Please Login to view full dashboard.

வெப்ப உள்ளுறை மாற்றம்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 05:28am

நியம தோன்றல் வெப்ப உள்ளுறை (ΔHθf)

நியம நிலையின் கீழ் சேர்வையின் ஒரு மூல் நியம நிலையிலுள்ள அதன் ஆக்கக்கூற்று மூலகங்களிலிருந்து உருவாகும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றம்.
H2 (g) + ½O2 (g) → H2O (l)  

நியம தகன வெப்ப உள்ளுறை (ΔHθc)

நியம நிலையின் கீழ் மூலகமொன்றின் அல்லது சேர்வையொன்றின் ஒரு மூல் மிகை ஒட்சிசனில் பூரணமாக தகனமடையும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றம்.
CH4 (g) + 2O2(g) → CO2(g) + 2H2O (l)

நியம பிணைப்புப் பிரிகை வெப்ப உள்ளுறை (ΔHθD)

நியம நிலையின் கீழ் வாயு நிலையிலுள்ள பேதமொன்றின் ஒரு மூல் பிணைப்பை உடைத்து வாயு நிலையிலுள்ள கூறுகளாக மாற்றும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றம். (குறித்த ஒரு சேர்வையின் அல்லது மூலகத்தின் குறிப்பிட்ட ஒரு பிணைப்பு தொடர்பாக கூறப்படும்)
H2 (g) → 2H (g)

நியம நடுநிலையாக்க வெப்ப உள்ளுறை (ΔHθneut)

நியம நிலையின் கீழ் நீர் கரைசலிலுள்ள அயன் மூல் ஒன்று நீர்க் கரைசலிலுள்ள அயன் மூல் ஒன்றுடன் தாக்கமடைந்து மூல் ஒன்றை உருவாக்கும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
H+(aq) + OH(aq) → H2O(l)

நியம நீரேற்ற வெப்பவுள்ளுறை (ΔHθhyd)

நியம நிலையின் கீழ் வாயு நிலையிலுள்ள ஒரு மூல் அயன் ஒன்று மிகையான நீருடன் தாக்கி கரைசல் நிலைக்கு மாறும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
Na+(g) + aq → Na+ (aq)

நியம கரைசலாக்க வெப்ப உள்ளுறை (ΔHθdissolution)

நியம நிலையின் கீழ் யாதாயினும் ஒரு மூல் பதார்த்தத்தை மிகை கரைப்பானில் கரைத்து கரைசலாக மாற்றும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
NaCl(s) + aq → NaCl(aq)

நியம பதங்கமாதல் வெப்ப உள்ளுறை

நியம நிலையின் கீழ் திண்ம மூலகமொன்றின் ஒரு மூல் அல்லது திண்ம சேர்வையொன்றின் ஒரு மூல் பூரண வாயு நிலைக்கு மாறும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
Ca (s) →  Ca (g)

நியம ஆவியாதலின் வெப்ப உள்ளுறை (ΔHθverp)

நியம நிலையின் கீழ் நிலவும் திரவ நிலையிலுள்ள ஒரு மூல் மூலகம் அல்லது சேர்வையொன்று, வாயு நிலையிலுள்ள ஒரு மூல் மூலகம் அல்லது சேர்வையாக மாறும்போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
Br2 (l) → Br2 (g)

நியம உருகலின் வெப்ப உள்ளுறை

நியம நிலையின் கீழ் நிலவும் திண்ம நிலையிலுள்ள ஒரு மூல் மூலகம் அல்லது சேர்வை திரவ நிலையிலுள்ள ஒரு மூல் மூலகம் அல்லது சேர்வையாக மாறும்போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
Al (s) → Al(l)

நியம அணுவாதல் வெப்ப உள்ளுறை

நியம நிலையின் கீழ் ஒரு மூல் மூலகம் வாயு நிலையிலுள்ள ஒரு மூல் அணுவாக மாறும்போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றம்.
½Cl2 (g) → Cl (g)

நியம முதலாம் அயனாக்க வெப்ப உள்ளுறை (ΔHθE1)

நியம நிலையின் கீழ் வாயு நிலையிலுள்ள மூலகமொன்றின் ஒரு அணு மூல் ஒன்றின் கருவுடன் தளர்வாக பிணைந்துள்ள ஒவ்வொரு இலத்திரன் வீதம் அகற்றி வாயு நிலையிலுள்ள ஒரு மூல் நேர் ஏற்ற அயன் ஒன்றைப் பெறும் போது நடைபெறும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
Na (g) → Na+ (g) + e

நியம இலத்திரன் நாட்ட வெப்ப உள்ளுறை (ΔHθEA)

நியம நிலையின் கீழ் வாயு நிலையிலுள்ள ஒரு மூல் அணுவிற்கு இலத்திரன்களை வழங்கி வாயு நிலையிலுள்ள ஒரு மூல் எதிர் அயன் ஒன்றை உருவாக்கும் போது நடைபெறும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
Cl (g) + e → Cl (g)

அயன் சேர்வையொன்றின் நியம சாலக வெப்ப உள்ளுறை (ΔHθL)

நியம நிலையின் கீழ் வாயு நிலையிலுள்ள நேர் அயனும் எதிர் அயனும் திண்ம நிலையிலுள்ள அயன் சேர்வையொன்றின் மூல் ஒன்றை உருவாக்கும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
Na+ (g) + Cl (g) → NaCl (s)

எசுவின் விதி

இரசாயன தாக்கமொன்றின் போது நடைபெறும் சக்தி மாற்றம் அல்லது வெப்பவுள்ளுறை மாற்றம் தாக்கம் எவ்வழியினூடாக நடைபெற்ற போதிலும் மாறாப் பெறுமானத்தைக் கொண்டிருக்கும்.

screenshot-27

வெப்ப இரசாயன வட்டம்screenshot-29

வெப்பவுள்ளுறை வரைபடம்enthalphy

RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank