20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நடத்தைவாத ஆய்வுத்துறை எழுச்சி பெற்ற பொழுது அரசறிவியலின் ஆய்வுப் பரப்பிலே புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட எண்ணக்கருவாகும்.
ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயத்திலே வாழும் மக்கள் அனைவரையும் அந்த அரசியல் சமுதாயத்தின் அரசியல் செயற்பாடுகளிலே ஆர்வத்துடன் ஈடுபட ஊக்கமளிக்கும் மொத்த செயன்முறையே அரசியல் சமுதாயமயப்படுத்தல் எனப்படும்.
அறிஞர்களின் கருத்துக்கள்:-
பிரட் கிரீன்ஸ்டைன் – அரசியல் ரீதியாக பொருந்தும் மனித மனப்பாங்குகள் , நடத்தை பாங்குகள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதில் தாக்கம் புரியும் மனிதனின் வாழ்நாள் பூராகவும் பரவிக் காணப்படும் சகல வகையான அரசியல் படிப்பினைகள் உள்ளடக்கிய மொத்தச் செயன்முறை.
ஆல்மென்ட் – மனிதர்களை அரசியல் ரீதியாக அறிவூட்டி , அரசியல் கலாசாரத்தைப் பேணி நடப்பதற்கும் அதன் மூலம் அரசியல் உறுதிப்பாட்டை பாதுகாத்துப் பேணுவதற்கும் மக்களைப் பழக்கப்படுத்தும் மொத்தச் செயன்முறை.
ரஸ் – மனிதரை அரசியல் முறைமைக்குப் பரீட்சயப்படுத்தி அதன் மூலம் அரசியல் முறைமையில் துலங்குவதற்கு பயிற்சியளிக்கும் செயன்முறை.
அரசியல் சமுதாயப்படுத்தலின் முகவர்கள்:-
• குடும்பம் • கல்வி நிறுவனங்கள்
• நண்பர்கள் குழாம். • சமய நிறுவனங்கள்
• ஊடகங்கள் • தொழில் அனுபவங்கள்
• நலன் பேணும் குழுக்கள் • அரசியல் குறியீடுகள்
• அரசாங்கம் • பால்நிலை , வயது மற்றும் புவியியல்
• அரசியல் கட்சிகள் • சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார பின்னணி
அரசியல் சமுதாயப்படுத்தல் ஏற்படும் இரு வழிமுறைகள் :-
அரசியல் சமுதாயப்படுத்தலின் நன்மைகள்:-
அரசியல் சமுதாயப்படுத்தலின் குறைபாடுகள்:-
அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த ஒரு சமூகத்தின் தனியாட்கள் அங்குள்ள அதிகாரப் பீடங்களுடன் இணைந்து செயற்பட்டு அதிகாரப் பீடங்களை சுற்றி நடந்து கொள்ளும் விதம் அரசியல் நடத்தை எனப்படும்.
அரசியல் நடத்தையானது மனிதனது நோக்கங்கள் , உணர்வுகள் , செயல்கள் , மனப்பான்மைகள் போன்றவற்றின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றன.
அரசியல் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்:-
• மக்களின் பொருளாதாரம்
• மக்களின் சமூகத்துவம்
• இனம்
• சாதி
• கல்வி
• ஆர்வங்கள்
அரசியல் நடத்தைகளை விளங்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள்:-
ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயத்திலே வாழும் மக்கள் தமது சமுதாயத்தில் நிலவும் அரசியல் முறைமை , சின்னம் , கொள்கை தொடர்பாக கொண்டிருக்கும் புரிந்துணர்வு , நம்பிக்கை , மனப்பாங்கு என்பவற்றின் கூட்டு மொத்தமே அரசியல் கலாசாரமாகும்.
அறிஞர்களின் கருத்துக்கள்:-
அரசியல் கலாசாரமானது பின்வரும் இரு பகுதிகளை கொண்டுள்ளது.
அரசியல் கலாசாரத்தின் இயல்புகள்:-
அரசியல் கலாசாரத்தின் வகைகள்:-
1. குறுகிய அரசியல் கலாசாரம் அல்லது வளர்ச்சியற்ற அரசியல் கலாசாரம்.
2. கீழ்ப்படிந்து போகும் அரசியல் கலாசாரம் அல்லது குறைவிருத்தி அரசியல் கலாசாரம்.
3. பங்குபற்றும் அரசியல் கலாசாரம் அல்லது வளர்ச்சியடைந்த அரசியல் கலாசாரம்.
அரசியல் கலாசாரத்தின் முக்கியத்துவம்:-
அரசியல் கலாசாரத்தின் நன்மைகள்:-
அரசியல் ரீதியாக ஏற்றுகொள்ளப்பட்ட விழுமியங்களுக்கு புறம்பாக அரசியல் தலைவர்களோ அல்லது அரசியல் இயக்கங்களோ தமது அரசியல் இலட்சியங்களை அடைந்து கொள்ள முயலுமாயின் அதுவே அரசியல் வன்முறை எனப்படும்.
அறிஞர்களின் கருத்துக்கள்:-
நியுபெர்க் – ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கினை அடைந்து கொள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அப்பால் பலவந்தமாக வெளிவாரியாகப் பயன்படுத்தும் வன்முறை தழுவிய செயற்பாடுகள்.
ரி.ஆர். கர் – அரசியல் வன்முறைக்கு காரணம் தமது எதிர்பார்ப்புகள் நிறைவேறாது போகின்றமையாகும்.
அரசியல் வன்முறைகளுக்கான உதாரணங்கள் சில:-
அரசியல் வன்முறையை ஆதரித்த அறிஞர்கள்:-
அரசியல் வன்முறைக்கான காரணங்கள்:-
இவ் எண்ணக்கருவை முன்வைத்த அறிஞர்கள்:-
1. பரேடோ 2. மொஸ்கா
3. கேசட் 4. ஈஸ்டன்
5. ரொத்வெல்
உயர்குழாம் தோன்றுவதில் செல்வாக்கச் செலுத்தும் காரணிகள்:-
1. பரம்பரை 2.செல்வம்
3.சமயம் 4.கல்வி
5.வசீகர தலைமைத்துவம் 6.சாதி
7.பதவி 8.அதிகாரம்
9.அரசியல் ஆற்றல்கள்
கூற்று I – சகல அரசியல் சமூகங்களிலும் பிரத்தியேகமாகவும் தெளிவாகவும் இனங் காணக்கூடிய மனிதர் குழுவினைச் காண முடிவதோடு அவர்களே அரசியல் உயர் குழாமினர் என்று கருதப்படுகின்றனர்.
கூற்று II – இந்த அரசியல் உயர் குழாமினரே சகல அரசியல் சமூகங்களிலும் அரசியல் விளையாட்டின் முக்கிய வீரர்களாவர்.
அதிகாரம் என்பது
A – ஒரு வகையான மனித உறவாகும்.
B – பிறிதொருவரின் நடத்தையைப் பாதிக்கும் ஒரு கருவியாகும்.
C – வன்மையைப் பிரயோகிக்கும்போது நிலையற்றதாக இருக்கும்.
D – அதனை வகிக்கும் நபருக்குரியதேயன்றி பதவிக்குரியதன்று.
கூற்று I – சகல அரசியல் சமூகங்களிலும் பிரத்தியேகமாகவும் தெளிவாகவும் இனங் காணக்கூடிய மனிதர் குழுவினைச் காண முடிவதோடு அவர்களே அரசியல் உயர் குழாமினர் என்று கருதப்படுகின்றனர்.
கூற்று II – இந்த அரசியல் உயர் குழாமினரே சகல அரசியல் சமூகங்களிலும் அரசியல் விளையாட்டின் முக்கிய வீரர்களாவர்.
அதிகாரம் என்பது
A – ஒரு வகையான மனித உறவாகும்.
B – பிறிதொருவரின் நடத்தையைப் பாதிக்கும் ஒரு கருவியாகும்.
C – வன்மையைப் பிரயோகிக்கும்போது நிலையற்றதாக இருக்கும்.
D – அதனை வகிக்கும் நபருக்குரியதேயன்றி பதவிக்குரியதன்று.