Please Login to view full dashboard.

உற்பத்திக்கிரயம்

Author : Admin Astan

0  
Topic updated on 05/08/2023 12:27pm
உற்பத்திக் கிரயக் கூற்றைத் தயாரிப்பதன் முக்கியத்துவம்
  • மொத்த உற்பத்திக் கிரயத்தைக் கணித்தல்.
  • உற்பத்திக் கிரயங்களைக் கட்டுப்படுத்துதல்.
  • உற்பத்தி தொடர்பான தீரமானங்களை மேற்கொள்ளல்.
உற்பத்திக் கிரயத்தினை வகைப்படுத்தல்.

உற்பத்திக் கிரயங்கள் தொடர்புறும் முறை அல்லது கிரயங்களின் தன்மைக்கேற்ப இருவகைப்படுத்தல்.
நேர்க்கிரயம் (Direct Cost)
நேரில்கிரயம் (In direct Cost)

நேர்கிரயம்
பொருள் உற்பத்திக்கு நேரடியாக ஏற்படுத்தும் கிரயங்கள்

நேரில் கிரயம்
உற்பத்தி “அலகுக்கேற்ப” தெளிவாக இனங்காணமுடியாத அனைத்து பொதுவான செலவீனங்கள்

NOTE :- நேரில் கிரயத்தினை உற்பத்திமேந்தலை, தொழிற்சாலை மேந்தலை எனவும் அழைக்கலாம்.

உற்பத்திக் கிரயத்தின் கூறுகள்

மூலக்கிரயம் / முதன்மைகிரயம்
நேர் பொருள் கிரயம் + நேர் கூலிக் கிரயம் + ஏனைய நேர் கிரயம்

உற்பத்தி மேந்தலைக்கிரயம்
நேரில் பொருள் கிரயம் + நேரில் கூலிக் கிரயம் + ஏனைய நேரில் கிரயம்

உற்பத்திக் கிரயம்
மூலக்கிரயம் + உற்பத்தி மேந்தலை கிரயம்

மூலக்கிரயம் / முதன்மைகிரயம்

நேர்பொருள் கிரயம்
உற்பத்திக்கு நேரடியாக ஏற்படுத்தும் உற்பத்தி அலகுகளுடன் தெளிவாக வேறுபடுத்தி இனங்காணக்கூடிய பொருட் கிரயங்களைக் குறிக்கும்.
உ-ம்: தளபாடம் – மரப்பலகை

நேர் உழைப்புக் கிரயம்
உற்பத்தி அலகுகளுடன் தெளிவாக இனங்காணக்கூடியதும் உற்பத்திகளில் நேரடியாகப் பங்களிக்குச் செய்யும் உழைப்புக்காகச் செலுத்தப்படும் கூலிகளாகும்.
உ-ம்: தளபாட உற்பத்தி நிறுவனம் – மர வேலை செய்பவர்க்கு செலுத்திய சம்பளம்

நேர் ஏனைய செலவுகள்
உற்பத்தி அலகுடன் தெளிவாக வேறுபடுத்தி இனங்காணக்கூடிய பொருள், உழைப்பு அல்லாத ஏனைய செலவுகள் நேர் ஏனைய செலவுகள் எனப்படும்.
உ-ம்: அச்சகம் – பதிப்புரிமை கட்டணம்

உற்பத்தி மேந்தலைக்கிரயம்

நேரில் பொருள் கிரயம் 
உற்பத்தியின் போது நேரடியான இனங்காண முடியாத பொருளுக்கான கிரயங்களை குறிக்கும்.
உ-ம் : தளபாடம் : ஆணி

நேரில் கூலிக் கிரயம் 
உற்பத்தியுடன் நேரடியாக தொடர்புராத ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் நேரில கூலிக் கிரயம் எனப்படும்.
உ-ம் : மேற்பார்வையாளர் கூலி

ஏனைய நேரில் கிரயம்
நேரில் கூலி கிரயமும் நேரில கூலிக் கிரயமும் தவிர்ந்த ஏனைய செலவுகள் ஏனைய நேரில் கிரயம் எனப்படும்.
உ – ம் : வாடகை, காப்புறுதி கட்டணம்

உற்பத்தி வணிகம் ஒன்றில் காணப்படக்கூடிய இருப்புக்களின் வகைகள்
  1. மூலப்பொருள் இருப்பு
  2. நடைமுறை வேலை இருப்பு / குறைவேலை இருப்பு
  3. முடிவுப் பொருள் இருப்பு
RATE CONTENT
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank