Please Login to view full dashboard.

இறைமை

Author : Admin

19  
Topic updated on 02/15/2019 09:00am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதற்கும் அமுல்படுத்துவதற்கும் அமுல்படுத்தும் வேளை எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஓர் அரசுக்குள்ள சுதந்திர அதிகாரமே இறைமை ஆகும்.

இறைமை என்பதைக் குறிக்கும் Sovereighty என்ற சொல்லானது Soveinete எனும் பிரான்சிய சொல்லிலிருந்தும் Supermitas எனும் இலத்தீன் சொல்லிலிருந்தும் தோன்றியது.

இதன்படி இறைமை என்பது உயர்ந்த அதிகாரம் அல்லது மேலான அதிகாரம் எனப் பொருள் கொள்ளப்படுகின்றது.

இறைமைக் கோட்பாடு வரைவிலக்கணங்கள்

  • வில்லோபி : ஓர் அரசினுடைய உயர்ந்த விருப்பமே இறைமை.
  • வூட்றோ வில்சன் : ஓர் அரசு சட்டங்களை உருவாக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் கொண்டிருக்கும் அதிகாரம் இறைமையாகும்.
  • பேர்கஸ் : ஓர் அரசு தனது மக்களின் மீதும் அம்மக்களின் நிறுவனங்களின் மீதும் செலுத்துகின்ற சுயமானதும் நிறைவானதும் எல்லையற்றதுமான அதிகாரமே இறைமையாகும்.
  • குறோசியஸ் : சட்டத்தால் கட்டுப்பட்டுள்ள மக்கள் மீது அரசு செலுத்தக் கூடிய முழுமையான அதிகாரமே இறைமையாகும்.
  • டூகிற் : அரசின் எல்லைக்குள் எல்லா மக்கள் மீதும் நிபந்தனைகளற்ற ஆணைகளைப் பிறப்பிக்கும் உரிமையே இறைமையாகும்.

இறைமை பற்றிய கோட்பாடுகள்

  • ஜீன்போடின் பற்றிய கோட்பாடு
    • பிரான்சை சேர்ந்த ஜீன்போடின் 1576 இல் வெளியிட்ட Six Books of the commonwealth  எனும் தமது நூலில் இறைமைக் கோட்பாட்டை முன்வைத்தார்.
    • இறைமை என்பது மக்களின் மீதும் குடிகளின் மீதும் நிறுவனங்களின் மீதும் செலுத்தப்படுகின்ற எவ்விதமான சட்டங்களுக்கும் கட்டுப்படாத மிக உயர்ந்த அதிகாரமாகும்.
  • தோமஸ் ஹொப்ஸின் இறைமை பற்றிய கோட்பாடு
    • மக்களிடமிருந்து அதிகாரம் பெற்ற மன்னனே இறைமையின் உறைவிடம் என்றும், அதனால் அந்த மன்னனே சகல அதிகாரம் கொண்டவனாக அச்சமூகத்தில் விளங்குவான் என்றும் கூறுகின்றார்.
  • லொக்கின் இறைமை பற்றிய கோட்பாடு
    • இறைமையின் உற்பத்தியாக மக்களே இருக்க வேண்டுமெனவும், இறைமையின் பிரயோகம் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்திடமும் மன்னனிடமும் இருக்க வேண்டுமென்றார்.
  • ரூசோவின் இறைமை பற்றிய கோட்பாடு
    • இறைமை முழு  நிறைவானதும் நிச்சயமானதும் பிரிக்க முடியாததும் ஐக்கியமானதும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாததுமான ஒன்று என்றார். மேலும் இவ்விறைமையின் உறைவிடமாகப் பொது விருப்பத்தையும் மக்களையும் காண்கிறார்.

இறைமையின் பண்புகள்

  • வரம்பில்லாதது
  • வரைவின்மையுடையது
  • அனைவருக்கும் பொருந்தக் கூடியது
  • நிலையானது
  • பிரிக்க முடியாதது
  • மாற்ற முடியாதது
  • தனியுரிமை மிக்கது

இறைமையின் வடிவங்கள் 

  • பெயரளவிலான இறைமை – இறைமை மன்னரிடம் உறைந்துள்ளது என்றே கூறப்பட்டுள்ளது. மக்களாட்சி உருவாகத் தொடங்கியதைத் தொடர்ந்து மன்னர் பெயரளவு அதிகாரமுடையவராக மாற்றப்பட்டார்.
  • சட்ட இறைமை – அரசின் விருப்பினை சட்ட வடிவில் வெளியிடக்கூடிய நிறுவனமே சட்ட இறைமையாகின்றது.
  • அரசியல் இறைமை – பாராளுமன்றம் சட்டம் இயற்றும் இறைமையைக் கொண்டிருந்தாலும் பாராளுமன்றத்திற்கு அவ்வதிகாரத்தை வழங்குகின்றவர்கள் வாக்காளர்களேயாவர். எனவே இவ்வாக்காளர் தொகுதியே அரசியல் இறைமை எனப்படுகின்றது.
  • மக்களின் இறைமை – இறுதி அதிகாரம் மக்களிடம் உறைகின்றது எனக் கூறுவதே மக்கள் இறைமை ஆகும்.
  • தேசிய இறைமை – நாடு முழுவதற்கும் உள்ள இறைமையே தேசிய இறைமையாகும்.
  • நடைமுறை இறைமை – நடைமுறையில் இறுதி அதிகாரத்தை கொண்டிருப்பது நடைமுறை இறைமை என அழைக்கப்படுகின்றது.
  • சட்ட இறைமை – இது சட்டபூர்வமாக அமைந்து சட்டத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதாகும். இது ஆணைகளைப் பிறப்பித்து மக்களை கீழ்படியுமாறு செய்யலாம்.

இறைமைக்குள்ள கட்டுப்பாடுகள்

  • இறைமையானது மக்களின் அறவுணர்வுகளையும் சமய நம்பிக்கையினையும் மதிக்க வேண்டும்.
  • சர்வதேச சட்டம்
  • அரச சார்பற்ற நிறுவனங்கள்
  • சுதந்திர சந்தை
  • உலகமயமாதல்
  • நவகாலணித்துவம்
  • தனியார் மயமாதல்
  • தாராளமயமாக்குதல்
  • ஒவ்வொரு அரசும் காலத்திற்கு காலம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
ஒருமுகக் கொள்கையின் பண்புகள்
  • இறைமை என்ற உயர் அதிகாரம் ஒவ்வொரு சுதந்திர அரசியல் சமூகத்திற்கும் அவசியம்.
  • இதனால் சமூகத்திலும் மிக உயர்வானவனாகவோ இறைமை உடையவனாகவோ நிர்ணயிக்கப்பட்ட ஒருவன் / ஒரு குழு இருக்க வேண்டும்.
  • இறைமை வேறு ஒரு அதிகாரத்துக்கோ இறைமைக்கோ கீழ்ப்படுவதில்லை.
  • இறைமை சமூகத்தின் பெரும்பான்மையினரின் அடிபணிவை வழமையாகப் பெறும்.
    • சட்டம் என்பது இறைமையின் ஆணை.
    • இறைமையைப் பிரிக்கவோ கையளிக்கவோ முடியாது.
பன்முகக் கொள்கை
  • பொலட், லஸ்கி, மெக்ஐவர், பெந்தம், மெயின்லாண்ட் போன்ற கல்விமான்கள் பன்மை வாதக் போட்பாட்டிற்கு பங்களிப்புச் செய்தனர்.
  • பன்முகக் கொள்கையின் பண்புகள்:
    • இறைமை பழைமையானதாகும்.
    • இறைமை முழுமையானதல்ல, அது அரசியல் அமைப்பின் படியானதும் பொறுப்புடையதுமாகும்.
    • அரசு சட்டப்படி உயர்வானதல்ல.
    • பல்வேறு குழுக்களில் அரசும் ஒன்று.
    • குழுக்கள் முழுமையான சுய ஆட்சிப் பெற்றவையாக இருக்க வேண்டும்.
    • அதிகாரம் ஒருமுகமாக இருக்கமுடியாது, அது பன்முக அமைப்பாக இருக்க வேண்டும்.
RATE CONTENT 5, 1
QBANK (19 QUESTIONS)

அரசின் இறைமை அதிகாரம் அடையாளப்படுத்துவது – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – சிறிய அரசுகள் மீதான பெரிய அரசுகளின் உயர்தன்மையையாகும்.
B – உள்ளக விவகாரங்களில் அரசின் உயர்தன்மையையாகும்.
C – வெளியக விவகாரங்களில் அரசின் உயர்தன்மையையாகும்.
D – உள்ளக, வெளியக விவகாரங்களில் அரசின் உயர்தன்மையையாகும்.

Review Topic
QID: 19320
Hide Comments(0)

Leave a Reply

இறைமை என்பது
A – அரசின் முக்கிய இயற்பண்பாகும்.
B – உள்வாரி, வெளிவாரி என்ற இரு பண்புக் கூறுகளைக் கொண்டதாகும்.
C – தனி முதன்மையானது, ஒப்பற்ற, பிரிக்க முடியாதது மற்றும் மாற்றக்கூடியது
D – ஏனைய சமூக நிறுவனங்களிலிருந்து அரசை வேறுபடுத்திக் காட்டுகிறது

Review Topic
QID: 19325
Hide Comments(0)

Leave a Reply

இறைமை அதிகாரம் என்பது

Review Topic
QID: 19336
Hide Comments(0)

Leave a Reply

இறைமை என்பது
A – அரசுகள் மட்டும் அனுபவிக்கும் உயர்ந்ததும் தனிமுதன்மையானதுமான அதிகாரமாகும்.
B – உள்வாரியானதும் வெளிவாரியானதுமான இரு பகுதிகளையுடையது எனக் கருதப்படுகிறது.
C – அரசின் முக்கியமானதும் தனித்துவமானதுமான பண்பாகும்.
D – அரசின் ஆன்மாவாக இருப்பதோடு அரசினால் பலவந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான சட்டரீதியான தன்மையையும் வழங்குகிறது.
E – பலமான அரசுகளைப் பலவீனமான அரசுகளிலிருந்து வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தும் ஓர் அளவுகோலாகும்.

Review Topic
QID: 19338
Hide Comments(0)

Leave a Reply

இறைமை என்பது:
A – தனிமுதன்மையானதும் எல்லையற்றதுமான அதிகாரம் பற்றிய மூலக் கொள்கையாகும்.
B – பலவந்த அதிகாரத் தனியுரிமையை அரசுக்கு வழங்குகிறது.
C – நீதித்துறை மற்றும் நிறைவேற்றுத் துறைகளினூடாக அரசினால் பிரயோகிக்கப்படுகின்றது.
D – அரசை ஏனைய சகல அரசியல் மற்றும் சமூகத் தாபனங்களை விட மேலாக வைக்கின்றது.
E – உள்ளக மற்றும் வெளியக இறைமை என்ற இரு பகுதிகளைக் கொண்டுள்ளது.

Review Topic
QID: 19342
Hide Comments(0)

Leave a Reply

இறைமைக் கோட்பாடு :
A – அரசின் அதிகாரத்தோடு தொடர்புபடுகிறது.
B – ஏனைய சமூகத் தாபனங்களுக்கு மேலால் அரசின் உயர் தன்மையை வலியுறுத்துகிறது.
C – அரசின் சட்டங்களுக்குச் சட்டபூர்வத்தன்மையை வழங்குகின்றது.
D – தேசிய அரசு முறையின் தோற்றத்தையும் இருப்பினையும் நியாயப்படுத்துகிறது.
E – கடவுளை அரசியலதிகாரத்தின் பிரதான மூலாதாரம் என ஏற்றுக்கொள்கிறது.

Review Topic
QID: 19347
Hide Comments(0)

Leave a Reply

இறைமை அதிகாரம் என்பது:- பிழையான கூற்று

Review Topic
QID: 19350

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank