ஜரோப்பாவின் உதயம் என வர்ணிக்கப்படுகின்றது. பிரான்ஸ் அரசியல் அமைப்புக்களின் ஆய்வு கூடம் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. 551 662 சதுர கிலோமிற்றர் பரப்பளவையும் 5.5 கோடி மக்கள் தொகையும் இந்நாடு கொண்டுள்ளது.
பிரான்சில் நவீன அரசியல் ஆனது 1789 நடைபெற்ற பிரான்சிய புரட்சியுடன் ஆரம்பமாகியது. 1791 இல் பிரான்சின் உடைய முதாலவது அரசியல் அமைப்பு அறிமுகப்பட்டது. வரையறுக்கப்பட்ட முடியாட்சியை கொண்டாக இவ் யாப்பு விளங்குகியது.
1789 ஆம் ஆண்டின் இரண்டாவது அரசியல் யாப்பு முதாலாம் குடியரசு பிரகடனப்படுத்தியது. இவ் அரசியல் யாப்பு 1ஆம் குடியரசு அரசியல் அமைப்பு என அழைக்கபடும்.
1848 ஆம்ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இந்த யாப்பு சிறிது காலம் இருந்து மூன்றாவது குடியரசு அரசியல் 1875 இல் உருவாக்கப்பட்டது. இவ் அரசியல் யாப்பு பிரித்தானிய மாதிரியிலான அரசாங்க முறையை உருவாக்கியது ஜனாதிபதி ஒரு பெயரளவு நிர்வாகியாக விளங்கினார்.
1946ம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இது 4ஆம் குடியரசுயாப்பு என அழைக்கப்பட்டது. இதுவும் பாரளுமன்ற அரசாங்க முறை யாப்பாக காணப்பட்டது.
1958ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 4ம் திகதி 5ம் குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டது. பிரான்சில் நவீன தலைவர் என அழைப்ப்படும் டிகோல் என்பவரினாலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டது. இவ் அரசியல் யாப்பே இன்று நடைமுறையில் உள்ளது.
இவ் அரசியல் யாப்பானது ஒரு கலப்பு அரசியல் யாப்பாகும். அமெரிக்க ஜனாதிபதி அரசாங்க முறையும் பிரித்தானியா பாரளுமன்ற அரசாங்க முறையையும் உள்ளடக்கி இது அமைக்கப்பட்டது. இன்று 18 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
◊ எழுதப்பட்ட நெகிழா அரசியல் யாப்பு
◊ இரு சபை பாராளுமன்றம்
◊ ஓரளவு அதிகாரம் வாய்ந்த ஜனாதிபதி
◊ ஓரளவு அதிகாரம் படைக்க அமைச்சரவை
◊ மத சார்பற்ற மக்களாட்சி குடியரசு
◊ மக்கள் தீர்ப்பு முறை
◊ கலப்பு அரசாங்க முறை
◊ இரு வகை நீதிமன்றம்
◊ பல கட்சி முறை
◊ அரசியல் அமைப்பு பேரவை
பிரான்ஸ் ஒரு கலப்பு அரசாங்கமுறை யாப்பாக காணப்படுதால் ஓரளவு அதிகாரம் கொண்டவராக விளங்குகின்றார் இவரே அரசின் தலைவராககவும் நிர்வாகத்தின் தலைவராகவும் காணப்படுகின்றார். ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்வாளர் கழகத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டாலும் இன்று மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார். 1962 ஆம் ஆண்டு இருந்து இவர் மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார்.
1958 ஆம் ஆண்டு 5 ஆம் குடியரசு யாப்பின்படி ஜனாதிபதி அரசினதும் அரசாங்கத்தின்தும் நிறைவேற்று துறையினதும் தலைவர் ஆவார். ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதம தளபதியும் ஆவார். அதன்படி பிரான்சிய அரசாங்க முறையில் மிகவும் முக்கியமானது பலம் வாய்ந்த பதவி ஜனாதிபதி பதவி ஆகும். மேலே குறிப்பிட்ட ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதிக்கும் உரித்தாகும். அதிகாரங்காளும் பணிகளும் கீழே தரப்பட்டுள்ளன.
1) அரசின் தலைவர் என்ற வகையில்
பிரான்சிய குடியரசை பிரதிநிதித்துவம் தேசிய விழாக்களில் பங்கு பற்றல், அரச செய்திகளையும் அறிவித்தல்களையும் வெளியிடுதல், கௌரவ பட்டங்களைய வழங்குதல், அரசு இலட்சணையை பிரயோகித்தல், வெளிநாட்டு அரசு விருந்தினரை வரவேற்றல், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல்.
2) அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில்
(அ) பிரதமரை நியமித்தல்
இங்கு ஜனாதிபதி தேசிய பேரவையில் இடம்பெறும் அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் பெற்றுக் கொண்ட ஆசனங்களை கவனத்தில் எடுக்க வேண்டுமாயினும் பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி தமது சுயவிருப்பின் பெயரில் செயற்பட வேண்டும்.
(ஆ) அமைச்சரவையைத் தீர்மானித்தல்
அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைகளை பெற வேண்டும் என யாப்பு குறிப்பிட்டாலும் அவர் விருமபினால் அவ்வாறு செய்யாது தனது சுயவிருப்பின் பேரில் செயற்பட முடியும்.
(இ) அமைச்சரவையைக் கூட்டத்திற்கு தலைமை தாங்குதலும் அமைச்சரவையை ஒழங்குபடுத்தும் கட்டளைகளுக்கு இறுதி அங்கிகாரம் வழங்குதலும்
அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு பாராளுமன்றின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக சமர்பிர்க்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி அவற்றில் கைச்சாத்திட்டு உறுதிப்படுத்தல் வேண்டும். அவ்வாறு கைச்சாத்திடாத சகல தீர்மானங்களும் இரத்து செய்யப்பட்டவையாக கருதப்படும்.
(ஈ) அமைச்சரவையை மாற்றி அமைத்தல்
அமைச்சர்களை பதவியிலிருந்து அகற்றுதல், அமைச்சுகளை மாற்றுதல் இதில் அடங்கும்.
3) நிறைவேற்றுதுறையின் தலைவர் என்ற வகையில்
ழுழு அரசாங்க சேவையையும் கட்டுப்படுத்தும் அதிகராங்களை ஜனாதிபதி பெற்றுள்ளார். பராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒரு சட்டத்தின் மூலம் அரசாங்க சேவைகளை மேற்கொள்ள வேண்டிய நியமனங்கள் வழங்கப்படாவிட்டால் வேலை நியமனங்கள் தொடர்பாக தமது தற்துணிவு அதிகாரங்கத்தின் அடிப்படை செய்யபட முடியும்.
4)ஆயுத படைகளின் பிரதான தளபதி என்ற வகையில்
படை அதிகாரிகளை நியமித்தல் நீக்குதல், மாற்றுதல், போர் சமாதனம் செய்தல் போன்றன இடம் பெறுகின்றன.
மேற்குறிப்பிட்ட நான்கு அதிகாரங்களையும் தவிர அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு வேறும் பல அதிகாரங்களையும் வழங்கியுள்ளது.
நீதித்துறையில் சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு 64 ஆம் சரத்து
உயர் நீதிமன்றத்தின் தலைவராக இருத்தல்.
உயர் நீதிமன்றில் 9 அங்கத்தவர்களை நியமித்தல்.
நீதிதுறை அதிகாரிகளை நியமித்தல்.
அவசரகால அதிகாரங்கள்
அரசியல் யாப்பின் 5 ஆம் சரத்துப்படி பிரான்சிய குடியரசினதும் பிரான்சிய ஆட்சித் தாபனங்ககள் முறையினதும் தொடர்ச்சியான இருப்பு மற்றும் செயற்பாடு என்பவற்றை பாதுகாத்தல் கொண்டு நடாத்துதல் தேசிய சுயாதீனத்தை பாதுகாத்தல் ஜனாதிபதி ஆவார்.
இப் பொறுப்புகளையும் பிரான்சிஸ் கைச்சாத்திட்டுள்ள வெளிநாட்டு ஒப்பந்தங்களை உரியவாறு நடைமுறைப்படுத்த முடியாத சந்தர்ப்பத்தில் நெருக்கடி நிலைகள் தோன்றினால் பிரதமர் பராளுமன்ற இரு சபைகளின் தலைவர்களையும் கலந்தாலோசித்து நெருக்கடி நிலையை ஜனாதிபதி பிரகடனம் செய்தார்.
அரசியல் யாப்பின் 11 ஆம் சரத்துப்படி ஜனாதிபதி சுயவிருப்பின் பேரில் அல்லது பாராளுமன்றின் இருமன்றங்களினால் நிறைவேற்றப்படும் ஒரு யோசனையின் மூலம் வேண்டப்படும் போது இதனை நடைமுறைப்படுத்துவார்.
