அரசியலமைப்பு மாதிரிகள்
மேற்குறிப்பிட்ட அரசியலமைப்பு வகைப்பாடுகளுக்கு அப்பால் அரசியலமைப்புகள் பின்வரும் தளங்களின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.
அரசியல் கொள்கைகளின்படி
அதிகார பகிர்வு ரீதியாக
நிறைவேற்று அதிகாரத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ப
1. தாராண்மை ஜனநாயக அரசியல் அமைப்பு
2. சமதர்ம அரிசியல் யாப்பு மாதிரி
3. பாசிசவாத அரசியலமைப்பு மாதிரி
பாசிசவாத அரசியலமைப்பானது ஒரு தனிமனிதனின் சர்வாதிகாரத்தின் அடிப்படையில் செயற்படும் சர்வாதிகாரஅரசிற்கான செயற்பாட்டுத் தளத்தை வழங்கும் ஓர் அரசியலமைப்பாகும்.
இவ் யாப்பு முறையில் நிச்சயமாக இனங்காணக்கூடிய ஒரு கோட்பாட்டின் அல்லது கொள்கை தொகுதியின் அடிப்படையில் அரசியல், பொருளாதார முறைகள் தனியொருவரால் பிரயோகிக்கப்படும் சர்வாதிகார ஆட்சி.
இவ்யாப்பின் பண்புகள்
1. அரசாங்கத்தின் பணிகள், கட்டமைப்புகள் ஒரு படிமுறையின் கீழ் தெளிவாக முறையாக வேறாக்கப்படாமை.
2. ஒரு கட்சி முறை (மக்களுக்கு கட்சியை உருவாக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கும்)
3. தீவிர இனவாதம்.
4. அரசின் தன்னிகரற்ற தன்மை.
5. போர் விருப்பம் உள்ளதாக இருத்தல்.
6. அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரம் என்பன மறுக்கப்பட்டிருத்தல்.
7. ஒரு நிச்சயமான பொருளாதார தத்துவம் காணப்படாமை (நடைமுறையில் இருக்கின்ற பொருளாதார முறைமை அரசினால் கட்டுப்படுத்தப்படுவதாக இருக்கும்).
8. கொள்கை எதிர்ப்பு
9. தனிமனிதனையும் சமூகத்தையும் அரச அதிகாரத்திற்கு கீழ்படியச் செய்ய ஆட்சி நடத்துதல்.
10. அரசியல் செயலொழுங்கின் அனைத்து அம்சங்களும் முறிவடைதல்.
பாசிசவாத அரசியலமைப்பின் நிறைகள்
1. தீர்மான எடுப்பு செயற்பாட்டில் காலதாமதம் தவிர்க்கப்படுவதுடன் நிர்வாக செலவும் குறைவாகக் காணப்படுகின்றமை.
2. இவ் யாப்பு மாதிரி தேசியவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மக்கள் மத்தியில் தேசிய ஒற்றுமையுடன் நாட்டுப்பற்றும் ஏற்படுகின்றது.
3. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவகையிலான பொருளாதாரக் கொள்கை காணப்படுவதோடு அரசே பொருளாதாரத்தை நிருவகிப்பதால் நாட்டின் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும்.
பாசிசவாத அரசியலமைப்பின் குறைகள்
1. இவ் யாப்பு முறை ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காக மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட எச்செயலையும் செய்வதற்கு இடமளிக்கின்றது.
2. மக்களின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் மறுக்கப்படுதல்.
3. போர் விருப்பம் உள்ள யாப்பு முறையாக இருப்பதால் மனித வாழ்வின் மேன்மையான அம்சங்களான அமைதி, சமாதானம் என்பன கேள்விக்குறியாகின்றமை.
4. ஜனநாயக கோட்பாடுகள் பரந்தளவில் பின்பற்றப்படுகின்ற தற்காலச் சூழலுக்கு ஏற்ற அரசியல் யாப்பு முறையாக இல்லாதிருத்தல்.
சமூக ஜனநாயக யாப்பின் பண்புகள்
1. பொருளாதாரத்தை முகாமைப்படுத்துவதில் அரசும் தனியார் துறையும் பங்குபற்றல்.
2. எனினும் அரசு பொருளாதார விடயங்களில் கூடிய பொறுப்பினை வகித்தல்.
3. தனியார்துறை குறைந்த கவனம் செலுத்தும் அல்லது முழுமையாக கவனம் செலுத்தாத துறைகளின் வளர்ச்சியில் அரசு நேரடியாக தலையிடுதல்.
4. வரையறுக்கப்பட்ட பொருளாதாரச் சுதந்திரம்.
5. அரசு பல்வேறு நலன்புரி மற்றும் காப்புறுதி பணிகளை நடைமுறைப்படுத்தல்.
6. பொருளாதார ரீதியான மக்களின் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டிருத்தல்.
7. சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி என்பன கிடைக்கச் செய்தல்.
8. ஐக்கியம், ஒற்றுமை பேணப்படுவதை வலியுறுத்தல்
9. சமமான பிரஜைகள் – சமமான வாய்ப்புக்கள் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு அரசியல், பொருளாதார, சமூக பணிகளை முகாமைப்படுத்தல்.
சமூக ஜனநாயக யாப்பின் நிறைகள்
1. நாட்டின் சமுதாய நலன் பாதுகாக்கப்படல்.
2. பொருளாதார நடவடிக்கைளில் அரசும் தனியார் துறையும் பங்குபற்ற கூடியதாக இருத்தல்.
3. கடின உழைப்பிற்கு உயர்ந்த மதிப்பு வழங்கப்படல்.
4. இவ் யாப்பு மாதிரியில் அரசியல் ரீதியாக ஜனநாயகக் கோட்பாடுகள் பின்பற்றப்படுவதினால் மக்களின் தெரிவுக்கு இடமிருத்தல், அடிப்படை உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் மதிப்பளிக்கப்படுதல் போன்ற சாதகமான அம்சங்களும் காணப்படுகின்றன.
சமூக ஜனநாயக யாப்பின் குறைகள்
1. பொருளாதாரத்தில் அரசின் கூடிய தலையீடு காணப்படுவதால் சுதந்திர முயற்சிகள் மட்டுப்படுத்தப்படுவதாக அமைதல்.
2. ஊழல், மோசடிகளுக்கான சூழ்நிலை உருவாகுதல்.
3. கலப்பு பொருளாதார அம்சங்கள் (அரசு மற்றும் தனியார்) ஒரே ஸ்திரத்தன்மையுடன் இல்லாதிருத்தல்.
அரசியல் யாப்பு மாதிரி – நிறைவேற்று அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கேற்ப
கபினட் யாப்பு முறையின் பண்புகள்
1. இரட்டை நிறைவேற்று தாபனம்
2. பிரதமரின் தலைமைத்துவம்
3. அரசியல் ஒருமைத்தன்மை
4. கூட்டுப் பொறுப்பு
5. எதிர்க்கட்சியின் முக்கியத்துவம்
6. சட்டத்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையிலான நெருங்கியத் தொடர்பு
கபினட் யாப்பு முறையின் நிறைகள்
1. சட்டத்துறைக்கும் நிருவாகத்துறைக்கும் இடையே ஒற்றுமையும் ஒத்துழைப்பும் நிலவுகின்றது. இதனை வோல்டர் பெகோட் “கபினட் யாப்பு முறையில் கபினட் சட்டத்துறையையும் நிருவாகத்துறையையும் இணைத்து வைக்கும் இணைகரமாகும்” என்கின்றார்.
2. ஜனநாயகத் தன்மை மிக்க யாப்பு முறை
• நிருவாகத்துறையான அமைச்சரவை சட்ட சபையிலிருந்து தெரிவு செய்யப்படல்,
• சட்டத்துறைக்கு பொறுப்பு கூற கடமைப்படல்,
• பொறுப்பினை மீறி செயற்படும் போது நிருவாகத்துறையை சட்டத்துறையினால் பதவி நீக்க முடிதல்,
• கட்சி அரசாங்கம் நடைமுறையிலிருத்தல்,
• பொதுசன அபிப்பிராயத்திற்கு அதிகம் செவிமடுத்தல்,
3. நிருவாகத்துறையான அமைச்சரவை சட்டத்துறைக்கு பொறுப்பு கூற கடமைப்பட்டிருப்பதோடு அதன் கட்டுபாட்டுக்கும் உட்படுவதால் கபினட் யாப்பு முறையில் நிறைவேற்றுத் துறையின் எதேச்சதிகாரம் குறைவாக காணப்படுகின்றது.
4. நெகிழ்ச்சியான யாப்பு முறையாக இருத்தல்
• மாற்றமுறும் நிலைகளுக்கு இசைவான முறையில் முன்னெடுக்க முடிதல்
• நெருக்கடி நிலைகளில் அரசாங்கக் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய வாய்ப்பு
5. அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதையும் அது தொடர்பான பொறுப்பினையும் நிச்சயமாக அறிந்து கொள்ள முடிதல்.
6. பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் வழமையாக சிரேஷ்ட அரசியல் வாதிகளாக இருப்பதனால் ஆட்சியதிகாரத்தினை பாண்டித்தியம் பெற்றவர்களின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு உயர் மட்டத்தில் காணப்படுகின்றது.
7. மாற்று அரசாங்கத்திற்கான வாய்ப்பு
• கபினட் முறையில் பதவியிலிருக்கும் அரசாங்கம் இராஜினாமா செய்தால் எதிர்க்கட்சி மாற்று அரசாங்கத்தை தாபிப்பதற்கு ஆயத்தமானதாக இருக்கும்.
8. கபினட் யாப்பு முறையில் பொதுசன அபிப்பிராயத்திற்கு செவிமடுக்கும் தன்மை காணப்படுகின்றது.
9. எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான செயற்பாட்டிற்கு இடமளிக்கப்பட்டிருத்தல்
• இவ்யாப்பு முறையில் ஒரு பலமான எதிர்க்கட்சி அமைந்து ஆளுங்கட்சியின் செயற்பாடுகளை கண்காணிப்பதோடு அதன் தன்னிச்சையான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துகின்றது.
10. மக்கள் இறைமை மேம்படுத்தப்படல்
11. சட்டத்துறையும் நிருவாகத்துறையும் ஒரே ஒரு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவதால் செலவு குறைந்த முறையாக காணப்படுகின்றது.
கபினட் யாப்பு முறையின் குறைப்பாடுகள்
1. கபினட்டின் சர்வாதிகாரம் ஏற்படுதல்
2. அரசாங்கம் உறுதியற்றதாக மாறுதல்
3. செயற்திறன் குன்றிய தன்மை
4. தேசிய நலன்கள் கீழ்ப்பட்டு கட்சியின் குறுகிய நலன்கள் மேலெழுதல்
5. அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் மேலெழுதல்
2. ஜனாதிபதித்துவ யாப்பு முறை
ஜனாதிபதித்துவ யாப்பு முறையின் பண்புகள்
1. தனி நிருவாகத் துறை அல்லது அதிகாரமிக்க ஜனாதிபதி பதவி
2. நிறைவேற்றுத்துறை சட்டத்துறையிலிருந்து பிரிந்திருத்தல்
3. உறுதியான அரசாங்க முறை
4. செயற்திறன் மிக்க தன்மை
5. அரசாங்கம் கூட்டு குழுவாக இல்லாதிருத்தல்
6. தடைகள் சமன்பாடுகள் முறை நடைமுறையிலிருத்தல்
7. குற்றவிசாரணை (பழிமாட்டறைதல்) முறை
8. நிர்வாகத்துறை சட்டத்துறைக்கு பொறுப்பு கூற கடமைப்படாமை
9. கட்சி அரசாங்கம் இல்லாமை
ஜனாதிபதி யாப்பு முறையின் நிறைகள்
1. அரசாங்கத்தின் உறுதிப்பாடு – ஜனாதிபதி ஒரு நிலையான பதவிக் காலத்திற்கு தெரிவு செய்யப்படுவதோடு, யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகாலத்திற்கு முன்னர் அவரை குற்ற விசாரணை மூலம் மட்டுமே பதவி நீக்க முடிகின்றது. ஆனால், அம்முறையும் அவ்வளவு எளிதானதன்று என்பதனால் ஜனாதிபதியின் தலைவிதி அடிக்கடி மாறக்கூடிய நிலை சட்டத்துறையின் வாக்குகளில் தங்கியிராமை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டினை ஏற்படுத்துகின்றது.
2. நிறைவேற்றுத்துறையின் செயல் திறன் – நிறைவேற்று அதிகாரம் ஒரு தனி நபரிடம் காணப்படுதல், அவ்வதிகாரத்தை சட்டத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருத்தல் ஆகிய இரு காரணிகளும் இச்செயற்திறன் கூடிக் காணப்படுவதற்கு ஊன்றுகோலாக அமைகின்றது.
3. பலகட்சி முறை நிலவும் நாடுகளுக்கு அதிகம் பொருந்துகிறது. ஏனெனில் பல கட்சி முறையினால் உருவாகும் அரசாங்கத்தின் உறுதியற்ற நிலையினை ஜனாதிபதி முறையினால் தவிர்த்துக்கொள்ள முடிகின்றது.
4. அவசர கால நிலைகளையும், அரசியல் நெருக்கடிகளையும் சிறப்பான முறையில் எதிர்கொள்ள முடிகின்றது. ஏனெனில் நிர்வாக அதிகாரங்கள் ஒரு தனி நபரிடம் காணப்படுவதால் அவசரமாக தீர்மானங்களை மேற்கொண்டு நடைமுறைப்படுத்த முடிகின்றது.
5. அதிகாரத் துஷ்பிரயோகமின்மை – ஜனாதிபதி யாப்பு முறையில் வலுவேறாக்கம் மற்றும் தடைகள் சமன்பாடுகள் பின்பற்றப்படுவதால் ஒரு துறை மற்றைய துறைகளின் அதிகாரங்களை பிரயோகிக்க முடியாது என்பதுடன், அரசாங்க துறைகள் ஒவ்வொன்றும் மற்றைய துறைகளை கட்டுப்படுத்தி செயற்படுவதால் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதில்லை.
6. அமைச்சர்கள் சட்டத்துறை விடயங்களில் பங்குபற்ற வேண்டிய அவசியமின்மையால் தமது முழு கவனத்தினையும் இலாகா நிறுவனங்களுக்கு செலுத்துகின்றன. இதனால் பொதுத்துறை நிர்வாக நோக்கிலும் ஜனாதிபதி முறை சிறப்பாக கொள்ளப்படுகின்றது.
7. ஜனாதிபதி யாப்பு முறையில் சட்டத்துறை நிர்வாகத்துறையினால் கட்டுப்படுத்தும் நிலை காணப்படாமையால் சட்டத்துறை சுதந்திரமாகச் செயற்பட முடிகின்றது.
8. அரசியல் கட்சிமுறையின் செயற்பாடும் பாதிப்பும் குறைந்த மட்டத்தில் காணப்படுதல். ஏனெனில் அரசியல் கட்சிகள் இன்றியும் ஜனாதிபதி முறையை நடைமுறைப்படுத்த முடியும்.
9. பன்முக சமூக முறைக்கு அதிகம் பொருத்தமான முறையாக இருத்தல்.
ஜனாதிபதி யாப்பு முறையின் குறைகள்
1. ஜனநாயகத்தன்மை குறைவானதாகக் காணப்படுதல் – கபினட் யாப்பு முறையோடு ஒப்பிடும் போது ஜனாதிபதி யாப்பு முறை ஜனநாயகத்தன்மை குறைந்ததாகும். ஒரு தனி மனிதனின் கையில் நிறைவேற்று அதிகாரங்கள் ஒன்றுகுவிதல், நிர்வாகத்துறை சட்டத்துறையின் நேரடி கட்டுப்பாட்டுக்கு உட்படாமை, பொறுப்பிலிருந்து விடுபட முடிதல், பதவிக்கால பாதுகாப்பு, அரசியல் கட்சி முறையின் செல்வாக்கு குறைந்த மட்டத்தில் காணப்படுதல் போன்ற காரணிகள் இவ்வாய்ப்பு முறையின் ஜனநாயகத் தன்மையை பாதிக்கின்றது.
2. சட்டத்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்குமிடையில் மோதல் ஏற்படுதல் – ஜனாதிபதி முறையில் சட்டத்துறைக்கும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையில் மோதல் ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகளவு காணப்படுகின்றது. இது தொடர்பாக ஒரு புறம் சட்டத்துறையையும் நிறைவேற்றுத் துறையையும் தொடர்புபடுத்தும் நேரடி இணைப்பாளர் காணப்படாமையும் மறுபுறம் கட்சி அடிப்படையில் நிறைவேற்றுத் துறை ஒரு கட்சியை சேர்ந்ததாகவும், சட்டத்துறை பிறிதொரு கட்சியை சார்ந்ததாகவும் இருக்கும் போது ஏற்படும் பொருந்தாத நிலை பாதிப்புச் செலுத்தும். அச்சந்தர்ப்பத்தில் முழு அரசாங்க முறையினது செயற்பாடும் குன்றும்.
3. ஜனாதிபதி யாப்பு முறையில் நிறைவேற்றுத் துறை சட்டத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதால் சட்டத்துறையின் நிலை பலவீனமடைவதுடன் பொறுப்பற்ற நிலையில் செயற்படவும் முற்படலாம்.
4. நெகிழ்ச்சியற்ற யாப்பு முறை – ஜனாதிபதி முறை நெகிழ்ச்சியற்ற யாப்பு முறையாகும். நெருக்கடி நிலைகளை எதிர்க்கொள்வதற்கு சட்டங்களை அவசரமாக ஆக்கும் படி சட்டத்துறையில் ஜனாதிபதி செல்வாக்கு செலுத்த முடியாது. சட்டத்துறை குறிப்பிட்ட அளவிற்கே நிர்வாகத்துறைக்கு ஆதரவு அளிக்கும். ஆதரவு அளிக்காமலும் இருக்க முடியும்.
5. அரசியல் கட்சிகளின் செயற்பாடு பலவீனமடைதல் – ஒரு புறம் இது சாதகமான நிலையாயினும் மறுபுறம் இது பாதகமான நிலையாகவும் காணப்படும் அரசியல் கட்சிகளின் செயற்பாடு
6. ஜனாதிபதி முறை அதிக பணச்செலவை ஏற்படுத்துகின்றது.
7. எதிர்க்கட்சியின் நிலை பலவீனமடைதல்.
அரசியலமைப்பு மாதிரிகள் அதிகாரப் பகிர்வு ரீதியாக
ஒற்றையாட்சியின் பண்புகள் :
ஒற்றையாட்சியின் நன்மை:
ஒற்றையாட்சியின் குறைபாடுகள்:
சமஷ்டி அரசியல் யாப்பின் பண்புகள் :
சமஷ்டியாட்சியின் நன்மைகள்:
சமஷ்டி முறையின் குறைபாடுகள் :
கூட்டு சமஷ்டியின் பண்புகள்:
கூட்டு சமஷ்டியின் நிறைகள்
கூட்டு சமஷ்டியின் குறைகள்
சமஷ்டி, ஒற்றையாட்சி அரசியல் யாப்புகளோடு சம்பந்தப்படும் முக்கியமான சில இயல்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
A – இரு வேறுபடும் மட்டங்களிலான அரசாங்கம்.
B – ஒரு மத்திய நிலையத்தில் அதிகாரம் குவிக்கப்படுதல்.
C – மத்திக்குப் பணிந்து செயற்படும் பிராந்திய அலகுகள்.
D – பிராந்திய அலகுகளின் ஒத்துழைப்போடு அரசியல் யாப்பு திருத்தங்களைச் செய்தல்.
E – முழு நாட்டிற்கும் தனிநிர்வாக முறை.
F – பல அதிகார நிலையங்கள் நடைமுறையிலிருப்பது.
G – பல இன சமூகத்திற்கு பெருமளவு பொருத்தமானது.
H – மத்திய அரசாங்கம் பிராந்திய அலகுகளுக்கு அதிகாரங்களை வழங்குவது
ஒரு சமஷ்டி அரசியல் யாப்புக்கு மிகவும் பொருத்தமான சேர்மானங்களை இனங்காண்க.
Review Topicநெகிழ்ச்சியான அரசியலமைப்பையுடைய அரசை/ அரசுகளைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகின்ற கூற்றினை இனங்காண்க.
A – A என்ற அரசின் அரசியல் யாப்பின்படி அவ்வரசின் எல்லாச் சட்டவாக்கங்களும் பாராளுமன்றத்தின் இரு சபைகளினதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேற்றப்படும். இவ்வரசியல் யாப்பைத் திருத்துவதற்கும் இருசபைகளினதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படும்.
B – B என்ற அரசினது அரசியல் ஒழுங்கு அரசியல் யாப்பு என்று அழைக்கக் கூடிய எதுவித ஆவணத்தையும் கொண்டிருக்கவில்லை.
C – C என்ற அரசில் மாகாண நிர்வாக அலகுகள் பல நிச்சயமான அதிகாரத்துடன் இருக்கின்றன. அவற்றினை ஒரு தலைப்பட்சமாக கலைப்பதற்கு மத்திய அரசாங்கத்தால் முடியும்.
D – D என்பது பொது, பொருளாதார, தொழினுட்பப் பிரச்சினைகளைப் பற்றிக் கவனமெடுப்பதற்காக நிறுவப்பட்ட,பல்வேறு சுதந்திர அரசுகளின் ஒரு ஒழுங்கமைப்பாகும்.
“C” எனத் தரப்பட்டுள்ள அரசினை நீர் எவ்வாறு வகைப்படுத்துவீர்?
A – A என்ற அரசின் அரசியல் யாப்பின்படி அவ்வரசின் எல்லாச் சட்டவாக்கங்களும் பாராளுமன்றத்தின் இரு சபைகளினதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேற்றப்படும். இவ்வரசியல் யாப்பைத்
திருத்துவதற்கும் இருசபைகளினதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படும்.

C – C என்ற அரசில் மாகாண நிர்வாக அலகுகள் பல நிச்சயமான அதிகாரத்துடன் இருக்கின்றன. அவற்றினை ஒருதலைப்பட்சமாக கலைப்பதற்கு மத்திய அரசாங்கத்தால் முடியும்.
D – D என்பது பொது, பொருளாதார, தொழினுட்பப் பிரச்சினைகளைப் பற்றிக் கவனமெடுப்பதற்காக நிறுவப்பட்ட, பல்வேறு சுதந்திர அரசுகளின் ஒரு ஒழுங்கமைப்பாகும்.
“D” யில் தரப்பட்டுள்ள அரசாங்கத்தின் முறைமையை எவ்வாறு வகைப்படுத்துவீர்?

சமஷ்டியாட்சி முறைமைகளுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – இரு மட்டங்களிலான அரசாங்கங்களின் இருப்பு
B – உள்ளூராட்சி அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரத்தைப் பெறுதல்.
C – இரு மட்ட அரசாங்கங்களும் சுயாதீன ஆட்சிப் பரப்பைக் கொண்டுள்ளன.
D – அதிகாரம் கூடியளவு மத்தியமயப்பட்டிருத்தல்.
E – இறைமை பிரிபடாதிருத்தல்.
F – பிளவுபட்ட சமூகங்களுக்கு அதிகம் பொருத்தமானது.
எழுதப்பட்ட யாப்பின் சிறப்புகளுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அது அரசியல் முறைமைக்கு உறுதிப்பாட்டை வழங்குகிறது.
B – அது யாப்பு விவரணம் பற்றிய வேறுபட்ட சட்டக் கருத்துக்கள் உருவாகுவதைக் குறைக்கிறது.
C – அது ஆட்சியாளர் தான்தோன்றித்தனமானவர்களாக மாறுவதற்குப் பங்காற்றுகிறது.
D – அது பிரசைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பயன்படுகிறது.
கூற்று I – சகலருக்கும் பங்குள்ள ஓர் அரசாங்கமே சனநாயக அரசாங்கமாகும்.
கூற்று II – மக்களுக்காக மக்களினால் மக்களைக் கொண்டு நடாத்தப்படும் அரசாங்கமே சனநாயக அரசாங்கமாகும்.
அரசியல், பொருளாதாரக் கருத்தியல்களின் படி அரசாங்கங்களை வகைப்படுத்தும் முறைகளாவன
A – தாராள ஜனநாயக அரசாங்கங்கள்
B – சில்லோராட்சி அரசாங்கங்கள்
C – நவ தாராளவாத அரசாங்கங்கள்
D – சோசலிச அரசாங்கங்கள்
E – சமூக ஜனநாயக அரசாங்கங்கள்
நிறைவேற்று அதிகாரத்தினைப் பிரயோகிப்பதன் படி அரசாங்கங்கள் வகைப்படுத்தப்படுவது
A – மந்திரி சபை அல்லது பாராளுமன்ற முறை அரசாங்கங்கள் என்றாகும்.
B – சமூக ஜனநாயக அரசாங்கங்கள் என்றாகும்.
C – ஜனாதிபதிமுறை அரசாங்கங்கள் என்றாகும்.
D – கலப்பு நிறைவேற்று அரசாங்கங்கள் என்றாகும்.
E – அனைத்தாண்மை அரசாங்கங்கள் என்றாகும்.
ஒற்றையாட்சி முறையின் பிரதான பண்புகளாவன
A – ஒரு தனி மத்திய அரசாங்கத்தில் இறைமை அதிகாரம் செறிந்திருத்தல்
B – இரட்டைக் குடியுரிமை
C – ஒற்றை நிர்வாக மற்றும் நீதி முறைமை
D – தனித்த அரசியலமைப்பு
E – மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட உள்ளூராட்சி நிறுவனங்கள்
சமஷ்டி முறையின் அடிப்படைகளாவன
A – பலவீனமான மத்திய அரசாங்கம் மற்றும் பலமான சமஷ்டி அலகுகள்
B – அதிகாரப் பங்கீடு
C – எழுதப்பட்ட, நெகிழா யாப்பு
D – அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயற்படும் சுதந்திரமான நீதித்துறை
E – சமஷ்டி அலகுகளுக்குச் சமமான கவனிப்பு
முதலாளித்துவ அரசாங்கத்தின் பிரதான பண்புகளாவன
A – தனியார் சொத்துடைமையை அங்கீகரித்தல்.
B – சுதந்திரமான முயற்சியை அங்கீகரித்தல்.
C – திறந்த சந்தை முறையினை அங்கீகரித்தல்.
D – பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் குறைந்தபட்சத் தலையீடு
E – அரசாங்கம் எதனையும் செய்யாது தனியார் துறையே சகலத்தையும் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டை அங்கீகரித்தல்.
அனைத்தாண்மை அரசாங்கத்தின் பிரதான பண்புகளாவன
A – சுயமான நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்
B – சட்டத்துக்குக் கீழ்படியாத தன்னிகரற்ற ஆட்சி
C – ஆட்சியாளர் பொறுப்புக் கூறாமை
D – நிச்சயமான பொருளாதார, அரசியல் கருத்தியல்களினடிப்படையிலமைந்த ஆட்சி
E – ஆளப்படுவோர் மீது அரச அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு வன்முறையினைப் பிரயோகித்தல்.
பாராளுமன்ற அரசாங்க முறையின் இன்றியமையாத மூலக் கொள்கைகளாவன:
A – தேர்தலில் நிர்ணயிக்கப்படும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் அமைக்கப்படுதல்.
B – அரசாங்கம் பாராளுமன்றின் நம்பிக்கையில் தங்கியிருப்பதனால் பாராளுமன்றுக்குப் பொறுப்புக் கூறும் அரசாங்கமாக இருத்தல்.
C – பொதுவாகப் பாராளுமன்றில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற கட்சியின் உறுப்பினர்களிலிருந்து நிறைவேற்றுத்துறை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுதல்.
D – நிறைவேற்றுத்துறை கூட்டுத்தன்மையுடையதாக இருத்தல்.
E – அரசாங்கத்தின தலைவரான பிரதம மந்திரி அரசின் தலைவர் மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி ஆகிய பதவிகளை வகித்தல்.
ஜனாதிபதி அரசாங்க முறையின் அடிப்படை மூலக்கொள்கைகளாவன:
A – நிறைவேற்றுத்துறையும் சட்டத்துறையும் இரு வேறுபட்ட தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்படுதல்.
B – யாப்பின் மூலம் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டத்துறைகளுக்கு ஒன்றிலிருந்து இன்னொன்று சுயாதீனமாக இரு அதிகாரப் பரப்புகள் ஒப்படைக்கப்படுதல்.
C – யாப்பின் மூலம் நிறைவேற்று ஆணையதிகாரம் ஜனாதிபதியிடம் குவிந்திருத்தல்.
D – அரசு மற்றும் அரசாங்கத் தலைவர் என்ற இரு பதவிகளும் ஜனாதிபதிப் பதவியில் ஒன்று குவிக்கப்பட்டிருத்தல்.
E – ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்குச் சட்டத்துறை திறன் பெற்றிருத்தல்.
அனைத்தாண்மை (Totalitarian) அரசாங்கத்தின் பிரதான பண்புகளாவன: – பிழையான கூற்று
Review Topicஎதேச்சதிகார அரசாங்கத்தின் அடிப்படைப் பண்புகளாவன :
A – தெளிவான அரசியல், பொருளாதார, சமூகத் தொலைநோக்கு காணப்படாமை.
B – போட்டிகர அரசியல் கட்சி முறைமையொன்று இல்லாமை.
C – சகாய நியமன முறைமையினடிப்படையில் அரசாங்கம் நிலவுதல்.
