சர்வதேச அரசியலின் செயற்பாட்டாளர்களும் அவற்றின் வகிபாகமும்
அதிகாரப் பிணக்குகளில் ஈடுபடுதல், தமது தேசிய விருப்புகள் அல்லது வெளிவாரி நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகும். அந்நோக்கங்கள் பின்வருமாறு அமையும்.
1. தேசிய பாதுகாப்பு
2. தேசிய பொருளாதாரத்தை உயர்நிலைப்படுத்தல்.
3. தேசிய நலன்களை மேனிலைப்படுத்தல்.
4. தேசிய புகழைப் பாதுகாத்து நிலைத்திருக்கச் செய்தல்.
5. தேசிய கொள்கைகளைப் பாதுகாத்து நிலைத்திருக்கச் செய்தல்.
இந்த நோக்கங்களை நிறைவேற்றம் பொருட்டு அரசுகள் பயன்படுத்தும் உத்திகளாவன:
1. வெளிநாட்டு கொள்கைக்கான இராஜ தந்திரங்கள்
2. பொருளாதார அதிகாரம்.
3. வெளிப்படைத்தன்மையும் தலையிடுதலும்.
4. போர்.
ஒரு நாடு வெளிவாரியாக நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கும் நோக்கங்கள் யாவை? அவற்றின் முக்கியத்துவத்துக்கேற்ப அவை ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது எவ்வாறு? என்பனவே வெளிநாட்டுக் கொள்கை மூலம் வெளிப்படுகின்றன.
சர்வதேச தொடர்புகளின் ஊடாக ஒரு நாடு நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கும் அரசியல் பொருளாதார, சமூகம் பற்றிய நோக்கங்கள் யாவை? என்பவற்றை வெளிநாட்டுக் கொள்கை எடுத்துக்காட்டும்.
உம் : இராஜதந்திர அதிகாரிகள் அல்லது தூதுவர்கள்.
அரசுகள் ஏனைய அரசுகளின் செல்வாக்கு செலுத்தித் தமக்குத் தேவையான விதத்தில் யாதாயினும் ஒரு அரசினை வழிநடத்துவதற்கு அல்லது கீழ்ப்படியச் செய்வதற்கு பயன்படுத்தும் உத்தியாக பொருளாதார சக்தி காணப்படுகிறது.
உம் : வர்த்தக ஒப்பந்தம், மேலதிகமானவற்றை அழித்தல், பகை அரசுகளின் சொத்துக்களை தடைசெய்தல், பொருட்கள் வாங்குவதை நிறுத்துதல்.
அரசுகள், பகைமை நாட்டின் உள் விடயங்களில் இரகசிய முறைகளினூடாக பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி அந்த அரசை தமக்குத் தேவையான விதத்தில் வழிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஊடுருவல் ஆகும்.
உம் : இரகசிய உளவுச் சேவை, வேறு மறைமுகமான உத்திகள்.
மேலே காட்டப்பட்டுள்ள மூன்று வழிகளாலும் அரசுகள் தமது நோக்கங்களை நிறைவேற்ற முடியாதபோது இறுதியாகப் பயன்படுத்தும் கருவியே போர் ஆகும். ஆயுதங்கள் மூலம் பகைவரைத் தாக்கி ஒன்றில் முற்றிலும் அழிவேற்படுத்தல் அன்றேல் எதிரியை வலிமையிழக்கச் செய்து தமக்குத் தேவையான விதத்தில் கட்டுப்படுத்துதல்.
யாதாயினும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் போரைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அரசுகள் முதலில் பின்பற்ற வேண்டிய முன் நடவடிக்கைகள் மூன்று உள்ளன.
• எழுந்துள்ள பிரச்சினையை முதலில் இராஜதந்திர வழிமுறை மூலம் தீர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ளல்.
• இராஜதந்திர முறை தோல்வியுற்றால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமென அச்சுறுத்தி, முன் அபாய அறிவிப்பு விடுத்தல்.
• அச்சுறுத்தல் மூலம் பகைவர் கீழ்ப்படியாவிடில் எதிரிக்கு எதிராக வன்முறையை மேற்கொள்ளுதல்.
யாதாயினும் ஒரு அரசு வேறொரு அரசுடன் நேரடியாகப் போர் தொடுக்க கருதினால் முதலாவதாகப் பின்வரும் நிபந்தனைகளை நிறைவேற்றுதல் வேண்டும்.
• தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆபத்தான நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களும் உலக மக்களும் விளங்கிக்கொள்ளச் செய்தல்.
• போரில் ஈடுபட்டால் வெற்றி பெறும் வரை போர் செய்தலில் மிகுந்த மனவுறுதி கொண்டிருத்தல்.
• அரசியல் நோக்கங்கள், இராணுவ நோக்கங்கள் என்பவற்றை தெளிவாகக் காட்டுதல்.
• குறித்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு மட்டும் போதுமான அளவு இராணுவ பலத்தை ஈடுபடுத்தல்.
• நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பூரணமாகப் பயன்படுத்துதல்.
ஒரு அரசுக்கு வேறொரு அரசின் எண்ணம், செயற்பாடு என்பவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்குமெனில், தேசிய அதிகாரம் எனக் கருதப்படுகிறது. யாதாயினும் அரசின் விருப்பை, வேறோரு அரசின் மீது படியச் செய்து, தமக்குத் தேவையான விதத்தில் கட்டுப்படுத்துவதற்கும் அதற்குக் கீழ்படியாதவிடத்து செல்வாக்கைப் பிரயோகித்தல் மூலம் கீழ்ப்படியச் செய்யுவும் உள்ள ஆற்றல் தேசிய அதிகாரம் எனக் கருதப்படுகிறது. அரசின் தேசிய அதிகாரம், செயற்பாட்டு உருவாக்கம் பின்வரும் உத்திகள் மூலம் இடம்பெறும்.
1. செல்வாக்கைப் பிரயோகித்தல்.
2. கொடைகளை வழங்குதல்.
3. தண்டனை விதித்தல்.
4. பலப் பிரயோகம் / அதிகாரப் பிரயோகம்
அதிகாரச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு சர்வதேச அரசியலில் பெருமளவு உபயோகிக்கப்படுவது இம்முறையாகும்.
இராஜதந்திர முறை மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசுகள் இம் முறையைப் பயன்படுத்தும்.
பல்வேறு கொடைகளை வழங்குதல் மூலம் ஒரு நாடு வேறொரு நாட்டின் நடத்தையை தமக்குத் தேவையான விதத்தில் கட்டுப்படுத்த முயற்சி எடுப்பதே இதனால் கருதப்படுகிறது. உதாரணமாக பொருளாதார உதவி வழங்குதல், அரசியல் ரீதியில் செய்யும் உதவிகள், படை உதவிகள், பொருள் உதவிகள் என்பன இதற்காகப் பயன்படுத்தப்படும்.
இதனால் கருதப்படுவது முதலீடுகளை வழங்குவதை நிறுத்துவதாகும். இதற்கேற்ப கொடைகளை வழங்குதலும் தண்டனை விதித்தலும் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். இது தவிர எதிரிக்கு எதிராக பல்வேறு பிரசாரங்கள், கோபமூட்டும் செயற்பாடுகள், எதிரிக்கு எதிரான வேறு அரசுகளுக்கு வெளிப்படையான உதவி வழங்குதல் ஆகிய உத்திகள் பயன்படுத்தப்படும்.
அரசுகளுக்கிடையில் இடம்பெறும் அதிகாரப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தி சர்வதேச சமாதானத்தை உருவாக்கி முன்னெடுத்துச் செல்வதற்காக சர்வதேச அரசியலில் பயன்படுத்தக்கூடிய உத்திகள் சில உள்ளன. அவையாவன:
1. அதிகாரச் சமநிலை
2. கூட்டுப் பாதுகாப்பு
3. சர்வதேசச் சட்டம்
4. ஆயுதக் கட்டுப்பாடும் ஆயுதப் பரிகரணமும்
5. உலக அரசாங்கம்
சமாதானத்தை விரும்பும் அரசுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து, தமது கூட்டுப் அதிகாரத்தை சமாதானத்துக்கு எதிராகச் செயற்படும் அரசுகளுக்கு அல்லது அரச குழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தி, ஆக்கிரமிப்புத் தன்மையுள்ள அரசு அல்லது அரசகக் குழுக்களை அடக்கி, சர்வதேச சமாதானத்தை உறுதிப்படுத்தி முன்னெடுத்துச் செல்லுதல்.
◊ சர்வதேசச் சட்டம் யாருக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றது?
◊ சர்வதேசச் சட்டம் யாரால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது?
இது வெறுமனே ஒரு எண்ணக்கரு மட்டுமே. நடைமுறையில் இவ்வாறான அரசாங்கம் அமைப்பது ஒரு கனவு என விமர்ச்சகர்கள் கருதுகின்றனர்.
காரணம் உலக மட்டத்தில் தன்னாதிக்க அதிகாரமுடைய உலக அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அரசுகள் தமது தனிப்பட்ட இறைமையதிகாரத்தை விட்டுவிட விரும்பாமையாகும்.
சர்வதேச சட்டத்தின் அடிப்படைகளாவன,
A – சர்வதேச உறவிலீடுபடும் அரசுகள் பலாத்காரத்தைப் பிரயோகிப்பதிலிருந்தும் அச்சுறுத்தப்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படல்.
B – அரசுகள் சமாதானத்தினைப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்படுத்திக் கொள்ளல்.
C – எந்தவொரு அரசும் ஏனைய அரசுகளின் உள்விவாகாரங்களிலும் அதிகாரத்திலும் தலையிடாதிருத்தல்.
D – நாடுகளின் சமவுரிமையும் மக்களின் சுயநிர்ணய உரிமையும் ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கு தாரைவாக்கப்படல்.
E – அரசுகள் ஒவ்வொன்றும் மற்ற அரசுகளுடன் இணைந்து செயற்படுவது.
சர்வதேச அரசியல் என்பது: – பிழையான கூற்று
A – சுதந்திர இறைமை மிக்க தேசிய அரசுகளுக்கு மத்தியிலான அரசியலாகும்.
B – சர்வதேச சமூகத்தில் தனிப்பட்டவர்களின் குழுக்களுக்கு மத்தியிலான அரசியலாகும்.
C – சர்வதேச அரசு சார் நிறுவனங்களுக்கு மத்தியிலான அரசியலாகும்.
D – சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு மத்தியிலான அரசியலாகும்.
E – பல்தேசக் கூட்டுத்தாபனங்களுக்கு மத்தியிலான அரசியலாகும்.
சர்வதேச அரசியலில் அரசுகளின் பிரதான நோக்கமாவது : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – தேசிய மொழியையும் கலாசாரத்தையும் மேம்படுத்துவதாகும்.
B – தேசிய நலன்களை மேம்படுத்துவதாகும்.
C – ஏனைய தேசங்களுடன் நட்புறவினை மேம்படுத்துவதாகும்.
D – தேசிய கருத்தியலை மேம்படுத்துவதாகும்.
E – ஐக்கிய நாடுகள் தாபனத்துடனான உறவை மேம்படுத்துவதாகும்.
சர்வதேச அரசியல் என்பது:
A – சர்வதேச சமூகத்தில் அரசுகளால் மேற்கொள்ளப்படும் அதிகாரப் போராட்டமாகும்.
B – அரசுகளின் தேசிய நலன்களை விருத்திசெய்வதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
C – வாக்குகளினால் அன்றி துப்பாக்கி ரவைகளினால் மேற்கொள்ளப்படும் போராட்டமாகும்.
D – வல்லரசுகளுக்கிடையில் நிலவும் அதிகாரப் போராட்டமாகும்.
E – ‘அரசாங்கமற்ற அரசியல் ” என்றும் அழைக்கப்படுகிறது.