பொதுக்கொள்கையானது அரசாங்கத்தினால் நாளாந்த வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்திச் செல்வதற்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைத் திட்டமாக உள்ளது.
அதாவது அரசாங்கத்தினால் பொதுப்பிரச்சினை தொடர்பாக மேற்கொள்ளும் தீர்மானம், முடிவாக உள்ளது.
அதாவது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்தும் கொள்கையே பொதுக்கொள்கை என்றழைக்கப்படுகின்றது.
பொதுக்கொள்கை பற்றிய அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:
தோமஸ் டை – பொதுக்கொள்கை என்பது அரசாங்கம் செய்வதற்கு அல்லது செய்யாமல் விடுவதற்கு தெரிவு செய்யும் எதுவாகவும் உள்ளது.
ஹரல்ட் லாஸ்வெல் – அரசியல் மூலம் சமூகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் பெறுமானத் தொகுதி பொதுக்கொள்கையாகும்.
ஜேம்ஸ் அன்டர்சன் – மக்களின் பெரும்பாலானவர்கள் ஆர்வம் கொண்டுள்ள ஒரு விடயம் / பிரச்சினையை கையாள செயற்பாட்டாளர் ஒருவரால் / ஒரு தொகுதி செயற்பாட்டாளர்களால் பின்பற்றப்பட வேண்டிய நோக்கம் கொண்ட ஒரு செயல் வழிமுறை பொதுக்கொள்கையாகும்.
தனிமனிதனின் சமூக இருப்பு தொடர்பாக பொதுக்கொள்கைகள் முக்கியத்துவம் உடையதாக இருத்தல்.
பொதுக்கொள்கைகள் மோதல் தன்மை வாய்ந்தவையாக இருத்தல்.
பொதுக்கொள்கைகள் பொது நன்மையளித்தலை நோக்கமாகக் கொண்டவை.
பொதுமக்களின் தேவைகளுக்கு அமைவானவையாகஇருத்தல்.
பொதுக் கொள்கைகள் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை.
கொள்கை விஞ்ஞானத்தின்படி பொதுக்கொள்கைகள் சில கட்டங்களைத் தாண்டிச் செல்வது அவசியமாகும்.
அதிகாரம் கொண்டதாக இருத்தல்.
கொள்கை வாழ்க்கை வட்டம்
கொள்கை முனைப்பு – இங்கு முன்னுரிமை அடிப்படையில் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை வியாக்கியானம் செய்து, ஒழுங்குபடுத்தி கொள்கை நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும்.
கொள்கை உருவாக்கம் – மேலே இனங்கண்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மாற்றுக் கொள்கைகளுள் மிகச்சிறந்த மாற்றுக் கொள்கையை தெரிவு செய்து கொள்வது இச்சந்தர்ப்பத்தில் நிகழும்.
கொள்கை அமுலாக்கம் – பொது நிர்வாகத்துறையினராலும் தனியார் துறை, அரச சார்பற்ற அமைப்புகள் என்பனவற்றின் பங்களிப்புடன் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் செயற்பாட்டு ரீதியாக கொள்கைகளை நடைமுறைப்படுத்தலாகும்.
கொள்கை மதிப்பீடு – கொள்கை மூலம் எதிர்பார்க்கப்பட்ட இலக்கு அடையப் பெங்றுள்ளதா? என்பதை மதிப்பிடுவது இக்கட்டத்தில் நிகழும்.
பொதுக்கொள்கைக்கும் பொதுநிர்வாகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள்:
பொதுக்கொள்கையின் அமுலாக்கத்திற்கு பொதுநிர்வாகம் அவசியம்.
பொதுக்கொள்கைளின் உருவாக்கத்திலும் பொதுநிர்வாகம் பாரிய அளவு பங்காற்றுகின்றது.
பொதுக் கொள்கையின் வெற்றி, தோல்வி பொது நிர்வாகத்திலேயே தங்கியிருக்கின்றது.
பொதுக்கொள்கையினை உருவாக்கல், அமுல்படுத்தல், மதிப்பிடல், மேற்பார்வை செய்தல், முகாமை செய்தல் போன்ற பலவேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்ற பிரதான பகுதியாக பொதுநிர்வாகம் விளங்குகின்றது.
பொதுக்கொள்கை உருவாக்கத்தில் ஈடுபடுவோர்:
அரசியல் நிர்வாகம்
ஜனாதிபதி
பிரதமர்
அமைச்சர்கள்
பாராளுமன்ற உறுப்பினர்கள்
நிரந்தர நிர்வாகம்
சிவில் சமூகம்
சர்வதேச சூழல்
ஊடகம்
தொழிற்சங்கங்கள்
மனித உரிமை நிறுவனங்கள்
கல்விமார் சம்மேளனம்
நலன்பேண் குழுக்கள்
அரச சார்பற்ற நிறுவனங்கள்
கொள்கை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்:
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்