D – காலாகாலத் தேர்தல்கள் மூலம் ஆட்சியாளர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுதல்.
E – ஆட்சியாளன் சகல சட்டவாக்க, நிறைவேற்று, நீதி அதிகாரங்களைத் தனது விருப்பின் படி பிரயோகித்தல்.
ஒற்றையாட்சி அரசாங்க முறையொன்றின் பிரதான பண்புகளாவன :
A – மத்திய அரசாங்க நிறுவனங்களில் அரசியல் ஆணையதிகாரம் ஒன்று குவிதல்.
B – அரசியல் யாப்பின் மூலம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் உள்ளூராட்சி அரசாங்க முறை நிலவுதல்.
C – இறைமை அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கத்தின் தனியுரிமை நிலவுதல்.
D – மத்திய அரசாங்கத்தினால் மட்டும் தேசத்தின் நலன்கள் முன்வைக்கப்படுதல்.
E – ஒற்றைக் குடியுரிமையும் சட்ட முறைமையும் நீதித் துறையும் சிவில் சேவையும் நிலவுதல்.
சமஷ்டி அரசாங்க முறையொன்றின் பிரதான பண்புகளாவன :
A – ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரு மட்ட அரசாங்கங்கள் நிலவுதல்.
B – மத்திக்கும் ஓரத்துக்குமிடையில் இறைமை பங்கீடு செய்யப்பட்டிருத்தல்.
C – ஓர அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்துக்குக் கீழ்ப்பட்டதாக இருத்தல்
D – மத்தியினதும் ஓரங்களினதும் அதிகாரங்கள், பணிகள் மற்றும் பொறுப்புகள் அடிப்படைச் சட்டத்தின் மூலம் பங்கிடப்பட்டிருத்தல்.
E – மத்திக்கும் ஓரத்துக்குமிடையில் எழும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு ஒரு நடுத்தீர்ப்பாளர் என்றவகையில் ஒரு சுதந்திரமான நீதித்துறை நிலவுதல்.
மந்திரி சபை அரசாங்க முறையிலுள்ள உண்மை நிர்வாகமானது :
A – சட்டமன்றினால் அதன் பெரும்பான்மைக் கட்சியின் உறுப்பினர்களிலிருந்து தெரிவு செய்யப்படுகிறது.
B – அரசியல் நிர்வாகம் என்று அழைக்கப்படுகிறது.
C – நாம நிர்வாகத்தின் பெயரால் நிறைவேற்றுப் பணிகளை நடைமுறைப்படுத்துதல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
D – நிறைவேற்றுப் பணிகள் தொடர்பாக சட்டமன்றுக்குக் கூட்டாகப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளது.
E – சட்டமன்றில் நிறைவேற்றப்படும் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் பதவியகற்றப்பட முடியும்.
ஜனாதிபதி அரசாங்க முறை என்பது :
A – தாராள ஜனநாயகத்தினை அமுல்படுத்துவதற்குள்ள பாராளுமன்ற அரசாங்க முறைக்கான ஒரு மாற்று முறையாகும்.
B – சட்டமன்றுக்குப் பொறுப்புக் கூறாத ஜனாபதிபதி என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு நிறைவேற்றுத்துறையின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது.
C – செயற்றிறன் மிக்கதாயினும் ஜனநாயகத் தன்மை குறைந்த அரசாங்க முறை எனக் கருதப்படுகிறது.
D – சட்டத்துறைக்கு நிறைவேற்றுத்துறைக்குமிடையில் சேய்மையான தொடர்பினைக் கொண்ட ஒரு முறையாகும்.
E – 1958 இல் டி கோல் யாப்பின் மூலம் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
மந்திரி சபை அரசாங்க முறை என்பது:
A – நாம மற்றும் உண்மை என்ற இரு நிறைவேற்றுப் பகுதிகளைக் கொண்டதாகும்.
B – கூட்டுப் பொறுப்பு மற்றும் தனிப்பட்ட பொறுப்பு என்ற இரு மூலக்கொள்கைகளின் அடிப்படையில் செயற்படும்.
C – வெற்றிகரமான செயற்பாட்டுக்கு அரசியல் ஒருமைத் தன்மையை வேண்டுகிறது.
D – அரசாங்கத்தினுள் மந்திரி சபையின் சர்வாதிகாரம் தோன்றும் போக்கினைக் காட்டி நிற்கின்றது.
E – சிறப்பாக ஒழுங்கமைந்த இரு கட்சி முறையின் கீழ் வெற்றிகரமாகச் செயற்படும்.
ஜனாதிபதி அரசாங்க முறை என்பது:
A – மந்திரி சபை முறையை விட அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை உத்தரவாதப்படுத்தும்.
B – அரசியல் கட்சிகளின் செல்வாக்குச் செலுத்தலைக் குறிக்கும்.
C – சமூகப் பலதன்மையுடைய நாடுகளுக்குச் சாலவும் பொருந்தும்.
D – ஜனநாயக ஆட்சியை ஓரளவு பலவீனப்படுத்தும்.
E – வலு வேறாக்கத்தின் அடிப்படையில் செயற்படும்.
சமஷ்டி அரசாங்கம் என்பது
A – பல மட்டங்களிலான அரசாங்கங்களுக்கிடையில் செங்குத்தான அதிகாரப் பகிர்வினை அடிப்படையாகக் கொண்டதாகும்.
B – அதிகார வேறாக்கம் பற்றிய பிறிதொரு வகையாகும்.
C – பல்வேறு இனக் குழுக்களை ஓர் அரசியல் முறைமைக்குள் ஒன்றிணைப்பதற்கு உதவுகிறது.
D – வேற்றுமையோடு ஒற்றுமையை ஒன்றிணைக்கும் ஒரு முறை எனக் கருதப்படுகிறது.
E – ஒருமைத் தன்மையான சமூகங்களையுடைய நாடுகளுக்குப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது.
ஒற்றையாட்சி என்பது
A – ஒரு தனித்த அதிகார நிலையத்தினைத் தளமாகக் கொண்டமைந்ததாகும்.
B – தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டு தேசிய ஒருமைப்பாட்டினை விருத்தி செய்வதற்கு உதவுகின்றது.
C – ஒரு தனித்த நிர்வாக மற்றும் நீதி முறைமையைப் பேணுவதற்கு உதவுகின்றது.
D – பிரதேச மூலவளங்களைத் தேசிய கொள்கைகளினூடாகச் சமமாகப் பயன்படுத்துவதற்கு உதவுகின்றது.
E – பன்முகச் சமூகங்களையுடைய பெரிய அரசுகளுக்கு அதிகம் பொருந்துகிறது எனக் கருதப்படுகிறது.
மந்திரி சபை அரசாங்க முறைமை என்பது
A – நாம மற்றும் உண்மை என்ற இரு நிறைவேற்றுப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
B – செயற்றிறன் மிக்கதும் ஜனநாயகத் தன்மை குறைந்ததுமான அரசாங்க முறைமை எனக் கருதப்படுகிறது.
C – உண்மை நிறைவேற்றுப் பகுதியை நியமிக்கும் நாம நிர்வாகியினால் தலைமை தாங்கப்படுகிறது.
D – நிறைவேற்றுத்துறை சட்டத்துறைக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருப்பதால் பொறுப்புடைய அரசாங்கம் எனக் கருதப்படுகிறது.
E – அரசின் தலைவரும் அரசாங்கத்தின் தலைவரும் வேறுபடுத்தப்பட்ட ஓர் அரசாங்க முறைமையாகும்.
ஜனாதிபதி அரசாங்க முறைமை என்பது
A – ஜனாதிபதி என்ற தனித்த நிறைவேற்றுப் பகுதியால் தலைமை தாங்கப்படுகிறது
B – நேரடியாகத் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று மற்றும் சட்டத் துறைகளைக் கொண்டதாகும்.
C – நிறைவேற்று மற்றும் சட்டத் துறைகளுக்கிடையில் சேய்மையான தொடர்பினை வெளிப்படுத்துகிறது.
D – ஜனநாயகத் தன்மை குறைந்ததும் செயற்றிறன் மிக்கதுமாகும் எனக் கருதப்படுகிறது.
E – அரசியல், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நாடுகளுக்குப் பொருத்தமான முறைமையாகும்.
அனைத்தாண்மை அரசாங்கத்தின் பிரதான பண்புகளாவன,
A – தனிமுதன்மை அதிகாரம் ஒரு தனி நபரிடம் குவிந்திருத்தல்.
B – ஆட்சியாளன் சட்டத்துக்கு மேலானவனாகவும் யாப்புறு வரையறைகளுக்கு அப்பாற்பட்டவனாகவும் இருத்தல்.
C – ஒரு தனிக் கட்சியின் ஆதிக்கத்துடன் கூடிய போட்டிக் கட்சி முறை
D – தன்னிச்சையாகவும் தடைகளின்றியும் அரச அதிகாரத்தைப் பிரயோகித்தல்.
E – சமூக மற்றும் தனி மனித இருப்பின் சகல பகுதிகளிலும் பரவிய அரசியல் கட்டுப்பாடு நிலவுதல்.
முதலாளித்துவ அரசாங்க முறைமையின் பிரதான பண்புகளாவன
A – சந்தைச் சக்திகளின் அடிப்படையில் பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்தல்.
B – உற்பத்திச் செல்வத்தில் தனியுடைமை நிலவுதல்.
C – பயன்பாட்டுப் பெறுமதியை விட சந்தைப் பெறுமதியினால் பண்டங்களினதும் சேவைகளினதும் விலைகள் நிர்ணயிக்கப்படுதல்.
D – சந்தைச் சக்திகளைக் கட்டுப்படுத்துவதில் அரசு முழுமையாகத் தவிர்ந்திருத்தல்.
E – மூலப்பொருள் சார்ந்த நலன்கள், இலாபத்தை உச்சப்படுத்தல் ஆகிய சக்திகளினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு முறைமையாக இருத்தல்.