அரசாங்க அலுவலர்கள் பகிரங்க கூட்டுத்தாபன அலுவலர்கள் உள்ளுர் அதிகார சபை அலுவலர்கள் இவைபோன்ற வேறு நிறுவனங்களின் அலுவலர்கள் என்போர் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார்கள் என்று கூறுகின்ற முறைப்பாடுகளை சட்டத்திற்கிணங்க பரிசீலனை செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கின்ற அதிகாரியே ஒம்பூட்ஸ்மென்ஆவார்.
1944ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாராளுமன்ற சட்டத்தின்படி பொதுமக்கள் முறையீடுகளை நேரடியாக ஒம்பூட்ஸ்மெனுக்கு சமர்ப்பிப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ் ஒம்பூட்ஸ்மென் அரசியல் அமைப்பு பேரவையின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்.
இவரது பதவிக்காலம் 5 வருடங்களாகும்.
இடைக்காலத்தில் இவருக்கெதிரான பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதி இவரை பதவியிலிருந்து நீக்கலாம்.
இவரது சம்பளம் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு திரட்டு நிதியின் மீது பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
இவ் ஒம்பூட்ஸ்மெனின் அறிமுகத்தினால் அரச அதிகாரிகள் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற போது பரிகாரம் பெறக்கூடிய நிலை காணப்படுகின்றது.
அதேவேளை இப்பதவி யாப்பில் காணப்படுகின்ற அடிப்படை உரிமைககை மேலும் வலுப்படுத்துவதாகவுள்ளது.
எனினும் குற்றவாளிக்கெதிராக ஒம்பூட்ஸ்மென் நேரடியாக நடவடிக்கையெடுக்க முடியாத நிலை பாதுகாப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் ஒம்பூட்ஸ்மென் விசாரணையிலிருந்து விலக்கப்பட்டுள்ளமை போன்றவை குறைபாடாக உள்ளது.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்