Please Login to view full dashboard.

பிரதிநிதித்துவ முறை

Author : Admin

25  
Topic updated on 02/15/2019 06:56am

பிரதிநிதித்துவம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஏதேனும் ஒன்றின் அல்லது ஒரு மனிதனின் சார்பாக நிற்றலே பிரதிநிதித்துவம் எனப்படுகிறது.
  •  ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் மக்கள் தமது அரசியல் அதிகாரத்தை தான் விரும்பியதன் பிரதேசத்தை சேர்ந்த அரசியல் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் அரசியல் செயன்முறையில் மறைமுகமாக பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குவது பிரதிநிதித்துவ முறையாகும்.
  • ஜனநாயக நாடுகளில் காலத்திற்கு காலம் தேர்தல்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து மக்களாட்சியினை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஜனநாயக ரீதியிலான ஒரு மார்க்கம் பிரதிநிதித்துவ முறையாகும்.
  • இவ் எண்ணக்கரு இங்கிலாந்து பாராளுமன்ற முறையில் வளர்ச்சியோடு விருத்தியடைந்துள்ளது.
  • பாரிய நிலப்பரப்பையும் சனத்தொகையும் கொண்ட தற்கால அரசுகளில் சகலரும் அரச விவகாரங்களில் நேரடியாகப் பங்குபற்ற முடியாமையால் ஏற்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு முறையாக இது உள்ளது.
  • ஜனநாயக ஆட்சிமுறை உலகில் வேரூன்றுவதற்கு மக்கள் இறைமைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்கும் மக்கள் நலன் சார்ந்த அரசாங்கங்கள் தாபிக்கப்படுவதற்கும் பிரதிநிதித்துவ முறை துணைபுரிகிறது.

பிரதிநிதித்துவ முறையொன்றில் இருக்க வேண்டிய பண்புகள்:-

  • பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு பொறுப்புக் கூறுவோர்களாகவும், அவர்களுக்கு நெருங்கியவர்களாகவும் இருக்க வேண்டும்.
  • காலத்திற்கு காலம் தேர்தல்கள் நடாத்தப்படுதலும், அவை சுதந்திரமானவையாகவும் நீதியானவையாகவும் இருக்க வேண்டும்.
  • வளர்ச்சியடைந்த கட்சிமுறையின் அமைப்பும் வாக்காளர்கள் சிறந்த அறிவுடையோராகவும் இருத்தல் வேண்டும்.
  • சகலருக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுத்தல்.
  • சகல சக்தி வாய்ந்த அபிப்பிராயங்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்குதல்.
  • மக்கள் தெரிவை உயர்ந்த வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுதல்.
  • தாம் பெற்றுக் கொள்ளும் வாக்குகளுக்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை அரசியல் கட்சிகளுக்கு பெற்றுக் கொடுத்தல்.
  • தேர்தல் காலங்களில் மக்கள் வாக்களிக்கும் போது எவ்வித கட்டுப்பாடுகளும் இருத்தல் கூடாது.
  • ஒரு நாட்டில் பல தன்மை காணப்படும் போது அந்நாட்டில் ஒருமைப்பாட்டை பெறுவதற்காக பிரதிநிதித்துவமுறை அமைய வேண்டும்.

பிரதிநிதித்துவ முறையின் வகைகள்

  1. இனவாரிப் பிரதிநிதித்துவம்
  2. பிரதேசவாரி பிரதிநிதித்துவம்
  3. விகிதாசார பிரதிநிதித்துவம்

இனவாரிப் பிரதிநிதித்துவம்

  • ஒரு சமுதாயத்தில் வேறுபட்ட பல இனத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பிரதிநிதித்துவத்தை வழங்குகின்ற முறைமையே இனவாரியான பிரதிநிதித்துவமாகும்.
  • இதனை சமூகவாரி பிரதிநிதித்துவம் எனவும் அழைப்பர்.
  • 1833ல் இலங்கையில் கோல்புறூக் சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்ட போது அந்த சீர்திருத்தத்திற்கு ஊடாக இனவாரியான பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இனவாரி பிரதிநிதித்துவத்தின் நன்மைகள்:-

  • சகல இனங்களுக்கும் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுக்கின்றது.
  • இனங்களுக்கிடையே பிரதிநிதித்துவ சமநிலையை பேண உதவுகிறது.

இனவாரி பிரதிநிதித்துவத்தின் குறைபாடுகள்:-

  • அரசியல் சமுதாயத்திலே வாழுகின்ற மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் இனரீதியான சிந்தனைகள் வலுப்பெறுவதற்கு வழிகோலுகின்றது.
  • இன முரண்பாடுகள் அரசியல் சமுதாயத்திலே ஏற்பட்ட தூண்டுகோலாக அமைகின்றது.
  • தேசிய ஒற்றுமையினையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்புவதற்கு இப்பிரதிநிதித்துவ முறைமை இடமளிப்பதில்லை.
  • இன ஒருமைப்பாட்டை சீர்குலைத்து,தேசிய ஒருமைப்பாட்டிற்கு தடையாக அமைந்திருக்கிறது.

பிரதேச வாரியான பிரதிநிதித்துவம்

  • ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயத்தை அதன் நிலப்பரப்பு,மக்கள் தொகை என்பவற்றை அடிப்படையாக கொண்டு பல சமமான தொகுதிகளாக / பிரதேசங்களாக பிரித்து ஒவ்வொரு தொகுதிகளிலிருந்தும் தனித்தனியாக பிரதிநிதிகளை தெரிவு செய்தல்.
  • அதாவது 1000 சதுர மைல்களையும் 75000 மக்களையும் அடிப்படையாகக் கொண்டு தேர்தல் தொகுதியொன்றை நிர்ணயித்து அதன் மூலம் பிரதிநிதியை தெரிவுசெய்யும் முறை என குறிப்பிடலாம்.
  • தேர்தல் தொகுதி அடிப்படையிலேயே பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும்.
  • மறுபெயர்கள்:-
  1. அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்படுபவர் ஆகக் குறைந்த பெரும்பான்மை வாக்கின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவதால் எளியபெரும்பான்மை பிரதிநிதித்துவ முறை அல்லது சாதாரண பிரதிநிதித்துவ முறை எனப்படும்.
  2. சார்பளவில் அதிக வாக்குகளைப் பெற்றவர் தெரிவு செய்யப்படுவதால் சார்பளவான பிரதிநிதித்துவ முறை எனப்படும்.
  3. தொகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவதால் தொகுதிவாரி பிரதிநிதித்துவம் எனப்படும்.

பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தின் மாதிரிகள்:-

  1. எளிய பெரும்பான்மை முறை
  2. அறுதிப் பெரும்பான்மை முறை

பிரதிநிதித்துவ முறையின் நன்மைகள்:-

  • பிரதேச ரீதியான அறிவு ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தல்.
  • இன ஒற்றுமையை தூண்டி தேசிய ஒறுமைப்பாட்டை ஏற்படுத்தல்.
  • தேர்தல் தொகுதிகள் சிறியதாக இருப்பதால் சிறப்பாக சேவையாற்றக் கூடிய நிலை ஏற்படல்.
  • மக்கள் தமது பிரதிநிதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடிதல்.
  • பிரதிநிதிக்கும் வாக்காளருக்கும் இடையே தொடர்பு கூடிக் காணப்படும்
  • வாக்களிப்பு முறையும் வாக்கு கணிப்பீட்டு முறையும் ஒளிமயமானதாக அமைதல்.
  • பிரதிநிதித்துவத்தில் வெற்றிடம் ஏற்படும் போது இடைத்தேர்தல்கள் நடைபெறும் இதனால் ஜனநாயகம் சிறப்படைதல்.

பிரதிநிதித்துவ முறையின் குறைபாடுகள் :-

  • தேசிய ரீதியில் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் அவற்றிற்கு ஒதுக்கப்படும் ஆசனங்களுக்கும் இடையில் தொடர்பின்மை.
  • ஒரு நாட்டின் சகலவிதமான அரசியல் அபிப்பிராயங்களும் ஆட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் பெறுதல் இயலாமல் போதல்.
  • தேர்தல் தொகுதிகளின் சிறுபான்மையோராக வாழும் பிரிவினர் தமக்குரிய பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை காணப்படுதல்.

