அமெரிக்காவின் சட்டவாக்கத்துறையாக காங்கிரஸ் காணப்படுகிறது. இது மக்கள் பிரதிநிதிகள் சபை செனற் சபை ஆகிய இரண்டு சபைகளைக் கொண்டது.
i) இது முதலாம் மன்றம் அல்லது கீழ்சபை என அழைக்கப்படும்.
ii) உறுப்பினரின் எண்ணிக்கை 438 ஆகும்.
iii) உறுப்பினர் இருவருடத்திற்கு ஒருமுறை மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர்.
வேட்பாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்
i) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
ii) 7 ஆண்டுகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
iii) எந்த மானிலத்தில் பேட்டியிடுகிறாரோ அந்த மானிலத்தில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
அ) சட்டவாக்க அதிகாரம்
i) சட்டமாக்கும் அதிகாரத்தை இரு சபைகளிலும் கொண்டு வரலாம்.
ii) நிதி மசோதாவை பிரதிநிதிகள் சபையில் மட்டும் தான் கொண்டு வரலாம்.
iii) அவற்றில் திருத்தங்களை செனற்சபை செய்யலாம்.
ஆ) நிர்வாகத்துறை தொடர்பான அதிகாரம்
i) பிரதிநிதிசபை குறிப்பிட்டளவே நிர்வாகத்துறையை கட்டுப்படுத்தலாம்.
ii) நிர்வாகத்துறை பிரதிநிதிகள் சபைக்கு பொறுப்பல்ல.
iii) வரவு செலவுத்திட்ட நடைமுறையின் போது பிதிநிதிகள்சபை நிர்வாகத்துறையை கட்டுப்படுத்த முடியும்.
(iv) ஜனாதிபதி தேர்வின் போது ஒரு வேட்பாளரும் அறுதிப்பெருண்பான்மையை பெறாத போது முதல் மூன்று நிலையில் உள்ள ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்து கொள்ளமுடியும்.
இ) நீதித்துறை தொடர்பான அதிகாரங்கள்
i) ஜனாதிபதி மீதான குற்ற பிரேரணை இங்கே தான் ஆரம்பிக்கப்படுகிறது.
ii) உயர்நீதி மன்றத்திற்கு கீழுள்ள எல்லா மத்தியரசின் நீதிமன்றங்களும் இச்சபையினால் உருவாக்கப்படுகின்றது.
iii) தலைமை நீதிபதிகளை விசாரணைமூலம் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை இச்சபையிலும் கொண்டுவரலாம்.
இது 2ம் மன்றமென அழைக்கப்படுகின்றது. அமெரிக்க செனட்சபை உலகில் மிகவும் சக்தி வாய்ந்த 2ம் மன்றாக காணப்படுகிறது. அமெரிக்காவில் சம அரசுகளின் பிரதிநிதிகள் மாநிலங்களில் இருந்து தலா இரண்டு உறுப்பினர்களின் அடிப்படையில் 100 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இவ்வுறுப்பினர்களின் பதவிக்காலம் 6வருடமாகும். இரு வருடத்திற்கு ஒரு தடவை 1/3 உறுப்பினர்கள் பதவி விலகி புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்வார்கள்.
1. 30 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல்
2. குறைந்தது 9 வருடம் அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
3. எந்த மானிலத்தின் செனட் சபையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றாரோ அந்த மாநிலத்தின் பிரஜையாக இருக்க வேண்டும்.
அ) அமெரிக்க செனட்சபை நிதி மசோதாக்கள் தவிர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சபைக்குரிய சகல அதிகாரங்களையும் யாப்பினால் பெற்றுள்ளது.
ஆ) சனாதிபதி கைச்சாத்திடும் வெளிநாட்டு ஒப்பந்தங்களை அனுமதிப்பதற்கும் அனுமதிக்காமல் இருப்பதற்குமுள்ள அதிகாரம்.
இ) யாப்பின் பிரகாரம் சனாதிபதி பெற்றுள்ள மதவி நியமன அதிகாரம்.
ஈ) குற்ற பிரேரணைகளை விசாரிக்கும் அதிகாரம்.
உ) பரிசீலனைகளை மேற்கொள்ளும் அதிகாரம்.
செனற்றின் அதிகாரங்கள் மட்டுமன்றி அதன் நிலையும் கௌரவமும் விருத்திவுறுவதில் பின்வரும் விடயங்களும் பாதிப்பு செலுத்தியுள்ளன.
அ) உறுப்பினர்களின் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும் பதவிக்காலம் நீண்டதாயிருந்தாலும்
ஆ) செனற் உறுப்பினர்கள் அதிய உயர் ஏற்படுத்தலுக்குட்படும் மூத்த அரசியல்வாதிகளாக இருத்தல்.
இ) செனற் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படல்
ஈ) செனற் உறுப்பினர்களின் வரையறுக்கப்படாத பேச்சு சுதந்திரம்
உ) தமது நிலைமையையும் கௌரவத்தையும், மதிப்பையும் பாதுகாத்துக் கொள்வது செனட் உறுப்பினர்களின் ஈடுபாடு
i) அமெரிக்க அரசாங்க முறையில் செனற்றும் ஜனாதிபதியும் இணைந்து ஏராளமான விடயங்களை மேற்கொள்ளலாம்.
ii) செனற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபையும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய விடயங்களும் காணப்படுகின்றன ஆனால்
iii) செனற்சபையின் சம்மதம் இன்றி ஜனாதிபதியோ மக்கள் பிரதிநிதிகள் சபையோ எதனையும் மேற்கொள்ள முடியாது. இது செனற்சபையின் நிலையையும் அதன் மதிப்பையும் கருத்துக்கள் நீரூபிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க ஆட்சித்துறையின் தலைவராக நிர்வாகத்தறையின் தலைவராக விளங்குகின்றார்.
இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இவர் மக்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவர் இருமுறை மட்டுமே ஜனாதிபதியாக தேர்ந்தேடுக்க முடியும்.
கட்டம் 1
வேட்பு மனுக்களை பதிவு செய்தலும் கட்சி அபேட்சகர் தகைமையை பெற்றுக் கொள்ளலும்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் மத்திய தேர்தல் ஆணைக்குழுவில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். சுயேட்சை வேட்பாளர்கள் தம்மை நேரடியாகவே பதிவு செய்து கொள்ளலாம். கட்சிகளின் வேட்பாளர்கள் கட்சி அபேட்சக உரிமையைப் பெற்ற பின்னரே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கட்டம் 2
தேர்தல் கல்லூரிக்கு (தேர்வாளர் கழகம்) பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல்.
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நேரடியாக ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதில்லை. தேர்தல் கல்லூரி உறுப்பினர்களே ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்கின்றனர்.
கட்டம் 3
தேர்தல் கல்லூரி உறுப்பினர்கள் ஜனாதிபதியை தெரிவு செய்தல்:
அரசியல் யாப்பின்படி ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கல்லூரி நடாத்தும் தேர்தல் டிசம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் நடைபெறும் தேர்தல் கல்லூரி உறுப்பினர்கள் தமது வாக்கினை தத்தமது மாநிலத்தின் தலைநகரில் அளிப்பர். பின்னர் அவை சீல் வைக்கப்பட்டு வாசிங்டன் நகரிலுள்ள செனட்சபை தலைவருக்கு அனுப்பப்படும்.
கட்டம் 4
வாக்குகளை எண்ணுதல்:
வாக்குகளை எண்ணும் பணி செனட்சபைத் தலைவரின் கீழ் ஜனவரி 6ஆம் திகதி காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் நடைபெறும். ஒருவர் வெற்றி பெறுவதற்கு மொத்த வாக்குகள் 538இல் 270 வாக்குகள் பெறவேண்டும். இத்தொகையை பெற்றவர் வெற்றி பெற்றவராக பிரகனப்படுத்தப்படுவார். அறுதிப் பெரும்பான்மையை எவரும் பெறாவிட்டால் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பெறுப்பு மக்கள் பிரதிநிதிகள் சபையிடம் உப ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுப்பு செனட்சபையிடமும் ஒப்படைக்கப்படும்.
ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுப்பை மக்கள் பிரதிநிதிகள் சபையிடம் ஒப்படைத்த பின்னர் கூடுதல் வாக்குகளைப் பெற்ற முதல் இருவரும் போட்டியில் நிறுத்தப்படுவர். இச் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வாக்கினைப் பெற்றுக்கொள்கின்றது.
கட்டம் 5
ஜனாதிபதி பதவிப்பிரமாணமும் பதவி ஏற்பும்:
வெற்றிபெற்றதாக பெயர் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து பதவியை ஏற்றுக் கொள்வர்.
ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது சுகவீனம் அடைத்தாலோ அல்லது இறந்தாலோ துணை ஜனாதிபதி ஜனாதிபதியாக பதவி ஏற்பார்.
துணை ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாகுமிடத்து ஜனாதிபதி காங்கிரசின் இரு சபைகளின் பெரும்பான்மை ஆதரவு துணை ஜனாதிபதியாக நியமிக்கலாம். ஜனாதிபதி பதவியும் துணை ஜனாதிபதி பதவியும் ஒன்றாக வெற்றிடமாகும் ஆனால் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஜனாதிபதியாக பதவி ஏற்றல் வேண்டும். சபாநாயகரைத் தொடர்த்து பதவி ஏற்கும் உரிமை செனற்சபை தலைவருக்கும் அதன் பின்னர், வரிசைப்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் உண்டு.
அ) காங்கிரஸ் கூட்டங்களுக்கு செய்திகளை அனுப்புதல். சட்டங்கள் இயற்றுமாறு காங்கிரசுக்கு வேண்டுகளை விடுதல்.
ஆ) தேவையான நேரத்தில் காங்கிரசில் உரை நிகழ்த்துதல்.
இ) காங்கிரஸ் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்பதல் அளித்தல் அல்லது கையொப்பமிட மறுத்து திருப்பி அனுப்பலாம்.
ஈ) அவசரகால நிலையின் போது காங்கிரசின் சிறப்புக் கூட்டங்களைக் கூட்டலாம்.
அ) நாட்டின் தலைமை நிர்வாகி.
ஆ) அரசின் தலைவர் அரசாக்கத்தின் தலைவர் ஆயுதம் தாங்கிய முப்படைகளின் தலைவர்.
இ)அமைச்சர்களை நியமித்தல் நீக்குதல் மாற்றுதல்.
ஈ) வெளிநாட்டுத் தூதர்களை நியமித்தல்.
உ) அமெரிக்காவிற்கான வெளிநாட்டு தூதர்களை ஏற்று அங்கீகரித்தல்.
ஊ) அரச உயர் அதிகாரிகளை நியமித்தல் செனற்றின் சம்மதத்துள் இவற்றை மேற்கொள்ளல்.
எ) வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானிப்பர்.
ஏ) வரவு செலவு திட்டங்களை நடைமுறைப்படுத்துவார்.
அ) செனற்சபையின் அனுமதியுடன் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல்.
ஆ) குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல் தண்டனையை குறைத்தல்.
அ) அமெரிக்காவில் இருவகை நீதிமன்றங்கள் காணப்படுகின்றன.
1. மத்திய அரசின் நீதித்துறை
மாவட்ட நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம்
2. மாநில அரசின் நீதித்துறை
மாவட்ட நீதிமன்றம், இடைநிலை மேன் விசாரணை நீதிமன்றம், மானில உயர் நீதிமன்றம்
ஆ) அமெரிக்க ஒரு சமஷ்டி நாடாக இருப்பதனால் அந்த நாட்டின் நீதித்துறை சுதந்திரமானதாக செயல்படுகின்றது.
கூற்று I – ஐக்கிய அமெரிக்கச் சட்டத்துறை இரு மன்ற முறையினதாகும்.
கூற்று II – செனட் உறுப்பினர்கள் மாகாண அரசுகளால் நியமிக்கப்படுகின்றனர்.
Review Topicஐக்கிய அமெரிக்கா சனாதிபதிக்கெதிரான ஒரு குற்றப் பிரேரணையை ஆரம்பித்து வைக்கும் அதிகாரத்தை
Review Topicஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – ஒரு மன்றினைக் கொண்டதாகும்.
B – சனாதிபதியால் கலைக்கப்பட முடியும்.
C – நிதி மசோதாக்களை ஆரம்பிக்கும் அதிகாரத்தைக் கொண்டதன்று.
D – சனாதிபதியோடு இணைந்து சில நிறைவேற்று அதிகாரங்களை நிறைவேற்றுகிறது.
ஐக்கிய அமெரிக்க உயர் நீதிமன்றம் – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – காங்கிரசின் சட்டமொன்றினால் தாபிக்கப்பட்டது.
B – பிரதம நீதியரசரையும் ஏனைய பத்து நீதியரசர்களையும் கொண்டுள்ளது.
C – நீதி அதிகாரத்தை அடிப்படைச் சட்டத்திலிருந்து பெறுகிறது.
D – காங்கிரசின் சட்டங்கள் மீது இரத்து அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார்.
B – காங்கிரசின் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
C – உயர் நீதிமன்றின் தீர்ப்புகளை இரத்துச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
D – காங்கிரசுக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்படுவதில்லை
ஐக்கிய அமெரிக்க செனெற் – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – சில நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதியோடு இணைந்து நிறைவேற்றுகின்றது.
B – உப ஜனாதிபதியால் தலைமை தாங்கப்படுகின்றது.
C – நிதி மசோதாக்களை ஆரம்பிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
D – ஜனாதிபதியால் கலைக்கப்படும்.
கூற்று I – அமெரிக்க செனெற் மன்றம் உலகிலேயே மிகப் பலம் வாய்ந்த இரண்டாம் மன்றமாகக் கருதப்படுகிறது.
கூற்று II – நீதிப் புனராய்வு அதிகாரத்தின் கீழ் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளைச் செல்லுபடியற்றதாக்கும் அதிகாரத்தை செனெற் மன்றம் பெற்றுள்ளது.
Review Topicகூற்று I – ஐம்பதுக்கு மேற்பட்ட மாகாண அரசுகளைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா ஒரு சமஷ்டி அரசாகும்.
கூற்று II – ஒரு வருட முன்னறிவித்தலுடன் சமஷ்டி முறையிலிருந்து வெளியேறும் உரிமையை அமெரிக்க அரசியல் யாப்பு மாகாண அரசுகளுக்கு உத்தர வாதப்படுத்தியுள்ளது.
Review Topicகூற்று I – ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்மின்ஸ்டர் பாராளுமன்றமே மீயுயர் சட்டவாக்குநர் ஆகும்.
கூற்று II – எந்நபரோ அல்லது அமைப்போ வெஸ்ட்மின்ஸ்டர் பாராளுமன்றம் பிறப்பித்த சட்டத்தினை மீறமுடியாது
Review Topicகூற்று I – ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஒரு மாகாண அரசியல் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் ஒரு வேட்பாளர் அம்மாகாண அரசுக்குரிய சகல தேர்வாளர் கழக வாக்குகளையும் பெற்றுக் கொள்வார்.
கூற்று II – எந்த ஒரு வேட்பாளரும் தேர்வாளர் கழத்தின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறாவிட்டால் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுப்பு செனற் சபைக்குரியதாக மாறும்.
Review Topicகூற்று I – ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கு ஒரு குற்ற விசாரணைப் பிரேரணை செனேற் சபையில் 2/3 பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
கூற்று II – குற்றவிசாரணை முறை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
Review Topicஜக்கிய அமெரிக்க சமஷ்டி அரங்கமானது:
A – ஒரு மத்திய அரசாங்கத்தையும் ஐம்பது மாகாண அரசாங்கங்களையும் கொண்டுள்ளது.
B – வலு வேறாக்கம், தடைகள் சமன்பாடுகள் என்ற மூலக்கொள்கைகளின் அடிப்படையில் தாபிக்கப்பட்டுள்ளது.
C – மாகாண அரசுகள் தமது சுய விருப்பின்படி வெளியேறும் உரிமையைக் கொண்ட ஒன்றிய அரசுகளைக் கொண்டது.
D – பலவீனமான மத்திய அரசாங்கத்தையும் பலமான மாகாண அரசாங்கங்களையும் பண்பாகக் கொண்டுள்ளது.
E – பழம் சமஷ்டிவாதத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படும்.