சோல்பரி அரசியல் திட்டம் அந்நியரால் உருவாக்கப்பட்டமை, சோல்பரி அரசியற் திட்டத்தின் படி பிரித்தானிய அரசாங்கம் இலங்கை தொடர்பாக பல உரிமைகளை கொண்டிருந்தமை, பாராளுமன்றம் சட்ட ஆக்கம் தொடர்பாக போதிய இறைமையைக் கொண்டிராமை, நியமன உறுப்பினர் பதவிகள் மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு தடையாக இருந்தமை, நீதிப் புனராய்வு பெற்ற நீதித்துறை பாராளுமன்றத்தின் சுதந்திரத்திற்கு தடையாக இருந்தமை. அடிப்படை உரிமைகள் சம்பந்தமான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் காணப்படாமை முன் வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டுகளாகும்.
அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்
1. மக்கள் இறைமை
2. அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்
3. அரச கொள்கையின் தத்துவங்கள்
4. அரசியலமைப்பு நீதிமன்றம்
5. தேசிய அரசுப் பேரவை
6. குடியரசு ஜனாதிபதி
7. அமைச்சரவை
8. மொழியும் மதமும்
9. பொதுச் சேவை
10. நீதிச்சேவை
1972ம் ஆண்டு அரசியல் திட்டத்தில் ஆட்சி செய்யும் அதிகாரம் அதாவது இறைமை மக்களிடம் உள்ளது என குறிப்பிடப்பட்டது. அரசியல் திட்டத்தில் மக்களின் இறைமை பின்வரும் வாக்கியத்தினால் வெளியிடப்பட்டது. “இலங்கை மக்களாகிய நாங்கள் மக்களிடமிருந்து அதன் முழுவலுவினையும் அதிகாரத்தையும் பெறுவதற்கு இந்நாட்டு மக்களாகிய நாம் எமக்குள்ள சுதந்திரத்தையும் சுய ஆதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு இவ் அரசியல் அமைப்பை அமைத்து சட்டமாக்கி எமக்கு அளித்துக்கொள்கின்றோம்” எனக் குறிப்பிட்டது.
இதில் கூறப்பட்டுள்ள இறைமைத் தத்துவத்தின் படி ஆட்சி செய்யும் அதிகாரம் அதாவது இறைமை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட தேசிய அரச பேரவையில் செயற்படுத்தப்படும். இந்த வகையில் இதுவே அரச அதிகாரத்தின் மீயுயர் கருவியாக இருக்கும். மக்களின் சட்ட ஆக்க அதிகாரம், மக்களின் நிர்வாக அதிகாரம், மக்களின் நீதி அதிகாரம் என்பவற்றை இதுவே செயற்படுத்தும்.
மக்களின் சட்ட ஆக்க அதிகாரத்தை தேசிய அரசுப் பேரவை நேரடியாகவும், மக்களின் நிர்வாக அதிகாரத்தை தேசிய அரசுப் பேரவையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவையின் ஊடாகவும், மக்களின் நீதி அதிகாரத்தை அரசியலமைப்பின் மூலமும் தேசிய அரசுப் பேரவையின் மூலமும் உருவாக்கப்பட்ட நீதிமன்றங்களினூடாகவும் செயற்படுத்தும்
நன்மைகள்
1. மக்களிடம் ஆட்சி செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் மக்களாட்சிக் கோட்பாடு தடையின்றி செயற்பட உதவும் ஒன்றாக உள்ளது.
2. சட்ட சபை தொடர்பாக சோல்பரி அரசியல் யாப்பில் இருந்த தடைகள் இங்கு நீக்கப்பட்டு உள்ளன.
3. இலங்கை தொடர்பாக பிரித்தானியாவிற்கு இருந்த அனைத்து சிறப்புரிமைகளும் நீக்கப்பட்டு அவை இலங்கை குடியரசின் மீது ஒப்படைக்கப்பட்டன.
4. நீதித்துறையின் அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளின் கைகளில் வழமைக்கு மாறாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறைபாடுகள்
வலுவேறாக்கம் அல்லது அதிகாரப் பிரிவினை என்ற கோட்பாடு பின்பற்றப்படுவதற்கு பதிலாக வலு ஒன்றாக்கமே நடத்தப்பட்டுள்ளது. தேசிய அரசுப்பேரவை அரச அதிகாரத்தின் அதி உயர் கருவியாக உருவாக்கப்பட்டமை.
இவ் அரசியல் அமைப்பிலேயே முதன் முதலாக அடிப்படை உரிமைகள் எனும் பகுதி சேர்க்கப்பட்டது. அரசியல் அமைப்பின் 18(1) பிரிவு பின்வரும் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் பற்றி எடுத்துரைக்கின்றது.
1. சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள், சட்டத்தின் மூலம் கிடைக்கும் சமமான பாதுகாப்பிற்கு உரிமையுடையவர்கள்.
2. சட்டப்படியின்றி ஆள் எவரும் உயிரையோ சுதந்திரத்தையோ, பாதுகாப்பையோ இழக்க முடியாது.
3. சட்டப்படியின்றி பிரஜைகள் எவரும் காவலில் வைக்கப்படவோ சிறையில் அடைக்கப்படவோ தடுத்து வைக்கப்படவோ முடியாது.
4. ஒவ்வொரு பிரஜைகளுக்கும் சிந்தனை செய்யும் சுதந்திரம், மனசாட்சியின் படி பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பன உண்டு. இந்த உரிமை எந்த ஒரு சமயத்தை போதிக்கவும், பின்பற்றுவதற்கும் உள்ள உரிமையையும் உள்ளடக்குகின்றது.
5. தமது சொந்த கலாசாரத்தை அனுசரிக்கவும், அபிவிருத்தி செய்யவும் பிரஜைகளுக்கு உரிமைகள் உண்டு.
6. பிரஜைகள் ஒவ்வொருவருக்கும், அமைதியான முறையில் ஒன்று கூடும் உரிமை உண்டு.
7. பிரஜைகள் ஒவ்வொருவருக்கும், பேச்சு, கருத்து வெளிப்பாடு, வெளியீட்டு உரிமையுண்டு.
8. பிரஜைகள் எவருக்கும் அரசாங்க உள்ளூராட்சி கூட்டுத்தாபனம் சேவையில் பதவி பெறும் தகுதியானவர்களுக்கு இனம், மதம், சாதி, பால் ஆகிய காரணமாக பாரபட்சம் காட்டக்கூடாது. எனினும் அத்தகைய சேவைகளின் நலன் கருதி குறிப்பிட்ட பதவிகள் ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு வழங்கப்படலாம்.
9. ஒவ்வொரு பிரஜைகளும் இலங்கை முழுவதிலும் தடையின்றி பிரயாணம் செய்வதற்கும், தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும் சுதந்திரம் உண்டு
தேசிய ஒற்றுமையும், மேன்மையும், தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், பொதுப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாத்தல், அரவ கொள்கையின் தத்துவங்களை நடைமுறைப்படுத்துதல் என்பவற்றின் நலனை முன்னிட்டு அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் கட்டுப்படுத்தப்படலாம் எனக் கூறப்பட்டது.
நன்மைகள்
1. இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முதலாக மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் பல இங்கு சேர்க்கப்பட்டுள்ளது.
3. அரசாங்கத் துறைகளில் இன ரீதியான இன மத சமூக அரசியல் ரீதியான பாராபட்சம் ஏற்படுவதை அது தடுக்கிறது
4. அவசர கால நிலைகளில் காணப்படுகின்ற மட்டுப்பாடுகள் அக்காலங்களில் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றது.
குறைபாடுகள்
1. அடிப்படை உரிமைகள் சம்பந்தமான மட்டுப்பாடுகள் அடிப்படை உரிமைகளில் கூறப்பட்டுளய்ளவற்றையே கேலிக்குள்ளாக்குன்ற ஒன்றாக உள்ளது.
2. அரசியவமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் சம்பந்தமான ஏற்பாடுகள் இலங்கை பிரஜைக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
3. மக்களுக்குள்ள உரிமைகளில் சிலவற்றை மாத்திரம் குறிப்பிட்டுவிட்டு ஏனையவை குறிக்கப்படாமல் விடப்படுகின்ற போது ஏனைய உரிமைகள் மக்களுக்கில்லையா? என்கின்ற சந்தேகம் இங்கு எழுகின்றது.
4. மக்கள் தனிப்பட்ட சொத்தினை சேர்ந்து வைத்திருப்பதற்கான உரிமை இங்கு வழங்கப்படவில்லை.
அரசியல் அமைப்பின் 5ம் அத்தியாயம் அரச கொள்கையின் தத்துவங்கள் பற்றிகுறிப்பிடுகின்றது.
பின்வருவன அதன் இலக்குகள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
1. குழு உரிமைகள் உட்பட பிரஜைகளின் உரிமைகளையும்ää சுதந்திரங்களையும் முழுமையாக அடைந்து கொள்ளல்
2. தொழில் செய்யும் வயதடையடைந்ந எல்லா பிரஜைகளும் முழுமையான வேலை வசதிகளை பெறல்.
3. முழு நாட்டினதும் தொடர்ச்சியான அபிவிருத்தி.
4. பிரஜைகளிடையே சமூக உற்பத்தியை சமமாக பங்கிடுதல்.
5. உற்பத்தி கருவிகள், பங்கீடு, பரிமாற்றம் என்பவற்றில் அரச சொத்து, கூட்டுறவு சொத்து போன்ற கூட்டுடைமை மாதிரிகளால் சொத்தினை அபிவிருத்தி செய்வதன் மூலம் மனிதனை மனிதன் சுரண்டுவதை முடிவுக்குக் கொண்டு வருதல்.
6. மக்களின் உள கலாசார அந்தஸ்துகளை உயர்த்துதல்.
7. நல் வாழ்வை அடைவதற்காக தனிப்பட்ட முறையிரும் கூட்டாகவும் மனித இயல் அளவினை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு உகந்த முறையில் சமூகத்தை ஒழுங்குபடுத்தல்.
மேற் கூறப்பட்ட இவ் அத்தியாயம் பின்வரும் தத்துவங்களையும் உள்ளடக்கியிருந்து:
1. இலங்கையின் ஆள்புல மேன்மை, ஒற்றமை, இறைமை, தன்னாதிக்கம் என்பவற்றை பாதுகாத்தல்
2. இன, மத, சமூக குழுக்கள் உட்பட இலங்கை மக்களின் பல்வேறு பகுதியினரிடையேயும், கூட்டறவையும் பரஸ்பர நம்பிக்கையும் ஊக்குவிப்பதன் மூலம் தெசிய ஒற்றுமையினை பலப்படுத்த முயற்சித்தல்.
3. பொhருளாதார சமூக முன்னுரிமைகள், சமமின்மை, சுரண்டல் என்பவற்றை நீக்கி எல்லா பிரஜைகளுக்கும் சம வாய்ப்புக்களை வழங்க முயற்சித்தல்.
4. நீதி, நிர்வாகம், சிவில் நிர்வாகம் என்பன உட்பட தேசிய வாழ்வின் சகல மட்டங்களிலும் மக்கள் பங்கு பற்றுவதற்கு எல்லா வாய்ப்புகளையும் வழங்குவதன் மூலம் மக்களின் ஜனநாயக கட்டமைப்பினை பரவலாக்கி பலப்படுத்துதல்.
5. மக்களின் மொழிகள், கலாசாரங்கள் என்பனவற்றின் அபிவருத்திகளுக்கு உதவுதல்.
6. சமூக பாதுகாப்பு, பொதுநலன் என்பவற்றை உறுதிப்படுத்தல்.
7. சகல மதங்களைச் சார்ந்தவர்களும் தமது மத தத்துவங்களின்படி நடைமுறைஙயில் வாழ்வதற்கு அவசியமான பொருளாதார சமய சூழ்நிலைகளினை உருவாக்குதல்.
8. சமாதானத்தையும் சர்வதேச கூட்டுறவினையும் ஊக்குவித்தல்
இவ் அத்தியாயத்தின் 17வது பிரிவு மேற் குறிப்பிட்ட அரச கொள்கையின் தத்துவங்கள் எத்தகைய சட்ட பெறுமதிகளும் அற்றவை என எடுத்துரைக்கின்றது. இதனால் இவை மீறப்படும் போது எந்த நீதிமன்றத்திலும் இது தொடர்பாக கேள்வி எழுப்ப முடியாது.
நன்மைகள்
1. அடித்தள மக்களின் நலன்களை பேணக்கூடிய வகையிலான கொள்கைகள் கொள்கைகள் உருவாக்கப்பட்டன.
2. உள்நாட்டு ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் சமாதானம் நிலைபெறுவதற்கான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறைபாடுகள்
1. தனியார் சொத்துடைமையை பேணக்கூடிய ஏற்பாடுகள் இதில் காணப்படவில்லை.
2. இனப் பிரச்சனை நாட்டில் தலை தூக்கியிருந்த ஒரு காலகட்டத்தில் அப்பிரச்சனை தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் எவையும் இதில் காணப்படவில்லை.
3. இவ் ஏற்பாடுகள் சட்ட பெறுமதி அற்றவையாக இருப்பதனால் நடைமுறையில் போதிய பயனற்றவையாக காணப்படுகின்றன.
சோல்பரி அரசியல்திட்டத்தில் பாராளுமன்றத்தினால் இயற்றப்படும் சட்டங்களை மறுசீராய்வு செய்யும் அதிகாரம் அதாவது நீதிப்புனராய்வு செய்யும் அதிகாரம் சாதாரன நீதிமன்றங்களுக்கு கூட இருந்தது.
இவ் அரசியல் அமைப்பு நீதிமன்றத்தின் பிரதான நோக்கம் தேசிய அரசுப் பேரவையில் விவாதிக்கப்படும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு முரணானதா இல்லையா என்பது தொடர்பாக தேசிய அரசுப் பேரவைக்கு ஆலோசனை வழங்குதலேயாகும்.
குறிப்பிட்ட சட்டம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்மானிப்பதாலும் அதனை 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் அதிகாரம் தேசிய அரசுப் பேரவைக்கு இருந்தது.
இவ் அரசியலமைப்பு நீதிமன்றம் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் 5 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களின் சம்பளம் தேசிய அரசுப் பேரவையினால் நிச்சயிக்கப்பட்டு திரட்டு நிதியின் மீது பொறுப்பாக்கப்பட்டது.
இம் மசோதாக்களை சபாநாயகர் அல்லது உதவிச் சபாநாயகர் அரசியல் அமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அரசியலமைப்பு நீதிமன்றம் குறிப்பிட்ட மசோதா அரசியலமைப்பிற்கு துரணானது அல்லது அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல. அல்லது அரசியல் அமைப்பிற்கு முரணானது என்பதழல் சந்தேகம் உண்டு எனும் தன்னுடைய ஆலோசனையை அந் நீதிமன்றக் கூட்டம் கூடியதிலிருந்து 24 மணித்தியாலத்திற்குள் சபாநாயகருக்கு அறிவித்தல் வேண்டும்.
இம் மசோதாக்கள் பற்றிக் குறிப்பிட்ட மசோதா, தேசிய அரசுப்பேரவையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு 7 நாட்களுக்குள் சபாநாயகருக்கு அறிவித்தல் வேண்டும். சபாநாயகர் இம் மசோதாவை பரிசீலனை செய்யும்படி அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்.
இத்தகைய மசோதாக்கள் தொடர்பாக பின்வருவோர்கள் சபாநாயகரூடாக அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு மனுகன்களை அனுப்பலாம்.
i. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் அல்லது 20ற்குக் குறையாத பேரவை உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு இலங்கை பிரஜைகள் எவரும் சட்டமா அதிபர் சபாநாயகர் தாமாகவே குறிப்பிட்ட மசோதா அரசியல் அமைப்பிற்கு முரணானது எனக் கருதினால், அரசியல் அமைப்பு நீதிமன்றத்தின் அறிவுரைக்கு அனுப்பலாம்.
இத்தகைய மசோதாக்கள் தொடர்பான அறிவுரைகளை அரசியலமைப்பு நீதிமன்றம் இரண்டு வாரத்திற்குள் சபாநாயகருக்கு அறிவித்தல் வேண்டும்.
அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முடிவு இறுதியானதாகும். இது தொடர்பாக பின்னர் நாட்டில் நீதியை நிர்வகிக்கும் எந்த நிறுவனமும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், தேசிய அரசுப் பேரவை மட்டும் அரசியலமைப்பு நீதிமன்றம் முரணானது எனத் தீர்ப்பளித்தாலும் குறிப்பிட்ட சட்ட மூலத்தை 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்.
நன்மைகள்
1. இவ்வரசியல் அமைப்பு நீதிமன்றத்தின் முடிவு இறுதியானதாகும். இது தொடர்பாக பின்னர் நாட்டில் நீதியை றிர்வகிக்கும் எந்த நிறுவனமும் கேள்வி எழுப்ப முடியாது.
2. அரசியல் யாப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் 2/3 பெரும்பான்மையுடன் தேசிய அரசுப் பேரவை அதனை நிறை வேற்றலாம் என்பது மக்களாட்சிக் கோட்பாட்டினை வலுப்படுத்துவதாக உள்ளது.
3. அரசியல் அமைப்பு மீறல் தொடர்பாக ஆட்சேபனை கிளப்புவதற்கு மக்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டமையானது இந் நடவடிக்கையில் மக்களின் பங்கு பற்றலையும் ஊக்குவிக்கச் செய்கிறது.
4. மசோதா தொடர்பாக பின் ஆய்வு வழங்கப்பட்டமையானது தேசிய அரசுப் பேரவையின் சட்ட இறைமையை பாதுகாப்பதாக உள்ளது.
குறைபாடுகள்
1. அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அறிவுரையை 2/3 பெரும்பான்மையினால் தேசிய அரசுப் பேரவை மீறலாம் என்பது தேசிய அரசுப் பேரவையின் உயர் அதிகாரத்தைக் காட்டி நின்றாலும் அரசியலமைப்பு நீதிமன்றத்தைக் கேலிக்கு உள்ளாக்கியுள்ளது.
2. சபாநாயகருக்கு அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் விடயம் தொர்பாக விசேட அதிகாரம் இருப்பதால் (எல்லா அதனைச் சட்ட ஆக்க முயற்சிகளைச் சீர்குலைப்பதற்கு பயன்படுத்த முடியும்.
தேசிய அரசுப் பேரவையின் அங்கத்தவர் எண்ணிக்கை வலையறுக்கப்பட்டு இருக்கவில்லை. இதன் அங்கத்தவர் தொகையை காலத்திற்கு காலம் “தேர்தல் மாவட்ட வரையறை ஆலோசனைக் குழு” தீர்மானிக்கும் எனக் கூறப்பட்டது.
1970ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்பு சட்டசபையில் 151 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும், 6 நியமன உறுப்பினர்களுமாக மொத்தம் 157 பேர் இடம் பற்றி இருந்தனர்.
1977ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது இவ் அங்கத்தவர் தொகை 168 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.
தேசிய அரசுப் பேரவையின் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் கூடும் 1வது பேரவையின் கூட்டத்தில் சபாநாயகர், உதவிச் சபாநாயகர், குழுக்களின் தலைவர்கள் என்போர் தெரிவு செய்யப்படுவார்கள். குறைந்தது ஒரு வருடத்தில் ஒரு தடவையாவது தேசிய அரசுப் பேரவை கூட்டப்பட வேண்டும். 4 மாதங்களுக்கு மேற்பட்ட மாதங்களுக்கு பேரவையின் அமர்வினை ஒத்தி வைக்கும் பிரகடனம் அடுத்த அமர்விற்கான திகதியையும் குறிப்பிட வேண்டும்.
சட்டங்களை இயற்றுதலே தேசிய அரசுப் பேரவையின் பிரதான கடமையாகும். எந்தச் சட்டத்தையும் இயற்றும் அதிகாரம் அதற்கு இருந்தது. இது தொடர்பாக சோல்பரி அரசியல் திட்டத்தில் காணப்பட்ட தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டது. இயற்றப்படும் சட்டங்கள் அவை ஒழுங்காக இயற்றப்பட்டுள்ளன என சபாநாயகர் சான்றுரை அளித்தாலே போதும், அது அமுலக்கு வரக்கூடியதாக இருந்தது. இயற்றப்படும் சட்டங்கள் தொடர்பாக எந்தவொரு நீதிமன்றத்திலும் கேள்வி எழுப்ப முடியாது. சட்ட மூலங்கள் அரசியலமைப்பிற்கு முரணாக இருந்தால் மட்டுமே அரசியல் அமைப்பு நீதிமன்றம் தனது ஆலோசனைகளைக் கூறமுடியும். இவ் ஆலோசனைகளைக் கூட 2/3 பெரும்பான்மையால் நிராகரிக்கும் அதிகாரம் தேசிய அரசுப் பேரவைக்கு இருந்தது.
புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல், நீதிச் சேவை ஆலோசனைச் சபையின் ஆலோசனைக்குப் புறம்பாக அமைச்சரவை நியமனங்களை மேற்கொள்ளின் அது தொடர்பான விளக்கங்களைக் கேட்டல், குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் கால எல்லையை நீடித்தல் என்பன தேசிய அரசுப் பேரவையின் நீதித்துறை தொடர்பான அதிகாரங்களாகும்.
1. பிரதிநிதிகள் அனைவரும் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக உள்ளனர்.
2. செனற் சபை நீக்கப்பட்டமையானது சட்ட ஆக்க விடயத்தில் காலதாமதத்தை இல்லாமற் செய்வதோடு தேசிய அரசுப்பேரவையின் இறைமையும் வலுவாக்கியது.
3. பல அங்கத்தவர் தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டமை அப்பிரதேசத்தில் வாழ்கின்ற பல்வேறு இனங்களும் தங்களினுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தது.
4. தேசிய அரசுப்பேரவை முழுமையான இறைமை படைத்த சட்ட சபையாக மாற்றப்பட்டது.
1. தேசிய அரசுப்பேரவை அரச அதிகாரத்தின் மீயுயர் கருவியாக விளங்குகின்றமை அரசியல் அமைப்பில் வலுவேறாகப் பண்பினை இல்லாமல் வெய்கின்றது.
2. சட்ட ஆக்கம் தொடர்பாக சிறுபான்மை இனங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை இது தொடர்பாக சோல்பரி
அரசியலமைப்பின் 7ம் அத்தியாயம் குடியரசின் ஜனாதிபதிபற்றிக் கூறுகின்றது. இவ் ஜனாதிபதியே அரசின் தலைவராகவும், ஆட்சித்துறையின் தலைவராகவும், ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவராகவும் விளங்குவார். இவர் பிரதம மந்திரியினால் பெயர் குறித்து நியமிக்கப்படுவார். வாக்களிக்கத் தகுதியுள்ள இலங்கைப் பிரஜை எவரையும் பிரதமர் ஜனாதிபதியாக பெயர் குறித்து நியமிக்கலாம். இவ்வாறு நியமிக்கப்படும் ஜனாதிபதி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தல் வேண்டும்.
பதவிக்காலம் முடிவதற்கிடையில் பிரதமர் தேசிய அரசுப் பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து வாதாரண பெரும்பான்மையுடன் ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்கலாம். பதவி நீக்கும் தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் கொண்டு வரப்படின் அத்தீர்மானம் உறுப்பினர்களில் அரைப்பங்கினர் கையொப்பம் இட்டதாக இருப்பதோடு 2/3 பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டு இருத்தல் வேண்டும்.
சட்ட ஆக்க சபையான தேசிய அரசுப் பேரவையைக் கூட்டுதல், கலைத்தல், ஒத்திவைத்தல், தேசிய அரசுப் பேரவையில் பிரசங்கத்தை நிகழ்த்துதல், தேசிய அரசுப் பேரவையின் சடங்கு முறையான இருக்கைகளுக்கு தலைமை தாங்குதல், அவசர கால நிலைகளில் அவசர காலச் சட்டங்களை இயற்றுதல்.
பிரதமரையும் ஏனைய அமைச்சர்களையும் நியமித்தல், வெளிநாட்டு தூதுவர்களை நியமித்தல், இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்களை அங்கீகரித்தல், அரச உயர் அதிகாரிகளை நியமித்தல், அரச சேவை ஆலோசனைச் சபை, அரச சேவை ஒழுக்காற்றுச் சபை உன்பவற்றின் உறுப்பினர்களைநியமித்தல், முப்படைத் தளபதிகளை நியமித்தல், போர்ப் பிரகடனம் செய்தல், சமாதானம் செய்தல், நாட்டின் பகிரங்க இலட்சினையை வைத்திருத்தல், காணி நன்கொடைகளை வழங்குதல்.
1. ஜனாதிபதியை பெயரளவு நிர்வாகியாக மாற்றியமையானது மக்களின் சபையான தேசிய அரசுப் பேரவையிடம் அதிக அதிகாரம் வருவதற்கான வாய்ப்பினை உருவாக்கியது.
2. ஜனாதிபதியை பிரதமர் நியமிக்கின்றமையானது. இலங்கையின் இறைமையை பாதுகாப்பதோடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் நியமிக்கின்றமையால் மக்களாட்சிக் கோட்பாட்டிற்கும் வலுச் சேர்ப்பதாக உள்ளது.
3. பாராளுமன்ற அரசாங்க முறையில் எப்போதும் பெயரளவு தலைவர் ஒருவர் இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஜனாதிபதி இதனை நிறைவு செய்தது.
1. சட்டங்களிற்கு கையொப்பமிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கொடுக்கப்படவில்லை.
2. ஒரு பெயரளவு நிர்வாகியாகவே கருதப்பட்டார்.
3. ஜனாதிபதியை பிரதமர் நியமிப்பதால் அவர் பிரதமருக்கே விசுவாசமாக இருப்பார் ஒழியää நாட்டு மக்களுக்கு விசுவாசமாக இருப்பார் எனக் கூற முடியாது.
4. ஜனாதிபதியிடம் அதிக அதிகாரம் இருந்த போதும் அவற்றினை பிரதமரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ள வேண்டி இருப்பதனால் அவ்வதிகாரங்கள் நடைமுறையில் பயனற்றவையாகும்.
பிரதமரையும் ஏனைய அமைச்சரவையையும் கொண்ட குழுவே அமைச்சரவை என அழைக்கப்பட்டது. இதன்தலைவராக பிரதமர் விளங்கினார். பொதுத்தேர்தல் முடிந்தவுடன் தேசிய அரசுப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையோரின் ஆதரவினைப் பெற்றவர் ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்படுவார். பின்னர் இவரது ஆலோசனையின் பேரில் ஏனைய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர் அமைச்சர்கள் நியமிக்கப்படும் போது அவர் தேசிய அரசுப்பேரவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் இல்லாவிடின் நியமனம் நடைபெற்று 6 மாதங்களுக்கிடையில் தேசிய அரசுப்பேரவை உறுப்பினராக அவர் வர வேண்டும்.
தேசிய அரசுப்பேரவைக்கு தேவையான சட்ட மூலங்களை உருவாக்குதல், உருவாக்கிய சட்டமூலங்களைச் சம்பந்நப்பட்ட அமைச்சரின் ஊடாக அல்லது அரசாங்கக் கட்சி உறுப்பினர்களின்ஊடாகத் தேசிய அரசுப் பேரவையில் அது தொடர்பான விவாதம் நடைபெறும் போது தமது பக்கத்தினை நியாயப்படுத்தி விவாதங்களில் கலந்து கொள்ளுதல், தேசிய அரசுப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அமுல்படுத்துதல், அவ்வாறு அமுல் நடத்தும் போது தேசிய அரசுப்பேரவைக்குப் பதில் கூறக் கூடியவாறு நடந்து கொள்ளல்.
1. அரச அலுவலர்களின் நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, பதவி நீக்கம், ஒழுக்காற்றுக்கட்டுப்பாடு என்பன அமைச்சரவையின் மீது பொறுப்பாக்கப்பட்டதோடு இது தொடர்பாக தேசிய அரசுப் பேரவைக்குப் பதில் அளிக்கவும் வேண்டும்.
2. கீழ் நிலை நீதிமன்ற நீதிபதிகளது நியமனம், இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பனவும் அமைச்சரவையின் மீது பொறுப்பாக்கப்பட்டது.
3. அரசசேவை ஆலோசனைச்சபை, அரசசேவை ஒழுக்காற்றுச்சபை, நீதிச்சேவை ஆலோசனைச்சபை, நீதிச்சேவை ஒழுக்காற்றுச்சபை என்பனற்றின் செயலாளர்களை நியமிக்கும் பொறுப்பும் அமைச்சரவை மீது பொறுப்பிக்கப்பட்டது.
1. மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர். இது மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது.
2. அமைச்சரவை தேசிய அரசுப்பேரவைக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளமையானது அமைச்சரவை தன்னிச்சையாக தொழிற்படுவதை தடுக்கிறது.
குறைபாடுகள்
1. அரசசேவை சம்பந்தமான பொறுப்புக்கள் அமைச்சரவையின் மீது பொறுப்பாக்கப்பட்டதால் அதிகார துஷ்பிரயோகம், அரசியல் பழிவாங்கல்கள், லஞ்சம், ஊழல் என்பன உருவாவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
2. திறமை படைத்தவர்கள் புறக்கணிப்பிற்கு உள்ளாவதற்கான நிலைமை தோற்றம் பெற்றது.
3. சிறுபான்மை இனத்தவர் ஒருவர் பிரதமராக வருவதென்பது நடைமுறையில் இயலாததாக உள்ளது.
4. அமைச்சர்களின் நியமனம், பதவி நீக்கம், தொடர்பாக பிரதமர் சர்வாதிகாரியாக தொழிற்படக்கூடிய நிலை உள்ளது.
5. பலகட்சி அரசாங்கம் ஏற்பட்டால் கூட்டரசாங்கத்தில் இணைந்து கொண்ட கட்சிகளுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படுகிற போது அரசாங்கம் பலவீனம் அடையக்கூடிய நிலை ஏற்படும்.
பிரதமரே அரசின் உண்மைத்தலைவராக விளங்குகின்றார்.
அரசாங்கக் கட்சியின் தலைவர், அமைச்சரவையின் தலைவர் எனும் பதவிகளை வகிப்பதனூடாக அரசின் முழுச்செயற்பாட்டையும் கட்டுப்படுத்தும் வல்லவராக இவர் விளங்குகின்றார்.
தேசிய அரசுப்பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவரே பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றார்.
சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்
பிரதமர் ஜனாதிபதிக்குச் சிபாரிசு செய்வதின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே தேசிய அரசுப் பேரவையைக் கலைக்கலாம். நிதிமசோதா தேசிய அரசுப் பேரவையில் தோற்கடிக்கப்படும் போதும், முதல் அமர்வின் போது அரசாங்கக் கட்சியின் கொள்கை விளங்கவுரை தோற்கடிக்கப்படுகின்ற போதும் பிரதமர் தேசிய அரசுப் பேரவையைக் கலைக்குமாறு சிபாரிசு செய்யலாம்.
மேலும் தேசிய பேரவையைக் கட்டுப்படுத்துதல், வழிநடத்டதுதல், அரசாங்கக் கட்சியின் பேச்சாளர்களைத் தெரிவு செய்தல், விவாதங்களில் பங்கு பற்றுதல் என்பனவும் பிரதமரின் அதிகாரங்களாகும்.
இதைவிட தேசிய அரசுப் பேரவைக்கான நேர சூசியினைத் தயாரித்தல், அவசர காலச் சட்டங்களை இயற்றுதல் என்பனவும் பிரதமரின் அதிகாரங்களாகும்.
நிர்வாகத்துறையான அமைச்சரவையின் தலைவராகப் பிரதமரே விளங்கினார். இதனூடாக நிர்வாகத்துறை முழுவதையும் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பிரதமர் கொண்டிருந்தார். அமைச்சர்களை நியமித்தல் மாற்றதல், நீக்குதல், அமைச்சரக்களுக்குரிய அமைச்சுக்களை ஒதுக்குதல், மாற்றுதல் என்பனவற்றில் பிரதமர் பூரண அதிகாரம் உடையவராக விளங்கினார். இதைவிட அரசின் கொள்கைகளைத் தீர்மானித்தல், தேசிய அரசுப்பேரவையினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அமுல்படுத்துதல்.
மொழி
1972 ம் அண்டு அரசியல் திட்டத்திலேயே சிங்கள மொழி அரச கரும மொழி என முதன் முதலாகக் குறிப்பிடப்பட்டது. இதற்கு முன்னர் 1956 ம் ஆண்டு தொடக்கம் சிங்கள மொழி அரச கருமமொழியாக இருந்தாலும் இது பாராளுமன்றச் சட்டமாகவே இருந்து வந்தது. இவ் அரசியல் திட்டத்தின் மூலம் முதன் முதலாக அரசியல் திட்ட அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அதே வேளை தமிழ் மொழியின் உபயோகம் 1958ம் ஆண்டின் 28ம் இலக்கத் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கிணங்க இருக்கும் எனவும் கூறப்பட்டது.
சட்டவாக்க மொழியைப் பொறுத்தவரை இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் சிங்கள மொழியிலேயே இருத்தல் வேண்டும் என் கூறப்பட்டது. இதே வேளை இயற்றப்படும் ஒவ்வொரு சட்டத்திற்கும் தமிழ் மொழி பெயர்ப்பு ஒன்று இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டது.
நீதிமன்ற மொழியைப் பொறுத்தவரை இலங்கையிலுள்ள நீதிமன்றங்கள், நியாய சபைகள் எல்லாவற்றிலும் அதன் மொழி சிங்கள மொழியாக இருத்தல் வேண்டும் எனக் கூறப்பட்டது. அதே வேளை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் அங்கு வேறு வகைகளில் ஒழுங்கு செய்யலாம் எனக் கூறப்பட்டது. அங்குள்ள நீதிமன்றங்களில் வழங்குரைகள், விண்ணப்பங்கள், பிரேரணைகள், மனுக்கள் என்பவற்றை தமிழிலும் சமர்ப்பிக்கலாம் என்பதுடன் வழக்கு நடவடிக்கைகளில் தமிழிலும் பங்கு பற்றலாம். ஆனால் அத்தகைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அதன் பதிவேடுகளின் பொருட்டு சிங்கள மொழிபெயர்ப்பு ஒன்று இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டது.
மதம்
இவ்வரசியல் திட்டத்திலேயே முதன் முதலாகப் பௌத்த மதம் அரசமதம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன்படி பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமையென்றும் அதேவேளை ஏனைய மதங்களின் சுதந்திரங்கள் பேணப்படும் என்றும் கூறப்பட்டது.
1. பௌத்த மதத்தினை அரச மதம் ஆக்க வேண்டும் என்ற சிங்கள பௌத்த மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
2. பௌத்த மதத்தினைப் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை எனக் கூறப்பட்டுள்ளமையானது அதன் அபிவிருத்திக்கு வாய்ப்புக்களை கொடுத்துள்ளது.
1. பௌத்த மதத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை எனக் கூறப்பட்டமையானது ஏனைய மதம் தொடர்பாக அரசிற்கு எதுவித பொறுப்பும் இல்லை என்ற அர்;த்தத்தை கொடுத்து விடுகிறது.
2. ஏனைய மங்கள் அபிவிருத்தி அடைவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமற் போகிறது.
அரச சேவை உத்தியோகத்தர்களது நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு, பதவி நீக்கம், மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பவற்றிற்கு பொறுப்பாக சோல்பரி அரசியல் யாப்பில் காணப்பட்ட பொதுச்சேவை ஆணைக்குழு அல்லது அரசாங்கச் சேவை ஆணைக்குழு புதிய அரசியல் திட்டத்தில் நீக்கப்பட்டது. இப்பொறுப்புக்கள் யாவும் அமைச்சரவைக்கு மீது பொறுப்பாக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரவைக்கு ஆலோசனைக்கூறஎன “அரச சேவை ஆலோசனை சபை”, “அரச சேவை ஒழுக்காற்றுச் சபை” எனும் இரு சபைகள் உருவாக்கப்பட்டன.
அரச சேவை உத்தியோகத்தர்களது நியமனம், பதவியுயர்வு தொடர்பாக அமைச்சரவைக்கு ஆலோசனை வழக்குதல் அச்சபையின் பிரதான கடமையாகும்.
இச்சபையில் 3 உறுப்பினர்கள் காணப்படுவர். இவர்களில் ஒருவர் இதன் தலைவராக விளங்குவார். இதன் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இவர்கள் மூவரும் பிரதமரின் சிபாரிசின் பெயரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள். இவர்களின் சம்பளம் தேசிய அரசுப்பேரவையால் தீர்மானிக்கப்பட்டு திரட்டு நிதியின் மீது பொறுப்பாக்கப்பட்டது.
அரசசேவை ஒழுக்காற்று சபை
அரச சேவை உத்தியோகத்தர்களது இடம் மாற்றம், பதவி நீக்கம், என்பன தொடர்பாக அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குதலே இச்சபையின் பிரதான கடமையாகும்.
இச்சபையும் 3 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களில் ஒருவர் சபையின் தலைவராக விளங்குவார். அதன் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இவர்கள் 3 பேரும் பிரதமரின் சிபாரிசின் பெயரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர் இவர்களின் சம்பளமும் தேசிய அரசுப்ரேவையினால் தீர்மானிக்கப்பட்ட திரட்டு நிதியின் மீது பொறுப்பாக்கப்பட்டது.
நன்மைகள்
1. அரசசேவை சம்பந்தமான பொறுப்பானது அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட்டமைää மக்களாட்சி கோட்பாட்டிற்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது.
2. அமைச்சரவை தன்னிச்சையாக செயற்படாமல் மேற்படி இரு சபைகளின் ஆலோசனையுடன் மேற்கொள்வதுää தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்குகிறது.
1. அரசசேவை சம்பந்தமான பொறுப்புக்கள் அமைச்சரவையின் மீது பொறுப்பாக்கப்பட்டதால், அதிகாரத் துஷ்பிரயோகம், அரசியல் பழிவாங்கல்கள் என்பன ஏற்படுவதற்கு வழி ஏற்பட்டதோடு லஞ்சம், ஊழல் என்பனவும் உருவாகுவதற்கு வழி ஏற்பட்டன.
2. திறமை படைத்தவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாவதற்கான நிலைமை தோற்றம் பெற்றது.
கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பதவியுயர்வு தொடர்பாக அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கும் சபையே இச்சபையாகும்.
இச்சபை 5 உறுப்பினர்களைக் கொண்டது. பிரதம நீதியரசர் இதன் தலைவராக விளங்குவார். ஏனைய உறுப்பினர்கள் பிரதமரின் சிபாரிசின் பெயரால் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். இவர்களின் பதவிக்காலம் 4 வருடங்களாகும்.
கீழ்நிலை நீதிமன்ற உத்தியோகத்தர்களது பதவி நீக்கம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பன தொடர்பாக அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்குதலே இச்சபையின் கடமையாகும்.
இச்சபை 3 உறுப்பினர்களைக் கொண்டது. பிரதம நீதியரசர் இதனை தலைவராக விளங்குவார். ஏனைய உறுப்பினர்கள் பிரதமரின் சிபாரிசின் பெயரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் 4 வருடங்களாகவும், இவர்களின் சம்பளம் தேசிய அரசுப்பேரவையினால் தீர்மானிக்கப்பட்டு திரட்டு நிதியின் மீது பொறுப்பாக்கப்பட்டது.
மகாதேசாதிபதி – பொருத்தமற்ற கூற்றுத் தொகுதி
A – பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்டார்.
B – அரசாங்கத்தின் தலைவராக இருந்தார்.
C – பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூற கடமைப்பட்டிருந்தார்.
D – பிரித்தானிய முடியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
மகாதேசாதிபதி – பொருத்தமற்ற கூற்றுத் தொகுதி
A – பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்டார்.
B – அரசாங்கத்தின் தலைவராக இருந்தார்.
C – பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூற கடமைப்பட்டிருந்தார்.
D – பிரித்தானிய முடியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
மந்திரி சபை – பொருத்தமற்ற கூற்றுத் தொகுதி
A – பிரதமரால் தலைமை தாங்கப்பட்டது.
B – மகாதேசாதிபதியை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தது.
C – பிரித்தானிய முடிக்கு விடையளிக்கக் கடமைப்பட்டிருந்தது.
D – கூட்டுப் பொறுப்புக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சட்டத்துறை – பொருத்தமற்ற கூற்றுத் தொகுதி
A – ஒரு மன்றைக் கொண்டிருந்தது.
B – இறைமை அதிகாரத்தைப் பெற்றிருந்தது.
C – அரசியல் யாப்பின் 29ஆம் சரத்தில் குறிக்கப்பட்ட வரையறைகளுக்கு உட்பட்டிருந்தது.
D – 2/3 பெரும்பான்மையினர் மூலம் 29 ஆம் சரத்தைத் தாண்டிச் செல்ல முடிந்தது.
1972 யாப்பின் கீழ் இடம்பெற்ற நிறைவேற்றுத்துறைக்குப் பொருந்தும் சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.
A – சட்டத்துறையிலிருந்து தெரிவு செய்யப்பட்டது.
B – மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுதல்.
C – கூட்டு நிறைவேற்றுத் துறை.
D – சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் பதவியகற்ற முடியும்.
E – உலகிலேயே யாப்புசார் பலம் வாய்ந்த நிறைவேற்றுத் துறை.
F – சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் பதவியகற்ற முடியாது.
1972 அரசியல் யாப்பு
A – அரசின் உத்தியோகபூர்வமான பெயரை மாற்றியமைத்தது.
B – பிரித்தானியாவோடு நிலவிய சகல யாப்புசார் தொடர்புகளையும் கைவிட்டது.
C – சிங்களத்தை அரச கரும மொழியாகவும் பௌத்தத்தை அரச மதமாகவும் ஆக்கியது.
D – இலங்கையை சுதந்திரமும் இறைமையும் சுயாதீனமும் உடைய அரசாகப் பிரகடனம் செய்தது.
1972 யாப்புக்கு அடிப்படையாக அமைந்த மூலக் கொள்கைகளாவன
A – வலுவேறாக்கக் கோட்பாடு
B – பாராளுமன்றத்தின் இறைமைக் கோட்பாடு
C – ஜனநாய சோசலிசக் கோட்பாடு
D – பொதுமக்கள் இறைமைக் கோட்பாடு
1972 யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய அரசுப் பேரவை
A – அரச அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கருவியாக இருந்தது.
B – சட்டவாக்க, நிறைவேற்று, நீதி ஆகிய முத்துறை அதிகாரங்களையும் கொண்டிருந்தது.
C – பாராளுமன்றின் இறைமை என்ற மூலக் கொள்கையின் அடிப்படையில் தாபிக்கப்பட்டது.
D – சோல்பரி யாப்பின் கீழிருந்த பாராளுமன்றின் நகலாக அமைந்தது.
1972 யாப்பின் கீழ் நாம நிருவாகி
A – பிரதமரால் நியமிக்கப்பட்டார்.
B – அரசின் தலைவராக இருந்தார்.
C – மசோதாக்களை அங்கீகரிப்பதற்கு அல்லது நிராகரிப்பதற்கு அதிகாரம் பெற்றிருந்தார்.
D – அதிகாரங்களிலும் பணிகளிலும் பலம் வாய்ந்த பதவியாக இருக்கவில்லை.
1972 அரசியல் யாப்பின் முக்கிய பண்புகளாவன
A – ஐக்கிய இராச்சியத்துடனான சகல யாப்புசார் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டமை
B – தேசிய அரசுப் பேரவை அரசின் மீயுயர் தாபனமாக ஆக்கப்பட்டமை
C – அதிகாரக்குவிப்புக்குப் பதிலாக வலுவேறாக்கம் சேர்க்கப்பட்டமை
D – பிரதம மந்திரி எதேச்சாதிகார முறை தாபிக்கப்பட்டமை
1972 அரசியல் யாப்பின் முக்கிய பண்புகளாவன
A – நாம நிர்வாகியை அரசியல் நிர்வாகி நியமித்தமை
B – பகிரங்க சேவை ஆணைக் குழுவினை ஒழித்தமை
C – அரசியல் யாப்பு நீதி மன்றினால் சட்டவாக்கம் பற்றிய நீதிப்புனராய்வு அதிகாரம் மேற்கொள்ளப்பட்டமை
D – நீதி சேவை ஆணைக்குழுவினை ஒழித்தமை
1972 அரசியல் யாப்பு
A – இலங்கையை சுதந்திரமும் இறைமையும் பொருந்திய ஒற்றையாட்சி அரசாகப் பிரகடனம் செய்தது.
B – அரசாங்கப் பொறிமுறையை வலுவேறாக்க முறையினடிப்படையில் தாபித்தது.
C – பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானத்தை வழங்கியது.
D – பிரித்தானியாவுடனான சகல யாப்புறு தொடர்புகளையும் துண்டித்தது.
E – பாராளுமன்ற அரசாங்க முறையைத் தொடர்ந்தும் பேணியது.
1972 அரசியல் யாப்பின் சில பிரதான பண்புகளாவன
A – உண்மை நிர்வாகத்தின் தலைவரால் நியமிக்கப்பட்ட நாம நிர்வாகம்.
B – நிறைவேற்று, சட்டவாக்க, நீதிமுறை அதிகாரங்கள் செறிவாக்கப்பட்ட ஒரு இறைமை மிக்க சட்டத்துறை
C – சட்ட மூலங்களின் யாப்புறு தன்மையைப் பரிசீலிக்கும் அதிகாரத்தினையுடைய ஒரு நீதித்துறை.
D – உறுதிப்படுத்தும் சட்டப் பாதுகாப்பற்ற அடிப்படை உரிமைகள் அத்தியாயம்.
E – ஒரு சமதர்ம ஜனநாயக சமூகத்தினைத் தாபிக்கும் நோக்கினைக் கொண்ட அரச கொள்கைக் கோட்பாடுகள்
1972 யாப்பின் கீழமைந்த சட்ட மன்றுக்குப் பொருத்தமான கூற்றுத் தொகுதியைத் தெரிவு செய்க.
A – தேசிய அரசுப் பேரவை என்று அழைக்கப்பட்டது.
B – தெரிவு செய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
C – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்தது.
D – பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிச்சயமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
E – கலைத்தல் வரையறைகளுக்குட்பட்டதன்று.
F – கலைத்தல் சில வரையறைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
G – அரச அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கரம் என்று கருதப்பட்டது.
H – சட்டவாக்க அதிகாரம் உயர் தன்மை வாய்ந்ததன்று.
I – இருமன்ற முறையினதாகும்.
J – சபையை ஒத்திவைக்கும் அதிகாரம் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்குரியதாகும்.
1972 முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ்
A – நாட்டின் உத்தியோகபூர்வப் பெயரான இலங்கை ஸ்ரீ லங்கா என்று மாற்றப்பட்டது.
B – இலங்கை சுதந்திரமும், இறைமையும் பொருந்திய ஒரு குடியரசாக ஆக்கப்பட்டது.
C – அரசியலமைப்பு நாட்டின் அடிப்படைச் சட்டமாக ஆக்கப்பட்டது.
D – இலங்கைக் குடியரசின் இறைமை மக்களிடத்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டது.
E – மக்கள் இறைமை மக்களினால் தேர்தல்களின் மூலம் பிரயோகிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.
1972 அரசியலமைப்பினை வகுக்கும்போது பயன்படுத்தப்பட்ட அரசியல் கோட்பாடுகளாவன
A – வலுவேறாக்கக் கோட்பாடு
B – பாராளுமன்ற இறைமைக் கோட்பாடு
C – ஜனநாயக சோசலிசக் கோட்பாடு
D – மக்கள் இறைமைக் கோட்பாடு
E – கூட்டுப்பொறுப்புக் கோட்பாடு
1972 முதலாம் குடியரசு யாப்பின் கீழமைந்த அரசாங்க முறையின் சில பண்புகளாவன
A – உண்மை நிர்வாகத்தின் தலைவர் நாம நிர்வாகியை நியமித்தமை
B – நாம நிர்வாகம் உண்மை நிர்வாகத்தை நியமித்தமை
C – பாராளுமன்றின் இறைமைக் கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த தனிமன்றச் சட்டத்துறை
D – சட்டத்தை விவரணம் செய்யும் அதிகாரத்துடன் கூடிய மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமையின் கீழமைந்த நீதி முறைமை
E – அரசியல் நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழமைந்த அரசாங்க சேவை
1972 முதலாம் குடியரசு யாப்பின்கீழ் உருவாக்கப்பட்ட சட்டமன்றமானது
A – தேசிய அரசுப் பேரவை என்றழைக்கப்பட்டது.
B – தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட இருவகை உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
C – அரச அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கருவி என்று யாப்பில் குறிப்பிடப்பட்டது.
D – சட்டவாக்கம், நிறைவேற்றம், நீதி ஆகிய முத்துறை அதிகாரங்களையும் பிரயோகிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தது.
E – குறைந்தது வருடத்துக்கு ஒரு முறையாவது கூட வேண்டியிருந்தது.
1972 முதலாம் குடியரசு யாப்பு இலங்கையின் அரசியல் முறைமைக்கு அறிமுகம் செய்த முக்கிய மாற்றங்களாவன
A – இலங்கையை இறைமைமிக்க சுதந்திரக் குடியரசாக மாற்றியமை
B – இலங்கையை ஓர் ஒற்றையாட்சி அரசு எனக் குறிப்பிட்டமை
C – இலங்கைக் குடியரசின் இறைமை மக்களுக்குரியது என்றும் அதனைத் துறக்கலாகாது என்றும் குறிப்பிட்டமை
D – நீதி முன்புனராய்வு அதிகாரத்தைக் கொண்ட ஓர் அரசியல் யாப்பு நீதிமன்றினை அறிமுகம் செய்தமை
E – நீதிமன்ற விசாரணை அதிகாரத்தைக் கொண்ட அடிப்படை உரிமைகளை மக்களுக்கு வழங்கியமை
1972 முதலாம் குடியரசு யாப்பின் பிரதான பண்புகளாவன:
A – வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியிலிருந்து முழுமையாக விடுபட்டமை
B – இலங்கையை அரசியல் ரீதியாக சுதந்திரமானதும் இறைமையானதுமான குடியரசாக்கியமை
C – பாராளுமன்ற ஜனநாயகத்தினூடாக இலங்கையை சமூக ஜனநாயக அரசாக ஆக்குவதை இலக்காகக் கொண்டமை
D – நீதித்துறையினதும் பகிரங்க சேவையினதும் சுதந்திரத்தை மதிப்பிறக்கியமை
E – இலங்கை அரசின் சமயச் சார்பற்ற தன்மையை மாற்றியமை
இலங்கைத் தேர்தல் தொகுதி முறை பற்றி சரியான கூற்றினை இனங்காண்க. முதலாம் குடியரசு யாப்பின் கீழ்
Review Topic1972 யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட சட்டத்துறை:
A – ஒரு மன்ற முறையினதாக இருந்ததோடு தேசிய அரசுப் பேரவை என்று அழைக்கப்பட்டது.
B – மக்களின் சட்டவாக்க, நிறைவேற்று, நீதி அதிகாரங்களைப் பிரயோகித்தது.
C – மக்கள் இறைமையைப் பிரயோகிப்பதில் சட்டரீதியான வரையறைகளையுடையதன்று.
D – யாப்பினைத் திருத்துவதற்கு அல்லது நீக்குவதற்கு மீயுயர் சட்டவாக்க அதிகாரத்தைப் பெற்றிருந்தது.
E – மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 225 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
1972 முதலாம் குடியரசு யாப்பு : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – அரசாங்கத்தில் பிரித்தானிய இராணியாரின் தலைமைத்துவத்தைத் தொடர்ந்தும் பேணியது.
B – இலங்கைக்கு ஒரு சமஷ்டி அரசாங்க முறையை அறிமுகம் செய்தது.
C – இலங்கையைச் சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஒரு குடியரசாகப் பிரகடனப்படுத்தியது.
D – இலங்கையை ஒரு சமயச் சார்பற்ற அரசாக பெயர் சூட்டியது.
E – இலங்கைக்கு ஒரு புதிய தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தியது.
1972 முதலாம் குடியரசு அரசியல் யாப்பு:
A – பெரிய பிரித்தானியாவுடனிருந்த சகல யாப்புத் தொடர்புகளையும் கையுதிர்க்கும் திருப்பத்தினைக் குறித்து நிற்கின்றது.
B – இலங்கையின் உத்தியோகரீதியான பெயரை “ஸ்ரீ லங்கா” என்று மாற்றியது.
C – சோல்பரி யாப்பின் கீழ் செயற்பட்ட மந்திரி சபை முறையைத் தொடர்ந்து கொண்டு நடத்தியது.
D – நாட்டில் வாழ்ந்த சகல இந்தியத் தமிழர்களுக்கும் குடியுரிமையை வழங்கியது.
E – நீதித்துறையையும் சிவில் சேவையையும் அரசியல் நிறைவேற்றுத்துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தியது.
1972 அரசியல் யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய அரசுப் பேரவை:- பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – சோல்பரி யாப்பின் கீழிருந்த சட்டத்துறையை ஒத்ததாகவிருந்தது.
B – தெரிவுசெய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
C – பாராளுமன்றின் இறைமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தாபிக்கப்பட்ட தாபனமாக இருந்தது.
D – குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு முறையாவது கூட வேண்டும்.
E – சனாதிபதி என்றழைக்கப்பட்ட நாம நிறைவேற்றாளரினால் தலைமை தாங்கப்பட்டது.
கூற்று I – முதன்முறையாக 1972 யாப்பின் கீழ் மாவட்ட நீதிமன்றுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கூற்று II – யாப்பின் 13 வது திருத்தத்துடனான மாகாண உயர் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Review Topicகூற்று I – நாட்டின் இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாக பிரிவுக்கவுன்சிலை 1972 யாப்பு தொடர்ந்தும் ஆக்கியது.
கூற்று II – 1978 யாப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தை உருவாக்கியது.
Review Topicபிரதம மந்திரி
A – தேசிய அரசுப் பேரவையின் நம்பிக்கையை இழப்பின் இராஜினாமாச் செய்ய வேண்டும்.
B – அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும் போது யாப்பையும் தாண்டிச் செயற்படுவதற்கு அதிகாரம் பெற்றிருந்தார்.
C – அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளைத் தீர்மானித்தார்.
D – பொதுத் தேர்தல் முடிவுற்றதும் இராஜினாமாச் செய்தவராகக் கருதப்படுவார்.
நீதித்துறை
A – தேசிய அரசுப் பேரவையின் ஒரு கருவியாக இருந்தது.
B – சட்டத்துறையின் செயற்பாடுகளைக் கேள்விக்கிடமாக்குவதற்கு யாப்பு ரீதியாக அதிகாரம் பெற்றிருக்கவில்லை.
C – குடியரசின் ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் தனியதிகாரத்தைப் பெற்றிருந்தது.
D – சட்டத்துறையில் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் மசோதாக்களின் யாப்புறு தன்மையைப் பரிசீலித்தது.