Please Login to view full dashboard.

வெப்ப உள்ளுறை

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 03:56am
  • அகிலத்திலிருந்து கற்றாய்வதற்காகத் தேர்ந்தெடுத்த பகுதியை தொகுதி  எனப்படும்.
  • கற்றலுக்காக அகிலத்திலிருந்து தேர்ந்தெடுத்த பகுதி தவிர்ந்த ஏனைய யாவும் சூழல் எனப்படும்.
  • சூழலையும் தொகுதியையும் பிரிக்கும் கோட்டை எல்லை  எனப்படும்.screenshot-24
  • எல்லையூடாக சக்தியும் சடப்பொருளும் வேலையும் பரிமாறப்படும் தொகுதி திறந்த தொகுதி எனப்படும்.screenshot-25
  • எல்லையூடாக சக்தியும் வேலையும் பரிமாறப்படும் தொகுதி மூடிய தொகுதி எனப்படும். (எல்லை சடப்பொருள் பரிமாற்றத்திற்கு அனுமதிக்காது.)screenshot-26
  • எல்லையூடாக சக்தியும் சடப்பொருளும் வேலையும் பரிமாறப்படாத தொகுதி தனிமையாக்கிய தொகுதி எனப்படும்.
  • சடப்பொருளின் அளவிற்கேற்ப தீர்மானிக்கப்படும் இயல்புகள் விரி இயல்பு எனப்படும்.
    உதாரணம் :- திணிவு , கனவளவு , வெப்பக் கொள்ளளவு
  • சடப்பொருளின் அளவின்படி தீர்மானிக்கப்படாத இயல்புகள் செறி இயல்பு எனப்படும்.
    உதாரணம் :- வெப்பநிலை , அமுக்கம் , அடர்த்தி , பிசுக்குமை , மூலர் கனவளவு ,மூலர் வெப்பக் கொள்ளளவு.
  • தொகுதியொன்றின் வெப்பநிலை , அமுக்கம் , தொகுதியின் அமைப்பு ஆகியன பற்றிய விவரங்கள் தொகுதியின் நிலைகள் எனப்படும். குறித்த ஒரு தொகுதி தொடர்பான மேற்படி தகவல்கள் அத்தொகுதிக்கு சிறப்பானவையாகும்.
  • தொகுதியொன்றின் குறித்த நிலையொன்றுக்கான சிறப்பான பெறுமானத்துடன் கூடிய இயல்பு நிலைத் தொழிற்பாடு என அழைக்கப்படும். இவை தொகுதியின் வரலாற்றுடன் தொடர்புடையன அல்ல.
  • நிலைத் தொழிற்பாடு மாற்றமானது அதன் ஆரம்ப  இறுதி நிலைகளின் மீது மாத்திரம் தங்கியிருக்கும். இது மாற்றத்தை ஏற்படுத்தும் படிமுறையிலிருந்து சுயாதீனமானது.
  • கனவளவு , வெப்பநிலை , அடர்த்தி , முறிவுச் சுட்டி , வெப்ப உள்ளுறை , எந்திரப்பி ஆகியன நிலைத் தொழிற்பாடுகளுக்கான உதாரணங்களாகும்.
  • மாறா அமுக்கத்தின் கீழ் தொகுதிக்கு வழங்கப்படும் அல்லது தொகுதியொன்றிலிருந்து வெளியேற்றப்படுகின்ற வெப்பத்தின் அளவு வெப்ப உள்ளுறை மாற்றம் (ΔH ) என அழைக்கப்படும். இது வெப்ப இயக்கவியல் இயல்பாகும்.அத்துடன் நிலைத் தொழிற்பாடும் ஆகும்.
  • தாக்கம் ஒன்றுடன் தொடர்புடைய வெப்ப உள்ளுறை மாற்றம் ΔH விளைவுகளினதும் தாக்கிகளினதும் வெப்ப உள்ளுறை மாற்றத்தின் மூலம் பெறப்படும்.
    ΔH  = Hவிளைவுகள் – Hதாக்கிகள்
  • தாக்கமொன்றுடன் தொடர்புடைய வெப்ப உள்ளுறை மாற்றம்
    ΔH < 0 ஆயின் தாக்கம் புற வெப்பத் தாக்கமாகும்.
    ΔH > 0 ஆயின் தாக்கம் அக வெப்பத் தாக்கமாகும்.
  • IUPAC விதந்துரைப்பின்படி  வெப்ப உள்ளுறை மாற்றங்களானது அலகு தாக்கம் நடைபெற்றுள்ள அளவுக்கு (kJ mol-1) (Unit extent of reaction) அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது. IUPAC மூலம் விதந்துரைக்கப்பட்டுள்ளபடியால் அதனைப் பயன்படுத்தி செய்யப்படும் கணிப்பீடுகளும் சரியானவையாக ஏற்றுக் கொள்ளப்படும்.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank