1. பிரித்தானிய அரசியல் அமைப்பின் சிறப்புக்கள்
அ) எழுதப்படாத அரசியல் யாப்பு
ஆ) ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பு
இ) பாராளுமன்ற முறை
ஈ) நெகிழும் அரசியல் யாப்பு
உ) இறைமை படைத்த பாரளுமன்றம்
அ) சாசனங்கள் ஒப்பந்தங்கள் பாராளுமன்ற சட்டங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கள், பொதுச்சட்டங்கள், மரபுகள் ஆகியவை அரசியல் யாப்பின் மூலங்களாக காணப்படுகின்றன.
1. முடி
அ) முடி பிரித்தானியா நாட்டின் அரசின் தரைலவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் விளங்குகிறார்.
அ) பாரளுமன்றத்தை கூட்டுதல், களைத்தல், ஒத்திவைத்தல்.
ஆ) பாரளுமன்றத்தின் இரு சபைகளினதும் கூட்டத்தொடரில் சிம்மாசன பிரசங்க உறையை நிகழ்த்துதல்.
இ) பிரபுக்கள் சபையின் உறுப்பினர்களை நியமித்தல் பாரளுமன்றத்தினால் இயற்றப்படும் சட்டங்களுக்கு இறுதி அங்கிகாரம் வழங்குதல்.
ஈ) பாரளமன்றத்தின் சடங்கு ரீதியான வைபவக்களுக்கு தலைமை தாங்குதல்.
அ) பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை பிரதமராக தெரிவித்தல்.
ஆ) பிரதமரின் சிபாரிசின் பெயரின் ஏனைய அமைச்சர்களை நியமித்தல்.
இ) உயர் நிர்வாக உத்தியோகத்தவர்களை நியமித்தல்.
ஈ) முப்படைத்தலைவர்களை நியமித்தல்.
உ) வெளிநாட்டுத் தூதுவர்களை நியமித்தல்.
ஊ) வெளிநாட்டு உறவுகளை பாதுகாத்தல்
எ) வெளிநாட்டுடன் போர் சமாதானம் உடன்படிக்கைகளை செய்வார்.
ஏ) நாட்டின் பொது இலட்சிணையை பாதுகாப்பார்.
ஐ) காலணித்துவ பொதுநலவாய உறவுமுறைகளை பேணுவார்.
ஒ) கௌரவப்பட்டங்களை வழங்குவார்.
1. உயர் நீதிமன்ற நீதிபதிகளை சட்டப்பிரபுக்களை நியமிப்பார்.
2. பிரிவுக்கவுண்சிலிக்கு மேல் முறையீடு செய்கின்ற நிதி விசாரனைக் குழுவை நியமிப்பார்.
3. இவர் நீதியின் ஊற்றாக விளக்குவார்.
4. குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவர் தண்டனையை குறைப்பார்.
5. பிரித்தானியா முடி அதிகளவான அதிகாரங்களை கொண்டிருத்தாலும் இந்த அதிகாரங்களை பிரதமரின் ஆலோசனையின் படியே செய்வார்.
பிரித்தானிய பாராளுமன்றம் பொது மக்கள் சபை பிரபுக்கள் சபை என்ற இரு மன்றங்களைக் கொண்டது. இதன் அதிகாரம் பற்றிய அடிப்படைக் கோட்பாடு பாராளுமன்றத்தின் இறைமை என்பதாகும்.
De Lome என்பவரின் கருத்துப்படி ஆணை பெண்ணாக்கவும் பெண்ணை ஆணாக்கவும் தவிர்ந்த ஏனைய சகல விதமான சட்டங்களையும் ஆக்கும் வல்லமை பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு உண்டு.
உலக பாராளுமன்றத்தின் தாய் பாராளுமன்றமாக (Mother of Parliament) விளக்குகிறது.
சாதாரண சட்டங்கள்
அ) இந்த சபை கீழ் சபை எனவும் அழைக்கப்படும். முதலாம் மன்றம் எனவும் அழைக்கப்படும். 5 வருடங்கள் பதவிக்காலம் இடைக்காலத்திலும் இச் சபை கலைக்கப்படலாம்.
ஆ) பொது மக்கள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 650 ஆகும்.
அ) பொது மக்கள் சபையே சட்டங்களை இயற்றுகின்றது இந்த சபையில் சாதாரண சட்டங்கள் நிதி சம்மந்தமான சட்டங்கள் சமர்ப்பிக்கப்படும். சாதாரண சட்டங்கள் இரு சபையினாலும் கொண்டுவரப்படும்.
ஆ) வரவு செலவுத்திட்டம் தயாரித்தல்.
இ) தனி மனித உரிமைகளை பாதுகாத்தல்.
ஈ) விவாதங்கள் நடாத்துதல்.
உ) அரசாங்கத்தை கண்காணிப்பது
ஊ) சட்டம் இயற்ற உதவுதல்.
அ) மந்திரி சபையின் வரவு செலவுத்திட்டத்தை ஏற்கும், நிர்வகிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.
ஆ) மந்திரி சபையின் கொள்கை திட்டங்களை நிறைவேற்றும்.
இ) அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுதல்
பிரித்தானியாவில் பிரபுக்கள் சபை இரண்டாம் மன்றம் அல்லது மேற்சபை என்று அழைக்கப்படும்.
பொதுமக்கள் சபை பெற்றுள்ள அதிகாரங்களை விட குறைவான அதிகாரங்களையே பெற்றிருப்பதோடு பொதுமக்கள் சபைக்கு கட்டுப்படும் ஓர் 2ம் மன்றமாக கருதப்படுகிறது.
மொத்தம் இச் சபைக்கு 777 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
1. பரம்பரை பிரபுக்கள்
2. அரச குடும்பத்தை சேர்ந்த பிரபுக்கள்
3. ஆன்மீக பிரபுக்கள்
4. ஸ்கொட்லாந்து பிரபுக்கள்
5. சட்ட பிரபுக்கள்
பிரபுக்கள் சபையின் கூட்டங்களுக்கு சான்சிலர் பிரபு தலமை வகிப்பார் இவர் ஒழுங்கையையும் பாதுகாப்பையும் முன்னெடுப்பார்.
1. இந்த சபைமக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத, மக்களுக்கு பொறுப்பக்கூற கடமைப்படாத ஒரு சபையாகும்.
2. பெருந்தொகையான பணம் இச் சபைக்கு விரயமாகிறது.
3. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தேவையற்ற தடைகளை ஏற்படுத்துகின்ற ஒரு சபையாகும்.
1. சாதாரண மசோதாவை ஆரம்பித்து வைக்கும் அதிகாரம்
2. பொதுமக்கள் சபையில் நிறைவேற்றப்பட்டு அதன் அங்கிகாரத்திற்காக அனுப்பப்படும் மசோதாக்களை நிறைவேற்றுதல்.
3. மசோதாக்களைக் காலதாமதப்படுத்தும் அதிகாரம்
அ) இங்கிலாந்து அரசியல் அமைப்பின் மைல்கல் பிரதமராவார். இவரே மந்திரி சபையின் தலைவராரார். இவர் முதன்மையானவர்களுள் முக்கியமானவராக விளங்குகிறார்.
ஆ) பிரித்தானியப் பிரதமர் முடியினால் நியமிக்கப்படுகிறார். பொதுத்தேர்தலில் கூடியளவு ஆசனங்கள் பெற்ற கட்டிசியின் தலைவர் பிரதமராக நியமிக்கப்படுகிறார்.
இ) பிரதமர் ஆளுமைமிக்கவராகவும், திறமையானவராகவும் அரசியல் அனுபமிக்கவராகவும் அரசாங்கத்தை சிறந்த முறையில் வழிநடத்தும் சாதுரியம் கொண்டவராகவும் விளங்குவார்.
ஈ) கட்சியில் செல்வாக்கும் ஆதரவு கூடியவர்களையும் இயல்பான திறமை சாதுரியம் கொண்டவர்பளையும் அமைச்சர்களாக நியமிக்கிறார்.
உ) மந்திரி சபைக் கூட்டங்களை கூட்டுதல் பிரதமரின் தேசிய பொறுப்பாகும். அரசாங்கத்தின் கொள்கையை உருவாக்கியவரும் இவரே.
ஊ) அரசாங்கத்தின் கொள்கைகளை அதிகாரபூர்வமாக வெளியிடுபவர் பிரதமராவார்.
எ) பிரதம மந்திரி சபையில் தனது அதிகாரத்தை செலுத்த முற்படுவார்.
i) அமைச்சர்களை நியமித்தல் நீக்குதல்.
ii) அமைச்சின் துறைகளுக்கடையில் வரும் வேற்றுமைகளை தீர்த்து வைப்பார்.
iii) அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை வகிப்பார்.
iv) முப்படைகளையும் ஒருங்கிணைப்பார்.
v) வெளிநாடுகளுடன் அதிகார பூர்வமான உறவுகளை வைத்திருப்பார்.
vi) நாட்டின் உயர் நீதித்துறை அதிகாரியான சான்சிலர்பிரபு மேல்நீதிமன்ற பிரபு சட்டத்துறை முதல்வர் அட்டோனி ஜெனரல் போன்றோர்களையும் நீதித்துறை நீதிபதிகளை நியமிப்பார்.
vii) குற்றவாளிகளுயுக்கு மன்னிப்பு வழங்குவார்.
பிரித்தானிய பாராளுமன்ற முறையை சாரந்த நாடாகும். இங்கு நிர்வாகத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை பாராளுமன்றத்தில் இருந்தே தெரிவு செய்யப்படுகின்றது.
அமைச்சரவையின் தலைவர் பிரதமராவார்.
அமைச்சர்களை நியமிக்கும் போது இரண்டுக்கு குறையாத அமைச்சர்கள் பிரபுக்கள் சபையில் இருந்து நியமிக்கப்பட வேண்டும். அவர்களில் ஒருவர் நீதிமந்திரியாக இருக்க வேண்டும்.
அ) சட்டத்துறை தொடர்பான பணிகள்
i) பாராளுமன்றத்தை கூட்டல் கலைத்தல்.
ii) கூட்ட நிகழ்ச்சி நிரலை தயாரித்தல்.
iii) மசோதாக்களை உருவாக்குதல்.
iv) மசோதாக்களை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தல்.
v) அவசர சட்டங்களை இயற்றுதல்.
ஆ) நிர்வாகம் தொடர்பானவை
i) கொள்கைகளை முடிவுகளை தீர்மானித்தல்.
ii) தேசிய சர்வதேச பிரச்சனைகளை தீர்மானித்தல்.
iii) திணைக்கள அமைச்சுக்களை மேற்பார்வை செய்தல்.
iv) வரவு செலவு திட்டத்தை தயாரித்தல்.
v) வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானித்தல்.
இ) நீதித்துறை தொடர்பான அதிகாரம்
i) நீதி சம்பந்தமாக முடிக்கு ஆலோசனை வழங்குதல்.
ii) சான்சிலர் பிரபு நீதியமைச்சராக செயல்படுவார்.
பெரிய பிரித்தானியப் பாராளுமன்றம் – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – சட்டவாக்கத்தில் இறைமையுடையதாகும்.
B – மந்திரி சபைக்குப் பொறுப்புக் கூறுகிறது.
C – சமமான அதிகாரங்களையுடைய இரு மன்றுகளைக் கொண்டுள்ளது.
D – ஒரு வருடத்தில் இரு தடவைகள் கூடுகிறது.
பெரிய பிரித்தானிய பிரதம மந்திரி – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – பொதுநலவாய அமைப்பின் தலைவராவர்.
B – மந்திரி சபையின் தலைவராவர்.
C – கோமறைக் கழகத்தின் தலைவராவர்.
D – பிரபுக்கள் சபையின் தலைவராவர்.
பிரித்தானிய மகா இராணி – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – பிரபுக்கள் சபையால் நியமிக்கப்படுகிறார்.
B – கோமறைக் கழகத்தின் தலைவராவார்.
C – தமது நிறைவேற்றுப் பணிகள் தொடர்பாக பொறுப்புக்கூற மாட்டார்.
D – அரசாங்கத்தின் தலைவராவார்.
பிரித்தானிய அரசியல் யாப்பு – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – முழுமையாக எழுதப்பட்ட ஒரு சட்ட ஆவணமாகும்.
B – இரு மன்றுகளினதும் மூன்றில் இரண்டு பெரும் பான்மையால் திருத்தப்பட முடியும்.
C – நீதிமன்றுகளுக்கு நீதிப் புனராய்வு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
D – நாட்டின் அடிப்படைச் சட்டமாகக் கருதப்படுகிறது.
கூற்று I – பிரித்தானிய அரசாங்கம் முடி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை, இரு மன்றுகளைக் கொண்ட பாராளுமன்றம் ஆகிய மூன்று அங்கங்களை உள்ளடக்கியதாகும்.
கூற்று II – முடி நாம நிருவாகமாகையால் அது உண்மை நிருவாகத்தின் ஆலோசனை மற்றும் விருப்பின்படி செயற்பட வேண்டும்.
Review Topicகூற்று I – பிரித்தானிய அரசாங்கத்தில் பிரபுக்கள் சபை சட்டவாக்கத்திலும் பண விவகாரங்களிலும் வரையறுக்கப்படட் அதிகாரஙக் ளைக கொணட் இரணட் hம ;மனற் மாகும.;
கூற்று II – பிரபுக்கள் சபை சாதாரண மசோதாக்களை ஒரு வருட காலத்துக்குத் தாமதப்படுத்துவதற்கும் நிதி மசோதாக்களைத் திருத்துவதற்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
Review Topicகூற்று I – பிரித்தானிய மகா இராணி ஆயுட் காலத்துக்குத் தெரிவு செய்யப்படும் நாம நிர்வாகியாவார்.
கூற்று II – பிரித்தானிய மகா இராணி அரசின் தலைவர் என்ற வகையில் தமது நிறைவேற்றுப் பணிகளுக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லை.
Review Topicபிரித்தானிய அரசாங்கத்தின் சட்டத்துறையானது:
A – பாராளுமன்றம் என்றழைக்கப்படுகிறது.
B – இரு மன்றுகளைக் கொண்டது.
C – பாராளுமன்றின் இறைமை இறைமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகிறது.
D – தனது சட்டவாக்கப் பணிகள் தொடர்பாக மகா இராணியாருக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.
E – அரசியல் முறைமையில் சட்டவாக்கம் செய்யும் உயர்தன்மை பொருந்திய தாபனமாகும்
கூற்று I – பிரித்தானிய முடி தனது சுயவிருப்பின் பேரில் பாராளுமன்றைக் கலைக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
கூற்று II – பிரித்தானிய முடி பிரதம மந்திரியின் ஆலோசனையின் பேரில் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்.
Review Topicபெரிய பிரித்தானியப் பாராளுமன்றம் – பிழையான கூற்றுகளின் தொகுதி

Review Topic