Please Login to view full dashboard.

மின்னரிப்பு

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 06:26am
உலோக அரிப்பு
  • உலோகங்கள் வளி தொடர்பாக உள்ள போது en களை இழந்து உலோக அயன்களாக மாறுதல் “உலோக அரிப்பு” எனப்படும்.
  • இரும்பு துருப்பிடித்தல் ஒரு உலோக அரிப்பாகும். இரும்பு வளி தொடர்பாக உள்ளபோது அரிக்கப்படுதல் துருப் பிடித்தல் எனப்படும்.
  • துரு என்பது கபில நிறமான நீரெறிய பெரிக் ஒக்சைட்டு ஆகும்.

இரும்பு துருப்பிடித்தலின் போது நடைபெறும் தாக்கங்கள்

Fe(s) →  Fe2+(aq) + 2e
O2(g) + 2H2O(l) + 4e  →  4OH(aq)
Fe2+(aq) + 2OH(aq) → Fe(OH)2(s)
4Fe(OH)2(s) + O2(g) + 2H2O(l) →  4Fe (OH)3(s)
2Fe(OH)3(s) → Fe2O3 . 3H2O  (துரு)

  • துருப்பிடித்தலை தூண்டும் காரணிகள் :
    • ஒட்சிசன் (O2)
    • நீர் (H2O)
  • துருப்பிடித்தலை தூண்டும் காரணிகள் :
    • அமில, நடுநிலை உப்புக்கள்
    • அமிலங்கள், அமில வாயுக்கள்.
    • தகைப்பு
  • துருப்பிடித்தலை குறைக்கும் காரணிகள் :
    • காரங்கள்
    • கார வாயு – NH3(g)
    • கார உப்புக்கள் – Na2CO3
    • கல்வனைசுப்படுத்தல்
    • கதோட்டு பாதுகாப்பு
    • நிறப்பூச்சி, எண்ணெய், க்ரீஸ் பூசுதல்
    • கலப்புலோகமாக்குதல் – கரையில் உருக்கு

ஒட்சிசன் செறிவு வேறுபாடும் இரும்பின் அரிப்பும்

  • துலக்கப்பட்ட  இரும்புக் கோலின் மேல் ஒரு துளி  நீரையும் சில துளிகள்  NaCl ஐயும் இடுக.
  • காட்டியாக  K3[Fe(CN)6], பினோப்தலீன் என்பவற்றை  சேர்க்குக.

  • ஒட்சிசன் செறிவு கூடிய இடம் கதோட்டாகவும், ஒட்சிசன் செறிவு குறைந்த இடம் அனோட்டாகவும் தொழிற்படும்.
  • கதோட்டில் OH உருவாவதனால் மென்சிவப்பு நிறம் தோன்றும்.
  • அனோட்டில் Fe2+ உருவாவதனால் நீலநிறம் தோன்றும்.
  • அனோட்டு தாக்கம் : Fe(s) → Fe2+(aq) + 2e
  • கதோட்டு தாக்கம் : O2(g) + 2H2O(l) + 4e →  4OH(aq)

கதோட்டுப் பாதுகாப்பு

  • உலோகமொன்றினை மின்னிரசாயனக்கலமொன்றின் கதோட்டாக மாற்றுவதன் மூலம் அதனை அரிப்பிலிருந்து பாதுகாக்கும் முறையே கதோட்டுப் பாதுகாப்பு  எனப்படும்.
  • பாதுகாக்க வேண்டிய உலோகத்தை மின்னிரசாயனக் கலத்தின் அனோட்டாகத் தொழிற்படுகின்ற, மேலும் கூடுதலான தாக்கமுடைய (இலகுவாக அரிப்புக்கு உள்ளாகத்தக்க) உலோகமொன்றுடன் தொடுகையடையுமாறு வைப்பதன் மூலமே இது நடத்தப்படும்.
  • பெரும்பாலும் உருக்கு நீர்க்குழாய்கள், எரிபொருள் குழாய்கள், களஞ்சியத் தொட்டிகள், சாக்கு மேடைகளிலுள்ள உருக்குப் பாலங்கள், கப்பல்கள், கடலில் இருந்து எண்ணெய் பெறும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மேடைகள், தரையில் அமைந்துள்ள எண்ணெய் கிணறுகள் போன்றவற்றில் கதோட்டுப் பாதுகாப்புத் தொகுதி பயன்படுத்தப்படும்.

கல்வனைசுப்படுத்தல்

  • Fe க்கு  Zn  ஐ  பூசுவதன்  மூலம்  இரும்பை  அரிப்பிலிருந்து பாதுகாத்தல் கல்வனைசுப்படுத்தல் எனப்படும்.
  • உருகிய  Zn ஐ  கொண்ட  தொட்டியினுள்  Fe தகடுகளை செலுத்துவதன் மூலம் இருப்பின் மேற்பரப்பில் Zn பூசப்படும்.
  • இரும்பின் மேல் உருவாகும்  Zn படலம்  வளியினால் ஒட்சியேற்றப்பட்டு  ZnO படலத்தை  தோற்றுவிக்கும்.
  • இப்படலம் Zn, Fe இரண்டையும் அரிப்பிலிருந்து பாதுகாக்கும்.
  • Sn பூசப்பட்ட இரும்பில், Fe உலோகத்தை Sn  இனால் முற்றாக முலாமிடும் போது Fe க்கும் சூழலுக்கும் இடையிலுள்ள தொடுகை துண்டிக்கப்படுவதால் Fe அரிப்புக்குள்ளாகாது. இங்கு Fe அனோட்டாக இருந்தும் பாதுகாக்கப்படுகின்றது.
  • ஆனால் Sn  மேற்பரப்பில்  கீறல்கள்  ஏற்பட்டு  Fe வெளித்தெரியுமாயின்  Fe  அரிப்படைந்து  Sn பாதுகாக்கப்படும்.

தகைப்பு

  • இரும்பு  ஆணியொன்று  தகைப்பிற்கு  உட்படும்  போது ஆணியின் கூர்பகுதியும், தலைப்பகுதியும் அரிப்புக்குட்படுவதுடன் அனோட்டாக தொழிற்படும்.
  • ஆணியின் உடல்பகுதி கதோட்டாக தொழிற்படும்.
  • ஏனெனில் இரும்பாணியை தயாரிக்கும் போது  அதிகளவு தகைப்புக்குள்ளாவது  தலைப்பகுதியும்  கூர்பகுதியுமாகும்.

இங்கு A, C  என்பன அனோட்டு. B  கதோட்டு.

  • அனோட்டில்  நீலநிறம்  தோன்றும்.
  • கதோட்டில்  மென்சிவப்பு  நிறம்  தோன்றும்.