எளிய பெரும்பான்மை முறை

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஒரு பொதுத் தேர்தலில் ஒரு தேர்தல் தொகுதியில் வழங்கப்பட்டு செல்லுபடியான மொத்தவாக்குகளில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை வெற்றி பெற்றவராக பிரகடனப்படுத்தும் முறையே எளிய பெரும்பான்மை முறை எனப்படும்.
  • இதனை First – Past – The post  முறை என்றும் அழைப்பர்.
  • முதலில் வெற்றிக் கம்பத்தை தொட்டவர் வெற்றி பெறுவர்.
  • எளிய பெரும்பான்மை முறையானது முதன்முறையாக பிரித்தானியாவில் நடைமுறையிலே காணப்பட்டது.

எளிய பெரும்பான்மை முறையின் நன்மைகள்:

  • ஒரு தொகுதியில் ஒருவர் மட்டும் தெரிவு செய்யப்படுவதால் வாக்காளருக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு காணப்படும்.
  • பலமான அரசியல் கட்சி முறையொன்று தோன்றுதல்.
  • பலமான அரசாங்க முறையொன்று உருவாகுதல்.
  • இடைத்தேர்தல்கள் நடைபெறுவதால் காலத்திற்கேற்ப பொதுசன அபிப்பிராயத்தை அரசாங்கம் அறிந்து கொள்ளக் முடிகின்றது.
  • அரசியல் கட்சிகளின் ஆதிக்கத் தன்மை குறைவடைதல்.
  • தொகுதிக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் வேகமாக நடைபெறும் வாய்ப்புக் காணப்படுதல்.
  • நாடு முழுவதிலும் காணப்படுகின்ற மக்களுடைய அபிலாசைகள் மற்றும் அபிலாசைகள் அரசியல் அரங்கிற்கு கொண்டு வரப்படுவதற்கு இத்தேர்தல் முறைமை உதவுகிறது.
  • வாக்காளர்களுடைய வாக்குகள் வீணடிக்கப்படுவதை தவிர்க்கப்படும்.

எளிய பெரும்பான்மையின் குறைபாடுகள்:-

  • தேர்தல் தொகுதியிலே பெரும்பான்மை வாக்காளர்களால் வெறுக்கப்பட்ட பிரதிநிதி அத்தொகுதியின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட வாய்ப்பு உண்டு
  • கூடுதலான வாக்குகளை பெறுவோரே ஆசனம் பெற முடிவதால் சகல அரசியல் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கமுடியாமை.
  • பிரதிநிதிகள் வாக்காளரின் அடிமையாக மாறுதல்.
  • சிறுபான்மை குழுக்கள் போதிய பிரதிநிதித்துவத்தை பெற முடியாமை.
  • இடைத்தேர்தல்கள் நடைபெறுவதால் செலவு அதிகமாக இருத்தல்.
  • தேர்தல் தொகுதி பிரிப்பு முறையினால் வாக்காளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் சமனற்ற பிரதிநிதித்துவம் ஏற்படல்.
  • ஒரு தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட மிகத்திறமையான பிரதிநிதி ஒருவரின் சேவையை மக்கள் பெற்றுக்கொள்ள இந்த தேர்தல் முறைமை இடமளிப்பதில்லை.

அறுதிப்பெரும்பான்மை முறை

  • ஒரு தேர்தல் தொகுதியிலே போட்டியிடுகின்ற பல வேட்பாளர்களில் அளிக்ப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 50%ற்கும் அதிகமான வாக்குகளினை எந்த வேட்பாளர் பெறுகின்றாரோ அந்த வேட்பாளரை பிரதிநிதியாக தெரிவு செய்கின்ற முறைமையே அறுதிப்பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறைமை என்பர்.
  • அறுதிபெரும்பான்மை முறையில் எவரும் அறுதிப்பெரும்பான்மையை மேல் பெறாத சந்தர்ப்பங்களில் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்கு பின்வரும் இரு முறைகள் பயன்படுத்தப்படும்:-
    1. மாற்றீட்டு வாக்கு மாதிரி : போட்டியிடுபவர்களில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற இருவரைத் தவிர ஏனையோர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு,அவ்வாறு விலக்கப்பட்டவர்களின் வாக்குகளில் முதலிருவருக்கும் உள்ள விருப்பு வாக்கினை கூட்டி பிரதிநிதியை தெரிவு செய்தல்.
    உதாரணம் : இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்
    2. மறுதேர்தல் முறை (இருசுற்று வாக்கு மாதிரி): குறித்த தேர்தலில் எவரும் அறுதிப் பெரும்பான்மையை பெறாதவிடத்து முதல் இருவருக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதிக்குள் மீண்டும் ஒரு தேர்தல் நடாத்தி பிரதிநிதியை தெரிவு செய்தல்.
    உதாரணம் : பிரான்சின் ஜனாதிபதித் தேர்தல்

அறுதிப்பெரும்பான்மை முறையின் நன்மைகள்:-

  • உறுதியான அரசாங்கம் ஒன்றை உருவாக்க இந்த பிரதிநிதித்துவ முறைமை துணைபுரிகின்றது.
  • பலமான எதிர்கட்சி ஒன்றினை உருவாக்குவதற்கு இம்முறை வழிகோலுகின்றது.
  • மக்களுக்கும் வாக்காளருக்கும் இடையே நெருங்கியதொடர்பு ஏற்படுகின்றது.
  • ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளும் சமமான முறையில் காணப்படுவதால் சமஅபிவிருத்தி ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • பிரதிநிதிகள் சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பளிக்கின்றது.

அறுதிப்பெரும்பான்மையின் குறைபாடுகள்:-

  • சிறுபான்மை சமுதாயத்தவர்கள் தேசிய ரீதியாக தமக்குரிய பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்குவதில்லை.
  • பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கேற்ப கட்சித் தாவல்களில் ஈடுபட வாய்ப்புண்டு.
  • அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை தோன்றுவதற்கு வாய்ப்பு வழங்குகின்றது.
விகிதாரசார பிரதிநிதித்துவ முறைமை

 Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • தேர்தல் ஒன்றிலே போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக் கொள்ளுகின்ற விகிதாசாரத்திற்கு சமமாக பிரதிநிதித்துவத்தை பங்கீடு செய்கின்ற முறைமையே விகிதாசார பிரதிநிதித்துவம் என்பர்.
  • இதனை 1855ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த தொமஸ் கயா என்பவர் அறிமுகப்படுத்தினார்.
  • இம்முறை நிலவும் நாடுகள்:-

1.  டென்மார்க்                                   2.பெல்ஜியம்
3.சுவிஸ்லாந்து                               4.நோர்வே
5.சுவீடன்                                            6.பிரேசில்
7.இத்தாலி                                          7.இலங்கை

  • விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் பிரதானமாக இரண்டு முறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
    1. பட்டியல் முறை (List System)
    • திறந்த பட்டியல் முறை
    • மூடிய பட்டியல் முறை
    2. தனிமாற்று வாக்கு முறை (Single Transferable Vote)

பட்டியல் முறைமை

  • தேர்தலின் சகல நடவடிக்கைகளும் பட்டியல்களைக் கொண்டு நடைபெறுவதால் இது பட்டியல் மாதிரி எனப்படுகிறது.

தேர்தலின் பட்டியல் நடவடிக்கைகள் பின்வருமாறு:-

      • வேட்பு மனுக்களை தாக்கல் செய்தல்.
      • வாக்களித்தல்
      • வெற்றியாளர்களை தெரிவு செய்தல்.
      • தேர்தல் தொகுதியிலேயே பிரதிநிதித்துவ வெற்றிடம் ஏற்படும் போது அதனை நிரப்புதல்.

பட்டியல் முறைமை பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்:-

      • பாராளுமன்றத்தின் தேர்தலின் போது
      • மாகாணசபைகள் தேர்தலின் போது
      • உள்ளூராட்சி தேர்தலின் போது

குறிப்பாக ஒரு தேர்தல் தொகுதியிலிருந்து பல அங்கத்தவர்கள் தெரிவு செய்வதற்காக நடத்தப்படுகின்ற அனைத்து தேர்தலின் போதும் பட்டியல் மாதிரி முறை பயன்படுத்தப்படுகிறது.

பட்டியல் மாதரி முறை நடைமுறையிலிருப்பதற்கு இருக்க வேண்டிய நிபந்தனைகள்:-

      • தேர்தல் தொகுதிகள் ஒவ்வொன்றும் கட்டாயமாக பல அங்கத்தவர் தொகுதிகளாக இருத்தல் வேண்டும்.
      • வேட்பு மனுக்கள் பட்டியல் அடிப்படையில் தாக்கல் செய்யப்படுதல் வேண்டும்.
      • வாக்காளர்கள் கட்சி பட்டியலுக்கோ / சுயேட்சைக் குழுக்களது பட்டியல்களுக்கோ வாக்களித்தல் வேண்டும்.

தகுதிகாண் எண்காணல் என்பது ஒரு பிரதிநிதித்துவத்திற்கு தேவையான வாக்கு எண்ணிகையை கணித்தலாகும்.

வாக்கு எண்ணிக்கையின் போது முதல் நடவடிக்கையாக மொத்த செல்லுபடியான வாக்குகள் கணிக்கப்படும். அதன்பின்னர் ஒரு பிரதிநிதித்துவத்திற்கு தேவையான தகுதிகாண் வாக்குகள் கணிக்கப்படும்.1st-eகுறித்த கட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்குரிய ஆசனங்களுக்கு ஏற்ப குறித்த கட்சி அல்லது கட்சி அல்லது சுயேட்சை குழுவின் பட்டியலின் முன்னுரிமை ஒழுங்கின் படி பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளாக அறிவிக்கப்படுவர்.

திறந்த பட்டியல் மாதிரி தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள்,சுயேட்சைக்குழுக்கள் பெற்றுக் கொள்ளும் ஆசனங்களுக்கு உரியவர்கள் யார்? என்பதை வாக்காளர்களே தீர்மானம் செய்வதற்கு வாய்ப்பு வழங்குகின்ற தேர்தல் முறைமையே திறந்த பட்டியல் மாதிரி எனப்படும்.

மூடிய பட்டியல் மாதிரி: வெற்றி பெறுகின்றவர்களை தீர்மானிக்கின்ற பொறுப்பினை அந்தந்த கட்சிகளிடம் / சுயேட்சைக் குழுக்களிடம் விட்டு விடுகின்ற தெரிவு முறைமை மூடியபட்டியல் முறைமை எனப்படும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் நன்மைகள்:-

      • ஜனநாயகத்தன்மை வாய்ந்த ஒரு முறையாகும்.
      • சகல பலம் வாய்ந்த அபிப்பிராயங்களுக்கும் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுக்கின்றது.
      • பல்லின சமூக முறையில் பெரும்பான்மை இனங்களுக்கு மட்டுமின்றி சிறுபான்மை இனங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுக்கின்றது.
      • வாக்காளர் விருப்பு பரந்ததாகக் காணப்படும்.
      • பிரதான அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் குறைதல்.
      • இடைத்தேர்தல்கள் நடைபெறாமையால் காலமும் ,பணமும் வீண் விரயமாவதில்லை
      • கூட்டரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு வழி வகுக்கின்றது.
      • அரசியல் கட்சிகள் உருவாவதற்கும் அவை படிப்படியாக வளர்ச்சியடைவதற்கும் வழிவகுக்கின்றன.
      • சாதாரண பொதுமக்கள் மத்தியிலே அரசியல் அறிவு,விழிப்புணர்ச்சி,அரசியல் சமூகமயமாதல் என்பன கட்டியெழுப்பப்படுகிறது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் குறைபாடுகள்:-

    • வாக்காளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான தொடர்பு சேய்மையானதாக இருப்பதால் வாக்காளர்கள் பொறுப்புக் கூறுவதிலிருந்து விலகியிருத்தல்.
    • நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கை ஒப்பீட்டு ரீதியில் அதிகமாக காணப்படுதல்.
    • வெட்டுப்புள்ளி முறை,போனஸ் முறை என்பன வழங்கப்படுவதால் ஜனநாயகத்தன்மை பாதிக்கப்படல்.
    • தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் தமது பொறுப்பிலிருந்து இலகுவாக தப்பித் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகின்றது
    • தேர்தல் தொகுதிகள் விசாலமானதாக இருப்பதால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளது வேலைப்பளு அதிகமாகக் இருக்கும்.
    • வாக்கை கவர்ந்து கொள்வதற்காக இனவாதம்,மொழிவாதம்,பிரதேசவாதம்,மதவாதம் போன்ற குறுஞ்சிந்தனைகளை தோற்றுவிப்பதற்கு இம்முறை வழிகோலுகின்றது.

RATE CONTENT 0, 0
QBANK (25 QUESTIONS)

எளிய பெரும்பான்மை, மற்றும் விகிதசமப் பிரதிநிதித்துவ முறைகளோடு தொடர்பான சில பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

A – ஆகக் கூடுதல் எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றவர் தெரிவு செய்யப்பட்டவராக அறிவிக்கப்படுவார்.
B – பெற்றுக் கொண்ட வாக்குகளின் விகிதாசாரத்துக்கேற்ப ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
C – சிறிய கட்சிகளும் குழுக்களும் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு
D – குறைந்த விகிதாசாரமான வாக்குகளுக்குக் கூடுதல் விகிதாசாரமான ஆசனங்களைப் பெற வாய்ப்புண்டு.
E – வாக்காளருக்கும் பிரதிநிதிக்குமிடையில் நெருங்கிய தொடர்புகளுக்கான வாய்ப்பு குறைவாகும்.
F – பெரிய கட்சிகளுக்குச் சாதகமாகவுள்ளது.

விகிதசம முறைக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17861
Hide Comments(0)

Leave a Reply

A – வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளை வேட்பாளர்களுக்கு வழங்குவர்.
B – ஒரு குறிப்பிட்ட வாக்குப் பங்கினைப் பெற்றுக் கொள்ளும் போதே ஒரு வேட்பாளர் ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குத் தகுதியுடையவராவார்.
C – தகுதி பெறும் வேட்பாளர் குறிப்பிட்ட பங்கினை விடக் கூடுதலாகப் பெறும் மேலதிக வாக்குகள் வாக்காளரின் விருப்புக்கேற்ப ஏனைய வேட்பாளர்களுக்கிடையில் பிரித்தளிக்கப்படும்.
D – ஒரு பட்டியல் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதற்குரிய ஆசனங்கள் நிர்ணயிக்கப்படும்.
E – வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு பட்டியலுக்குமுரிய ஆசனங்கள் பிரித்தளிக்கப்படும்.

விகிதசம பிரதிநிதித்துவத்தின் திறந்த பட்டியல் முறைக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17872
Hide Comments(0)

Leave a Reply

எளிய பெரும்பான்மை முறைக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17918
Hide Comments(0)

Leave a Reply

விகிதசமப் பிரதிநிதித்துவ முறைக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17890
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I –  எளிய பெரும்பான்மை முறைமை தேர்தலில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வாக்குக்கும் சமநிலையை உத்தரவாதப்படுத்துகிறது.
கூற்று II –  விகித சமமுறை பல கட்சி முறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Review Topic
QID: 17999
Hide Comments(0)

Leave a Reply

இரு பிரதான பிரதிநிதித்துவ முறைமைகளின் சில பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

A – ஒரு தேர்தலில் வழங்கப்படும் ஒவ்வொரு வாக்குக்கும் சம நிறை உத்தரவாதப்படுத்தப்படுகிறது
B – பல கட்சி முறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது
C – சிறிய கட்சிகளுக்குப் பாதகமாக அமைந்துள்ளது
D – அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.
E – கட்சித் தலைமைத்துவத்தை உயர்நிலைப்படுத்துகிறது
F – பிரதேசங்களைப் பிரதிநிதிப்படுத்தல் பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.

பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்துக்குப் பொருந்தும் கூற்றுகளின் சேர்மானத்தைக் குறிப்பிடுக

Review Topic
QID: 18038

விகிதசமப் பிரதிநிதித்துவத்துக்குப் பொருந்தும் கூற்றுகளின் சேர்மானத்தை இனங்காண்க.

Review Topic
QID: 18039
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் பிரதிநிதித்துவம் என்பது- பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 18047
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் பிரதிநிதித்துவம் என்பது :- பிழையான கூற்று

Review Topic
QID: 18058

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank