உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும், தெற்காசிய முதல் தர வல்லரசு நாடாகவும் இந்தியா விளங்குகின்றது. 1.2 மில்லியன் குடித்தொகையைக் கொண்ட இன் நாட்டின் இருந்து 1930 களில் பர்மாவும். 1947ம் ஆண்டு பாகிஸ்தானும் பிரிந்து தனிநாடுகளாக மாறின. நீண்ட காலம் பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த இந்நாடு 1947ம் ஆண்டு ஓகஸ்ட் 15ம் திகதி சுதந்திரம் அடைந்தது. 1950ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இந்தியா ஓர் குடியரசாக மாறியது. இன்று வரை இவ்வரசியல் யாப்பே இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
◊ எழுதப்பட்ட நெகிழா யாப்பு
அரசியல் நிர்ணய சபையினால் உலகிலே நீண்ட அரசியல் யாப்பாக இது வரையப்பட்டது. 395 உறுப்புரைகளும் 10 பின்னிணைப்புகளும் இதில் உள்ளன.
◊ கூட்டாட்சி அரசியல் அமைப்பு
இந்திய அரசியல் அமைப்பில் முதலாம் சரத்து இந்தியா ஓர் குடியரசு என அறிமுகம் செய்கின்றது. யாப்பின் 07ஆவது அட்டவணை அதிகாரப் பகிர்வனை குறிப்பிடுகின்றது. இதன் படி மத்திய பட்டியல், மாநிலப்பட்டியல், பொதுப்பட்டியல் என்ற அடிப்படையில் அதிகாரம் பங்கிடப்பட்டுள்ளது. மத்தியப்பட்டியலில் 97 விடயங்களும், மாநிலப்பட்டியலில் 66 விடயங்களும், பொதுப்பட்டியலில் 47 விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
◊ பாரளுமன்ற அரசாங்க முறை
பிரித்தானியா அரசியல் அமைப்பு போன்று பிரதமர் தலைமையில் அமச்சரவை நாட்டின் நிர்வாகத்தினை முன் எடுக்கின்றது.
◊ ஈரவைச் சட்டத்துறை
இந்தியாவின் சட்டத்துறையான நாடாளுமன்றம் மக்கள் அவை என்ற முதலாம் மன்றத்தையும், மாநிலங்கள் அவை என்ற இரண்டாம் மன்றத்தையும் கொண்டுள்ளது.
◊ பல கட்சிமுறை
இந்தியாவில் இன, மத, மொழி, சாதி ரீதியான பல தன்மை காணப்படுவதால் பல கட்சி முறைத் தோற்றம் பெற்றுள்ளது.
◊ சுதந்திரமான நீதித்துறை
இந்தியா ஒரு சமஸ்டி ஆட்சி நாடாகப் காணப்படுவதால் மேலான நீதி மன்றமான உச்ச நீதிமன்றம் பக்கம் சாராத நடுநிலைமையுடன் செயற்படுகின்றது. நீதிப்புனராய்வு அதிகாரம் காணப்படுகின்றது.
இந்தியாவின் சட்டத்துறை நாடாளுமன்றம் என அழைக்கப்படுவதுதோடு அது பின்வரும் இரண்டு சபைகளை கொண்டு இருக்கும்.
1. மக்களவை – லோக்சபா (முதலாம் மன்றம், கீழ்சபை)
2. மாநிலங்களை – இராஜிய சபா (இரண்டாம் மன்றம் மேல் சபை)
இங்கு மக்களவை மக்களை பிரதிநிதிப்படுத்த மாநிலங்களை சமஸ்டி அலகுகளாக மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இந்திய நாடாளுமன்றத்தின் முதலாம் மன்றமாகவும் இது காணப்படுகின்றது. இச்சபை 543 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாநிலங்களிலுள்ள தேர்தல் தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மக்களவையின் பதவிக்காலம் 05 ஆண்டுகளாகும். இடைக்காலத்தில் பிரதமரின் சிபார்சின் பெயரில் ஜனாதிபதியால் கலைக்கப்படலாம். அதே நேரம் நெருக்கடி காலங்களில் பதவிக் காலத்தை நீடிக்கவும் முடியும்.
மக்களவைக்கு சபா நாயகர் தலைமை தாங்குவார். மக்களவை வருடத்தில் ஆகக் குறைந்தது 02 தடவைகள் கூட்டப்பட வேண்டும் என யாப்பு கூறுகின்றது. ஆனால் இன்று வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடர், பருவகால கூட்டத்தொடர், குளிர்காலக் கூட்டத் தொடர் என்ற மூன்று கூட்டத் தொடர்கள் கூட்டப்படுகின்றது. மக்கள் அவைத் தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டும் எனின் 25 வயதினை பூர்த்தி செய்தவராக இருப்பதுதோடு இந்திய குடிமகனாகவும் இருத்தல் வேண்டும்.
சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்
மக்கள் அவை மத்திய பட்டியலிலும் பொதுப்பட்டியலிலும் உள்ள விடயங்கள் தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரத்தைத் கொண்டுள்ளது. குறிப்பாக நிதி மசோதா மக்கள் அவையிலே ஆரம்பிக்கப்படும். இவ் அதிகாரம் மானிலங்களுக்கு கிடையாது. யாப்பினை மாற்றுகின்ற திருத்துகின்ற அதிகாரம் மக்கள் அவைக்கு காணப்படுகின்றது. அது தொடர்பான மசோத மக்கள் அவையில் 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.
நிர்வாகத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை மக்களவைக்கு கூட்டாக பொறுப்பு கூற வேண்டும். மக்களவையில் நிறைவேற்றப்படும். நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அமைச்சர்களை பதவில் இருந்து நீக்கலாம் அத்துடன் அமைச்சர்களை கேள்வி கேட்கும் அதிகாரமும் மக்களவைக்கு உண்டு. அவ்வாறு கேள்வி கேட்கும் போது அமைச்சர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும்.
ஜனாதிபதி மீது ஒரு குற்ற பிரேரணையினை மாநிலங்களவை கொண்டு வந்தால் மக்களவை அதனை விசாரிக்கும். அத்துடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை பதவி நீக்கும் தீர்மானம் இச் சபையில் நிறைவேற்றுதல் வேண்டும்.
இந்திய நாடளுமன்றத்தின் 2ம் மன்றமாகவும் மேற்சபையாகவும் மாநிலங்களவை காணப்படுகின்றது. இது இராஜிய சபா எனவும் அழைப்பப்படும். இந்தியா ஒரு சமஸ்டி நாடாக காணப்படுவதால் மாநிலங்களைப் பிரநிதித்துவப்ப்படுத்தும் பொருட்டு இவ் இரண்டாம் மன்றம் அமைக்கப்படுகின்றது.
இந்தியாவின்னுடைய மாநிலங்கள் அவை 250 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இவர்களில் 238 உறுப்பினர்கள் மாநில சட்ட சபைகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். மிகுதி 12 உறுப்பினர்கள் கலை, இலக்கியம், விஞ்ஞானம், விளையாட்டுத்துறை போன்றவற்றில் திறமையானவர்களிடம் இருந்து பிரதமரின் சிபாரிசின் பெயரில் இருந்து பெயரில் ஜானாதிபதியினால் நியமிக்கப்படுவர். மாநிலங்களிக் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இடைக்காலத்தில் கலைக்கப்படமாட்டாது. எனிலும் இரண்டு வருடத்துக்கு ஒரு தமவை 1/3 பகுதியினர் பதவி விலக புதியவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். துணை ஜனாதிபதி மாநிலங்கள் அவைக்கு தலைமை தாங்குவார்.
மாநிலங்கள் அவைத் தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டும் எனின் 30 வயதினை பூர்த்தி செய்து இருப்பதோடு எத்த மாநிலத்தில் இருந்து தெரிவு செய்யப்படுகின்றாரோ அம்மாநிலத்தில் தேர்தல் இடாப்பில் தனது பெயரினை பதவி செய்து இருக்க வேண்டும்.
சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்
மாநிலங்கள் சட்டவாக்கத்தில் மக்கள் அவையுடன் சமன் அளவுடைய அதிகாரங்களே கொண்டுள்ளது. நிதி மசோதாவினை தவிர மற்றைய சாதாரண மசோதாக்களை ஆரம்பிக்கும் அதிகாரத்தினை மாநிலங்கள் அவை கொண்டுள்ளது. அத்துடன் யாப்பினை மாற்றுகின்ற திருத்துகின்ற மசோதா 2/3 பெரும்பான்மையினால் நிறைவேற்ற வேண்டும்.
இந்தியாவின் நிர்வாகத்துறையான பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் மாநிநிலங்கள் அவையில் இருந்தும் தெரிவு செய்யப்படாலாம். எனினும் அமைச்சரவை மாநிலங்கள் அவைக்கு பொறுப்படையது அல்லது. அமைச்சர் அவை மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணையினை மாநிலங்கள் அவையில் கொண்டு வர முடியாது. இவ் அதிகாரம் லோக்சபாவிற்கே காணப்படுகின்றது. அத்துடன் அமைச்சர்களது கர்மம் தொடர்பாக கேள்வி கேட்கும் அதிகாரம் இராஜிசிய சபா உறுப்பினர்களுக்கு உண்டு. அவ்வாறு கேள்வி கேட்கும் போது அமைச்சர்கள் அதற்கு பதில் அளிக்க வேண்டும்.
நீதித்துறை தொடர்பான அதிகாரங்கள்
ஜனாதிபதிக்கு எதிரான ஒரு குற்றப் பிரேரனையை லோக்சபா ஆரம்பித்தால் அதனை மாநிலங்கள் அவை விசாரிக்கும். அத்துடன் ஜானாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரனையை ஆரம்பித்தல், போன்ற அதிகாரங்களும் உச்ச நீதிமன்ற மாநில உயிர் நீதிபதிகளை பதவி நீக்கும் தீர்மானங்களும் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்திய நாடாளுமன்ற அரசாங்க முறையில் மூன்றாது பகுதி இந்தியா ஜானாதிபதியாவர். அரசியல் திட்டத்தின் படி அரசின் தலைவராகவும், நிர்வாகத்தின் தலைவராகவும், ஆயுதம்தாங்கிய முப்படைகளின் தலைவராகவும் விளங்குவார். இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பெருமை ஜனாதிபதிக்கு உண்டு. இவர் தேர்வாளர் கழகம் ஓன்றின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றார். ஜனாhதிபதியுடைய பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். பாரளுமன்றன்றத்தில் நிறைவேற்றப்படும் குற்றப் பிரேரணையின் மூலம் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கலாம். இறப்பதன் மூலமோ, இராஜினாமா செய்வதன் மூலமோ பதவியில் இருந்து நீக்கப்படுவதன் மூலமோ ஜனாதிபதியின் பதவியில் வெற்றிடம் ஏற்படும்.
இந்திய அரசியலமைப்பின் 58 ஆவது சரத்து ஜனாதிபதி வேட்பாளரின் தகைமைகள் பற்றிக் குறிப்பிடுகின்றது அதன்படி.
◊ இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
◊ 35 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
◊ சம்பளம் பெறுகின்ற அரசாங்க பதவிகள் எதனையும் வகித்திருக்க கூடாது.
◊ கிருமினல் குற்றச்சாட்டு வழக்கில் தொடர்புபட்டதாக இருத்தல் கூடாது
◊ லோக்சபா உறுப்பினருக்குரிய தகைமைகளை கொண்டிருக்க வேண்டும்
இந்திய ஜனாதிபதி தேர்வாளர் கழகம் ஒன்றின் மூலம் தெரிவு செய்யபடுகின்றார். இத் தேர்வாளர் கழகம் மத்திய பாரளுமன்றத்தின் இரண்டு சபைகளின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரிநிதிகளையும் மாநில சட்ட உறுப்பினர்கள் கொண்டிருக்கும் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில் தேர்வாளர் கழக உறுப்பினர்கள் 10 பேர் அவருடைய பெயரினை பிரேரிக்க மேலும் 10 பேர் அவருடைய பெயரினை ஆமோதிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டுமெனில் 2500 ரூபாவினை வைப்பு பணமாக செலுத்தவேண்டும். அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 1{6ற்கு குறைவான வாக்குக்கள் பெறும் வேட்பளித்த வைப்பு பணம் இழக்கப்படும்
ஜனாதிபதி தேர்தல் விகிதாசார பிரிதிநிதித்துவம் தனிமாற்றம் வாக்கு முறைப்படி நடைபெறும் மத்திய பாராளமன்ற உறுப்பினார்கள டில்லிமிலும் மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினர் மாநில தலைநகரிலும் தனது வாக்கினை அளிப்பர் தேர்வாளர் கழக உறுப்பினர் அவர்கள் தமது வாக்கினை 1 2 3 4 என்ற அடிப்படையில் அளிப்பர் இங்கு அளிக்கப்படும் மொத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவர். இன் கோட்ட பின்வரும் கணிக்கப்படும்.
அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகள்
போட்டியிட்ட வேட்பாளர் எண்ணிக்கை
இங்கு எந்தவொரு வேட்பாளருக்கு குறித்த பெரும்பாண்மை கிடைக்கவில்லை எனில் ஆக குறைந்த வாக்குகளினை பெற்றவர் வரிசை முறைப்படி அகற்றப்பட்டு வாக்குகள் எஞ்சியவர்களுக்கு பகிரப்பட்டு மீண்டும் கோட்டா கணிக்கப்படும் இவ்வாறே இந்தியாவினுடைய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவர் இவ்வாறு தேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னிலையில் நின்று சத்திய பிரமாணம் செய்வதன் மூலம் தமது பதவியினை ஏற்றுகொள்வார்.
சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்
பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளான லோக்சபா மற்றும் இராஜ்ஜிய சபா ஆகியவற்றை கூட்டுதல் ஒத்திவைத்தல் லோக் சபைவைக் கலைத்தல் பாராளுமன்றத்தில் சிம்மாசனப் பிரசங்க உரையை நிகழ்த்துதல் பராளுமன்ற செய்திகளை அனுப்புதல் சட்டங்களில் இறுதி கையொப்பம் இடுதல் இராச்சிய சபாவிற்கு 12 உறுப்பினர் நியமித்தல் போன்ற சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்.
பிரதமர் அமைச்சர்களை தெரிவு செய்தல் அரசாங்கத்தின் உயரதிகாரிகளை நியமித்தல் தேர்தல் ஆணையாளரையும் தேர்தல் ஆணைக்கு உறுப்பினர்களையும் நியமித்தல் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் நியமித்தல் மாநில ஆளுநர்கள் வெளிநாட்டு தூதுவர்களை நியமித்தல் நாட்டின் பகிரங்க இலச்சனையை வைத்திருத்தல் விருதுகள் பட்டங்கள் வழங்குதல் போன்ற நிர்வாகத்துறை தொடர்பான அதிகாரங்காளகும்.
உச்ச நீதிமன்ற மாநில உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்தல் குற்றவாளிக்களுக்கு மன்னிப்பு மற்றும் தண்டனையை குறைத்தல்.
முட்படை தளபதியை நியமித்ததல் மற்றும் நீக்குதல் போர் சமாதானம் செய்தல் நெருக்கடி நிலை தோன்றும் மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை நிறுவுதல்
மேற்கூறியவாறு சட்ட நிர்வாக நீதி அதிகாரங்களை ஜனாதிபதி கொண்டிருக்கின்ற போதும் அவர் அதனை பிரதமரின் சிபார்சின் பெரியலேயே நிறைவேற்றுதல் வேண்டும்.
பிரத்தானிய அரசாங்க முறையில் பிரதமர் எவ்வளவு முக்கியம் பெறுகின்றாரோ அதே அளவு முக்கியத்துவத்தினை இந்நிய அரசங்க முறையில் பிரதமர் பெறுகின்றார் பாராளுமன்ற அரசாங்க முறைமையை பின்பற்றும் இந்தியாவில் அரசாங்கத்தின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் பிரதமரே விளங்கின்றார். நாட்டின் உண்மை நிர்வாகியாகவும் பிரதமரே விளங்குகின்றார்.
இந்நிய அரசாங்கம் எனும் போது அது பிரதமருடைய அரசாங்கமாகவே விளங்குகின்றது. இந்திய அரசாங்கத்தின் அச்சாணியாக இவரே காணப்படுகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை ஆதரவை பெற்ற ஒருவரை ஜானாதிபதி பிரதமராக தெரிவு செய்கின்றர். பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்
பாரளுமன்றத்தில் அரசின் கொள்கை முடிபுகளை அறிவித்தல். முக்கியமான விவாதங்களை சபையில் நடாத்துதல். பாராளுமன்றத்தில் உரையாற்றுதல் சபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தல்.
அமைச்சரவைக்கு தலைமை தாங்குதல் அமைச்சரவை கூட்டங்களை கூட்டுதல், அமைச்சரவை கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்தல், அமைச்சர்களை நியமித்தல், நீக்குதல், மாற்றுதல், தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தல், அமைசரவையின் கொள்கைகளை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்தல், வெளிநாட்டு தூதுவர்களை நியமித்தல், தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல்.
◊ இந்திய ஓர் சமஸ்டியாட்சி நாடாக காணப்படுதனால் நடுநிலையான ஒரு நீதித்துறை அங்கு காணப்படுகின்றது.
◊ இந்தியாவில் மோலானதும் முடிவானதும் நீதிமன்றமாக உச்ச நீதிமன்ற காணப்படுகின்றது.
◊ உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியையும் 25 நீதிபதிகளையும் கொண்டிருக்கும்.
◊ உச்ச நீதிமனற நீபதிகள் பிரதமரின் சிபார்சின் பெயரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர்.
◊ மக்களின் அடிப்படைஉரிமை பாதுகாத்தல் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறுதல் மத்திய மாநில மாநிலங்களுக்கிடையிலான பிணக்குகளை தீர்த்தல். நீதிப்புனராய்வு அதிகாரம் ஆகிய அதிகாரங்களை உச்ச நீதிமன்ற கொண்டுள்ளது.
◊ இந்தியா ஓர் பல்லின சமுக முறையைக் கொண்ட நாடாக காணப்படுகின்றது பல கட்சிமுறை தோற்றம் பெற்றுள்ளது.
◊ இந்திய அரசியல் கட்சி முறையில் தேசிய கட்சிகள் பிரதேச கட்சிகள் என்ற இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன.
◊ இந்திய அரசியல் கட்சி முறை இந்திய அரசியலை சிக்கல் தன்மை ஆகியுள்ளது.
இந்திய பிரதம மந்திரி – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – அரசாங்கத்தில் அதிக அதிகாரம் மிக்க நபராவர்.
B – பாராளுமன்றினால் நியமிக்கப்படுகிறார்.
C – இராஜ்ய சபாவின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
D -இராஜ்ய சபாவுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
1950 அரசியல் யாப்பின் மூலம் தாபிக்கப்பட்ட இந்திய அரசு – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A- ஒரு சமஷ்டியரசாகும்.
B – ஒரு ஒற்றையாட்சியரசாகும்.
C – ஒரு அரைகுறை சமஷ்டியரசாகும்.
D – ஒரு கூட்டாண்மை அரசாகும்.
இந்திய அரசியல் கட்சி முறைமையின் பிரதான பண்பு – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – தனிக்கட்சி ஆதிக்க முறை
B – பலகட்சி முறை
C – இருகட்சி முறை
D – இருகட்சி ஆதிக்க முறை
கூற்று I – பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேர்வாளர் கழகத்தின் மூலம் இந்திய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகின்றார
கூற்று II – இந்திய ஜனாதிபதி நாட்டின் நாம நிருவாகியாக இருப்பதுடன் அவர் அரசியல் நிருவாகத்தின் ஆலோசனை மற்றும் விருப்பின் பேரில் செயலாற்ற வேண்டும்.
Review Topicகூற்று I – இந்தியப் பாராளுமன்றம் இரு மன்ற முறையினதாக இருப்பதோடு அவ்விரு மன்றங்களும் லோக் சபை, ராஜ்ய சபா என்று அழைக்கப்படுகின்றார்.
கூற்று II – இரு மன்றங்களிலும் ராஜ்ய சபா முதல் மன்றமாக இருப்பதோடு அது பலம் வாய்ந்ததாகவும் உள்ளது.
Review Topicகூற்று I – இந்திய அரசாங்க முறைமையானது ஒற்றையாட்சி, சமஷ்டி மற்றும் கபினட், ஜனாதிபதி அரசாங்க முறைமைகளின் ஒரு கலவையாகும்.
கூற்று II – ஒரு சமஷ்டிப் புறவமைப்பினுள் கபினட் அரசாங்க முறையினைச் செயற்படுத்துவதில் இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டினை வழங்குகிறது.
Review Topicகூற்று I – இந்திய யாப்பு இந்தியா ஒரு சமஷ்டி ஆட்சி நாடு எனப் பிரகடனப்படுத்துகிறது.
கூற்று II – இந்தியாவிலுள்ள எந்தவொரு மாநிலமும் அதன்சட்ட மன்றம் நிறைவேற்றும் ஒரு தீர்மானத்தின் மூலம் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்ல முடியும
Review Topicகுறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் அரசாங்கங்களின் சில சிறப்புப் பண்புகளாவன: – பிழையான கூற்று
Review Topicகுறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் சட்டத்துறைகளின் சிறப்புப் பண்புகளாவன: – பிழையான கூற்று
A – பிரித்தானிய அரசாங்க முறையில் பாராளுமன்றம் என அழைக்கப்படும் சட்டத்துறை சட்டவாக்கத்தில் ஒத்த அதிகாரங்களைப் பெற்ற இரு மன்றுகளைக் கொண்டுள்ளது.
B – காங்கிரஸ் என்றழைக்கப்படும் அமெரிக்கச் சட்டத் துறை இரு மன்ற முறையினதாக இருப்பதோடு அவற்றுள் முதல் மன்றமான மக்கள் பிரதிநிதிகள் சபையை விட இரண்டாம் மன்றமான செனெற் சபை அதிக பலம் வாய்ந்ததாகும்.
C – சமஷ்டிப் பேரவை என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்துச் சட்டத்துறை இருமன்ற முறையினதாக இருப்பதோடு அவ்விரு மன்றுகளினதும் உறுப்பினர்கள் ஐந்து வருடப் பதவிக்காலத்துக்கு மக்களாலும் கன்ரன்களாலும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
D – தற்போதைய பிரான்சிய அரசாங்க முறையில் பாராளுமன்றம் என்றழைக்கப்படும் சட்டத்துறை இருமன்ற முறையினதாக இருப்பதோடு அவை இரண்டும் தன்னிச்சையான முறையில் ஜனாதிபதியினால் எச்சந்தர்ப்பத்திலும் கலைக்கப்படலாம்.
E – இந்திய மத்திய அரசாங்கத்தின் சட்டத்துறை இரு மன்ற முறையினதாக இருப்பதோடு அவற்றுள் இரண்டாம் மன்றமான ராஜ்ய சபை அதிகாரங்களிலும் பணிகளிலும் பெரும்பாலும் பெரிய பிரித்தானிய பிரபுக்கள் சபையை ஒத்ததாகும்.
இந்திய சமஷ்டி அரசாங்க முறை என்பது:
A – 1950 இல் உருவாக்கப்பட்ட சமஷ்டி யாப்பின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது.
B – மருவிய சமஷ்டி எனக் கருதப்படுகிறது.
C – இரட்டைக் குடியுரிமையின் அடிப்படையில் தாபிக்கப்பட்டுள்ளது.
D – ஒரு மத்திய அரசாங்கத்தையும் இருபத்தொன்பது மாநில அரசாங்கங்களையும் கொண்டுள்ளது.
E – பலமான மத்திய அரசாங்கமும் பலவீனமான மாநில அரசாங்கங்களும் என்ற அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
கூற்று I – இந்தியாவில் மாநில ஆளுநர்கள் முதலமைச்சர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.
கூற்று II – மாநில ஆளுநர்கள் ஜனாதிபதியின் அனுமதியைப் பெறுவதற்காக மாநில மசோதாக்களை ஒதுக்கி வைக்கலாம்.
Review Topicஇந்திய பிரதம மந்திரி – பிழையான கூற்றுகளின் தொகுதி

Review Topic