வெளிநாட்டு தூதுவர்களை நியமித்தல், இராஜதந்திர அதிகாரங்களை நியமித்தல், வெளிநாட்டு தூதுவர்களை ஏற்று அங்கீகரித்தல், வெளிநாட்டு கொள்கைளை கொண்டு நடாத்துதல், வெளிநாட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்.
பிரான்ஸ் பாராளுமன்றம் தேசிய சபை செனட்சபை ஆகிய இருபைகளைக் கொண்டது மசோதாக்கள் இரு சபைகளிலும் நிறைவேற்றப்படுத்தல் வேண்டும். ஆண்டுக்கு இரு தடைவை பாராமன்றம் கூட்டப்பட வேண்டும்.
பிரான்ஸ் பாராளுமன்றம் தேசிய சபை செனட்சபை ஆகிய இருபைகளைக் கொண்டது மசோதாக்கள் இரு சபைகளிலும் நிறைவேற்றப்படுத்தல் வேண்டும் ஆண்டுக்கு இருதடைவை பாராமன்றம் கூட்டப்பட வேண்டும்
இது 577 உறுப்பினார்களைக் கொண்டது உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர்கள் இதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இடைக்காலத்திலும்ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைப்படி இதனைக் கலைக்கலாம். சபாநாயகர் இதன் தலைவர் ஆவார் வருடத்திற்கு இரண்டு தடைவை இது கூடும்.
சட்டத்துறை அதிகாரம்
எந்த மசோதாவையும் இது அறிமுகப்படுத்தாலம் நிதி மசோதா இங்கே தான் அறிமுகப்படுத்தப்படுகின்றது இவ்வாதிகாரம் சென்ட்சபைக்கு இல்லை. அரசியல் யாப்பு திருத்த மசோதா இங்கு நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
நிர்வாகத் துறை அதிகாரம்
நிர்வாக அமைச்சர்கள் தேசிய பேரவைக்கு கூட்டாக பொறுப்பு சொல்ல வேண்டும். அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு பதவியில் இருந்து நீக்கலாம். ஜனாதிபதியைப் பதவி நீக்கும் தீர்மானம் இச்சபையில் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
நீதித்துறை தொடர்பான அதிகாரங்கள்
உயர்நீதிமன்ற நீதிபதிகளைப் நீக்கும் தீர்மானம் இச்சபையில் நிறைவேற்றப்படவேண்டும்.
இச்சபை இரண்டாம் மன்றமாகவும் மேற்சபையாகவும் விளங்கும் 321 உறுப்பினார்களை இச்சபை கொண்டுள்ளது பதவிக்காலம் 9 ஆண்டுகளாகும். வெளிநாட்டில் வாழும் பிரான்சிய பிரஜைகளுக்கும் சென்ட் சபையில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 3 வருடத்துக்கு ஒரு தடைவ 1/3 பகுதியினர் பதவி விலக புதியவர்கள் உள்வாங்கப்படுவார்கள்.
சட்டத்துறை அதிகாரங்கள்
நிதி மசோதா தவிர்ந்த ஏனைய மசோதாக்களை இச்சபையில் அறிமுகப்படுத்த முடியும் அவசரகால நிலை மக்கள் தீர்ப்பு போன்ற விடயங்களுக்கு ஜனாதிபதி செனட் சபைக்கு கலந்து ஆலோசிக்க வேண்டும்.
நிர்வாகத்துறை தொடர்பான அதிகாரம்
அமைச்சரவையை பதவி நீக்கும் அதிகாரம் இச்சபைக்கு இல்லை வரவு செலவு திட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும், ஜனாதிபதியை பதவி நீக்கும் பொறுப்பு இச்சபைக்கு நிறைவேற்றப்பட வேண்டும்.
நீதித்துறை அதிகாரம்
உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கும் தீர்மானம் இச்சபையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
கூற்று I – பிரான்சின் நீதித்துறை பராமுகப்படுத்தப்படுகிறது.
கூற்று II – நிர்வாகத்தினதும் சட்ட நடவடிக்கைகளினதும் மீதான அதனது அதிகாரங்கள் மிகவும் குறைவாகும
பிரான்சின் தேசியப் பேரவை – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – நான்கு வருட காலத்துக்குத் தெரிவு செய்யப்படுகின்றது.
B – வரவு – செலவுத் திட்டத்தை நிராகரிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
C – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ளது.
D – சனாதிபதியால் கலைக்கப்பட முடியாது.
பிரான்சியக் குடியரசின் ஜனாதிபதி – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – தேர்வாளர் கழகத்தின் மூலம் தெரிவு செய்யப்படுகிறார்.
B – பதவிக் காலம் ஏழு வருடங்களாகும்.
C – வாக்காளர்களுக்கு நேரடியாகப் பொறுப்புக் கூறுவார்.
D – பாராளுமன்றம் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது அதிகாரம் பெறவில்லை.
பிரான்சியக் குடியரசின் பிரதம மந்திரி – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – பொதுத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படுகிறார்.
B – ஜனாதிபதிக்குப் பொறுப்புக் கூறுவார்.
C – நிறைவேற்றுத் துறையின் தலைவராவார்.
D – அரசாங்க வேலைகளுக்கு வழிகாட்டும் பொறுப்பையுடையவராவார்.
கூற்று I – 1958 பிரான்சின் ஐந்தாம் குடியரசு யாப்பு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை ஆகிய இரட்டை நிருவாக மட்டங்களைக் கொண்ட ஒரு கலப்பு ஜனாதிபத முறையாகும்.
கூற்று II – அரசியல் யாப்பை மதித்தல், அரச அதிகாரத்தை முறையாக நடைமுறைப்படுத்தல், அரசின் தொடர்ச்சி நிலை, தேசிய சுதந்திரம், ஆள்புல ஒருமைப்பாடு என்பவற்றை உறுதிப்படுத்தல், சர்வதேச உடன்படிக்கைகளை மதித்தல் ஆகிய பணிகளை 5 ஆம் குடியரசு யாப்பு ஜனாதிபதிக்கு
வழங்கியுள்ளது.
கூற்று I – பிரான்சிய யாப்பின் படி ஜனாதிபதி தொழினுட்ப ஆட்சியாளர்களையும் (technocrats) தேசியப் பேரவைக்கு வெளியேயிருந்து ஆட்களையும் அமைச்சர்களாக நியமிக்க முடியும்.
கூற்று II – தேசியப் பேரவையின் ஓர் உறுப்பினர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் தமது தேசியப் பேரவை உறுப்புரிமையிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும்.
Review Topicகூற்று I – பிரான்சிய யாப்பு இரு வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் இணைந்து செயலாற்றும் அரசாங்கத்துக்கான வாய்ப்பினை வழங்குகின்றது
கூற்று II – இணைந்து செயலாற்றும் காலப்பகுதியில் பிரதமர் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து அகற்ற முடியும்.
Review Topic1958 டிகோல் யாப்பின் கீழ் பிரான்சில் தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையானது- பொருத்தமற்ற கூற்று
Review Topic1958 டிகோல் யாப்பின் கீழ் பிரான்சில் தாபிக்கப்பட்ட அரசாங்கமானது:
A – நான்காம் குடியரசு எனவும் அழைக்கப்படுகிறது.
B – ஜனாதிபதி மற்றும் மந்திரி சபை முறைகளின் மூலக்கொள்கைகளைக் கொண்ட கலப்பு அரசாங்க முறையினதாகும்.
C – பலமான நிறைவேற்றுத்துறை, பலவீனமான சட்டத்துறை என்ற அடிப்படையில் தாபிக்கப்பட்டுள்ளது.
D – ஐந்து வருடப் பதவிக்காலத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்படும் ஒரு ஜனாதிபதியினால் தலைமை தாங்கப்படுகிறது.
E – 1789 இற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட மிகவும் வெற்றிகரமான அரசாங்கமுறை எனக் கருதப்படுகிறது.
1958 பிரான்சின் ஐந்தாம் குடியரசு யாப்பு – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – சனாதிபதி மற்றும் மந்திரி சபை கலப்பு அரசாங்க முறையை அறிமுகம் செய்தது.
B – சனாதிபதியை நாம நிருவாகியாக ஆக்கியது.
C – பிரதம மந்திரியின் நிலையைப் பலப்படுத்தியது.
D – பல கட்சி முறையைத் தடைசெய்தது.
கூற்று I – யாப்பின் படி பிரான்சிய ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணையை முன்வைக்க முடியாது.
கூற்று II – பிரான்சிய ஜனாதிபதியை ஒப்பங்கோடலின் மூலம் மக்களாலேயே பதவி நீக்கம் செய்ய முடியும்.
Review Topicகூற்று I – பிரான்சின் நீதித்துறை பராமுகப்படுத்தப்படுகிறது.

Review Topic