Please Login to view full dashboard.

டொனமூர் அரசியல் சீர்திருத்தம்

Author : Admin

65  
Topic updated on 02/15/2019 10:09am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • 1931ல் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட சீர்திருத்தம் டொனமூர் சீர்திருத்தமாகும்.
  • இலங்கையின் அரசியல் திட்ட வரலாற்றில் பாரிய திருப்பத்தினை ஏற்படுத்திய சீர்திருத்தமாக இது கருதப்படுகின்றது.
  • டொனமூர் சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டமைக்கான காரணங்கள்:

◊ இலங்கையரின் தொடர்ச்சியான அரசியல் திட்ட கோரிக்கை
◊ உலக அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாற்றம்.
◊ பிரித்தானியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்.

  • டொனமூர் அரசியல் சீர்திருத்த சிபாரிசுகள்

◊ சர்வசன வாக்குரிமை
◊ இனவாரி பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டமை
◊ அரசாங்க சபை அல்லது அரசுக் கழகம்
◊ நிர்வாகக் குழுமுறைமை
◊ தேசாதிபதி
◊ அமைச்சரவை
◊ பொதுச்சேவை ஆணைக்குழு
◊ மூன்று காரியதரிசிகள்

சர்வசன வாக்குரிமை

Please Login to view the QuestionPlease Login to view the Question

  • இதனை வயது வந்தோருக்கான வாக்குரிமை என்றும் அழைப்பர்.
  • டொனமூர் குழுவினர் 21 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையினை வழங்கினர்.
  • சர்வசன வாக்குரிமை இலங்கையில் முன்வைக்கப்பட்டமைக்கான காரணங்கள்;
    • இலங்கையில் இதுவரை காலமும் இருந்த சில்லோர் ஆட்சி அரசியல் தலைதைத்துவத்தை இல்லாதொழிப்பதற்கு
    • இலங்கையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல்கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு
    • வரையறுக்கப்பட்ட வாக்குரிமையினால் ஏற்பட்ட சாதிப்பாகுபாட்டு நிலையை இல்லாதொழிப்பதற்கு
    • இதுவரை காலமும் வாக்குரிமை பெறாதவர் சமூக பொருளாதார ரீதியாக அமுக்கத்திற்குட்பட்டவராக காணப்பட்டனர். அவர்களை முன்னேற்றுவதற்காக
    • இலங்கை மக்கள் மத்தியிலே இடதுசாரி சிந்தனை எழுச்சி பெறுவதை தடுப்பதற்காக
    • இலங்கையில் பொறுப்பு கூறும் அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கு

சர்வசன வாக்குரிமைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் :

  • அனைவருக்கும் வாக்குரிமை என்ற சிபாரிசு இலங்கை சிறுபான்மையினரை இரண்டாம் பிரஜைகள் என்ற நிலைக்கு இட்டு செல்லும் எனவே இச்சிபாரிசை கைவிட வேண்டும் என சிறுபான்மையோர் தமது கருத்தை முன்வைத்தனர்.
  • இலங்கையின் அரசியல் தலைவர்கள் சொத்தற்றவர்களுக்கு வாக்குரிமை வழங்கினால் அவர்கள் அதனை பொறுப்பற்ற வகையில் பயன்படுத்துவர். ஏனெனில் சொத்தற்றவர்கள் நாட்டு பற்றற்றவர்கள் எனக் கூறினர்.
  • கல்வியற்றவர்கள் சிந்தித்து செயலாற்றும் ஆற்றலை கொண்டிருப்பதில்லை. எனவே அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது ஆபத்து.
  • பெண்களுக்கு வாக்குரிமை வழங்கினால் சமூக ரீதியான முரண்பாடுகளுக்கும் குழப்பங்களும் ஏற்படும் என கூறினர்.
  • வாக்குரிமைக்கான வயதெல்லையை 21 இலிருந்து 25 ஆக உயர்த்த வேண்டும். ஏனெனில் 21 வயது ஆழமாக சிந்தித்து தீர்மானமெடுக்கும் வயதில்லை.
  • சர்வசன வாக்குரிமைவழங்கினால் நாட்டில் ஊழலும், முறைகேடும் துஷ்பிரயோகமும் தலைவிரித்தாடும். எனவே அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது தவறு என கருதினர்.

வாக்குரிமை வழங்கப்பட்டமையால் ஏற்பட்ட விளைவுகள்:

  • மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலாக இலங்கை அரசியல் எழுச்சி பெற்றது.
  • சில்லோர் ஆட்சி அரசியல் ஆதிக்கம் இல்லாதொழிக்கப்பட்டது.
  • அரசியல் கட்சிகள் எழுச்சி பெற வழிகோலியது.
  • அரசியல் தலைவர்கள் அரசியல் நிர்வாகம் தொடர்பான அரசியல் பயிற்சி, அனுபவம் பெற வாய்ப்பேற்ப்பட்டது.
  • பெண்கள் அரசியலிலே பங்குபெற வாய்ப்பேற்பட்டது.
  •  வீடமைப்பு வசதிகள், சமூக உட்கட்டமைப்பு வசதிகள் சுதேசியரின் வாழ்க்கைத் தரம் என்பன அபிவிருத்தி அடைந்தன.
  • இலங்கையரின் மருத்துவ சுகாதார நிலைமை முன்னேற்றமடைந்தமை.
  • தொழில்சங்க கட்டமைப்பு, தொழில் பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்பட்டமை.
  • இலங்கை மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகமாக மாற்றமுறுவதற்கு வழிகோலியது.

இனவாரி பிரதிநிதித்துவத்தை ஒழிக்கப்பட்டமை.

இனவாரி பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான காரணங்கள்:

  • இனவாரி பிரதிநிதித்துவம் பல்லின கலாசாரத்தைக் கொண்ட இலங்கைக்கு பாதகமான விளைவுகளை தோற்றுவிக்கும்.
  •  இலங்கை மக்கள் மத்தியிலே ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப இப்பிரதிநிதித்துவம் தடையாக அமையும்.
  • இலங்கையின் அரசியல் தலைமைத்துவத்தை இன, மொழி, மத, பால் வேறுபாடுகப்பால் இனவாரி பிரதிநிதித்துவம் தடையாக அமையும்.
  • இலங்கையின் சமச்சீரான அபிவிருத்திக்கு இப்பிரதிநிதித்துவம் இடையூறாக அமையும்.
அரசாங்க சபை

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • முன்னைய சீர்திருத்தங்களிலே உருவாக்கப்பட்ட சட்ட நிரூபண சபை, சட்ட நிர்வாக சபை ஆகிய இரு அமைப்புக்கும் பதிலாக அரசாங்க சபை உருவாக்கப்பட்டது.
  • இதனை அரசுக் கழகம் என்றும் அழைப்பர்.
  • தேசாதிபதியின் வர்த்தகமானி பிரசுரத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட திகதிகளில் நடாத்தப்படும் கூட்டக்காரியதரிசியின் மேற்பார்வையின் கீழ் தேர்தல் நடாத்தப்படும்.

  • உறுப்பினர்களின் பதவிக்காலம் 05 வருடங்கள்
  • அரசாங்க சபையின் பணிகள்:
    • அரசாங்க சபை அரசாங்கத்தின் நல்லாட்சிக்கு அவசியமென கருதப்படும் சட்டங்களனைத்தையும் உருவாக்கும் பணியினை மேற்கொள்கின்றது.
    • அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை அங்கீகரித்தலும் மறுத்தலும்
    • வரவு செலவு திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளல்.
    • அமைச்சரவை தீர்மானங்களுக்கு அங்கீகாரம் வழங்கலும் மறுத்தலும்
    • பகிரங்க சேவையில் இடம்பெறும் நடவடிக்கையை கண்காணித்தலும் அவை தொடர்பான விமர்சனங்களை மேற்கொள்ளலும்

அரசாங்க சபையின் சட்டவாக்க செயற்பாடு மீதான கட்டுபாடுகள்:

  • அரசாங்க சபை நிறைவேற்றும் சட்டங்களுக்கு தேசாதிபதி கையொப்பமிட மறுத்தல்
  • தேசாதிபதி அரசாங்க சபை நிறைவேற்றிய சட்ட தீர்மானங்களுக்கு 2/3 பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும் என கட்டளையிட்டு அரசாங்க சபைக்கு திருப்பியனுப்புதல்.
  • சோதிபதிக்கு வழங்கப்பட்ட ரத்ததிகாரத்தை பயன்படுத்தி சட்டங்களை ரத்து செய்தல்.
  • மீள்பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி தேசாதிபதி திருப்பியனுப்புதல்.
  • தேசாதிபதி அரசாங்க சபைளினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு பிரிதானிய முடியின் சம்மதம் பெறப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு தாமதப்படுத்தல்.
  • தேசாதிபதி அரசாங்க சபையின் தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கிய பின் அது நடைமுறைக்கு வரும் காலத்தை 6 மாதம் வரை பிற்போடல்.
நிர்வாகக் குழுமுறைமை

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நிர்வாகக்குழு முறைமை அறிமுகம் செய்யப்பட்டமைக்கான காரணங்கள்:

  • இலங்கையிலே நன்கு வளர்ச்சியடைந்த கட்சிமுறையொன்று காணாப்படாமை.
  • இலங்கையின் அரசியல் நடவடிக்கையிலே ஈடுபடும் தலைவர்களுக்கு அரசியல் பயிற்சியையும் அனுபவத்தினையும் பெற்றுக் கொடுப்பதற்கு
  • இலங்கையிலே வாழும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரையும் அரசியல் நிர்வாகத்திலே பங்குபெற வைப்பதற்கு
  • பிரித்தானிய தேசத்தில் உள்ளூராட்சி மன்றங்களிலே நிர்வாகக் குழுமுறைமை வெற்றிகரமாக நடைமுறையிலிருந்தமை.
  • தனி நபரிடம் நிர்வாக பொறுப்பை ஒப்படைப்பதை விட ஒரு குழுவிடம் ஒப்படைக்கும் போது அது சிறந்த முறையிலே நிர்வகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டமை.

நிர்வாகக்குழு கட்டமைப்பு / அமைவுச்சேர்க்கை

  • டொனமூர் அரசியல் சீர்திருதத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நிர்வாக குழுவில் 7-9 வரையான உறுப்பினர் அங்கத்துவம் வகித்தனர்.
  • ஒவ்வொரு குழுவும் தனக்கென ஒரு தலைவரை தெரிவு செய்யும். இப்பொறுப்பு நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு உரியது.
  • இக்குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்ட 7 அரசாங்க துறைகள் பின்வருமாறு

◊ உள்நாட்டு அலுவல்கள்
◊ உள்ளூராட்சி
◊ கல்வி
◊ சுகாதாரம்
◊ போக்குவரத்து
◊ கைத்தொழில்
◊ விவசாயம்

நிர்வாகக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் / அதிகாரம்

  • தமது நிர்வாகக் குழுவின் கீழ் இருக்கின்ற திணைக்களம், கூட்டு ஸ்தாபனம், அரசாங்க சபை என்பவற்றிற்கான வரவு செலவு திட்டத்தை தயாரித்தல்.
  • தமது துறைகளுக்கான பொது வேலைத்திட்டங்களை தயாரித்தல்.
  • தமது துறைகளுக்கான செயற்பாட்டை விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்களை தயாரித்தல்.
  • தமது துறைக்குள் உள்ளடக்கப்படும் திணைக்களம், அமைப்பிற்கான ஆளணி வெற்றிடங்களுக்கான அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் நியமனம் செய்யும் சிபாரிசுகளை செய்தல்.
  • தமது துறைக்குள் உள்ளடக்கப்படும் திணைக்களம் மற்றும் அமைப்பினை மேற்பார்வை செய்தல்.

நிர்வாகக்குழு முறையின் நன்மைகள்:

  • இலங்கையின் அரசியல் தலைவருக்கு அரசியல் நிர்வாகம் தொடர்பான பயிற்சி, அனுபவம் என்பவற்றை பெற்றுக்கொள்ள உதவியது.
  • சுதந்திர இலங்கைக்கான மிகச்சிறந்த அரசியல் தலைவர்களை உருவாக்கியது. உதாரணமாக டி.எஸ் சேனாநாயக்க, ஜி.ஜி பொன்னம்பலம்
  • இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூக அரசியல் தலைவர்கள் அரசியல் நிர்வாகத்தில் பங்கு பற்றுவதற்கான வாய்ப்பினை இக்குழு முறைமை வழங்கியது.
  • இலங்கையர் பாராளுமன்ற மந்திரிசபை அரசாங்க முறைமையை நோக்கி தமது அரசியலை நகர்த்தி செல்ல நிர்வாக குழுமுறைமை வழிகோலியது.
  • குழுவாக செயற்படும் மனப்பாங்கையும் கூட்டுப்பொறுப்பு தன்மையையும் கட்டியெழுப்ப இம்முறைமை வழிவகுத்தது.

நிர்வாகக்குழுமுறையின் குறைபாடுகள்:

  • நிர்வாகக்குழுக்கள் ஒவ்வொன்றும் தேவையற்ற வகையிலே மற்றைய துறைகளின் செயற்பாட்டிலே தலையீடு செய்யும் நிலை காணப்பட்டமையினால் நிர்வாக துறைகளினால் வினைத்திறனுடன் செயற்பட முடியவில்லை.
  • நிர்வாகக் குழுக்களின் தலைவர்கள் தனித்து தீர்மானமெடுத்து செயற்படும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை.
  • நிர்வாக குழுவில் அங்கம் வகித்தவர் தத்தமது தேர்தல் தொகுதியில் தமது அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்த தேர்தல் காலங்களில் உதவியவர்க்கும் தகுதியில்லாதவர்க்கும் அரச நியமனங்களை பெற்றுக் கொடுக்க முயற்சித்தனர்.
  • நிர்வாகக்குழு தமது செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க நிதிக்காரியதரிசியின் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
  • நிதிக்காரியதரிசி மட்டுமன்றி ஏனைய காரியதரிசிகளும் நிரிவாகக்குழுவினை தமது விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுத்த கூடியவராக காணப்பட்டனர்.
தேசாதிபதி

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • தேசாதிபதி நாம நிர்வாகியாகவும் உண்மை நிர்வாகியாகவும் விளங்குகின்ற வகிபாகத்தினை பெற்றிருந்தார்.
  • இதனால் டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் அரசியல் செயற்பாடுகள் அவரை மையப்படுத்தி முன்னெடுக்கின்ற போக்கினை கொண்டதாக அமைந்திருந்தது.
  • தேசாதிபதியின் நாம நிர்வாக அதிகாரங்கள்:

◊ அரச இலட்சனையை பாதுகாத்தல் மற்றும் பிரயோகித்தல்.
◊ நாட்டை அடையாளப்படுத்தும் குறியீடாக விளங்குதல்.
◊ அரச பிரகடனங்களை வெளியிடல்.
◊ தேசிய விழாக்களுக்கு தலைமை தாங்குதல்.
◊ கௌரவ விருது பட்டங்களை வழங்கல்.
◊ தேசிய கௌரவிப்புக்களை மேற்கொள்ளல்.
◊ கூட்டத்தொடர்களை ஆரம்பித்து வைத்தல்.
◊ வேண்டுகோள்களை விடுப்பதும் ஆலோசனை வழங்கலும்

சட்டத்துறை சார் அதிகாரங்கள்:

  • அரசாங்க சபையின் கூட்டத்தொடர்களை ஆரம்பித்து வைத்தல்.
  • அரசாங்க சபையிலே உரை நிகழ்த்துதல்.
  • அறிக்கை சமர்ப்பித்தல்.
  • அரசாங்க சபையின் தீர்மானங்களை அங்கீகரித்தல் / மறுத்தல்.
  • தேசாதிபதி அரசாங்க சபை நிறைவேற்றிய சட்ட தீர்மானங்களுக்கு 2/3 பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும் என கட்டளையிட்டு அரசாங்க சபைக்கு திருப்பியனுப்புதல்.
  • சோதிபதிக்கு வழங்கப்பட்ட ரத்ததிகாரத்தை பயன்படுத்தி சட்டங்களை ரத்து செய்தல்.
  • மீள்பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி தேசாதிபதி திருப்பியனுப்புதல்.
  • தேசாதிபதி அரசாங்க சபைளினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு பிரிதானிய முடியின் சம்மதம் பெறப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு தாமதப்படுத்தல்.
  • தேசாதிபதி அரசாங்க சபையின் தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கிய பின் அது நடைமுறைக்கு வரும் காலத்தை 6 மாதம் வரை பிற்போடல்.
  • அரசாங்க சபையின் நியமன உறுப்பினரை நியமனம் செய்தல்.
  • அரசாங்க சபையினை கலைத்தல்
  • அரசாங்க சபைக்கு ஆலோசனை மற்றும் நினைவூட்டல்களை வழங்கல்.

நிர்வாகத்துறை சார் அதிகாரங்கள்:

  • அமைச்சரவைக்கான அமைச்சர்களையும் உயர் அலுவலர்களையும் பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களையும் நியமித்தல்.
  • அரச உத்தியோகத்தரது பதவி உயர்வு, இடமாற்றம், பதவி நீக்கம் தொடர்பான விவகாரங்களை கையாளல்.
  • பிரித்தானிய காரியதரிசியினூடாக நிறைவேற்றுதுறை நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தல்.
  • அரசாங்கத்தின் பொதுக்கொள்கைகளை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
  • பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை கையாளல்.
  • உடன்படிக்கை, ஒப்பந்தம் என்பவற்றை கைச்சாத்திடல்.
  • நிர்வாகக்குழு பணிகளை மேற்பார்வை செய்தல்.
  • அமைச்சரவையிலே மாற்றங்களை செய்தல்.
  • வரவு செலவு திட்டம் தொடர்பிலான நடவடிக்கையை மேற்கொள்ளல்.
  • சமூக நலன்புரி சேவைகள் தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ளல்.
  • நல்லாட்சியை உறுதிப்படுத்தல்.

நீதித்துறை சார் அதிகாரங்கள்:

  • நீதிபதிகளை நியமித்தல்.
  • குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கல்.
  • குற்றவாளிகளுக்கு தண்டனையைக் குறைத்தல்.
  • நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

நெருக்கடிகால அதிகாரங்கள்:

  • ஊடரங்கு சட்டம் மற்றும் அவசரகால சட்டம் என்பவற்றை பிறப்பித்தல் ரத்துசெய்தல்.
  • அரச திணைக்களம் மற்றும் அமைப்புக்களுக்குடைய வளங்களை ஒருங்கிணைத்து நெருக்கடிகால சூழலை வெற்றிகொள்ள பயன்படுத்தல்.
  • அவசர கால நிலைமை தொடர்பாக அரசாங்க சபைக்கு அறிக்கை சமர்பித்தல்.
  • அரசதிணைக்களம் அமைப்பு உத்தியோகத்தர்களை நெருக்கடி சூழலை நிர்வகிப்பதற்கு நியமித்தல்.
  • ஆட்களை நாடு கடத்தல்.
அமைச்சரவை / மந்திரிசபை

Please Login to view the QuestionPlease Login to view the Question

  • டொனமூர் அரசியல் சீர்திருத்தம் இலங்கையில் அமைச்சரவை என்ற கட்டமைப்பை அறிமுகம் செய்தது.
  • இதிலே 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 3 பிரதான காரியதரிசிகளும் 7 நிர்வாகக்குழு தலைவர்களும் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் அனைவரையும் தேசாதிபதியே நியமித்தார்.
  • நிர்வாகக்குழு தலைவர் எவரையும் அமைச்சர்களாக நியமிக்காமல் விட தேசாதிபதிக்கு அதிகாரம் உண்டு.
  • அமைச்சரவைக்கு தலைமை தாங்க தலைவர் ஒருவர் இருக்கவில்லை. இதனால் அமைச்சரவைக்கு அழைப்பு விடுத்தல், நிகழ்ச்சி நிரலை தயாரித்தல் போன்றவற்றை பிரதம காரியதரிசியே மேற்கொண்டார்.
  • இமைச்சரவை கூட்டம் இடம்பெற வேண்டுமாயின் 3 பிரித்தானிய காரியதரிசி உட்பட 6 உறுப்பினரது வருகை முக்கியமானது.
  • அமைச்சரவையின் அதிகாரமும் பணிகளும்:
    • சட்ட மசோதாக்களை நிறைவு செய்தல்.
    • அதை அரசாங்க சபையிடம் சமர்பித்தல்
    • இவை தொடர்பான விளக்கங்களை அரசாங்க சபைக்கு சமர்பித்தல்.
    • சட்டவாக்கம் தொடர்பான விவாதங்களில் பங்குபற்றல்.
    • சட்ட மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்படும் போது வாக்களித்தல்
    • அரசாங்கத்திற்கு வரவு செலவு திட்டத்தை தயாரித்தல்.
    • அரசாங்க சபையின் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தல்.
    • அரச திணைக்களம் மற்றும் அமைப்புக்களை மேற்பார்வை செய்தல்.
    • தேசாதிபதியின் கட்டளைகளையும் அறிவுறுத்தல்களையும் நடைமுறைப்படுத்தல்.
    • அரசாங்க சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • நன்மைகள்:
    • இலங்கையின் அரசியல் செய்லொழுங்கினை மந்தரி சபை அரசாங்க முறைமையினை நோக்கி நகர்த்தி அரசாங்க முறைமையினை நோக்கி நகர்த்தி செல்லுதற்கு இவ்வேற்பாடு வழிகோலியது.
    • சுதேசிய அரசியல் தலைவர்களுக்கு மந்திரி சபை தொடர்பிலான அனுபவங்களையும் பயிற்சியையும் வழங்க இவ்வேற்பாடு வழிகோலியது.
    • சுதேசியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அமைச்சரவையாகக் காணப்பட்டமை.
    • அமைச்சரவையில் அங்கம் வகித்த சுதேசிய தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவராகக் காணப்பட்டனர்.
    • சட்டவாக்க செயற்பாட்டில் ஈடுபடுகின்றவரே சட்ட நிர்வாகத்தில் பங்குபற்ற வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை மந்திரி. சபை கட்டமைப்பு நிறைவேற்றியது.
மூன்று காரியதரிசிகள்

பிரதம காரியதரிசி

Please Login to view the QuestionPlease Login to view the Question

  • மூன்று காரியதரிசிகளுள் முக்கியமானவர்.
  • டொனமூர் திட்டத்தின் முன்பு குடியேற்ற நாட்டு காரியதரிசி என்ற அந்தஸ்தில் இருந்தவரே பிரதம காரியதரிசி எனும் அந்தஸ்து
  • இவரது அதிகாரங்கள்:
    • பதில் தேசாதிபதியாக செயற்படுதல்.
    • தேசாதிபதியின் அதிகாரங்களை பிரயோகித்தல்
    • மந்திரி சபைக்கு தலைமை தாங்குதல்.
    • வெளிநாட்டு விவகாரங்களை கையாளுதல்.
    • குடிவரவு, குடியகழ்வு சார் பொறுப்புக்களை கையாளல்.
    • அரசாங்க ஏடுகள், ஆவணங்கள் என்பவற்றை பிரசுரித்தல்.
    • படைப்பாசறை, சுடுகலண்கள், படைவீரர்களின் நடுகற்கள் என்பவற்றை முகாமை செய்தல்.
    • பகிரங்க சேவையினை ஒழுங்கமைத்தலும் கண்கானித்தலும்
    • மந்திரிமார்க்கு ஆலோசனை வழங்கல்.
நிதிக்காரியதரிசி
  • இலங்கை நிதி அலுவல்களுக்கு பொறுப்பாக பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட அரச உத்தியோகத்தரே நிதிக்காரியதரிசியாவர்.
  • இவரது அதிகாரங்கள்:
    • அரச நிதிமூலங்களை கண்டறிதல்.
    • முதலீடுகளை ஒழுங்கமைத்தல்.
    • மானியங்களை வழங்கல்.
    • அரச ஊழியர்களது சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் போன்றவற்றை வழங்கல்.
    • அரச ஊழியர்களது புகையிரத ஆணைச்சீட்டு, லீவு விபரங்கள், இளைப்பாற்று சம்பளம், அநாதைகள், விவதைகள் கொடுப்பனவு என்பவற்றை மேற்கொள்ளல்.
    • தேர்தல் தொகுதிகளுக்கான நிதி ஒதுக்கீடு
    • சொத்து மதிப்பீடுகளை செய்தல்.
    • கணக்காய்வு நடவடிக்கையை மேற்கொள்ளல்.
    • வரவு செலவு நடவடிக்கையை மேற்கொள்ளல்.
    • காலாண்டு நிதி அறிக்கையினை தயாரித்தல்.
    • சகல திணைக்களத்தினதும் வரவுசெலவு திட்டத்தை கண்காணித்தல்.
சட்டக் காரியதரிசி
  • அரசாங்க நீதி நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்.
  • முன்னைய திட்டங்களில் சட்டத்துறை நாயகம் என அழைக்கப்பட்டவர்.

இவரது அதிகாரங்கள்:

  • அரசாங்கத்திற்கு நீதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கல்.
  • நீதி பரிபாலனம் செய்தல்.
  • முடியின் பெயரால் அழிவழக்கு, பழிவழக்கு என்பவற்றை நடாத்தல்.
  • அரசாங்க சபைக்கான தேர்தலை நடாத்தல்.
  • சட்டமூலங்களை வரைதல்.
  • அநாதைப் பிள்ளைகளை பராமரித்தல்.
பொதுச்சேவை ஆணைக்குழு

பொதுச்சேவை ஆணைக்குழுவின் அமைவுச்சேர்க்கை / கட்டமைப்பு

  • பொதுச்சேவை ஆணைக்குழு 3 அங்கத்தவர்களை கொண்டிருந்தது. இவர்களில் ஒருவர் பிரதமகாரியதரிசி. இவரே ஆணைக்குழுவின் தலைவராகவும் விளங்குவார்.
  • ஏனைய 2 உறுப்பினர்களும் பொதுச்சேவை துறையிலே பணியாற்றி பல்வேறு அனுபவம் பெற்றவர்களில் தேசாதிபதியால் நியமனம் செய்யப்படுவர்.
  • இவர்கள் 5 வருடங்களுக்கு பதவி வகிப்பர். 5 வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாணைக்குழு புதிதாக தெரியப்படுவர்.

பணிகள்

  • பொதுச்சேவை உத்தியோகத்தர்களை தெரிவு செய்து நியமித்தல்.
  • பொதுச்சேவை உத்தியோகத்தர்களுக்கான ஒழுக்கக் கோவையை தயாரித்தல்.
  • பொதுச்சேவை உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு, இடமாற்றம், பணிநீக்கம் என்பவற்றை கண்காணித்தல்.
  • பொதுச்சேவை உத்தியோகத்தர்களுக்கு எதிராக மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாட்டை விசாரணை செய்தலும் ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளலும்
  • பொதுச்சேவை விவகாரம் தொடர்பாக அமைச்சரவை தேசாதிபதி ஆகியோருக்கு ஆலோசனை வழங்கல்.

பின்வரும் அதிகாரங்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை

  • அமைச்சரவையின் தீர்மானங்களில் தலையீடு செய்யும் அதிகாரம்
  • திணைக்கள தலைவர்களின் தீர்மானங்களில் தலையீடு செய்யும் அதிகாரம்
  • தேசாதிபதியின் கட்டளையிலும் உத்தரவிலும் தலையீடு செய்யும் அதிகாரம்

நன்மைகள்:

  • தகுதியானவரும் திறமையானவரும் அரச சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்பட வழிகோலியது.
  • பக்கசார்பற்ற வகையிலே தகுதி திறமை மிக்கவர் அரசசேவைக்குள் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கியது.
  • சாதாரண பொதுமக்கள் மிகச்சிறந்த பொது சுவையை பெறும் சூழலை கட்டியெழுப்பியது.
  • இலங்கையின் பொதுச்சேவை வினைத்திறன் மிக்க சேவையாக வளர்ச்சி பெறுவதற்கான சூழலைக் கட்டியெழுப்பியது.
  • இலங்கையிலே பலம் பொருந்திய பொதுச்சேவை கட்டமைப்பொன்று வளர்ச்சியுறுவதற்கு வழிவகுத்தது
RATE CONTENT 4, 1
QBANK (65 QUESTIONS)

டொனமூர் அரசாங்கம் பற்றிய ஒரு கூற்று பிழையானது, பிழையான கூற்றின் எண்ணை எழுதுக.

Review Topic
QID: 19512
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் அரசாங்கத்தின் கீழ் இருந்த தேசாதிபதி
A – பிரித்தானிய முடியினதும் அரசாங்கத்தினதும் பிரதிநிதியாக இருந்தார்.
B – ஒரு நாம நிர்வாகியாகச் செயற்படவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டார்.
C – சட்டத்துறைப் பணிகளிலிருந்து அகற்றப்பட்டார்.
D – யாப்பின் பிரதான பாதுகாவலராக இருந்தார்.

Review Topic
QID: 19639
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் யாப்பின் கீழ் தேசாதிபதி அரசாங்க சபையைக் கலைக்கும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தியமை
A – மந்திரிமார் சபைத் தலைவரின் இறப்பின் பேரிலாகும்.
B – இறுதியாக நடைபெற்ற தேர்தலிலிருந்து நான்கு வருடங்கள் பூர்த்தியானதன் பேரிலாகும்.
C – மந்திரிமார் சபைக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பேரிலாகும்.
D – எந்நேரத்திலும் தனது சுயவிருப்பின் பேரிலாகும்.

Review Topic
QID: 19640
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் யாப்பின் கீழ் அரசாங்கக் காரியதரிசிகள்
A – ஏகாதிபத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டனர்.
B – அரசாங்கத்தின் ஆலோசகர்களாக செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டனர்.
C – அரசாங்கச் சபைக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருந்தனர்.
D – அதிமுக்கியம் வாய்ந்த மூன்று அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றிருந்தனர்.

Review Topic
QID: 19641
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட அரசாங்க சபை
A – சட்டவாக்க மற்றும் நிறைவேற்று வகிபங்கைப் பெற்றிருந்தது.
B – வரவு செலவுத் திட்டத்தை நிராகரிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டது.
C – மந்திரிமார் சபையை அகற்றுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டது.
D – நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக்கப்பட்டது.

Review Topic
QID: 19642
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் அரசாங்கம் தளமாகக் கொண்டிருந்ததாவது

Review Topic
QID: 20003
Hide Comments(0)

Leave a Reply

1931 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கிய பண்புகளாவன
A – சுதேசத் தலைவர்கள் நிறைவேற்று அரசாங்கத்தில் பங்கேற்றமை
B – இனவாரிப் பிரதிநிதித்துவத்திலிருந்து சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்திற்கு நகர்ந்தமை
C – நீதித் துறையினதும் அரசாங்க சேவையினதும் சுதந்திரத்தினைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்கியமை
D – அரசியல் யாப்புத் திருத்தச் செயன்முறையினை நெகிழ்ச்சியாக்கியமை

Review Topic
QID: 20020
Hide Comments(0)

Leave a Reply

1931 டொனமூர் சீர்திருத்தங்கள் மூலம் முன்மொழியப்பட்டவை.
யு – நிறைவேற்று மற்றும் சட்டவாக்கப் பணிகள் ஒப்படைக்கப்பட்ட ஓர் அரசாங்க சபை தாபிக்கப்பட வேண்டும்.
A – சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்.
B – ஏழு நிறைவேற்றுக் குழுக்களினதும் தலைவர்களைக் கொண்ட ஒரு மந்திரிமார் சபை நிறுவப்பட வேண்டும்.
C – மூன்று அரச அதிகாரங்களும் சபாநாயகரும் நீங்கலாக ஏனைய அரசாங்க சபை உறுப்பினர்களை உள்ளடக்கி ஏழு
நிறைவேற்றுக் குழுக்கள் தாபிக்கப்பட வேண்டும்.
D – பொதுத்துறை நிர்வாகம், நிதி, நீதி ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பான மூன்று அரச அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்

Review Topic
QID: 20038
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் அரசாங்கம்
A – பொறுப்பரசாங்க முறையை இலங்கைக்குக்கோரி நிற்பதற்கு இலங்கையரைத் தயார்ப்படுத்தியது.
B – அரசியல்வாதிகளுக்கு நிர்வாகம் பற்றிய பயிற்சியை வழங்கியது.
C – ஜனநாயக ஆட்சியைப் பலவீனப்படுத்துவதற்குப் பாரியளவில் பங்காற்றியது.
D – பொறுப்பரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்துக்கான மேடையை வழங்கியது.
E – பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கும் பொறுப்பரசாங்கத்துக்குமிடையிலான பலத்த இடைவெளியை அகற்றியது.

Review Topic
QID: 20039
Hide Comments(0)

Leave a Reply

1931 இல் அறிமுகஞ் செய்யப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் அறியப்படுவது – பொருந்தாத கூற்றுகளின் தொகுதி
A – கோல்புரூக் – கமரன் சீர்திருத்தம் என்றாகும்.
B – மனிங் சீர்திருத்தம் என்றாகும்.
C – மனிங் – டொவன்ஷயர் சீர்திருத்தம் என்றாகும்.
D – டொனமூர் சீர்திருத்தம் என்றாகும்.
E – சோல்பரி சீர்திருத்தம் என்றாகும்.

Review Topic
QID: 20048
Hide Comments(0)

Leave a Reply

1931 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் கீழ் தாபிக்கப்பட்ட சட்டமன்றம் அழைக்கப்படுவது பொருந்தாத கூற்றுகளின் தொகுதி
A – பாராளுமன்றம் என்றாகும்.
B – காங்கிரஸ் என்றாகும்.
C – ஏகாதிபத்திய மன்றம் என்றாகும்.
D – தேசியப் பேரவை என்றாகும்.
E – அரசாங்க சபை என்றாகும்.

Review Topic
QID: 20050
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் அரசாங்க முறையில் “காவல் நாய்கள்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டமை- பொருந்தாத கூற்றுகளின் தொகுதி
A – தேசாதிபதியையும், மூன்று அரச காரியதரிசிகளையும் குறிப்பிடுவதற்காகும்.
B – மூன்று அரசக் காரியதரிசிகளைக் குறிப்பிடுவதற்காகும்.
C – தேசாதிபதியையும், குடியேற்ற நாட்டுச் செயலாளரையும், மூன்று அரசகாரியதரிசிகளையும் குறிப்பிடுவதற்காகும்.
D – அமைச்சரவை உறுப்பினர்களை குறிப்பிடுவதற்காகும்.
E – அமைச்சரவையின் சுதேச உறுப்பினர்களைக் குறிப்பிடுவதற்காகும்.

Review Topic
QID: 20051
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் யாப்பின்படி அமைச்சரவையானது அரசாங்க சபைக்குக் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டியிருந்த விடயமாவது- பொருந்தாத கூற்றுகளின் தொகுதி
A – போர்ச் செயற்பாடுகள் தொடர்பான செலவுகள் பற்றி மட்டுமேயாகும்.
B – வருடாந்த வரவு-செலவுத் திட்டம் பற்றி மட்டுமேயாகும்.
C – அமைச்சரவையின் சகல நிறைவேற்றுத் தீர்மானங்கள் பற்றி மட்டுமேயாகும்.
D – தேசாதிபதி, மூன்று அரசகாரியதரிசிகள் தொடர்பான செலவு பற்றி மட்டுமேயாகும்.
E – அமைச்சரவையைக் கொண்டு நடாத்துவதற்கான செலவு பற்றி மட்டுமேயாகும்.

Review Topic
QID: 20053
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் சட்டமன்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு முதன்முதலாக வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது: பிழையான கூற்று
A – 1833 கோல்புரூக்-கமரன் சீர்திருத்தத்தின் மூலமாகும்.
B – 1911 குரூ – மக்கலம் சீர்திருத்தத்தின் மூலமாகும்.
C – 1924 மனிங்-டொவன்ஷியர் சீர்திருத்தத்தின் மூலமாகும்.
D – 1931 டொனமூர் சீர்திருத்தத்தின் மூலமாகும்
E – 1948 சோல்பரி சீர்திருத்தத்தின் மூலமாகும்

Review Topic
QID: 20056
Hide Comments(0)

Leave a Reply

இலங்கைக்குப் பொறுப்பாட்சியை சிபார்சு செய்யாமல் இருப்பதற்கு டொனமூர் ஆணைக்குழுவின் மீது செல்வாக்குச் செலுத்திய காரணிகளாவன:
A – சுதேச அரசியல்வாதிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை
B – மக்கள் மத்தியில் கூட்டுணர்வும் ஐக்கியமும் நிலவாமை
C – சாதாரண மக்களின் அரசியல் பங்கேற்பு கீழ்மட்டத்தில் நிலவியமை
D – பொறுப்பாட்சிக்கு எதிராகப் பறங்கிய இனத்தவர்கள் காட்டிய பலத்த எதிர்ப்பு
E – ஒழுங்கமைந்த அரசியல் கட்சி முறை நிலவாமை

Review Topic
QID: 20062
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் அரசாங்கத்தின் கீழிருந்த தேசாதிபதி:
A – பிரித்தானிய முடியினதும் அரசாங்கத்தினதும் பிரதிநிதியாக இருந்தார்.
B – மந்திரிமார் சபையின் தலைவராக இருந்தார்.
C – அரசாங்கத்தின் பிரதான நிறைவேற்றாளராக இருந்தார்.
D – காலனித்துவ நாட்டின் ஏகாதிபத்தியத்தின் நலன்களின் பிரதம பாதுகாவலராக இருந்தார்.
E – சகல மசோதாக்களுக்கும் இறுதி அனுமதி வழங்கும் தனி அதிகாரத்தைக் கொண்டிருந்தார்.

Review Topic
QID: 20063
Hide Comments(0)

Leave a Reply

1931 டொனமூர் சீர்த்திருத்தங்களின் கீழ் தாபிக்கப்பட்ட அரசாங்கசபை :
A – 61 உறுப்பினர்களைக் கொண்டிருந்ததோடு அவர்களுள் 50 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
B – சட்டவாக்கம் மற்றும் நிறைவேற்றம் ஆகிய இரட்டை வகிபங்கு ஒப்படைக்கப்பட்ட நிறுவனமாகவிருந்தது.
C – சபாநாயகர் இல்லாதபோது தேசாதிபதியால் தலைமை தாங்கப்பட்டது.
D – வருடாந்தப் பாதீட்டை நிராகரிக்கவும் மந்திரிமார் சபையை அகற்றவும் அதிகாரம் பெற்றிருந்தது.
E – தேசாதிபதியின் தற்றுணிபின்படி எந்நேரத்திலும் கலைக்கப்படுவதற்கு உட்பட்டிருந்தது.

Review Topic
QID: 20079
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் அரசாங்கத்தின் கீழிருந்த மந்திரிமார் சபை :
A – ஓர் ஒருமைத் தன்மையான சபையாகவிருந்தது.
B – பத்து உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
C – கூட்டுப் பொறுப்பின்றிச் செயற்பட்டது.
D – பிரதம செயலாளரால் தலைமை தாங்கப்பட்டது.
E – வருடாந்தப் பாதீடு மற்றும் ஏனைய நிதி மசோதாக்கள் தொடர்பாக அரசாங்க சபைக்குப் பொறுப்புக் கூறியது.

Review Topic
QID: 20082
Hide Comments(0)

Leave a Reply

1931 டொனமூர் அரசியல் யாப்பு:
A – நிறைவேற்றுப் பணிகளைப் புரிவதற்குத் தேசாதிபதி, அமைச்சரவை, நிறைவேற்றுக் குழு என்பவற்றைக் கொண்ட ஒரு பொறிமுறையை அறிமுகம் செய்தது.
B – தேசாதிபதியின் நிலையை நாம நிறைவேற்றாளர் நிலைக்கு இறக்கியது.
C – வருடாந்த பாதீடு தொடர்பாக அமைச்சரவையை அரசாங்க சபைக்குப் பொறுப்புகூறலுக்குட்படுத்தியது.
D – சில நிபந்தனைகளின் கீழ் 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் வாக்குரிமையை வழங்கியது.
E – சட்டவாக்க, நிறைவேற்றுப் பணிகள் இரண்டும் ஒப்படைக்கப்பட்ட அரசாங்க சபை என்றழைக்கப்பட்ட ஒரு பிரதிநிதிகள் மன்றைத் தாபித்தது.

Review Topic
QID: 20092
Hide Comments(0)

Leave a Reply

1931 டொனமூர் அரசாங்கத்திலிருந்த மூன்று அரசாங்க அதிகாரிகள்:
A – உத்தியோகரீதியாக அரசாங்க சபையிலும் அமைச்சரவையிலும் உறுப்புரிமை பெற்ற குடியேற்ற நாட்டாட்சியின் பிரதிநிதிகளாக இருந்தனர்.
B – அரசாங்க சபைக்குக் கூட்டாகப் பொறுப்புக் கூறுவதற்கு உட்படுத்தப்பட்டனர்.
C – இலங்கை அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குவோராகச் செயற்படுவோர் எதிர்பார்க்கப்பட்டனர்.
D – தேசாதிபதியுடன் இணைந்து புறம்பான ஒரு நிறைவேற்று மன்றமாகச் செயற்பட்டதைக் காண முடிந்தது.
E – யாப்பின் ‘காவல் நாய்கள்’ என அறியப்பட்டனர்.

Review Topic
QID: 20093
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் ஆணைக்குழு,
A – மாகாண சபைகள் உருவாக்கப்பட வேண்டுமென பிரேரித்தது.
B – அரசாங்க சபையிடமிருந்து நிர்வாக சட்ட ஆக்கக் கடமைகளை எதிர்பார்த்தது.
C – வகுப்புவாத அரசியலை தளர்ச்சியடையச் செய்ய விரும்பியது.
D – ஒரு இரண்டாவது சபை உருவாக்க வேண்டுமென்ற பிரேரணையை ஏற்றுக்கொண்டது.

Review Topic
QID: 19529
Hide Comments(0)

Leave a Reply

நிர்வாகக்குழு முறை – பிழையான கூற்று

Review Topic
QID: 19609
Hide Comments(0)

Leave a Reply

அமைச்சரவை – பிழையான கூற்று

Review Topic
QID: 19610
Hide Comments(0)

Leave a Reply

டொனமூர் அரசாங்கத்தில் இடம்பெற்ற மூன்று அரசாங்க உத்தியோகத்தர்கள்
A – மந்திரிமார் சபையால் நியமிக்கப்பட்டனர்.
B – அரசியல் யாப்பின் ‘காவல் நாய்களாகக்” கருதப்பட்டனர்.
C – மந்திரி சபைக்குள் மந்திரி சபையாகச் செயற்பட்டனர்.
D – நிதி, நிருவாகம், நீதி ஆகிய அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்றிருந்தனர்.

Review Topic
QID: 19625

Comments Hide Comments(2)
Ahamed ahzan
Ahamed ahzan commented at 09:43 am on 31/03/2020
Please Update New Syllabus Note
Krishna Raja
Krishna Raja commented at 15:45 pm on 12/07/2017
பெண்ணியல் வாதம் NOTS அனுப்பவும்
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank