view full dashboard.

குறுமக்கலம் சீர்திருத்தம்

Author : Admin

0  
Topic updated on 02/15/2019 12:33am

மக்கலம் சீர்திருத்தத்தின் கோரிக்கைகள்:

  • சட்ட நிரூபண சபை 21 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டது.
  • சட்ட நிர்வாக சபை தொடர்ந்தும் பேணப்பட்டது.
  •  வரையறுக்கப்பட்ட வாக்குரிமை வழங்கப்பட்டது.
  •  படித்த இலங்கையருக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை.
  •  தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டன.
  •  சட்ட நிரூபண சபை

 

சட்டநிரூபண சபை

உத்தியோக சார்புள்ளோர் (11)                                                உத்தியோக சார்பற்றோர்  (10)

தேர்தல் மூலம் (04)                              நியமனம் மூலம் (06)
ஐரோப்பியர் 02                         கண்டிச்  சிங்களவர் 01
பறங்கியர் 01                              கரையோரச் சிங்களவர் 02
படித்த இலங்கையர் 01       முஸ்லீம் 01
இலங்கைத் தமிழர் 02

 

உத்தியோக பற்றுள்ளோராக பின்வருவோர் இடம்பெற்றனர்:

  • இலங்கையின் இராணுவதளபதி
  •  குடியேற்ற நாட்டு காரியதரிசி
  •  சட்டமா அதிபர்
  •  வருமானவரி அதிகாரி
  •  குடியேற்ற நாட்டு தனாதிகாரி
  •  மேல்மாகாண அரசாங்க அதிபர்
  •  மத்தய மாகாண அரசாங்க அதிபர்
  •  தென்மாகாண அரசாங்க அதிபர்
  •  பிரதம சிவில் வைத்திய அதிகாரி
  •  தேசாதிபதியால் நியமிக்கப்படும் இரு அரசாங்க உத்தியோகத்தர்கள்

மக்கலம் சீர்திருத்த சட்டநிர்வாக சபையானது தேசாதிபதிக்கு நிர்வாக விடயம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட வாக்குரிமை

  • மக்கல சீர்திருத்தம் முதன்முதலாக வாக்குரிமை என்ற சிபாரிசை முன்மொழிந்தது. சொத்து மற்றும் கல்வி தகுதி உடையவருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
  •  கல்வி தகைமையானது ஆங்கில மொழியிலே எழுத வாசிக்க தெரிந்திருத்தலாகும்.
  •  சொத்து தகைமை என்பது 600 ரூபாய்க்கு குறையாத வருடவருமானத்தை பெறுபவர்கள் அல்லது 1500 ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமையாளராக இருப்பவர்கள்.
  •  பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை.
  •  மொத்த சனத்தொகையில் ஏறக்குறைய 4 வீதம் மட்டுமே வாக்களிக்கும் உரிமையினை பெற்றிருந்தனர்.
  •  வாக்குரிமை என்ற சிபாரிசு எதிர்காலத்தில் அனைவருக்குமான வாக்குரிமையாக மாற வழிகோலியது.

படித்த இலங்கையருக்கு ஒரு சிறப்பு பிரதிநிதித்துவம்
மக்கலம் சீர்திருத்தம் படித்த இலங்கையருக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கியது. இதன் பிரதிநிதியாக சேர்.பொன். இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார்.
தேர்தல் முறைமை

  • இலங்கை முழுவதையும் ஒரு தேர்தல் தொகுதியாக கொண்டு உறுப்பினரை தெரிந்தெடுக்கும் நடைமுறை இவ்வரசியல் திட்டத்தின் கீழ் உருவாகியது.
  • 4 உறுப்பினர் இதன் மூலம் தெரியப்பட்டு சட்டமன்றத்தில் அங்கத்துவம் பெற்றனர்.

குறுமக்கலம் சீர்திருத்தத்தின் நன்மைகள்:

  • வாக்குரிமை என்ற அரசியல் உரிமையை இலங்கையர் பெற வழிவகுத்தது.
  •  சட்டமன்றத்தை ஜனநாயக தன்மை வாய்ந்த அமைப்பாக மாற்ற வழிகோலியது.
  •  இலங்கையிலே தேர்தல் முறைமையை அறிமுகம் செய்தது.
  •  படித்த இலங்கையருக்கு அரசியலில் முக்கியத்துவம் வழங்கியது.

குறுமக்கலம் சீர்திருத்தத்தின் குறைபாடுகள்:

  • அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை.
  •  வாக்குரிமை பெற்றவர் உயர்சாதி வகுப்பினராகவும் வாக்குரிமை பெறாதவர் தாழ்சாதி வகுப்பினராகவும் கருதப்படும் நிலை உருவாகியது.
  •  தேசாதிபதியின் ஆதிக்கம் சட்டவாக்க கழகத்திலே மேலோங்கி இருந்தது.
  •  சோதிபதிக்கு ரத்து அதிகாரம் வழங்கப்பட்டது.
RATE CONTENT 5, 1
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank