Please Login to view full dashboard.

அரசியல் விஞ்ஞானத்தை கற்பதற்கான அணுகுமுறைகள்

Author : Admin

48  
Topic updated on 02/15/2019 05:19am

அரசியல் விஞ்ஞானத்தை கற்பதற்கான அணுகுமுறைகள்

அரசியல் பாடநெறியினை ஆய்வு செய்வதற்காக அறிஞர்களால் பின்பற்றப்பட்ட பல்வேறு ஆய்வு நுட்பங்களே அணுகுமுறை எனப்படும்.

இவற்றை இரு முக்கிய பிரிவாகப் பிரிக்கலாம்.

  1. மரபுசார் அணுகுமுறை / பாரம்பரியமான அணுகுமுறை
  2. நவீன அணுகுமுறை

பாரம்பரியமான அணுகுமுறை

ஆரம்பகாலத்தில் அரசியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆய்வு முறைமைகள் பாரம்பரியமான அணுகுமுறைகள் எனப்படும்.

  1. வரலாற்று அணுகுமுறை
  2. மெய்யியல் அணுகுமுறை
  3. ஒப்பீட்டு அணுகுமுறை
  4.  நிறுவன அணுகுமுறை
  5. சட்ட அணுகுமுறை

1.வரலாற்று அணுகுமுறை Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the Question

அரசு மற்றும் ஏனைய நிறுவனங்களின் வரலாற்று தோற்றத்தினை பரிசீலனை செய்து அவற்றின் தன்மையையும் செயற்பாட்டையும் விளங்கிக் கொள்வதற்கு பயன்படும் முறையாகும்.

இவ்வணுகுமுறையை முன்வைத்தவர்கள்

  •  அரிஸ்டோட்டில்
  •  சோக்கிரட்டீஸ்
  • பிளேட்டோ
  • லஸ்கி
  • சேபின்
  •  சீலி

இவ்வணுகுமுறையினால் கிடைக்கும் நன்மைகள்

  • அரசியலைக் கற்பதற்கு வரலாறு ஒரு சிறந்த ஆய்வு கூடமாக இருத்தல்.
  • அரசியல் தோற்றப்பாடுகளின் ஆரம்பம் வளர்ச்சி என்பவற்றை சரியாக விளங்கிக் கொள்வதற்கும் அவற்றின் எதிர்காலப் போக்குகளை புரிந்து கொள்வதற்கும் துணை புரிகின்றது.
  • அரசியல் முறைமைகளின் படிமுறை வளர்ச்சியினைப் பற்றி புரிந்து கொள்ள உதவுகின்றது.

இவ்வணுகுமுறையின் குறைபாடுகள்

  • வரலாற்று அணுகுமுறை அரசறிவியலின் வரலாற்றில் மட்டும் கவனம் செலுத்தி ஏனைய விடயங்களை தவிர்த்து விடுகிறது.
  • வரலாற்று முறை தனிப்பட்டவர்களுக்கும், அரசியல் தற்செயல் நிகழ்ச்சிகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தினை வழங்கல்.
  • அரசியல் வாழ்க்கையின் நன்மை தீமை, சரி பிழை மற்றும் அரசியல் நிறுவனங்களின் சாதக பாதக தன்மைகள் ஆகியன பற்றிய தகவல்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது.
  • ஆய்வாளன் தனிப்பட்ட அரசியல் பிரிப்புக்கள், சமய நம்பிக்கைகள், இனச்சார்புகள், மற்றும் கருத்தியல் மனப்பாங்குகள் போன்ற காரணிகளின் தாக்கத்திற்கு உட்படலாம்.
  • தற்கால நிலைகளையும்,எதிர்காலப் போக்குகளையும் விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிகின்ற சரியானதும், போதுமானதுமான தகவல்களை வரலாற்று முறையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாமை.
  • எந்தவொரு வரலாறும் அக்காலகட்டத்தில் எல்லா நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இருப்பதில்லை. அத்துடன் சில பிரதான தகவல்கள் தவறவிடப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் உருவாகும்.
  • சரியான முறையில் கடந்தகால நிகழ்வுகள் தொகுக்கப்படவில்லையாயின் அதிலிருந்து முடிவுகளும் சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கும்.

2. மெய்யியல் அணுகுமுறை Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question

முன்வைக்கப்பட்ட கோட்பாட்டையும், தத்துவங்களையும் மையமாகக் கொண்டு அரசியலை ஆய்வு செய்யும் அணுகுமுறையே மெய்யியல் அணுகுமுறையாகும்.

அதாவது அரசு, அரசாங்கம் மற்றும் அரசாங்க நிறுவனம் எப்படி செயல்படுகிறது / இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளாமல் அவை எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற அணுகுமுறையாக இது காணப்படுகின்றது.

இவ்வணுகுமுறையை முன்வைத்தவர்கள்

  •  பிளேட்டோ
  •  ரூஸோ
  • தோமஸ் வோ

இவ்வணுகுமுறையின் பண்புகள்

  • நடைமுறை விடயங்களை இது கவனத்தில் கொள்வதில்லை. இதனால் இதனை கற்பனைவாத அணுகுமுறை என வரையறை செய்கின்றனர்.
  • அரசியலுக்கான அணுகுமுறைகளில் மிகவும் பழமையானது.
  • யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது.

இவ்வணுகுமுறையின் நன்மைகள்

  • ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய இலட்சியங்கள், அறநெறிகள், ஒழுக்கநெறிகள்,உயர்ந்த கோட்பாடுகளை ஆராய உதவுகிறது.
  • அரசின் சரியான செயற்பாடுகளை இனங்காண உதவுகிறது.

இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்

  • தமது முடிவுகளை நிரூபிக்க முடியாத இலட்சியங்களின் மீது நிறுவ முற்பட்டுள்ளது.
  • பகுத்தறிவு இங்கு பயன்படுத்தப்படுவதில்லை.
  1. பிளேட்டோ – இலட்சிய அரசு
  2.  ரூஸோ – சித்த அரசு
  3. தோமஸ் வோ – யுடோப்பிய அரசு

3. ஒப்பீட்டு அணுகுமுறை  Please Login to view the QuestionPlease Login to view the Question

அரசாங்க நிறுவனத்தில் அவற்றின் கட்டமைப்பு, பணி என்பவற்றையும் ஒன்றோடொன்று ஒப்பீடு செய்வதன் மூலம் அரசியல் பற்றிய முடிவுகளை முன்வைக்கும் அணுகுமுறைகளே ஒப்பீட்டு அணுகுமுறை எனப்படும்.

இவ்வணுகுமுறையை முன்வைத்தவர்கள்

  •  அரிஸ்டோட்டில்
  •  மொண்டஸ்கியூ
  •  பிறைஸ்

வ்வணுகுமுறையிலுள்ள நன்மைகள்

  • அரசியல் முறைமைகளிலும் நிறுவனங்களிலும் உள்ள குறைபாடுகளை கண்டறியலாம்.
  • சிறப்பு மிகு அரசியல் முறைமையை ஒழுங்கமைப்பதற்கான கொள்கையை வகுக்கலாம்.
  • இம்முறையினால் “ஒப்பீட்டு அரசியல்” என்கின்ற ஒரு கற்கைத்துறை வளர்ச்சியடைந்துள்ளது.
  • அரசியல் சமுதாயத்தில் காணப்படுகின்ற சமூக பொருளாதார அரசியல் முரண்பாடுகளுக்கு தீர்வினை காண உதவுகிளது.
  • ஒப்பீட்டின் மூலம் பெறப்படும் தகவல்கள் அதிகளவு உறுதித் தன்மை வாய்ந்ததாக காணப்படும்.

இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்

  • ஒப்பீட்டுக்காகப் பெறப்படும் தரவுகள் தவறாக இருப்பின் முடிவுகளும் தவறாக வருவதற்கு வாய்ப்புண்டு.
  • ஒரு நாட்டுக்கு தேவையான அரசியல் கொள்கைகள் என்பன அந்நாட்டின் அரசியல், சமூக,பொருளாதார சூழலுடன் தொடர்புபட்டவை. ஒப்பிட்டு பெறப்படும் கொள்கைகள் பயன்படுத்தப்படும் நாட்டுக்கு பொருந்தாததாக அமையலாம்.

4. நிறுவன அணுகுமுறை

அரசாங்க நிறுவனங்களான சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் அரசியல் கட்சிகள் போன்ற நிறுவனக் கட்டமைப்புக்களை ஆய்வு செய்வதன் மூலம் அரசியல் தொடர்பான விளக்கங்களை முன்வைக்கும் அணுகுமுறையே நிறுவன அணுகுமுறை எனப்படும்.

இது தற்காலத்தில் அரசியல் ஆய்வுக்கு பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை.

5. சட்ட அணுகுமுறை

அரசாங்கங்களிலே பயன்படுத்தப்படுகின்ற சட்டமுறைமைகளை அல்லது ஏற்பாடுகளை ஆய்வு செய்வதன் மூலம் அரசியல் தொடர்பான விளக்கங்களை முன்வைக்கும் அணுகுமுறை சட்ட அணுகுமுறை எனப்படும்.

அரசியல் யாப்புச் சட்டத்தை ஆய்வு செய்வதன் மூலம் அவற்றின் அடிப்படையிலே அரசாங்க முறையை வகைப்படுத்த இவ்வணுகுமுறை உதவுகிறது.

நவீன அணுகுமுறைகள்

விஞ்ஞான பூர்வமான அரசியலை ஆய்வு செய்கின்ற ஆய்வு முறைமைகளே நவீன அணுகுமுறைகள் எனப்படும்.

  1. முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறை
  2. சமூகவியல் அணுகுமுறை
  3.  நடத்தைவாத அணுகுமுறை
  4. புள்ளிவிபரவியல் அணுகுமுறை
  5. மார்க்ஸிச அணுகுமுறை

1. முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறை  Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question

இவ்வணுகுமுறை கட்டமைப்பு பணிப்பகுப்பாய்வு எனவும் அழைக்கப்படும்.

அரசாங்கத்தின் நிறுவன கட்டமைப்புக்களையும் அந்தக் கட்டமைப்பு மூலம் முன்னெடுக்கப்படும் பணிகளையும் மிக நுணுக்கமாக பரிசீலனை செய்வதன் மூலம் அரசியல் தொடர்பான நவீன விளக்கங்களை முன்வைக்கும் அணுகுமுறையே முறைமைப்பகுப்பாய்வு அணுகுமுறை எனப்படும்.

உயிரியல் விஞ்ஞானத்துறையில் பயன்படுத்தப்பட்ட இவ்வணுகுமுறை அரசியல் விஞ்ஞான ஆய்வுக்கும் பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அமெரிக்க நாட்டின் அரசியல் விஞ்ஞானிகளான

  1.  கப்ரியல் ஆல்மண்ட
  2. டேவிட் ஈஸ்ரன்

போன்ற அறிஞர்களால் இவ்வணுகுமுறை முன்வைக்கப்பட்டது.

  • கப்ரியல் ஆல்மண்ட் – கட்டமைப்பு பணிப்பகுப்பாய்வு முறைமை
  • டேவிட் ஈஸ்ரன் – உள்ளீட்டு வெளியீட்டு பணிப்பகுப்பாய்வு முறைமை என்பவற்றை முன்வைத்தனர்.

ஓர் அரசியல் முறைமையில் உள்ள எந்த அமைப்பு என்ன பணிகளை செய்கிறது என்பதை விளக்கும் ஓர் முறையே கட்டமைப்பு பணிப்பகுப்பாய்வு முறை எனப்படும்.

இவ்வணுகுமுறையினால் கிடைக்கும் நன்மைகள்

  • அரசாங்கத்தின் நிறுவன கட்டமைப்புகளையும் அந்தக் கட்டமைப்பு மூலம் முன்னெடுக்கப்படும் பணியையும் மிக நுணுக்கமாக பரிசீலனை செய்வதன் மூலம் அரசியல் தொடர்பிலான நவீன விளக்கங்களை முன்வைக்கிறது.
  • கட்டமைப்புக்கள், அவற்றுக்கான உள்ளீடுகள் சிறப்பாக அமையும் போது அவற்றின் மூலம் கிடைக்கின்ற வெளியீடுகள் சிறப்பாக அமையும்.
  • அரசியல் ஒரு விஞ்ஞான பாடநெறியாக வளர்ச்சியடைய இவ்வணுகுமுறை உதவுகிறது.

இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்

  • இவ்வணுகுமுறை சமுதாயத்தில் மாற்றம் ஏற்படாமல் பழமையை போற்றிப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக விளங்குகின்றது என பொதுவுடைமைவாதிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
  • முதலாளித்துவ சமுதாய அமைப்பை காப்பாற்றும் பொருட்டு முதலாளித்துவ மனப்பாங்கு கொண்ட அமெரிக்க அரசியல் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு என பொதுவுடைமைவாதிகள் எதிர்க்கின்றனர்.
  • அரசியல் கட்டமைப்புக்களை மாத்திரம் நோக்குகின்ற முறையாகயிருப்பதனால் மனித அரசியல் நடத்தைகளது செல்வாக்கினை ஆராய்வதற்குப் பயன்படுத்த முடியாது.

2. சமூகவியல் அணுகுமுறை  Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question

சமூகத்தினை மையமாகக் கொண்டு அரசியலை ஆய்வு செய்கின்ற ஒரு ஆய்வுமுறைமை ஆகும்.

சமூகத்திலுள்ள தனி மனிதர்களினதும் சமூக நிறுவனங்களினதும் அரசியல் செயற்பாடுகளை ஆய்வு செய்வதன் மூலம் அரசியலுக்கு விளக்கம் கொடுக்கின்ற அணுகுமுறை இதுவாகும்.

இந்த அணுகுமுறை இருதுறைகளை அடிப்படையாகக் கொண்டு தன் ஆய்வை மேற்கொள்கிறது.

  1. சமூகவியல்
  2. மானுடவியல்

சமூகவியல் அணுகுமுறையானது பின்வரும் ஆய்வு நுட்பங்களை பயன்படுத்துகிறது

  1. நேரடி அவதானிப்பு
  2. பங்குபற்றல் சோதனை
  3. நேர்முகம் காணல்
  4. வினாக்கொத்து
  5. விவகார ஆய்வு

கற்லின் எனும் அறிஞர் இவ்வணுகுமுறையை அரசியல் ஆய்வுக்காகப் பயன்படுத்தினர்.

சமூகவியல் அணுகுமுறையின் நன்மைகள்

  • சமூகத்தின் அடிப்படையில் அரசறிவியலை விளங்கிக் கொள்வதற்கு இவ்வணுகுமுறை உதவுகின்றது.
    மனிதன், சமூகம், சமூகக்குழுக்கள், சமூக நிறுவனங்கள் போன்றன இம்முறை மூலம் முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்படுகின்றது.
  • சமூகம் சார்ந்து நாட்டின் அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்படுவதற்கு இவ்வணுகுமுறை உதவுகிறது.

சமூகவியல் அணுகுமுறையின் குறைபாடுகள்

  • இவ்வணுகுமுறை சமூக அம்சங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் அரசறிவியலுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தவிர்க்கப்படுகின்றன.
  • இவ்வணுகுமுறை சில சந்தர்ப்பங்களில் நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகத்திற்கு சாதகமாக அமைந்து விடலாம். ஏனெனில் பெரும்பான்மை சமூகத்தின் நிறுவனங்களும் கருத்துக்களுமே அந்நாட்டில் மேலோங்கிய நிலையில் காணப்படும்.
  • சில சமூக நிறுவனங்களும், குழுக்களும் தமது கொள்கைகளை மக்கள் மீது திணிக்க இவ்வணுகுமுறையை ஓர் ஊடகமாக பயன்படுத்த முற்படலாம்.

3.நடத்தைவாத அணுகுமுறை  Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question

ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் சமுதாயத்தில் வாழுகின்ற பல்வேறு அரசியல் தரப்பினரதும் அரசியல் நடத்தையை கவனத்தில் கொண்டு அரசியலை ஆய்வு செய்கின்ற அணுகுமுறையே நடத்தைவாத அணுகுமுறை எனப்படும்.

இது இரண்டாம் உலகப் போரின் பின்னர் உயிரியலில் ஆரம்பமாகி சமூகவியலின் ஊடாக அரசறிவியலை வந்தடைந்த ஓர் அணுகுமுறையாகும்.

அரசியலில் ஈடுபடும் மனிதனினதும் மனிதக் குழுக்களினதும் அரசியல் நடத்தையினை விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்திக் கற்று அதனூடாக அரசியலை விளங்கிக் கொள்ளும் கற்கை நெறியாகும்.

இவ்வணுகுமுறையின் பிரதான கருப்பொருள் அரசியல் மனிதன் ஆவான்.

இவ்வணுகுமுறையை பயன்படுத்திய அறிஞர்கள்:

  • டேவிட் ரோமன்
  • டேவிட் ஈஸ்டன்
  • டேவிட் அப்ரல்
  • லாஸ்வெல்

நடத்தைவாத அணுகுமுறையின் பிரதான பண்புகள்

  • உண்மையான நடத்தையை மட்டும் கவனத்தில் கொள்ளல்.
  • தேவையற்ற மதிப்பீடுகளிலிருந்து விலகியிருத்தல்.
  • கலாசார விடயத்தை கவனத்தில் கொள்ளாமை.
  • விஞ்ஞான பூர்வமான துறையீடுசார் ஆய்வு முறைமை காணப்பட்டமை.
  • அரசியல் மனிதனை பிரதான கருப்பொருளாகக் கொள்ளுதல்.
  • பேரின விடயங்களன்றி சிற்றின விடயங்களே கற்கைத் தலைப்புக்களாகத் தெரிவு செய்யப்படுதல்.

இவ்வணுகுமுறையின் நன்மைகள்

  • புதிய கோட்பாடுகள் மற்றும் எண்ணக்கருக்கள் உருவாவதில் பங்காற்றியிருத்தல்.
  • நடத்தைவாதத்தின் மூலம் பொதுமுறைப் பகுப்பாய்வு,அமைப்பு பணி அணுகுமுறை, உள்ளீட்டு – வெளியீட்டு அணுகுமுறை போன்ற புதிய அணுகுமுறைகள் அரசறிவியலில் வளர்ச்சியுறுவதில் பங்காற்றியுள்ளது.
  • அரசறிவியலை விஞ்ஞான ரீதியாகவும் அனுபவம் சார்ந்த முறையிலும் கற்க முடியும் என்று வழிகாட்டியிருத்தல்.
  • புதிய நுட்பமுறைகளை அறிமுகம் செய்ததன் மூலம் அரசறிவியலின் சகல துறைகளிலும் புதிய பரிமாணங்கள் செயற்பட்டிருத்தல்.

இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்

  • நடத்தைவாதிகள் இயந்திர நோக்கில் மனிதனின் தனிப்பட்ட நலன்களையே கவனத்தில் எடுத்தல்.
  • மனிதநடத்தையை பொதுமைப்படுத்த முடியும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் மனித இயல்பானது நிதமும் மாற்றமுறும் பண்பினைக் கொண்டது.
  • நடத்தைவாதிகள் நுட்பமுறைகளுக்கு அளவு கடந்த முக்கியத்துவத்தை வழங்கியிருத்தல்.

4. புள்ளி விபரவியல் அணுகுமுறை

அரசியலுடன் தொடர்புடைய புள்ளிவிபரங்களை கவனத்தில் கொண்டு அரசியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளும் அணுகுமுறை புள்ளி விபரவியல் அணுகுமுறை எனப்படும்.

உதாரணம் :

  1. சனத்தொகை விபரம்
  2. வேலையற்றோர் விபரம்
  3. வாக்காளர் பற்றிய விபரம்

இவ்வணுகுமுறையை முன்வைத்தவர்கள்

  • காலுப்
  • சார்ள்ஸ் மெரியம்
  • அண்டர்சன்
  • டிவால்டோ

இவ்வணுகுமுறையினால் கிடைக்கும் நன்மைகள்

  • அரசியல் பற்றிய எதிர்வு கூறலை முன்வைக்க இவ்வணுகுமுறை உதவுகிறது.
  • அரசியற் செயற்பாடுகள் பற்றிய பொதுசன அபிப்பிராயத்தை பெறுவதற்கு சிறந்த அணுகுமுறையாக இது காணப்படுகிறது.
  • ஜனநாயக ரீதியான விடயங்களை அளவு ரீதியாகக் கொடுப்பதற்கு இம்முறை உதவுகிறது.
  • இம்முறை மூலம் அரசறிவியல் பற்றிய தெளிவான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்

  • சரியான முறையில் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படாவிட்டால் எடுக்கப்படும் முடிவுகளும் தவறாவதற்கு வாய்ப்புக்களுண்டு.
  • அரசறிவியல் சம்பந்தப்பட்ட சகல விடயங்களுக்கும் புள்ளி விபர ரீதியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாது.

5. மார்க்ஸிச அணுகுமுறை

அரசு வர்க்க முரண்பாடுகளின் விளைவு என்பதை விளக்குகின்ற அணுகுமுறை மார்க்ஸிச அணுகுமுறையாகும்.

இயங்கியல் சமுதாயத்தின் அடிப்படையில் வர்க்கங்களின் நலனை பேணிவரும் அரசு, சமுதாயத்தின் இறுதிக்கட்டத்தில் வர்க்க பேதமற்ற சமதாயமொன்று எழுச்சி பெறும் பொழுது அரசும் அழிந்து விடும் என்பதை இவ்வணுகுமுறை விளக்குகின்றது.

கார்ல்மார்க்ஸ், ஏங்கல் போன்றவர்கள் இவ்வணுகுமுறையை அதிகம் கையாண்டுள்ளனர்.

இவ்வணுகுமுறையினால் கிடைக்கப்பெறும் நன்மைகள்

  • சமூக முரண்பாடுகள் எவ்வாறு தனிமனத அரசியல் நடத்தையை நிர்ணயிக்கிறது என்பதை அறிவதற்கு உதவுகிறது.
  • பொருளாதாரத்தின் அடிப்படையில் அரசறிவியலை ஆய்வு செய்வதற்கு இவ்வணுகுமுறை உதவுகின்றது.
  • அடித்தள மக்களின் யதார்த்த நிலையை வெளிக்கொணர்வதற்கு இவ்வணுகுமுறை உதவுகின்றது.
  • இயங்கியல் முறைமையின் படி வரலாற்றின் வளர்ச்சிக்கட்டத்தில் அரசற்ற சமூகம் உருவாகும் எனும் புதிய கருத்தையும் இவ்வணுகுமுறை வெளிப்படுத்துகிறது.

இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்

  • சமூக அபிவிருத்தியினது மாற்றத்தின் இறுதிக் கட்டமாக அரசற்ற சமூகமொன்று உருவாகும் என இவ்வணுகுமுறை குறிப்பிடுகின்றது. இது நடைமுறைக்கு பொருந்துமென கூற முடியாது.
  • அரசியற் செயற்பாடுகளுக்கு அடிப்படையாக பொருளாதார காரணிகளை மட்டும் குறிப்பிடுகிறது. ஏனைய காரணிகளை தவிர்த்து விடுகிறது.
RATE CONTENT 0, 0
QBANK (48 QUESTIONS)

அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கான சமூகவியல் அணுகுமுறையின் மூலம் கவனம் செலுத்தும் கற்கைப் பகுதிகளாவன,
A – அரசியலுக்கும் சமூகத்துக்கும் உள்ள தொடர்பாகும்.
B – அரசியல் மற்றும் சமூக நிறுவனங்களுக்குள்ள தொடர்பாகும்.
C – அரசுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குமுள்ள தொடர்பாகும்.
D – அதிகாரம், ஆணையதிகாரம் மற்றும் சட்டத்தன்மை என்பவற்றுக்கிடையிலான தொடர்பாகும்.
E – சமூக நடத்தைக்கும் அரசியல் நடத்தைக்குமுள்ள தொடர்பாகும்.

Review Topic
QID: 15619
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கான அணுகு முறைகளுள்
A – நடத்தைவாத அணுகுமுறை அரசியல் நிலைமைகளில் இடம்பெறும் மனித நடத்தையில் கவனம் செலுத்துகிறது.
B – வரலாற்று அணுகுமுறை அரசியலின் சமூகத்தளத்தைக் கற்பதன் மூலம் அரசியலை ஆராய்கின்றது.
C – ஒப்பீட்டு அணுகுமுறை தற்கால, கடந்தகால, அரசியல் முறைமைகளை ஒப்பிட்டு ஆராய்கிறது.
D – மெய்யியல் அணுகுமுறை முன்வகுக்கப்பட்ட கோட்பாடுகளிலும் கருதுகோள்களிலும் தங்கியுள்ளது.
E – உயிரியல் விஞ்ஞானத்துடன் முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறை தொடர்புபட்டுள்ளது.

Review Topic
QID: 15621
Hide Comments(0)

Leave a Reply

அரசறிவியலை ஆராய்வதற்கான நவீன ரீதியான அணுகுமுறையின் தன்மைகளோடு மிகவும் நெருக்கமான கூற்றை இனங்காண்க

Review Topic
QID: 15635
Hide Comments(0)

Leave a Reply

முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறையின் சரியான சேர்க்கை வடிவத்தை தெரிவு செய்க.
A – இது கட்டமைப்பு பணிப்பகுப்பாய்வு என்று அழைக்கப்படும்.
B – அமெரிக்க அரசறிவியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
C- நவீனத்துவம் சார்ந்த அணுகுமுறையாகும்.
D – டேவிட்ஈஸ்ரன் முன்வைத்த உள்ளீட்டு, வெளியீட்டு பகுப்பாய்வுமுறை உள்ளடக்கப்படுகிறது.
E – துறைகளுக்கு இடையிலான தொடர்புகள் ஊடாக உருவான ஒரு பிரவேசமாக கொள்ளப்படுதல்.

Review Topic
QID: 15639
Hide Comments(0)

Leave a Reply

முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறையின் பொருத்தமான கூற்றைத் தெரிவுசெய்க

Review Topic
QID: 15640
Hide Comments(0)

Leave a Reply

முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறைக்கு பொருந்தாத கூற்று ஒன்று கீழே தரப்பட்டுள்ளது அதை இனங்காண்க

Review Topic
QID: 15641
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் இயல்பினைக் குறிக்கும் கூற்று

Review Topic
QID: 15644
Hide Comments(0)

Leave a Reply

அரசறிவியலை ஆராய்வதற்காக மெய்யியல் அணுகுமுறையோடு மிகவும் நெருங்கிய கூற்றை இனங்காண்க.

Review Topic
QID: 15689
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கான அணுகுமுறைகளை விளக்கும் பிழையான கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 15692
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் கற்கைக்கான மெய்யியல் அணுகுமுறையின் பிரதான பண்புகளாவன- பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 15701
Hide Comments(0)

Leave a Reply

அரசியலைக் கற்பதற்கான ஒப்பீட்டு அணுகுமுறை ஒழுங்கமைந்துள்ளமை – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 15851
Hide Comments(0)

Leave a Reply

அரசியலைக் கற்பதற்கான மெய்யியல் அணுகுமுறை – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 15857
Hide Comments(0)

Leave a Reply

அரசியலைக் கற்பதற்கான நடத்தைவாத அணுகுமுறை – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 15858
Hide Comments(0)

Leave a Reply

மெய்யியல் அணுகுமுறையைக் குறிக்கும் கூற்றினை இனங் காண்க.

Review Topic
QID: 15864
Hide Comments(0)

Leave a Reply

நடத்தைவாதம் என்பது – சரியான சேர்மானம்
A – 1940களில் அமெரிக்காவில் அரசியல் விஞ்ஞானக் கற்கையில் தோன்றிய ஒரு கல்விசார் இயக்கமாகும்.
B – அரசியல் செயற்பாட்டாளர்களின் அவதானிக்கக் கூடிய நடத்தையை மட்டும் பகுத்தாய்வதனை வலியுறுத்துகின்றது.
C – பேரின அரசியல் நடத்தையைக் கற்பதனை விருத்தி செய்துள்ளது.
D – கோட்பாட்டு நிர்மாணத்தையும் ஆய்வு முறையியலையும் அபிவிருத்தி செய்வதில் பங்காற்றியுள்ளது.
E – நுட்பமுறைகளைக் காட்டிலும் விளைவுகளில் கவனம் செலுத்தியுள்ளது.

Review Topic
QID: 15869
Hide Comments(0)

Leave a Reply

நடத்தை வாதமானது – சரியான சேர்மானம்
A – 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் நவமாக்சியவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கல்விசார் இயக்கமாகும்.
B – தனியாட்களினதும் குழுக்களினதும் அரசியல் நடத்தையை அவதானித்தல், பகுத்தாய்தல் என்பன பற்றிய கற்கைகளில் கவனம் செலுத்துகிறது.
C – கற்கைகளை மேற்கொள்வதற்கு முறைமையானதும் துல்லியமானதுமான முறைகளைப் பயன்படுத்துகிறது.
D – மக்களின் அரசியல் நடத்தைப் பாங்குகளின் இருப்பினை நிலைநிறுத்த முயல்கிறது.
E – மக்களின் அரசியல் நடத்தைப் பாங்குகளோடு தொடர்பான நியதிகளை உருவாக்க முயல்கிறது.

Review Topic
QID: 15871
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கான சமூகவியல் அணுகு முறையின் மூலம் கவனம் செலுத்தும் கற்கைப் பகுதிகளாவன:
A – அரசியலுக்கும் சமூகத்துக்குமுள்ள தொடர்பாகும்.
B – அரசியல் மற்றும் சமூக நிறுவனங்களுக்குமுள்ள தொடர்பாகும்.
C – அரசுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குமுள்ள தொடர்பாகும்.
D – அதிகாரம், ஆணையதிகாரம் மற்றும் சட்டமுறைத் தன்மை என்பவற்றுக்கிடையிலான தொடர்பாகும்.
E – சமூக நடத்தைக்கும் அரசியல் நடத்தைக்குமுள்ள தொடர்பாகும்.

Review Topic
QID: 15872
Hide Comments(0)

Leave a Reply

நடத்தைவாதமானது – சரியான சேர்மானம்
A – அவதானிக்கத்தக்க மனித நடத்தையை மட்டும் தளமாகக் கொண்டு சமூகக் கோட்பாடுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நம்பிக்கையின் படி நிறுவப்பட்டுள்ளது.
B – அரசியல் விஞ்ஞானம் தொடர்பான பெறுமானஞ்சார் விடயங்களைக் கற்பதற்கு அதிக கரிசனை காட்டுவதனை வலியுறுத்துகிறது.
C – ஆராய்ச்சிகள் மற்றும் புள்ளிவிவரப் பகுப்பாய்வினுடாக அளவிடக்கூடிய தரவுகளின் சேகரிப்போடு சம்பந்தப்படுகிறது.
D – எதிர்வு கூறக்கூடிய ஆற்றலையுடைய அனுபவம் சார் கோட்பாடுகளைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது.
E – உறுதிப்படுத்தக் கூடிய விளக்க ரீதியான கோட்பாடுகளின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியான அறிவை அபிவிருத்தி செய்ய முடியும் என்று வலியுறுத்துகிறது

Review Topic
QID: 15875

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank