Please Login to view full dashboard.

அரசியல் கட்சிகள்

Author : Admin

14  
Topic updated on 02/15/2019 10:44am

அரசியல் கட்சிகள்   Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயத்திலே மக்களுக்கு அரசியல் ரீதியான தலைமைத்துவத்தை வழங்குகின்ற ஸ்தாபனமே அரசியல் கட்சிகள் எனப்படும்.
  • அதாவது பொதுமக்கள் மத்தியிலே சிதறுண்டு காணப்படுகின்ற அபிப்பிராயங்களை ஒன்று திரட்டி அதனை அடிப்படையாகக் கொண்டு அரசியல் அதிகாரத்தினை கைப்பற்றுவதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தமது தனிப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக செயற்படுகின்ற ஒழுங்குபடுத்தப்பட்ட ஸ்தானங்களே அரசியல் கட்சிகள் எனலாம்.
  • ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட பிரதிநிதித்துவ ஒழுங்கமைப்புக்களுடனும் வாக்குரிமை விஸ்தரிப்புடனும் தோற்றம் பெற்றதெனலாம்.
  • அரசியல் கட்சிகள் பற்றிய வரைவிலக்கணங்கள்:
    ஸ்ரீவன் லீலொக் – ஓர் இணைந்த அரசியல் சமூகமாக செயற்படுவதும் ஓரளவிற்கு நெறிப்படுத்தப்பட்டதுமான ஓர் அமைப்பு குடிமக்களால் உருவாக்கப்படுமானால் அதுவே அரசியல் கட்சி
    சிக்மன் நீயூமன் – நவீன அரசியலில் புவியீர்ப்பு மையமாக அரசியல் கட்சிகள் விளங்குகின்றன.
    மைக் ஐவர் – அரசியல் திட்டத்தின் படி சில கொள்கைகள் மூலம் அரசாங்கத்தை நடாத்த விளையும் கூட்டமே அரசியல் கட்சி
    மெக்ஸ்வெபர் – சர்வசன வாக்குரிமை , பொதுமக்கள் அபிப்பிராயம் , ஜனநாயகம் போன்றவற்றின் குழந்தையே அரசியல் கட்சிகளாகும்.

அரசியல் கட்சிகளின் பொது இயல்புகள்:-

  • தமக்கேயுரிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை கொண்டுள்ளன.
  • அரசியல் கட்சிகளில் சில மனிதர்களின் பங்குபற்றுதலன்றி எண்ணிறைந்த மக்களின் பங்கேற்பு காணப்படுகின்றது.
  • அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபடுதல்.
  • அரசியல் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபடுதல்.

அரசியல் கட்சிகளின் பணிகள்:-

  • சிதறியுள்ள மக்கள் அபிப்பிராயத்தை ஒன்று திரட்டுதல்.
  • மக்களின் அரசியல் அதிகாரத்தை அரசின் இறைமை அதிகாரத்தோடு கலக்கச் செய்து ஆணை அதிகாரத்தை உருவாக்குதல்.
  • வாக்காளர்களை ஒழுங்குபடுத்தல்
  • வாக்காளர்களை அரசியல் ரீதியாக அறிவூட்டுதல்.
  • தலைவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
  • அரசியல் போராட்டத்தில் ஈடுபடுதல்.
  • அரச அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்குபற்றல்.
  • ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவலாளிகளாகச் செயற்படுதல்.
  • ஒன்று திரட்டிய அபிப்பிராயத்தை அரசாங்க மட்டத்திற்கு கொண்டு செல்லல்
  • பதவி வகிக்கும் அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டை கட்டுபடுத்தல்.
  • நிறைவேற்றுத்துறைக்கும் சட்டத்துறைக்குமிடையில் ஒத்துழைப்பை பேணுவதற்கு உதவுதல்.
  • சமுதாயத்தை சீர்திருத்துபவராக செயற்படுதல்.

அரசியல் கட்சிகளின் வகைப்பாடுகள்

அரசியல் கட்சிகள் அரசியல் முறைமையில் செயற்படும் கட்சிகளின் எண்ணிக்கைகளை அடிப்படையாக கொண்டு அரசியல் கட்சிகளை பின்வருமாறு பிரிக்கலாம்.

  • ஒரு கட்சி முறை
  • இரு கட்சி முறை
  • பல கட்சி முறை

மொறிஸ் டுவேஜர் கட்சிகளின் வகைகள்

  • மகாஜன கட்சிகள்
  • காடர் கட்சிகள்

தனிகட்சி முறை

  • ஒரு நாட்டில் ஒரு தனிக்கட்சி மட்டும் செயற்படின் அது தனிக்கட்சி முறை என்று அழைக்கப்படும்.
  • எதிர் அரசியல் கருத்துக்களை சகித்துக் கொள்ளாததும் அவற்றுக்கு இடமளிக்காததுமான அரசியல் முறைமையில் தனிக்கட்சி முறையைக் காணலாம்.

ஒரு கட்சி முறையின் நிறைகள்:-

  • தீர்மானம் மேற்கொள்வதில் கால தாமதம் தவிர்க்கப்படும்.
  • உறுதியான அரசாங்கம் அமைவதற்கு வழி ஏற்படும்.
  • சித்தாந்த ரீதியாக,கொள்கை ரீதியாக மக்கள் பிளவுபடும் தன்மை தவிர்க்கப்படும்.
  • தேர்தல் வன்முறைகள் இல்லாதொழிக்கப்படும்.
  • ஆட்சியில் வீண்விரயம் தவிர்க்கப்படுதலும் , பொருளாதார அபிவிருத்தி ஏற்படுதலும் சமூகச் சீர்கேடுகள் , கல்விச் சீர்கேடுகள் போன்றன தவிர்க்கப்படும்.

ஒரு கட்சி முறையின் குறைபாடுகள்

  • கொள்கைகள் தீர்மானங்கள் என்பன சரியானதாக அமையும் என்பதில் நிச்சயமில்லை.
  • மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல்.
  • சர்வதிகாரப் போக்கு காணப்படும்.
  • பொதுக் கொள்கைகள் புறந்தள்ளப்படும் நிலை ஏற்படலாம்.
  • அரசியலில் உயர் குழாமினரின் செல்வாக்கு அதீதமாகக் காணப்படும்.
  • கீழ் மட்ட மக்களின் தேவைகள் அறியப்படாதாகவும் தீர்க்கப்படாததாகவும் இருக்கும்.

இருகட்சி முறை

ஓர் அரசியல் முறைமையுள் காணப்படும் அரசியல் கட்சிகளுள் அதன் செயற்பாட்டின் மீது நிர்ணயமான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய இரு கட்சிகள் மட்டும் இருப்பின் அது இரு கட்சிமுறை எனப்படும்.

நடைமுறையிலுள்ள நாடுகள்:
1. பிரித்தானியா                               2. அமெரிக்கா
3. நியூசிலாந்து                                 4. கனடா
6. தென்னாபிரிக்கா

இருகட்சி முறையின் நிறைகள்:-

  • இருகட்சி முறையில் தனிக்கட்சி மட்டும் அரசாங்கத்தை அமைப்பதால் நிலையானதும் பலமானதுமான அரசாங்கம் உருவாகும்.
  • இருகட்சி முறையில் எதிர்கட்சியில் ஒரு தனிக்கட்சி மட்டும் ஆதிக்கம் செலுத்துவதால் பலமான எதிர்கட்சி உருவாகும்.
  • மக்கள் முன்னால் இரண்டு அபிப்பிராயங்கள் மட்டும் இருப்பதால் தாம் விரும்பும் கட்சிக்கு வாக்களித்து நேரடியாக அரசாங்கத்தை தாபிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.

இருகட்சி முறையின் குறைகள்:-

  • சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பின்மை.
  • சிறுபான்மையினரின் அபிலாஷைகள் பூர்த்திச் செய்யப்படாமை.
  • அரசாங்க கட்சியின் அதிகாரம் மோசமான வகையில் வளர்ச்சியுறல்.
  • சட்டசபையின் நிலை வீழ்ச்சியுறல்.

பலகட்சி முறை

ஓர் அரசியல் முறைமையில் இரு கட்சிகளை விட கூடுதலான கட்சிகள் பாதிப்பு செலுத்தும் நிலை பலகட்சி முறை எனப்படும்.

பலகட்சி முறையின் நிறைகள்:-

  • வாக்காளர்கள் இரு கருத்தியல் குழுக்களாகப் பிரியாதிருத்தல்.
  • சட்டத்துறை ஒரு தனிக்கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்படாதிருத்தல்.
  • சகல அபிப்பிராயங்களும் பிரதிநிதித்துவப்படுதல்.
  • வாக்காளரின் தெரிவு பரவலடைதல்.
  • பிரதேச ரீதியான அபிவிருத்தி ஏற்படும்.

பல கட்சி முறையின் குறைகள்:-

  • ஆட்சியை கைப்பற்றும் நோக்கமேயன்றி தேசிய நோக்கம் கட்சிகளிடம் காணப்படாது.
  • இன மத, மொழி , சாதி மற்றும் பிரதேச ரீதியிலான பிரிவினைக்கு வாய்ப்பாக அமையும்.
  • அரசாங்க தலைவரின் நிலை பலவீனமுறுதல்.
  • பலவீனமான அரசாங்கம் உருவாகுதல்.

அரசியல்கட்சிகளின் நன்மைகள் :-

  • ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும் கொண்டு நடத்தலும் அரசியல் கட்சிகளாகும்.
  • மக்கள் அரசியலில் பங்கேற்பதற்கு வாய்ப்பை வழங்குதல்.
  • மனிதன் பிறப்பிலேயே அரசியல் பிராணியாயினும் நவீன அரசியல் முறைமையில் மக்களை உண்மையான செயற்பாட்டு அரசியல் பிராணியாக மாற்றுவது அரசியல் கட்சிகளாகும். பதவியில் உள்ள அரசாங்கம் தன்னிச்சையாக மாறுவதைத் தடுக்கிறது.

அரசியல் கட்சிகளின் தீமைகள்:-

  • அரசியல் கட்சிகள் தமது சுயவிருப்பு வெறுப்புகளுக்காக தேசிய நலன்களைக் கீழ்ப்படுத்துதல்.
  • மனிதர்களின் தனியாட் தன்மையை அழிவுறச் செய்தல்.
  • சிலவேளை மக்களுக்கு முறையற்ற அரசியல் கல்வியை வழங்குதல்.
  • ஊழல் செயற்பாடுகளுக்கு வழிவகுத்தல்
  • பல கட்சி முறையின் மூலம் நாட்டின் அரசியல் ஈடுபாட்டை அழிவுக்கு உட்படுத்தல்.
  • இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்த தாக்கம் செலுத்தல்.
RATE CONTENT 5, 3
QBANK (14 QUESTIONS)

அரசியல் கட்சிகளுக்குப் பொருந்தாத கூற்றினைக் குறிப்பிடுக.

Review Topic
QID: 18025
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் கட்சிகள் – பிழையான கூற்று

Review Topic
QID: 18043
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் கட்சிகளானவை: – பிழையான கூற்று

Review Topic
QID: 18051
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் கட்சிகளானவை :- பிழையான கூற்று

Review Topic
QID: 18056
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் கட்சிகளுக்குப் பொருந்தாத கூற்றினைக் குறிப்பிடுக.

Review Topic
QID: 18025

அரசியல் கட்சிகள் – பிழையான கூற்று

Review Topic
QID: 18043

அரசியல் கட்சிகளானவை: – பிழையான கூற்று

Review Topic
QID: 18051

அரசியல் கட்சிகளானவை :- பிழையான கூற்று

Review Topic
QID: 18056
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank