ஆரம்பம்
மனித வரலாறும் எங்கும் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களினால் உலகில் ஆங்காங்கே, காலத்திற்குக் காலம், யுத்தங்கள் ஏற்பட்டன. மேலும் அவற்றைத் தவிர்க்க மனிதன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டான். இதனை நோக்காகக் கொண்ட பல்வேறு நிறுவனங்களும் நிறுவப்பட்டன. 1914 – 1918 காலப்பகுதியினுள் நடைபெற்ற முதலாம் உலக மகா யுத்தத்தின் விளைவாக அவ்வாறான அமைப்பொன்று உருவாக்கப்படுவதன் தேவை வலுவாக ஏற்பட்டது. இதன் பயனாக 1920 இல் 27 அங்கத்தவர்களைக் கொண்ட சர்வதேச சங்கம் உருவாக்கப்பட்டது.
இதன் அடிப்படை நோக்கம் உலக சமாதானத்தை ஏற்படுத்துவதாக இருந்தபோதிலும் 1939 – 1945 ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இதன்போது அளவிட முடியாத பௌதிக, மானிட வளங்கள் அழிந்து போயின. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை உருவாகியது. 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதியிலிருந்து யூன் 26 ஆம் திகதி வரை சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் பிரகடனம் தயாரிக்கப்பட்டது. பிரகடனத்தின் முன்னுரையில் ஐக்கிய நாடுகளின் அமைப்பை நிறுவுவதன் நோக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக நாடுகளுக்கு உதவும் உரையாடல் குழு போல் செயற்படல்.
மேற்படி குறிக்கோள்களையும் கோட்பாடுகளையும் உள்ளடக்கி வரையப்பட்ட ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் சட்டத்தை ஏற்று 1945 ஆம் ஆண்டு யூன் மாதம் 26 ஆம் திகதி நடத்தப்பட்ட சம்மேளனத்தில் பங்குபற்றிய 50 நாடுகளின் பிரதிநிதிகள் ஒப்பமிட்டனர்.
2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடத்தப்பட்ட புத்தாயிரமாம் ஆண்டின் சம்மேளனத்தின் போது உலகத் தலைவர்கள் பின்வரும் இலக்குகளை அடைய ஒப்புக்கொண்டனர்.
பாதுகாப்புச் சபையின் விதந்துரையின் அடிப்படையில் பொதுச் சபை அங்கத்துவம் வழங்கும். ஒருநாட்டின் அங்கத்துவத்தை இடைநிறுத்தும் அல்லது அங்கத்துவத்தை நீக்கும் அதிகாரம்
பிரகடனத்தில் தரப்பட்டுள்ளபோதிலும், இதுவரை அவ்வாறு செய்யப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 1945 ஆம் ஆண்டில் பிரகடனம் வெளியிடப்பட்ட சமயத்தில் அதில் ஒப்பமிட்ட 54 நாடுகளும் ஆரம்ப அங்கத்தவர்கள் எனப்படுவர். போலாந்து சம்மேளனத்தில் பங்குபற்றாத போதிலும் முதலில் ஒப்பமிட்டது. அதன் பின்னர் ஒப்பமிட்ட நாடுகள் இரண்டாம் வகையினராகக் கருதப்படுவர்.
எந்தவொரு அங்கத்துவ நாடும் இன்றுவரை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து விலகவில்லை. மலேசியாவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக இந்தோனேசியா 1965 இல் ஐக்கிய நாடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியெறிய போதிலும் 1966 இல் மீண்டும் இணைந்து கொண்டது.
ஐக்கிய நாடுகள் சபை 6 பிரதான நிறுவனங்களின் கீழ் ஒழுங்கமைந்துள்ளது. ஆரம்ப பிரகடனத்தின் மூலம் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் கலந்துரையாடும் பிரதான சபை பொதுச்சபையாகும். எல்லா அங்கத்துவ நாடுகளது பிரதிநிதிகள் அதில் கலந்துகொள்வார்கள். ஒரு அங்கத்தவருக்கு ஒரு வாக்கு உரித்தாகின்றது. இன்று இங்கு 192 அங்கத்துவ
நாடுகள் உள.
எந்தவொரு அங்கத்துவ நாட்டுக்கும் மேற்படி குழுவில் அங்கத்துவம் பெறலாம். எல்லா குழுவிற்கும் தலைவர் ஒருவரும் செயலாளர் ஒருவரும் இருக்கின்றனர்.
பாதுகாப்புச் சபை சீனா, பிரான்சு, ரஷ்யா, பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நிரந்தர அங்கத்தவர்களைக் கொண்டது. மேலும் இரண்டு வருட பதவிக் காலத்துக்கு பொதுச் சபையினால் தேர்ந்தெடுக்கப்படும் 10 உறுப்பினர்களையும் கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையின்பிரகடனத்தின்படி பாதுகாப்புச் சபையின் பிரதான பணி சர்வதேச நாடுகளின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுவதாகும்.
ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபை “ஐக்கிய நாடுகள் சபை” என அழைக்கப்படும். இங்கு 54 அங்கத்தவர்கள் உள்ளனர். 3 ஆண்டு பதவிக்காலம் உள்ளது. ஒரு வருடத்திற்கு 1/3 அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒரு அங்கத்தவருக்கு ஒரு வாக்கு உரித்தாகும். பொதுவான பெரும்பான்மை வாக்கு பெறும் முறையில் அங்கத்துவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
நம்பிக்கையாளர் பொறுப்புச் சபை
இச்சபைக்கு ஒப்படைத்துள்ள பிரதான பணி பொறுப்பளிக்கப்பட்ட பிரதேசத்தை நிர்வகிப்பதை மேற்பார்வை செய்தலாகும்.
பொறுப்பளிக்கப்பட்ட பிரதேசத்தின் :
நம்பிக்கை நிதிய சபையின் பிரதான குறிக்கோள்கள் பின்வருமாறு :
பொதுச் சபையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு இதுவாகும்.
உபாய ரீதியான முக்கிய விடயங்கள் பாதுகாப்பு சபையின் கீழ் இயங்கும்.
பொதுச் சபையினதும் பாதுகாப்புச் சபையினதும் சுதந்திர வாக்குகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நீதிபதிகளினால் நீதிமன்றம் அமைந்துள்ளது. உலகின் பிரதான நீதிமுறைகளை பிரதிநிதிப்படுத்தும் வகையில் இந்நீதிமன்றத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டிலிருந்து இரண்டு அங்கத்தவர்களை நியமிக்க முடியாது. ஒரு நீதிபதியின் சேவைக்காலம் 9 ஆண்டுகளாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நீதி அமைப்பு சர்வதேச நீதிமன்றமாகும். நீதிமன்றமானது அதன் யாப்பின் எல்லாப் பகுதியினருக்கும் திறந்ததாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவம் பெறாத நாடொன்றுக்கும், பாதுகாப்பு சபையின் விதந்துரைப்பின் பேரில் பொதுச் சபைகளால் நிச்சயிக்கும் விசேட நிபந்தனைகளின் கீழ் யாப்பின் பங்குதாரராக முடியும்.
செயலாளர் காரியாலயம்
ஐக்கிய நாடுகளின் பிரதான காரியாலயம் இதுவாகும். இதன் தலைவர் பாதுகாப்புச் சபையின், பரிந்துரையின் கீழ் ஐந்தாண்டு கால பதவிக் காலத்துக்கு பொதுச்சபையினால் நியமிக்கப்படுவார். ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி இவரை பிரதான நிருவாக அதிகாரி என அழைப்பர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பரந்த பணிகளை 5 பிரதான புலங்களினூடாக தொகுப்பார்.
ஐக்கிய நாடுகள் சபையும் அதனோடு இணைந்த நிறுவனங்களும் ஒரு நாட்டில் செயற்படுவது அந்த நாட்டினதும் தேசிய நிறுவனங்களினதும் கோரிக்கைகளை அனுசரித்தாகும்.
1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவம் பெற்றது. இதன் பயனாக இலங்கை சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான நாடாக சர்வதேச மதிப்பிற்கு ஆளானது. அது மாத்திரமல்லாது ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு உதவிகளும் ஏனைய சிறப்பு சேவைகளும் இலங்கைக்கு உரிமையானது.
ஐக்கிய நாடுகள் சபையின், நிபுணத்துவ அங்கத்துவ சபையான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்புக்கள், சர்வதேச விமான சேவை அமைப்புக்கள், உலக சுகாதார நிறுவனம் ஆகியற்றுடன் 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் முக்கிய நோக்கம் இலங்கையின் பொருளாதார, சமூக அபிவிருத்திக்காக ஐக்கிய
நாடுகள் சபையின் உதவியைப் பெற்றுககொள்ளலாகும்.
மேற்படி ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோள் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக ஐக்கிய நாடுகள் சபையின் உதவியைப் பெற்றுக்கொள்ளலாகும். இவ்வொப்பந்தத்தின் கீழ் ஒப்புகொண்ட செயற்பாடுகள் பற்றிய வேலைத்திட்டங்களை ஒழுங்குசெய்தல், அதன் அனுமதியின்படி இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க
வேண்டியதாக இருந்தது. இதன்படி இலங்கைக்கு பின்வரும் வகையிலான உதவிகள் கிடைத்தன.
இதன் பின்னர் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார உதவிகளுக்கு மேலதிகமாக நிபுணத்துவ அறிவைப் பெறும் வாய்ப்பும் ஏற்பட்டது.
இன்று ஐக்கிய நாடுகள் நிலையைச் சேர்ந்த 19 நிறுவனங்கள் இலங்கையினுள் செயற்படுகின்றன. அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் அமைப்புக்களும் (யுனெஸ்கோ போன்ற) காரியாலயங்கள் இலங்கையில் இல்லாத போதிலும் அரச நிறுவனங்கள் ஊடாக அல்லது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனங்கள் ஊடாக அவற்றின் வேலைத்திட்டங்கள்
செயற்படுத்தப்படுகின்றன.
ஐக்கிய நாடுகளின் தொகுதியானது (The United Nations System) ஐக்கிய நாடுகளின் செயலாளர் காரியாலயம், ஐக்கிய நாடுகளின் வேலைத்திட்டங்களும், நிதியங்களும் மற்றும் விசேட நிறுவனங்கள் ஆகியன ஒன்று சேர்ந்து உருவானதாகும்.
ஐக்கிய நாடுகள் தாபனம்
A – 1945 அக்டோபர் 24 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
B – ஆரம்பத்தில் 51 உறுப்பு நாடுகள் கைச்சாத்திட்ட ஒரு சாசனத்தின் கீழ் தாபிக்கப்பட்டது.
C – சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்தும் நோக்குடன் தாபிக்கப்பட்டது.
D – உறுப்பு நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பாதுகாப்புச் சபை
A – ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும் ஏனைய பத்து உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
B – பொதுச் சபை பத்து நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்கிறது.
C – ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் இரத்து அதிகாரத்தைப் பெற்றுள்ளனர்.
D – ரஷ்ய சமஷ்டி, ஐக்கிய அமெரிக்கா, பெரிய பிரித்தானியா, ஜேர்மன், சீனா ஆகியனவே ஐந்து நிரந்தர உறுப்பினர்களுமாவர்.
கூற்று I – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பொதுச் சபை பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும் நியமிக்கிறது.
கூற்று II – செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார்.
Review Topicஐக்கிய நாடுகள் தாபனத்தின் பின்வரும் அமைப்புகள் இலங்கையில் காணப்படுகின்றன – பொருத்தமற்ற கூற்று
Review Topicகூற்று I – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பிரதான நோக்கம் சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுவதாகும்
கூற்று II – 1955 இல் இலங்கை ஐ.நா.வின் ஓர் உறுப்பு நாடாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
Review Topicகூற்று I – ஐ. நா. நிறுவனம் அதன் உறுப்பரசுகள் மத்தியில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், சமூக பொருளாதார அபிவிருத்தி ஆகிய நோக்கங்களுடன் 1950 இல் தாபிக்கப்பட்டது
கூற்று II – ஐ. நா. நிறுவனம் கடந்த ஆறு தசாப்த காலப் பகுதியில் தனது பொருளாதார நோக்கங்களை விட அரசியல் நோக்கங்களிலே அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது.
Review Topicகூற்று I – ஐக்கிய நாடுகள் தாபனம் இன்றைய உலகிலுள்ள மிகப் பெரிய அரச சார்பு நிறுவனமாகும்.
கூற்று II – கடந்த ஆறு தசாப்தங்களாக அரசியல், பொருளாதார சமூகப் பரப்புகளில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் தாபனம் பெரும் பங்காற்றியுள்ளது.
Review Topicகூற்று I – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சாசனம் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஆண், பெண் இரு பாலாரினதும் சமமான உரிமைகள் பற்றிய நம்பிக்கையை மீளுறுதி செய்துள்ளது.
கூற்று II – மனித உரிமைகள் பேரவை ஐ.நா. உறுப்பரசுகளினால் செய்யப்படும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்குள்ள ஐ.நா.வின் பிரதான நிறுவனமாகும்.
Review Topicகூற்று I – ஐ.நா. வின் பிரதான நோக்கம் உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணி நிலை நிறுத்துவதாகும்.
கூற்று II – ஐ.நா. தனது பிரதான நோக்கினில் வரையறுக்கப்பட்ட வெற்றியை அடைந்திருப்பினும் பிறிதொரு உலகப் போரைத் தவிர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
Review Topicகூற்று I – ஐ.நா. பாதுகாப்புச் சபை ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும் எட்டு நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
கூற்று II – எட்டு நிரந்தரமற்ற உறுப்பினர்களும் ஐந்து வருடப் பதவிக் காலத்துச் செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்படுகின்றனர்.
Review Topicகூற்று I – ஐ.நா. நிறுவனம் 1945 இல் அத்திலாந்திக் ஒப்பந்தத்தினால் தாபிக்கப்பட்டது.
கூற்று II – ஐ.நா. நிறுவனம் உலக சமாதானத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இரண்டாம் உலகப் போரின் பின்னர் தாபிக்கப்பட்டது
Review Topicகூற்று I – ஐ.நா.வினால் பேணப்படும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தனிமனிதர்களுக்கும் அரசுக்குமுள்ள தொடர்புகளில் கவனஞ் செலுத்துகிறது.
கூற்று II – அரசுகளின் நிறுவனம் என்ற வகையில் ஐ.நா. தாபனம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்புடையதாகும்.
Review Topicஐக்கிய நாடுகள் தாபனம் – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – பரந்த நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
C – சமாதான நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
D – போர் நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
E – அரசியல் நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
A – தற்கால உலகிலுள்ள பரந்த நோக்கங்களைக் கொண்ட அரச சார்பு நிறுவனமாகும்.
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களையுடை பிராந்திய அரச சார்பு நிறுவனமாகும்.
C – சர்வதேச நிறுவனம் தொடர்பாக நடைபெற்ற சன்பிரான்சிஸ்கோ மாநாட்டில் பங்குபற்றிய 50 நாடுகளின் பிரதிநிதிகளின் அங்கீகாரத்துடன் நிறை வேற்றப்பட்ட சாசனத்தின் அடிப்படையில் 1945 இல் தாபிக்கப்பட்டது.
D – சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்திப் பேணுதல் பிரதான நோக்கமாகும்.
E – டாக்கா பிரகடனத்தின் அடிப்படையில் 1985 டிசெம்பர் 08 ஆம் திகதி தாபிக்கப்பட்டது.
F – உறுப்பரசுகளுக்கு மத்தியில் அரசியல், இராணுவப் பரப்புகளில் ஒத்துழைப்பினை விருத்தி செய்தல் பிரதான நோக்கமாகும்.
G – உறுப்பரசுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற மூலக்கொள்கையின் அடிப்படையில்
செயற்படுகிறது.
H – இருதரப்பு மற்றும் நெருக்கடி விடயங்கள் கலந்துரையாடப்படக்கூடாது என்ற உறுப்பரசுகள் பொதுவாகஏற்றுள்ளன.
I – கம்யூனிச எதிர்ப்பு பிரதான பண்பாகும்.
J – உறுப்பினர்களுக்கிடையிலான உள்ளகப் பிரச்சினை களினால் அதன் முன்னேற்றம் அதிகளவு பலவீன மடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் தாபனத்துக்குப் பொருந்தும் சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.
Review Topicஐக்கிய நாடுகள் தாபனம்
A– தற்கால உலகில் பரந்த நோக்கங்களையுடைய பாரிய அரசு சார்பு நிறுவனமாகும்.
B – 1945 சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் 50 தேசங்களினால் கைச்சாத்திடப்பட்ட ஒரு சாசனத்தின்படி தாபிக்கப்பட்டது.
C – உறுப்பரசுகளின் சமமான இறைமையை ஏற்கும் மூலக்கொள்கையின்படி செயற்படுகிறது.
D – உறுப்பரசுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு சாசனத்தின் மூலம் அதிகார மளிக்கப்பட்டுள்ளது.
E – தற்கால உலகில் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகச் செயற்படும் பிரதான சர்வதேச நிறுவனமாகும்.
A – இன்றைய உலகில் பரந்த நோக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய அரச சார்பு நிறுவனமாகும்.
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட ஒரு நடுத்தர அரச சார்பு நிறுவனமாகும்.
C – உறுப்புரிமை இறைமை பொருந்திய அரசுகளுக்கும் மட்டும் திறந்து விடப்பட்ட ஒரு தன்னார்வ நிறுவனமாகும்.
D – உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுதல் பிரதான நோக்கமாகும்
E – உலகில் ஒரு யாப்பினைக் கொண்டிராத ஒரே அரசச்சார்பு நிறுவனமாகும்.
F – உறுப்பு அரசுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடாக் கொள்கையின் படி செயற்படுகின்றது.
G – ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்த ஓர் அமைப்பாகும்.
H – சமூக – பொருளாதாரப் பரப்புகளில் உறுப்பினர்கள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதைப் பிரதான அக்கறையாகக் கொண்டது.
I – செயலாளர் நாயகத்துக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்ட பிரதான சட்டத்துறைப் பகுதி பாதுகாப்புச் சபையாகும்.
J – 1945 இல் தாபிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கு பொருந்துகின்ற சரியான கூற்றுக்களின் தொகுதியை தெரிவு செய்க.
Review Topicஐக்கிய நாடுகள் தாபனம்:
A – தற்கால உலக முறையில் செயற்படும் மிகப் பெரிய அரசு சார்பு நிறுவனமாகும்.
B – ஐந்து வல்லரசுகளைக் கொண்ட ஒரு குழுவினால் ஆளப்படுகிறது.
C – ஆறு பிரதான உறுப்பமயங்களை கொண்டமைந்துள்ளது.
D – உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணும் பொறுப்பினைப் பெற்ற பிரதான சர்வதேச அரச சார்புத் தாபனமாகும்.
E – உறுப்பரசுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற மூலக்கொள்கையின் அடிப்படையில் செயற்படுகிறது.
ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மனித உரிமைகள் பேரவை:
A – 2006 இல் பொதுச்சபையினால் உருவாக்கப்பட்டது.
B – பொதுச் சபையினால் தெரிவுசெய்யப்படும் 47 உறுப்பினர்களை கொண்டதாகும்.
C – சகல வகையான மனித உரிமைகளையும் விருத்திசெய்து பாதுகாக்கும் பொறுப்பினைப் பெற்றுள்ளது.
D – தொனிப்பொருள் சார்ந்த மனித உரிமைகள் விவகாரங்களை வருடம் பூராவும் கலந்துரையாடும் அதிகாரம் பெற்றுள்ளது.
E – தனது செயற்பாடுகள் தொடர்பாகச் செயலாளர் நாயகத்துக்கு பொறுப்பு கூற வேண்டும்.