Please Login to view full dashboard.

இலங்கை கணக்கீட்டு நியமங்கள்

Author : Admin Astan

5  
Topic updated on 05/10/2023 10:55am
வரைவிலக்கணம்

நிதிக் கூற்றுக்களைத் தயாரித்து வெளியிடுவதற்காக கணக்கீட்டு தொழில்சார் அறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வழிகாட்டப்படுகின்ற நியதிகளும், கணக்கீட்டு நடைமுறைகளும், கொள்கைகளுமே கணக்கீட்டு நியமங்களாகும்.

பிரதான நோக்கம்
நிதிக்கூற்றுகளை தயாரிப்பதில் ஏற்படக்கூடிய பல்வேறு தடைகளை அகற்றி சரியான நடைமுறைகளை வழிகாட்டுவதே பிரதான நோக்கம் ஆகும்.

1995ம் ஆண்டு 15ம் இலக்கக் கணக்கீட்டு கணக்காய்வு நியமங்கள் சட்டம்

இலங்கை கணக்கீட்டு நியமங்களை உருவாக்கி வெளியிடுவதற்கு பொறுப்பான சட்டமாக இச் சட்டம் காணப்படுகின்றது.
இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள்

  1. கணக்கீட்டு நியமக் குழு
  2. இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் பரிசீலனை சபை
  3. இலங்கை கணக்காய்வு நியமங்கள் சபை
கணக்கீட்டு நியமக் குழு (Accounting Standard Committee)

கணக்கீட்டு நியமங்களை தயாரிப்பதற்கும், ஏற்கனவே உள்ள நியமங்களை மறுசீரமைப்பதற்கும், பிரசுருப்பதற்கும் உதவுகின்ற நிறுவனமாகும்.

இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் பரிசீலனை சபை (Sri Lanka Accounting & Auditing Standard Monetary Board)

கணக்கீட்டு நியமங்களை தயாரித்தல், பரீசிலித்தல் தொடர்பான ஆலோசனைகளை பட்டயக் கணக்காளர் நிறுவனத்திற்கு வழங்குதல்.
நிறுவனங்கள் நிதிக்கூற்றுகளை கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக தயாரிக்கின்றவா என பரிசீலித்தல்.
நியமங்களை பின்பற்றா நிறுவனங்களுக்கு எதிராக நடிவடிக்கைகளை மேற்கொள்ளல்.

பட்டயக் கணக்காளர் நிறுவனம் (Institute Of Chartered Accounts Of Sri Lanka)

கணக்கீட்டு நியமங்களை தயாரிப்பதிலும் பேணுவதிலும் இந்நிறுவனம் அதிகாரம் பெற்ற நிறுவனமாகும்.

தொழிற்பாடுகள்
கணக்காளர் தகைமைகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய பாடநெறிகளை உருவாக்குதல்.
மாணவர்களுக்கான கல்வி, பயிற்சி வழங்கி கண்காணித்தல், கட்டுப்படுத்தல் போன்ற தொழிற்பாடுகளை கவனமெடுத்தல்.
தொழில்சார் நியமங்களைச் சரியான முறையில் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தல்
கணக்கீட்டு பாடத்திற்கான ஆய்வுகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கி தொழில்சார் நலன்களையும் எதிர்பார்ப்புக்களை பாதுகாத்தல்.

கணக்கீட்டு நியமங்கள் தொடர்பான கணக்கு வகைகள்

LKAS – 1 : நிதி அறிக்கைகளை முன்வைத்தல்.
LKAS – 2 : சரக்கிருப்பு
LKAS – 7 : காசுப்பாய்ச்சல்கூற்று
LKAS – 8 : கணக்கீட்டுக் கொள்கை, மதிப்பீடுகளின் மாற்றங்களும் வழுக்களும்
LKAS – 10 : அறிக்கையிடும் காலத்துக்குப் பின்னரான நிகழ்வுகள்
LKAS – 16 : ஆதனம், பொறி மற்றும் உபகரணம்
LKAS – 17 (SLFRS – 16) : குத்தகை
LKAS – 18 : வருமானம்
LKAS – 37 : ஏற்பாடுகள், நிகழத்தக்க பொறுப்புகளும் சொத்துக்களும்

RATE CONTENT
QBANK (5 QUESTIONS)

கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக நிதிக்கூற்றுகள் தயாரிப்பதனையும் முன்வைப்பதனையும் சட்டரீதியான ஒரு தேவையாக ஆக்கியிருப்பது

Review Topic
QID: 32648
Hide Comments(0)

Leave a Reply

1995ஆம் ஆண்டு 15ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டுக் கணக்காய்வு நியமச்சட்ட அதிகாரத்தின் படி நியமங்களை உருவாக்குதல், நடைமுறைப்படுத்துதல், மறுசீரமைப்புச் செய்தல் போன்றவற்றுக்குப் பொறுப்பான நிறுவனமானது,

Review Topic
QID: 32652
Hide Comments(0)

Leave a Reply

1995 ஆம் ஆண்டின் கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் சட்ட இலக்கம் 15 இன் படி, இலங்கை கணக்கீட்டு நியமங்களைத் தயாரிப்பது,

Review Topic
QID: 32653
Hide Comments(0)

Leave a Reply

1995 ஆம் ஆண்டின் கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் சட்ட இலக்கம் 15 இன்படி, இலங்கை கணக்கீட்டு நியமங்களைத் தயாரிப்பது

Review Topic
QID: 32712
Hide Comments(0)

Leave a Reply

நடைமுறை, நடைமுறையல்லாத சொத்துகள் என வகைப்படுத்தப்படுவதற்கான அடிப்படையை வழங்கும் இலங்கைக் கணக்கீட்டு நியமம் பின்வருவனவற்றுள் எதுவாகும்?

Review Topic
QID: 32713
Hide Comments(0)

Leave a Reply

கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக நிதிக்கூற்றுகள் தயாரிப்பதனையும் முன்வைப்பதனையும் சட்டரீதியான ஒரு தேவையாக ஆக்கியிருப்பது

Review Topic
QID: 32648

1995ஆம் ஆண்டு 15ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டுக் கணக்காய்வு நியமச்சட்ட அதிகாரத்தின் படி நியமங்களை உருவாக்குதல், நடைமுறைப்படுத்துதல், மறுசீரமைப்புச் செய்தல் போன்றவற்றுக்குப் பொறுப்பான நிறுவனமானது,

Review Topic
QID: 32652

1995 ஆம் ஆண்டின் கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் சட்ட இலக்கம் 15 இன் படி, இலங்கை கணக்கீட்டு நியமங்களைத் தயாரிப்பது,

Review Topic
QID: 32653

1995 ஆம் ஆண்டின் கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் சட்ட இலக்கம் 15 இன்படி, இலங்கை கணக்கீட்டு நியமங்களைத் தயாரிப்பது

Review Topic
QID: 32712

நடைமுறை, நடைமுறையல்லாத சொத்துகள் என வகைப்படுத்தப்படுவதற்கான அடிப்படையை வழங்கும் இலங்கைக் கணக்கீட்டு நியமம் பின்வருவனவற்றுள் எதுவாகும்?

Review Topic
QID: 32713
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank