பங்கீட்டுவலு மூலக்கூறொன்றில் அல்லது அணுக் கூட்டமொன்றில் காணப்படும் பங்கீட்டு வலுப்பிணைப்புகள் லூயியின் புள்ளிக் குறியீடுகளின் மூலம் அதாவது பொதுவில் வைத்திருக்கும் இலத்திரன் சோடிகளை குறுங் கோட்டின் மூலம் அல்லது புள்ளிச் சோடியொன்றினால் (அல்லது புள்ளி – புள்ளடி சோடி) குறிப்பிடப்படுவதுடன் ஒவ்வொரு அணுவின் மீதும் அமையும் தனிச்சோடி இலத்திரன்களை புள்ளி அல்லது புள்ளடி சோடிகளின் மூலம் காட்டும் அமைப்பு லூயியின் கட்டமைப்பு ஆகும். வலுவளவு இலத்திரன்கள் மாத்திரமே காட்டப்படும்.
உதாரணம்:- நீர் மூலக்கூறு
லூயியின் கட்டமைப்பின் மூலம் மூலக்கூறில் அணுக்கள் பிணைந்துள்ள விதம் பற்றியும் வலுவளவு ஓட்டில் காணப்படும் இலத்திரன்களின் எண்ணிக்கை பற்றியும் அவற்றின் பரம்பல் பற்றியும் பிணைப்புகளின் தன்மை பற்றியும் தகவல்கள் பெறப்படும். எனினும் வடிவம் பற்றிய தகவல்களை லூயியின் கட்டமைப்பு மூலம் வெளிப்படுத்த முடியாது. மூலக்கூறின் மத்திய அணுவைச் சூழ அமையும் பிணைப்பு இலத்திரன் சோடிகள் , தனி இலத்திரன் சோடிகள் ஆகியவற்றை லூயியின் கட்டமைப்பின் மூலம் பெற்று வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடி
தள்ளுகைக் கொள்கை (Valance Shell Electron Pair Repulsion Theory) VSEPRTயைப் பயன்படுத்தி மூலக்கூறுகளின் வடிவங்களை எதிர்வு கூறலாம்.
மத்திய அணுவைச் சூழ அமைந்துள்ள இலத்திரன் சோடிகளின் எண்ணிக்கைக் கேற்ப அவை வெளியில் திசைகோட்படுத்தப்பட்டுள்ள விதம்.
ஒரே மூலக்கூறு அல்லது அயன் கூட்டத்தில் இலத்திரன் ஒழுங்கு அமைப்பின் மாற்றங்களின் அடிப்படையில் மாத்திரம் வேறுபடும் லூயியின் கட்டமைப்புக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட சந்தர்ப்பங்கள் உண்டு. குறித்த ஒரு மூலக்கூறின் அவ்வாறான கட்டமைப்புக்கள் பரிவுக் கட்டமைப்புக்கள் எனப்படும். எனினும் குறித்த மூலக்கூறின் உண்மையான கட்டமைப்பு இக்கட்டமைப்புகளில் ஒன்றாக அமையாது. மாறாக பரிவுக்கட்டமைப்புக்கள் கலப்புற்று உருவாகும் உறுதித்தன்மை மிக்க மற்றொரு கட்டமைப்பாக அமையும்.
உதாரணம் :- O3 யின் பரிவுக் கட்டமைப்புக்கள்
ஒன்றுடனொன்று இரசாயன ரீதியில் பிணைப்புற்றுள்ள இரு அணுக்களுக்கிடையே மின்னெதிர் வித்தியாசங்கள் காரணமாக அல்லது வேறு புற செல்வாக்கொன்றின் காரணமாக பிணைப்புடன் தொடர்புள்ள அணுக்களின் இலத்திரன் முகில்கள் சமச்சீரற்ற முறையில் பரவுதல் முனைவாக்கம் எனப்படும்.
உதாரணமாக HF மூலக்கூறு
இவ்வாறாக இருமுனைவுற்றுக் காணப்படும் ஏற்றத்தினதும் (δ ) குறித்த அணுக்களின் பிணைப்பின் நீளத்தினதும் பெருக்கம் பிணைப்பின் இருமுனைவுத்திருப்புத் திறன் எனப்படும் (μ =δ * r ).
மூலக்கூறு பல் அணு கொண்டதாயின் அதன் இருமுனைவுத் திருப்புத்திறனுக்கு மூலக்கூறில் அடங்கும் ஒவ்வொரு பிணைப்பும் காரணமாகும். அப்பிணைப்புகளின் இருமுனைவுத் திருப்புத்திறன்களின் விளைவு மூலக்கூறின் இருமுனைவுத் திருப்புத்திறனாக கருதப்படும்.
உதாரணம்-
சில சமச்சீரான மூலக்கூறுகளின் இரு முனைவுத் திருப்புத் திறன் பூச்சியமாகும்.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்