பொதுக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துகையில் பயன்படுத்தப்படும் பௌதீக, மனிதவளங்கள் மூலம் உச்ச பயனை பெறுவது அவசியமாகும். அதற்காக பயன்படுத்தப்படும் முறைகள், உத்திகள் முகாமைத்துவத்தினால் முன்வைக்கப்படும்.
பௌதீக, மனிதவளங்கள் மேலும் கூடுதலான பயனுடையதாக, ஒழுங்காக கையாளுதல் முகாமை செயன்முறையினுள் நிகழ்தல் வேண்டும்.
முகாமைத்துவம் தொடர்பான அறிஞர்களின் கருத்துக்கள்:
பெட்ரிக் டைலர் – பயனுறுதி, வினைத்திறன், பகுத்தறிவு, இலாபம் ஆகிய பெறுமானங்களை உச்சமாக்கும் மிகச்சிறந்த முறையை விஞ்ஞான சோதனைகள் மூலம் கண்டறிதல் வேண்டும். அதற்கமைய பணிய அணியினரை தெரிவு செய்துக் கொள்வதுடன் அதனை மேம்படுத்தும் ஒதுக்கீடுகளை வழங்குதல் வேண்டும்.
ஹென்றி பயால் – முகாமைத்துவமானது திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டளையிடல், இணைப்பாக்கம் மற்றும் கட்டுபடுத்தல் எனும் பணிகளை உள்ளடக்கியது.
லூதர் குல்லிக்கின் போஸ்ட்கோப் பதத்தின் விளக்கம்:
திட்டமிடல் – இது கிடைக்கப்பெறும் வளங்களை வினைத்திறனாகவும் உத்தமமாகவும் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டமாகும்.
ஒழுங்கமைத்தல் – பொதுக்கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக அமைப்பினை உருவாக்கி, அதனை பகுதிகளாகவும், பிரிவுகளாகவும் பிரித்து வேறுபட்ட திணைக்களங்கள் ஊடாக வேலைகளை செய்தலாகும்.
ஆட்சேர்ப்பு – ஒழுங்கமைப்பின் ஒவ்வொரு பதவிக்குமான ஆளணியினரை நியமித்து, பயிற்சிகளை வழங்கி சிறப்பாக வேலை செய்யும் சூழலை ஏற்படுத்தல்.
நெறிப்படுத்தல் – பொருத்தமான அறிவுறுத்தல்களையும் கட்டளைகளையும் வழங்கி பொதுக் கொள்கைகக்கான திட்டமிடல்களையும் ஒழுங்கமைப்பினையும் ஏற்படுத்தல்.
இணைப்பாக்கம் – அமைப்பில் பணிபுரியும் ஆளணியினரிடையே ஒற்றுமையைப் பேணல்.
பதிவு செய்தல் – ஒரு அமைப்பின் பிரிவில் உள்ளவர்கள் தங்களுடைய பிரிவின் செயன்முறை தொடர்பாக அவர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்
வரவு செலவுப்படுத்தல் – இது நிதித் திட்டமிடலை குறிக்கின்றது. நிர்வாகத்தின் எல்லா செயற்பாடுகளும் நிதி முகாமைத்துவத்துடன் தொடர்புபடுவதால் நிதியினை கணக்கிடுவதும் கட்டுப்படுத்துவதும் முதன்மையான செயற்பாடாகிறது.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்