கிரயம் (Cost)
பொருளொன்றை உற்பத்தி செய்வதற்கு / சேவையொன்றினை வழங்குவதற்கு பயன்படுத்திய வளங்களின் பணரீதியான பெறுமதி
கிரய அலகு (Cost Unit)
ஏதாவது பொருளொன்றின் / சேவையொன்றின் கிரயத்தைக் கணிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற அளவு ரீதியான அளவீடு ‘கிரய அலகு‘ ஆகும்.
கிரய மையம் (Cost Centre)
கிரயத்தை இனங்காண்பதற்கும் தீர்மானிப்பதற்கும் கிரய முகாமைத்துவத்துடன் தொடர்புபடுகின்ற கிரய அலகுகளுக்குரிய ஏதாவது இடமொன்று, கருமமொன்று, உபகரணமொன்று அல்லது நபர்கள் என்பன கிரய மையமாகும். ஏதாவது சந்தர்ப்பமொன்றில் பொது மேந்தலைக் கிரயத்தை கிரய அலகுகளுக்கிடையில் பகிர்ந்தளிப்பதற்குக் கிரயத் தரவுகளை ஒன்று சேர்க்கும் இடம் கிரய மையமாகும்.
உற்பத்திக் கிரயம்
உற்பத்திக் கிரயம் என்பது பொருள் அல்லது சேவை உற்பத்திக்காக ஏற்படுகின்ற மொத்தக் கிரயமாகும்.
காலக் கிரயம்
ஏதாவது குறித்த நிதியாண்டொன்றில் வருமானத்திற்கு எதிராக வருமானக்கூற்றில் வரவு வைக்கப்படுகின்ற கிரயம் காலக் கிரயம் எனப்படும்.
மாறும் கிரயமும் நிலையான கிரயமும்
உற்பத்தி / விற்பனை அலகுகளின் அளவின் மாற்றத்திற்கு ஏற்ப நேர் விகிதத்தில் மாற்றமடைகின்ற கிரயம் மாறும் கிரயம் ஆகும்.
நிதியாண்டின் உற்பத்தி / விற்பனை மட்ட அளவுடன் மாற்றமடையாத கிரயம் நிலையான கிரயம் எனப்படும்.
உரிய கிரயமும் உரியதல்லாத கிரயமும் /தொடர்பான கிரயமும் தொடர்பற்ற கிரயமும்
ஏதாவது தீர்மானமொன்றை எடுப்பதற்கு நேரடியாக தொடர்புபடுகின்ற கிரயம் உரிய கிரயம் எனப்படும்.
உரிய கிரயத்தின் கீழ் கலந்துரையாடப்படாத சகல கிரயங்களும் உரியதல்லாத கிரயம் எனப்படும்.
ஆழ்ந்த கிரயம்
கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றின் பெறுபேறாக தற்போது ஏற்பட்டுள்ள தீர்மானமெடுப்பது தொடர்பில் முக்கியத்துவமற்ற கிரயம் ஆழ்ந்த கிரயம் எனப்படும்.
சந்தர்ப்பக் கிரயம்
ஏதாவது மாற்று முறையொன்றைத் தெரிவு செய்தமையினால் இழக்கப்படும். அதற்குரிய சிறந்த மாற்று முறையின் நன்மைகள் சந்தர்ப்பக் கிரயம் எனப்படும்.
பின்வரும் கிரய வகைகளுள் ‘இருப்பு மதிப்பீடு” தொடர்பில் பயன்படுத்தப்படுகின்ற கிரயம் எது?
A – நேர் உற்பத்திக் கிரயம்
B – உற்பத்தி பொது மேந்தலைக் கிரயம்
C – சந்தர்ப்ப கிரயம்
D – உற்பத்தியல்லாத கிரயம்
கிரயத்தை தீர்மானிக்கின்ற உற்பத்திப் பொருள் ஒன்றினைப் பின்வருவனவற்றுள் எதனால் அடையாளம் காணலாம்?
Review Topicபின்வரும் கிரய வகைகளுள் ‘இருப்பு மதிப்பீடு” தொடர்பில் பயன்படுத்தப்படுகின்ற கிரயம் எது?
A – நேர் உற்பத்திக் கிரயம்
B – உற்பத்தி பொது மேந்தலைக் கிரயம்
C – சந்தர்ப்ப கிரயம்
D – உற்பத்தியல்லாத கிரயம்
கிரயத்தை தீர்மானிக்கின்ற உற்பத்திப் பொருள் ஒன்றினைப் பின்வருவனவற்றுள் எதனால் அடையாளம் காணலாம்?
Review Topic