மின்சக்தியை வழங்குவதன் மூலம் கலத்தாக்கத்தை மீளப் பெறமுடியாத கலங்கள் முதன்மைக் கலங்கள் என அழைக்கப்படும்.
முதன்மைக் கலங்களை பாவனைக்கு பின்பு மீள் ஏற்றம் செய்ய முடியாது. எனவே முதன்மைக் கலங்கள் இரசாயன ரீதியில் மீளும் தன்மையற்றவை.
இலெக்கிளொஞ்சிக் கலம்
டேனியல் கலம்
மின்னிறக்கமடைந்த கலமொன்றை மின்னேற்றம் செய்வதன் மூலம் விளைவுகளிலிருந்து தாக்கிகளை மீளவும் புதுப்பிக்கக் கூடிய கலங்கள் துணைக் கலங்கள் எனப்படும்.
அதாவது, துணைக்கலங்களை பாவனைக்கு பின்னர் மீள் ஏற்றம் செய்ய முடியும். எனவே துணையான கலங்கள் இரசாயன ரீதியாக மீளும் தன்மையுடையவை.
ஈயசேமிப்புக்கலம்
மின்னிரசாயன மின்வாய் தாக்கங்களுக்காக புறத்தேயிலிருந்து தாக்கிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் மின்னிரசாயனக் கலம் எரிபொருள் கலம் எனப்படும்.
எரிபொருள் கலம் சக்தியை சேமிப்பதில்லை. தாக்கிகள் வெளியிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்படும்.
கார பெகோன் எரிபொருள் கலம்