உயிர்ப்பற்ற  தாக்கம்  

  • இரசாயன முறைகள் மூலம் உலோக மேற்பரப்பை இரசாயன  ரீதியில்  உயிர்ப்பற்ற  நிலையை  அடையச் செய்வதன் மூலம் அவ்வுலோகத்தைப் பாதுகாத்தலானது உயிர்ப்பற்றதாக்கம் (Passivation) எனப்படும்.
  • இங்கு உலோகத்தின் மீது அது மேலும் அரிப்படைவது தவிர்க்கப்படும் வகையில் வலிமையான உயிர்ப்பற்ற மேற்பரப்பு  படலமொன்று தானாகவே தோன்றச்செய்யப்படும்.
  • பொதுவாக  இது  ஒரு சில மூலக்கூறுகள் அளவு தடிப்படைந்த  ஒட்சைட்டு அல்லது  நைத்திரைட்டுப் படலமாகும்.
  • மேற்பரப்பிலுள்ள பிறபொருள்கள் நீக்கப்பட்டு பாதுகாப்பு ஒட்சைட்டுப் படலமொன்று அதன் மீது படியச்செய்யப்படும்.
  • கறையில் உருக்கை உயிர்ப்பற்றதாக்குவதற்காக நைத்திரிக் அமிலத்தைப் பயன்படுத்தலாம்.
  • புளோரீன்  தொடர்பான  செயல்களுக்காக  நிக்கல் உலோகத்தைப் பயன்படுத்தலாம். இங்கு கிடைக்கும் நிக்கல் புளோரைட்டுப் படலம் காரணமாக உலோகம் உயிர்ப்பற்ற நிலையை அடையும்.
கல்வானி அரிப்பு / ஈருலோக அரிப்பு / சமனிலி உலோக அரிப்பு
  • விழுமிய  உலோகமொன்றுடன்  அல்லது  உலோகம் அல்லாத கடத்தியொன்றுடன் (கதோட்டு) உள்ளபோது ஏற்படும் மின்தொடுகையின் (பௌதிக தொடுகை உட்பட) விளைவாக  மின்பகுபொருளொன்றில்  உலோகம் வேகமாக அரிப்படைதல் ஆகும். அதாவது, வேறுபட்ட இரண்டு உலோகங்கள் நேரடியாகவோ / மின்கடத்தி ஒன்றின் மூலமாகவோ அரிப்புக்குரிய சூழலில் தொடுகையில் உள்ள போது அரிப்படைதல் கல்வானி அரிப்பு எனப்படும்.
  • கதோட்டுப் பாதுகாப்பு விளைவு காரணமாக சோடியில் குறைந்த அரிப்பு எதிர்ப்புடைய அதாவது உயிர்ப்பான உலோகம் அதிக அளவிலும், அதிக அரிப்பு எதிர்ப்புடைய அதாவது  விழுமிய  உலோகம்  குறைந்த  அளவிலும் அரிப்புக்கு உள்ளாகும்.
  • உலோகச் சோடி தொடுகையுறும் சந்தியிலேயே அதிக சேதம் ஏற்படும்.
  • ஈருலோக சந்தியிலிருந்து அப்பாற் செல்லும் போதும் அரிப்பின் வீதம் குறைவடையும்.
  • கல்வானி அரிப்பை பாதிக்கும் காரணிகள் :
    • தொடுகையுறும் உலோகங்களின் தன்மை.
    • ஊடகத்தின் கடத்துதிறன்.
      • ஊடகத்தின் கடத்துதிறன் கூடும்போது அரிப்படையும் வீதம் கூடும்.
    • உலோகக்கோல்கள் தொடுகையுறும் மேற்பரப்பினளவு
      • உலோகக்கோல்கள் தொடுகையுறும் மேற்பரப்பினளவு கூடவாகவும் அழுத்தமற்றதாகவும் காணப்படும் போது அரிப்படையும் வீதம் கூடும்.
மின்னிரசாயனத் தொடரிலுள்ள மூலகங்களின் பிரித்தெடுப்பு
  • மின்னிரசாயனத் தொடரின்  மேலுள்ள மூலகங்கள் அவற்றின்  உருகிய குளோரைட்டுக்களை  மின்பகுப்பு செய்வதன்  மூலம் பிரித்தெடுக்கப்படும்.
    (உ-ம்) : Al,  உருகிய  Al2O3 ஐ  மின்பகுப்பு  செய்வதன் மூலம் பிரித்தெடுக்கப்படும்.
  • மின்னிரசாயனத் தொடரில் மத்தியிலுள்ள மூலகங்கள் உயர் வெப்பநிலையில் அவற்றின் ஒட்சைட்டுகளை காபனினால் தாழ்த்துவதன் மூலம் பிரித்தெடுக்கப்படும்.
  • மின்னிரசாயனத் தொடரில் கீழுள்ள மூலகங்கள் KCN / NaCN இனால்  பிரித்தெடுக்கப்பட்டு  Zn இனால் தாழ்த்துவதன் மூலம் பெறப்படும்.
    (உ-ம்) Ag, Au போன்ற உலோகங்கள்.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank