நவீன சர்வதேச சமூகத்தினுள் எந்தவொரு நாட்டுக்கும் சர்வதேச விவகாரங்களில் தலையிடாது இருக்க முடியாது. அதனை விசேடமான முறையில் கையாள வேண்டும். அதற்கான விசேடமான வெளிநாட்டுக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.
1. அகக் காரணிகள்
2. புறக் காரணிகள்
3. கொள்கை வகுக்கும் காரணிகள்
1. அகக் காரணிகள்
2. புறக் காரணிகள்
1. பிரதான அல்லது அடிப்படை நோக்கம் (Core Values)
– நாட்டின் நிலவுகையை உறுதிசெய்துகொள்ளல்.
– பாதுகாப்பு தொடர்பாக முக்கியமான பிரதேசங்களையும் இடங்களையும் பாதுகாத்துக் கொள்ளல்.
– அரசியல் ரீதியான நிறுவனங்களையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தல்.
– பொருளாதார அபிவிருத்த
2 . நடுத்தர அளவிலான நோக்கங்கள் (Middle class Objectives)
– வர்த்தகத்தை அபிவிருத்தி செய்துகொள்ளல்.
– வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்.
– வெளிநாட்டுச் சந்தையை விரிவுபடுத்தல்.
– நாட்டின் சமூக நலன்களை உயர்மட்டத்திற்குக் கொண்டுவருதல்.
– நாட்டின் கௌரவத்தை சர்வதேச சமூகத்தில் வளர்த்தல்.
3. அகில உலக – நீண்டகால நோக்கங்கள் (Universal Long Range Objectives)
சர்வதேச சமூகத்தினுள் தமது நிலவுகையைப் பேண வேண்டுமென நாம் நம்பும் சமூக சூழலைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்ட நோக்கங்கள்.
1948 இலிருந்து 1971 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டுக் கொள்கையை முடிவுசெய்தலும் தீர்மானித்தலும் அதனைச் செயற்படுத்த முடிவு செய்ததும் தீர்மானித்ததும் அதனை செயற்படுத்த அதிகாரமளிக்கப்பட்டிருந்த பிரதமரினாலாகும். இலங்கையில் வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேண ஒரு அமைச்சு இருக்கவில்லை. அதற்காக பிரதம மந்திரியினால் நிருவகிக்கப்பட்ட திணைக்களம் ஒன்று மாத்திரமே இருந்தது.
1977 இல் வெளிநாட்டுக் கருமங்களை வழிநடத்த தனியான ஒரு அமைச்சும் அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.
இலங்கை 1948 இல் மே, டிசம்பர் மாதங்களிலும் 1949 செப்டெம்பரிலும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் கோரி விண்ணப்பித்தபோது ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை உபயோகித்து அதனை எதிர்த்தது. அவ்வாறு நிராகரித்தமைக்குக் காரணம் இலங்கை ஒரு பரிபூரண சுதந்திரமடைந்த நாடல்ல என்று ரஷ்ய வெளிநாட்டமைச்சர் கூறினார்.
இலங்கையில் அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.கட்சி கடும் கம்யூனிஸ்ட், சமசமாஜ, மார்க்ஸ்வாத எதிர்ப்பு கொள்கையைக் கொண்டிருந்தது. அதேபோன்று அன்று சோவியத் ரஷ்யா உட்பட்ட கம்யூனிஸ்ட் நாடுகளின் எழுச்சி பற்றி மேற்குலக நாடுகளும் அதற்கு சார்பான நாடுகளும் அச்சமடைந்திருந்தன. இந்தியத் தலைவரான பிரதமர் நேரு கம்யூனிஸத்தின் நோக்கம் ஜனநாயகத்தை அழிப்பது என்று கூறியிருந்தார்.
இந்நிலைமைகள் காரணமாக சுதந்திரமடைந்த ஆரம்ப காலத்தில், கம்யூனிஸத்திற்கு எதிரானதும் பிரித்தானியாவிற்கு சார்பானதுமான போக்கு இலங்கை வெளியுறவுக் கொள்கையில் காணப்பட்டது. இதனால் கம்யூனிஸ்ட் நாடுகளுடன் எதுவித ராஜதந்திர தொடர்புகளும் பேணப்படவில்லை. அது மாத்திரமல்ல. எந்தவொரு கம்யூனிஸ்ட்வாதிக்கும் இந்நாட்டுக்கு வரவும் இடமளிக்கவில்லை.
உதாரணம் :
1. கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் 10 ஆது ஆண்டு விழாவிற்கு வருகை தரவிருந்த ரஷ்ய, சீன, பிரான்சு தேச தலைவர்களுக்கு இலங்கைக்கு வர விசா அனுமதி வழங்காமை.
2. கம்யூனிஸ்ட்வாதி எனக் கருதிய பிரித்தானிய சமாதானக் குழுவின் தலைவருக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய விசா மறுக்கப்பட்டமை.
3. கம்யூனிஸ்ட்வாதத்துடன் தொடர்புடைய நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தடை விதித்தமை.
இக்கொள்கையை குறிப்பிட்டளவில் மாற்றியமைத்த இரண்டு சந்தர்ப்பங்களை இக்காலகட்டத்தில் காணமுடிகிறது.
1. சீன அரசை இராஜதந்திர ரீதியில் அங்கீகரித்தமை.
2. 1952 இல் சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் ஏற்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தம்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக சந்தையில் ஏற்பட்ட பாரியளவான அரிசித் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது. 1952 இன் நடுப்பகுதியில் இலங்கை அரசு அரசி கோரி உலக நாடுகளிடம் விண்ணப்பித்த
போதிலும் அதனை எந்த உலக நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் இறப்பர் விலை குறைந்தமையும் இலங்கைக்கு பெரும் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்தது. இச்சமயத்தில் இலங்கை முகங்கொடுத்த நெருக்கடியிலிருந்து விடுபட மேற்படி இறப்பர் அரிசி ஒப்பந்தம் இலங்கைக்கு பெரிதும் உதவியது.
இதன் பின்னரும் கம்யூனிச நாடுகளுடன் எதுவித தொடர்பும் பேணப்படவில்லை. குறைந்த பட்சம் சீனாவுடன் கூட தூதுவர் மட்டத் தொடர்பு உருவாக்கப்படவில்லை.
இதன் பின்னரும் கூட இலங்கையின் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை என 1955 இல் பாண்டுங் மகாநாட்டில் இலங்கை பிரதமர் ஜோன் கொத்தலாவல ஆற்றிய உரையிலிருந்து தெளிவாகிறது.
1956 இல் நடைபெற்ற தேர்தலில் திரு.பண்டாரநாயக்கவின் இலங்கை சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தது. 1960 மார்ச், யூன் காலம் தவிர்ந்த 1965 வரையான காலத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியே பதவியிலிருந்தது.
இக்கட்சி இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பில் செல்வாக்கு செலுத்திய வெளி/ உள் காரணிகள் பலவாகும்.
இக்காலகட்டத்தில் கம்யூனிச நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தக, கைத்தொழில், விவசாய, நிதி உதவிகளைப் பெற்று இலங்கையின் மேற்படி துறைகளை வளர்த்தல்.
இவ்வாறு உருவாக்கிய வெளிநாட்டுக் கொள்கைகளில் இற்றைவரை நிலைத்திருக்கும் கொள்கையாவது,
1965 இல் பதவிக்கு வந்த அரசாங்கம், மேற்படி கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றது. அதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தது. இதற்காகப் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
1970 இல் ஐக்கிய முன்னணி அரசு தேர்தலுக்கு முன்னர், தாம் பதவிக்கு வந்தவுடன், மேற்படி கொள்கைகள் மாற்றமடையுமென அறிவித்தபோதிலும் அவ்வாறு
மாற்றப்படவில்லை.
1965 இன் பின்னர், சர்வதேச மட்டத்தில் நடந்த முக்கிய மாற்றம்
இது தொடர்பான 1970 பதவிக்கு வந்த அரசின் கொள்கை பின்வருமாறு:
இவ்வாறு அந்தந்த காலகட்டத்தில் வெளிநாட்டுக் கொள்கை மாற்றமடைந்த முறையின் அம்மாற்றங்களை ஏற்படுத்துவதில் செல்வாக்கு செலுத்திய காரணிகளும் வெளிக்கொணரக் கூடியவாறு இப்பாடம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அவ்வாறே மேலே விவரிக்கப்பட்டவாறு இன்று இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை எத்திசையில் பயணிக்கும் போக்கைக் கொண்டிருக்கின்றது என்பதும் விளக்கப்பட வேண்டும்.
கூற்று I – 1948 – 1956 காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மேற்கை சார்ந்ததாகவும் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகவும் இருந்தது.
கூற்று II – 1956 இல் S.W.R.D. பண்டாரநாயக்கா அணி சேராக் கொள்கையை அறிமுகஞ் செய்தார்.
Review Topicகூற்று I – அண்மைக்கால வருடங்களில் இலங்கையின் வெளி நாட்டுக் கொள்கையில் அரசியல் நோக்கங்களை விட பொருளாதார நோக்கங்களே முதன்மை இடத்தைப் பெறுகின்றன.
கூற்று II – சோவியத் யூனியனின் வீழ்ச்சி அண்மைக் கால இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைப் போக்கு மாற்றமுறுவதில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தியது.
Review Topicஇலங்கையில் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – வெளிவிவகார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் ஆவார்.
B – பிரதம மந்திரியாவார்.
C – மந்திரி சபையாகும்.
D – வெளிவிவகார அமைச்சராவார்.
E – ஜனாதிபதியாவார்.
கூற்று I – 1948 – 1956 காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மேற்கை சார்ந்ததாகவும் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகவும் இருந்தது.
கூற்று II – 1956 இல் S.W.R.D. பண்டாரநாயக்கா அணி சேராக் கொள்கையை அறிமுகஞ் செய்தார்.
Review Topicகூற்று I – அண்மைக்கால வருடங்களில் இலங்கையின் வெளி நாட்டுக் கொள்கையில் அரசியல் நோக்கங்களை விட பொருளாதார நோக்கங்களே முதன்மை இடத்தைப் பெறுகின்றன.
கூற்று II – சோவியத் யூனியனின் வீழ்ச்சி அண்மைக் கால இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைப் போக்கு மாற்றமுறுவதில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தியது.
Review Topicஇலங்கையில் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – வெளிவிவகார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் ஆவார்.
B – பிரதம மந்திரியாவார்.
C – மந்திரி சபையாகும்.
D – வெளிவிவகார அமைச்சராவார்.
E – ஜனாதிபதியாவார்.